உண்ணாவிரதத்தை கைவிட்டனர் தமிழ் அரசியல் கைதிகள்


IMG_4825கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று சந்தித்துள்ளார். நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்துவரும் நிலையில் இன்று  அவர்கள் தமது உண்ணாவிரத்ததை கைவிட்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச  தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றமை  மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இவர்களின் விடுதலையை வலியுறுத்தி பாதயாத்திரை சென்றுள்ளமை மற்றும் எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன் ஆகியோர் இடையில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டவுள்ளமை என்ற காரணிகளினால் தமிழ் அரசியல் கைதிகள் தற்காலிகமாக தமது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்றைய தினம் அரசியல் கைதிகளை சந்தித்த  செல்வம் எம்.பியிடம் ஆரோக்கியமான வகையில் கலந்துரையாடியுள்ளார். தாம் இந்த அரசாங்கத்திடம் எமது நலன்களை பெற்றுக்கொள்ள அழுத்தம் பிரயோக்கித்து வருகின்றோம். எமக்கு கிடைக்கும் சகல சந்தர்ப்பங்களிலும் அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து பேசுகின்றோம்.

எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவாரத்தை நடத்தவுள்ள  நிலையில் அந்த பேச்சுவார்த்தையில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அழுத்தம் கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும் தமது விடுதலைக்காக தொடர்ச்சியாக பாடுபடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமது தமிழ் அரசியல் கைதிகள் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு