இலங்கையின் கல்வி முறை நவீன மயப்படுத்தப்படும்


z_p04-UNPஇலங்கையின் கல்வி முறையை நவீனமயப்படுத்தப் போவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் 3 மாடிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாட விதானத்தில் மாற்றங்களை மேற்கொண்டு, பாட உள்ளடக்கங்களிலும் மாற்றங்களை அறிமுகப்படுத்தப் போவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்வித்துறை உளவியலாளர்கள், கல்வியியலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் கருத்துக்கள், யோசனைகள், ஆலோசனைகளுக்கு அமைய இது தொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் 3 மாடிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் இதற்காக 25 கோடி ரூபா செலவிடப்படும்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு