வட மகாண அரசியல் தலைவர்களை பற்றிப் பேச ஆளுநருக்கு அருகதையில்ல‍ை – சிறிதரன்


Sritharan-MP-099இலங்கையின் மத்தியமாகாணத்திற்கு செல்ல முடியாதவாறு சமூக அடிப்படையில் விரட்டியடிக்கப்பட்ட வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேக்கு வடக்கு மாகாண அரசியல் தலைவர்கள் பற்றிக் கதைப்பதற்கு அருகதை இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன்  தெரிவித்தார்.

கரைச்சி பிரதேசசபையின் கந்தபுரம் இலத்திரனியல் நூலகத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்த அவர்,

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தெற்கில் வாழும் சிங்களவர்களை திருமணம் செய்தமை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி போன்ற இடங்களில் இந்துக் கோவில்கள் அமைத்து தமிழர்கள் வழிபடுகின்றமை, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு இராணுவ இரத்தம் ஓடுகிறது, தமிழர்களிடம் இனபேதம், சாதி பேதம், குலபேதம் இருக்கின்றது என்றெல்லாம் வடக்கு ஆளுநர் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு