மாகாணசபை தேர்தல் – நாளை மறுதினம் கட்சித்தலைவர்கள் சந்திப்பு


qwrமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இது தொடர்பான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தேர்தலை நடத்தும் விதம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
புதிய எல்லை நிர்ணயங்களுக்கு அமைய களப்பு மற்றும் விகிதாசார முறையின் கீழ் தேர்தலை நடத்துவதா அல்லது பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் புதன்கிழமை கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு