அரசியல் கைதிகளின் விடுதலை ; சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி தீர்மானம்


Maithri-Sampanthanதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து முழுமையான காரணிகளை அறிந்துகொள்ள வேண்டும் எனவும் எதிர்வரும் 17 ஆம் திகதி பாதுகாப்புக்குழுக் கூட்டத்தின் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தனை சந்தித்து பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதாக  எதிர்க்கட்சி தலைவருடனான சந்திப்பில் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார்.

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு