கிளிநொச்சிக் கொலை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது


rapeகிளிநொச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கொலை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் பெரும் குற்றப்பிரிவு  விசேட குழுவினரால் ஒருவர்   சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்

கைதுசெய்யப்பட்டவர்  அதே ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார்  பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையைப் பொறுப்பதிகாரி என அறியமுடிகிறது இவர் கிளிநொச்சி விநாயகபுரத்தை  சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்  தந்தை எனவும் பொலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.
பொலிசார் குறித்த பெண்ணின் தொலைபேசியின் தரவுகளை அடிப்படையாக கொண்டு  விசாரணைகளை மேற்கொண்ட போது  குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன் தொலைபேசியில்   இவருடனே அதிகளவாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும்   சம்பவம் நடைபெற்ற அன்று இரு தொலைபேசிகளும் நீண்ட நேரமாக ஒரே  கோபுர அலையிலையே  நகர்ந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பெரும் குற்றப் பிரிவுப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
உங்கள் கருத்து
  1. கட்டப்பொம்மன் on September 1, 2018 11:06 am

    மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தமிழின துரோகி ltte பினாமிகள் திருவிளையாடல் இது


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு