இரண்டு மாதத்துக்குள் மாகாண சபை தேர்தல்


lasantha-alagiyawannaஎல்லை நிர்ணய அறிக்கை மீதான மீளாய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டவுடன் இரண்டு மாதங்களில் மாகாண சபை தேர்தல் இடம்பெறும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.

மேலும் அனைத்து கட்சிகளம் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்தவே எதிர்பார்க்கின்றன. தேர்தலை காலம்தாழ்த்துவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.

சுதந்திரக் கட்சி தேர்தலை காலம்தாழ்த்துவதாக எவர் குற்றஞ்சாட்டினாலும் அது அவர்களின் தனிப்பட்ட எண்ணம். ஆனால் சுதந்திரக் கட்சி தேர்தலை விரைவில் நடத்தவே எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுயாதின தேர்தல் ஆணைக்குழுவுக்கும் கட்சி தலைவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று தேர்தல்கள் அலுவலகத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு