வடமாகாணத்தில் அபிவிருத்திக்கான எந்தப் போராட்டங்களும் இடம்பெறவில்லை – ஆளுநர் றெஜினோல்ட் குரே


38734795_243267099728605_7785904980338147328_nவடமாகாணத்தில் அரசியல்வாதிகளும் பொது மக்களும் அபிவிருத்திக்காக போராட்டம் நடத்துவது கிடையாது. என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரெ  தெரிவித்துள்ளார்

நேற்றையதினம் (09-08-2018) ஆளுநர் அலுவலகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்ற சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்

தென்னிலங்கையில் நீங்கள் பார்த்தீர்களானால் மக்கள் தமக்கு அபிவிருத்தி வேண்டி கல்வி வசதி வேண்டி நீர் வசதி வேண்டி வீதி செப்பனிட வேண்டும் என வேண்டி பல போராட்டங்களை நடாத்துகின்றார்கள்.

ஆனால் இங்கே யாழ்ப்பாணத்தில் அடையாளம் வேண்டும் அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்த அவர்

இப்போது சாந்தியும் சமாதானமும் நிலவுகின்றது ஜனநாயகம் வளர்ந்திருக்கின்றது ஜனநாயகம் கிடைத்திருக்கின்றது ஆனால் அபிவிருத்திப்பணிகள் குறைவாக இருக்கின்றது.

மக்கள் ஒரு நிமிடத்தில் அளிக்கும் வாக்கு அரசியல்வாதிகளுக்கு ஐந்து வருடத்திற்கு அதிகாரம் அளிக்கிறது மக்கள் வாக்களித்துவிட்டு வீட்டிலேயே சும்மா இருக்கின்றார்கள் அரசியல்வாதிகள் வாக்கினை பெற்றுக் கொண்டு  ஐந்து வருடங்கள் சும்மா இருக்கிறார்கள். எனவும் குறிப்பிட்ட அவர்

இந்த ஜனநாயக நாட்டில் மக்கள் தங்களுக்கான அபிவிருத்தியை அடைவதற்கான  முயற்சியை எந்த நேரமும் எடுக்க வேண்டும் போராட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு