சம்பள உயர்வு தொடர்பில் எந்தவொரு யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை


ranil-wickremasinghe-1பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தன்னிடமே அல்லது அமைச்சரவையிலோ எந்தவொரு யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பத்திரிகைகளில் மாத்திரமே தெரிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலக செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கட்சியின் தலைவர்கள் கூட்டத்தில் இது பற்றி ஒரு யோசனை முன்வைக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் தொடர்பிலும் அங்கு கருத்து தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நியாயமான யோசனை முன்வைக்கப்பட்டால் திறைசேரியுடன் கலந்தாலோசித்து எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள முடியும் என தான் அப்போது தெரிவித்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பிரதமர் பல சந்தர்ப்பங்களில் மீண்டும் கட்சித் தலைவர்களை சந்தித்த போதிலும், இது தொடர்பில் அவர்கள் எந்தவொரு யோசனைகள் அல்லது பரிந்துரைகளை செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யோசனைகள் ஏதாவது முன்வைக்கப்பட்டுள்ளதாக என சபாநாயகரிடம் கேள்வி எழுப்பிய போது அவர், கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போதிலும் இது தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு