இந்தியா செல்ல சிவாஜிலிங்கத்துக்கு வீசா மறுப்பு


sivajilingamஇந்தியாவில் நடைபெறவுள்ள பயிற்சி நெறிக்குச் செல்லும் குழுவில் உள்ளடக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு வீசா வழங்க இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் மாகாண சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி நெறி ஒன்றை இந்தியாவின் மும்பையில் ஏற்பாடு செய்துள்ளதுடன் அதற்காக இலங்கையில் இருந்து 18 மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

அதனடிப்படையில் குறித்த குழுவினர் இந்தியா நோக்கி பயணித்துள்ளதுடன் தனக்கு வீசா மறுக்கப்பட்டதன் காரணமாக அந்த சந்தர்ப்பத்தை இழந்ததாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரைான பல்வேறு ஆர்ப்பாட்ட பேரணிகளில் கலந்து கொண்டதன் காரணமாக தனது பெயர் தடுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு வீசா மறுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு