காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜெனிவா செல்ல விசா மறுப்பு


DSC01901கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்புப்போட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஜ.நா. மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கான விசா மறுக்கப்பட்டமை தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை இன்று நடத்தியுள்ளனர்.

இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதிகோரி கடந்த 560 நாட்களாக போராடி வருகின்றோம்

ஆனால் தமக்கான தீர்வுகிடைக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும்.எனவும் தெரிவித்தனர்

அத்தோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு மாதாந்தம் 6000 ரூபா வழங்குவது தொடர்பிலும் அவர்கள் கருத்து தெரிவித்த அவர்கள். குறித்த அலுவலகம் அமைக்கும் முன்பாகவே இந்த தொடர்பில் பேசப்பட்டது. 6000 ரூபா எமக்கு பெரிதல்ல. அதற்கு மேல் எமது பிள்ளைகள் பெறுமதியானவர்கள் எனவும் அவர்களால் குறிப்பிடப்பட்டது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு