சிங்கப்பூர் ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்


mahinda-e1453091048596சிங்கப்பூர் ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (06) காலை அநுராபுரம் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் ஒப்பந்தத்தினால் இலங்கைக்கு சில பாதகமான விளைவுகள் இருப்பதனால் அதனை மீள பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவினால் பிரதமருக்கும் தனக்கும் இடையில் ஒப்பந்தம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

எனக்கும் பிரமருக்குக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை அவ்வாறு ஒப்பந்தம் ஏதாவது இருந்தால் அது பிரதமருக்கும் அனுர குமார திஸாநாயக்கவிற்கும் தான் என அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு