மத்தள விமான நிலையம் இந்தியாவிற்கு என்றால் வானம் யாருக்கு சொந்தம்?


avatars-000132851171-dgnviz-t500x500மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்குவதன் மூலம் நாட்டில் இறையாண்மையை பாதுகாப்பதற்கான வழியைப் பற்றி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என வணக்கத்திற்குரிய எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று (05) கேகாலை பகுதியில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கியதன் பின்னர் அதற்கு மேல் உள்ள வான் பரப்பு யாருக்கு சொந்தம் என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அரசியலில் உள்ள முரண்பாடுகளுக்கு மத்தியில் எதிர்காலத்தில் யுத்தம் ஒன்று ஏற்பட்டால் இலங்கைக்கு இரு குழுக்களுக்கு இடையில் நடைபெறும் போட்டியின் பந்தை போன்று இருக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு