போலி ரூபா 5,000 தாள்களுடன் இறக்காமத்தைச் சேர்ந்தவர் கைது


downloadபோலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர், கொழும்பு புறக்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (03) காலை, புறக்கோட்டை, செபஸ்தியன் வீதியில் வைத்து பஸ் நடத்துனர் ஒருவரிடம் ரூபா 5,000 நாணயத்தாள் ஒன்றை வழங்கிய குறித்த சந்தேகநபர், அதனை மாற்றித் தருமாறு கோரியுள்ளார். இதனையடுத்து, குறித்த நாணயத்தாள் தொடர்பில் சந்தேகமுற்ற நடத்துனர், அது தொடர்பில் புறக்கோட்டை பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

 

அதனையடுத்து, குறித்த சந்தேகநபரை கைது செய்த பொலிசார் அவரை பரிசோதனை செய்த போது, அவரிடமிருந்து ரூபா 5,000 நாணயத்தாள்கள் 13 இனை கைப்பற்றியுள்ளனர்.

 கைது செய்யப்பட்ட 39 வயதான சந்தேகநபர், அம்பாறை வீதி, இறக்கமாம் 03 ஐச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வு பிரிவிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு