திருகோணமலையில் நிலநடுக்கம்; கிண்ணியா, மூதூரில் உணர்வு


Earthquake-Trincomaleeதிருகோணமலை, களப்பை அண்டிய பகுதியில் இன்று (15) நள்ளிரவு சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இன்று (15) நள்ளிரவு 12.40 மணியளவில் ஏற்பட்டதாகவும் சிறியளவான ஒரு அதிர்வு எனவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் கே. சுகுனதாஸ் தெரிவித்தார்.

இது விடயமாக தொடர்பு கொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர்.
இவ் அதிர்வானது கிண்ணியா, மூதூர், திருகோணமலை ,லங்கா பட்டிணம், வெருகல் பகுதிகளிலேயே இடம் பெற்றுள்ளது.

 3.58 ரிச்டர் அளவில் இந்நிலஅதிர்வு பதிவாகியதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, திருகோணமலை கடற்படையை உடனே தொடர்பு கொண்டு இது விடயமாக கேட்டபோதும் இது சிறியளவானது என்றும் இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்ததாக உதவிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.

இது விடயமாக தலைமைக் காரியாலயத்துக்கு  அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் ஏனைய தகவல்கள் அதனுடைய மேலதிக விபரங்களை விரைவாக ஊடகத்துக்கு தெரியப்படுத்துவதாகவும் மேலும் தெரிவித்தார்.

இப்பூமியதிர்வை அடுத்து, மீண்டும் அவ்வாறான அதிர்வுகள் ஏற்படக்கூடுமா என அவதானித்து வருவதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நில அதிர்வுகள் பல்லேகெல, மஹகனதராவவிலுள்ள பூமியதிர்வுமானியில் முறையே 3.5 மற்றும் 3.8 ரிச்டர் என பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு