கிளிநொச்சி இயக்கச்சி ஏ 9 வீதியில் விபத்து இருவர் பலி!


DSC07034ஏ9 பிரதான வீதியின் இயக்ச்சி பகுதியில் இன்று(06) அதிகாலை  ஜந்து மணியளவில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
கிளிநொச்சி ஏ 9 வீதி ஐயக்கச்சி பகுதியில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மின்சாரசபையின் வாகனத்தில் கொழும்பு விமான நியத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் வாகனம்    மின்சாரசபையின் வாகனத்தின் பின்பகுதியில் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது ஆறு பேர்  காயதடைந்து நிலையில்  யாழ்ப்பாணம் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஓருவரும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் ஒருவரும் என இருவர் இறந்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்த  தாயகம் திரும்பியவர்களை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுக்கொண்டிருந்த வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது வாகனத்தில் எட்டு பேர் பயணித்துள்ளனர்
இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் மேட்கொண்டு வருகிறார்கள்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு