கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி


modikarunatributeதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் நரந்திர மோடியை ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையார் ஐஎன்எஸ் விமான தளம் வந்த மோடி, சாலை மார்கமாக பலத்த பாதுகாப்புடன் ராஜாஜி மண்டபம் வந்தடைந்தார். அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, ஸ்டாலின் மற்றும் அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அவருடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அங்கிருந்து புறப்பட்ட மோடியை அவரது கார் வரை சென்று செயல்தலைவர் ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார். பிரதமர் மோடி, மீண்டும் ஐஎன்எஸ் விமானதளம் சென்று ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து 12.15 மணிக்கு விமானம் மூலம் அவர் டெல்லி திரும்பினார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு