நியமனம் பெறுவதற்கான பதிவுகளை மேற்கொண்ட வேலையற்ற பட்டதாரிகள்


jaffna1யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் பெறுவதற்கான பதிவுகளை இன்று மேற்கொண்டுள்ளனர்

நீண்டகாலமாக வேலையில்லாமல் இருக்கின்ற பட்டதாரிகளுக்கு விரைவாக முறையான அரச நியமனங்களை வழங்க வேண்டுமென்று கோரியுள்ள பட்டதாரிகள் தமக்கான அரச நியமனங்களை விரைந்து பெற வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்வதாகவும் இதன்போது தெரிவித்தனர்.

யாழ். மாவட்ட செயலகத்தின் முன் யாழ்ப்பாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு மட்டும் இத்தப் பதிவு நடைபெற்ற அதேவேளை வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் வேலையற்ற பட்டதாரிகளின் பதிவுகள் அந்தந்த மாவட்ட பிரதிநிதிகளுடாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு