ஈழப் போராட்டத்தில் மறைக்கப்பட்டவர்களின் கதை


Maveerar_Thuyilum_Illum_Killinochieதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மலையகத் தமிழர்களின் பங்கு பெரும்பாலும் கருத்தில் கொள்ளப்பட்டதே கிடையாது. 1990க்குப் பின் பெரும்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் கிழக்கு மாகாண தமிழர்கள் மலையகத் தமிழர்கள் முஸ்லீம்கள் ஆகியோரின் பங்களிப்புகள் பெரும்பாலும் கவனத்தில் கொள்ளப்படவேயில்லை. உயிர்களைத் தியாகம் செய்வதற்கான படைவீரர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது முஸ்லீம்கள் கிழக்கு தமிழர்கள் பெண்கள் மலையகத் தமிழர்கள் ஆகியோர் படையணியில் சேர்க்கப்பட்டனரேயல்லாமல் அமைப்பின் கட்டமைப்பில் அவர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்பட வில்லை. இச்சமூகங்களின் அர்ப்பணிப்புகளும் மதிக்கப்படவில்லை. அதனாலேயே போராட்டத்தின் பின்னைய வாழ்வு அவர்களுக்கு மிக மோசமானதாக மாறியுள்ளது.

இந்த மனநிலையிலிருந்தே முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வுகள் புலிகளுக்குள் எழுந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் பின் மலையகத் தமிழர்களை வெளியேற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக புலிகளுக்கு மொழிபெயர்பாளராகச் செயற்பட்ட முன்னாள் தொழிற்சங்கவாதி பொன்னையா சுப்பிரமணியன் 2016 ஓகஸ்ட் 21இல் தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். அதற்கு சில மாதங்களின் பின் இவர் காணாமல் போய்விட்டார். இவர் பற்றிய எந்தத் தகவலும் தெரியவரவில்லை.

‘தமிழ் ஈழத்திற்கு சிந்திய இந்திய இரத்தம் – நினைவுகள் மரணிக்கு முன்’ (Indian Blood for Tamil Eelam – Before memory Dies) என்ற வன்னியில் வாழ்ந்த மலையகத் தமிர்களின் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ள உரையாடல் பதிவு தேயிலைத் தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இப்பதிவினை கண்டியைத் தளமாகக் கொண்டு இயங்கும் சமூக அபிவிருத்திக்கான நிலையம் (Institute for Social Development – ISD)  தயாரித்து உள்ளது.

https://www.youtube.com/embed/HrMp20Fwt5U

இப்பதிவில் மலையகத் தமிழ் பெண் செ நாகேஸ்வரி தான் போராளியாக இருந்த அனுபவத்தையும் தனது 5 சகோதர சகோதரிகள் போராளிகளாக ஆனதையும் அவர்களில் மூன்று சகோதரிகள் வீரச்சாவு அடைந்ததையும் மலையகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தங்கள் பெற்றோரின் ஏழ்மை வாழ்வையும் விபரிக்கின்றார்.

‘தமிழ் ஈழத்திற்கு சிந்திய இந்திய இரத்தம் – நினைவுகள் மரணிக்கு முன்’ என்ற வன்னியில் வாழ்ந்த மலையகத் தமிர்களின் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ள உரையாடல் பதிவு தேயிலைத் தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இப்பதிவினை கண்டியைத் தளமாகக் கொண்டு இயங்கும் சமூக அபிவிருத்திக்கான நிலையம் தயாரித்து உள்ளது.

குட்டிமாமா என்றழைக்கப்படும் கரும்புலி வீரனின் தந்தை சி ராஜேந்திரன் அங்கு தனது கருத்தினை பதிவு செய்கையில் “இந்த ஈழ விடுதலைப் போராட்டத்தில் பார்தீங்கள் என்டால் கிட்டத்திட்ட 25>000 மாவீரர்கள் இந்த மண்ணிலே மரணித்து இருக்கிறார்கள். இவர்களில் சரி அரைவாசிப்பேர் கிட்டத்தட்ட 12000 பேர் மலையகத்தைச் சேர்ந்த மாவீரர்கள் என்றதை மட்|டும் நீங்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். மீதியானவர்கள் மட்டக்களப்பைச் சார்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் என்பதையும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மிகுதியானவர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த மாவீரர்களின் கல்லறைகளில் அவர்கள் சொந்த இடத்தைப் பார்த்தால் தெரியும் கண்டி கம்பொல்லை மாத்தளை நுவரெலியா மஸ்ஹெலியா என்றிருக்கும்.இங்கே கிளிநொச்சியை எடுத்துக்கொண்டால் பாரதிபுரம் கிருஷ்ணாபுரம் மலைளான புரம் மூட்டுபுரம் சாந்தபுரம் பண்டா கண்டி மருதாநகர் ஆகிய பிரதேசங்கள் இந்திய வம்சாவழி மக்கள் அதிகம் வாழ்கின்ற பிரதேசங்கள். இந்தப் பிரதேசங்களில் இருந்து போராட்டத்துக்குச் சென்றவர்கள் அதிகம்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இயக்கத்திற்கு வந்தவர்கள் கொஞ்சப்பேர். இவர்களும் பொறுப்பான பதவிகளில் இருந்து கொண்டு மலையகப் போராளிகளை சண்டையில் இறக்கிவிட்டனர். அவர்கள் தான் மாவீரர்கள் ஆனார்கள். என்னுடைய மகன் ஒரு கரும்புலி. என்னுடைய மனைவி முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டார். இப்போது என்னுடைய குடும்பத்தில் நான் ஒருவனே இன்று உயிரோடு இருக்கின்றேன்” என்றும் தெரிவித்தார்.

Subramaniyan_Ponnaiahபொன்னையா சுப்பிரமணியன் அன்று மேலும் தெரிவிக்கையில், “தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லீம் மக்களை வடக்கில் இருந்து வெளியேற்றியதன் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் பார்வை மலையகத் தமிழர்கள் மீது திரும்பியது. மலையகத் தமிழர்களை சந்தேகப் பார்வையுடன் அணுகிய தமிழீழ விடுதலைப் புலிகள் மலையகத் தமிழர்கள் பற்றிய விபரங்கைத் திரட்டி அவர்களையும் வடக்கில் இருந்து வெளியேற்றுவதற்கு முயற்சித்தனர். ஆனால் அதற்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பியதால் அவர்களை வெளியேற்றுவதற்குப் பதிலாக மலையக இளைஞர் யுவதிகளை தீவிரமாக இயக்கத்துக்குள் உள்வாங்கி களமுனைக்கு அனுப்பி வைத்தனர்.

எழுபதுக்களில் முன்னெடுக்கப்பட்ட காந்தியத் திட்டம் கூட வடக்கின் எல்லைப்புறக் கிராமங்களை பாதுகாக்கும் அரணாகவே மலையக மக்கள் குடியமர்த்தப்பட்டனர். மலையக மக்களின் இச்சீரழிவான வாழ்நிலைக்கு அவர்களுடைய பிரஜாவுரிமையை பறித்த சிங்கள பேரினவாத அரசு மட்டுமல்ல அதற்கு ஒத்துழைத்த தமிழ் தலைமைகளும் அம்மக்களை இன்றும் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தும் தமிழ் தலைமைகளும் காரணமாகும். 40 வீதம் மலையக மக்களைக் கொண்ட வன்னியில் மலையகத் தமிழர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் தமிழ் மாகாண அரசில் இல்லை”  என்றும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

பொன்னையா சுப்பிரமணியனைப் போலவே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பீரங்கியாக இருந்த தமிழ் கவியுமமலையகத் தமிழர்களின் வாழ்வை மீளாய்வு செய்கின்றார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் 2017 காரை எழிலில் வெளிவந்த தமிழ் கவியின் சர்ச்சைக்குரிய “கிளிநொச்சியும் மலையகத்தமிழரும்” என்ற கட்டுரையில் வன்னியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு வாழ்ந்த மலையகத் தமிழரின் வாழ்வை படம் பிடித்து காட்டுகிறார் தமிழ்கவி.

ThamilKavi_Writer“சாந்தபுரம் குடியிருப்பு இயக்கப் பண்ணை களுக்கான கூலிகளை இலக்கு வைத்து போடப்பட்டது என்பது தான் உண்மை. அங்கும் ஒருகுடும்பத்துக்கு முழுதாக இரண்டு பரப்பு நிலம்கூட வழங்கப்படவில்லை. சுமார் பத்துக் குடும் பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது. ஏனையோர் தமது முயற்சியிலேயே வீடு கட்டினார்கள்.

மலையகத்தில் இருந்தது போலத் தான் இப்பவும் இருக்கிறோம். என்ன அங்கை குளிர் இங்கை வெயில். அவ்வளவுதான் என்றார் ஒரு முதியவர். இவர்களது பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங் கள் இல்லாதவர்கள் அதிகம். ஒரு குடும் பத்தில் பதினைந்து பதினெட்டு வயதிலுள்ள பிள்ளைகளுக்கு பிறப்பு அத் தாட்சி இல்லை என்றபோது அப்பிள்ளை களின் தாய், தந்தை இருவருக்குமே இல்லை என்பதை அறிந்த போது திடுக்கிட்டோம்.

இதே போலக் காந்திக் கிராமத்திலும் வளர்ந்து திருமணம் செய்த ஆண்களுக்கும் அவர்கள் மகன்களுக்கும் பிறப்பு ஆதாரம் இல்லை. மகன் தனக்கு மோட்டார் சைக்கி ளோட அனுமதிப்பத்திரம் எடுக்க முயன்ற போதே இவற்றின் அவசியம் தெரிந்தது. மலையக மக்களில் எழுதப் படிக்கத்தெரியா தவர்கள் அதிகம்தான். அது மட்டுமல்ல பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்பு வதற்காக பாடசாலையிலிந்து மறித்தல், தாய்க் குப்பிறக்கப்போகும் அடுத்த பிள்ளையை வளர்ப்பதற்காக பாடசாலை செல்ல முடி யாமற் போனவர்கள் என நிறையவே சந்தித் தோம். எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் குடும் பங்களிலிருந்து போராடப் போனவர்களும் அதிகம். காரணம் தேசப்பற்றல்ல அவர்களுக்குமொரு சமூக அந்தஸ்து தேவைப்பட்டது தான்.

கிளிநொச்சியின் காடழித்து களனியாக்கிய மக்களில் பலர், தமக்கொரு குடிநிலமில்லாமல் இன்னும் பெரும் தனக்காரர்களையே தஞ்சமடைந்துள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

பொன்னையா சுப்பிரமணியணினதும் தமிழ்கவியினதும் கருத்துக்கள் பெரும்பாலும் மறுக்கப்பட்டே வந்தது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள கீழுள்ள ஆவணப்பதிவு அவர்களின் கருத்துக்களை உறுதிப்படுத்துவதாகவே அமைகின்றது.

https://www.youtube.com/embed/HrMp20Fwt5U

 

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு