இலங்கையை ஏனைய நாடுகளில் பிரபல்யப்படுத்தவும் : புதிய தூதுவர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்


downloadபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இலங்கையை ஏனைய நாடுகளில் பிரபல்யப்படுத்தும் வகையில் செயற்படுவதோடு முதலீடு, வர்த்தகம், தொழில்நுட்ப உதவிகள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பத்து நாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் என்போர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டனர். புதிய தூதுவர்களுக்கு நியமனத்தை வழங்கிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிதாக பதவியேற்றுள்ள தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் எமது நாட்டை ஏனைய நாடுகளிடம் பிரபல்யப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும். சர்வதேச ரிதியாக உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினைப் பெறத்தக்க வகையில் சர்வதேசத்துடனான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும். விசேடமாக ஏற்றுமதி தொடர்பிலும், அதனை அதிகரிக்கும் வழிமுறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு