தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை கூட்டமைப்பு நிபந்தனையாக வலியுறுத்த வேண்டும்


Dauglas-720x450நல்லாட்சி அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் “ என்ற கோரிக்கையுடன் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலை நோக்கி மூன்று நாட்களாக நடைபவணியாக சென்று கொண்டிருக்கின்ற யாழ். பல்கலை மாணவர்வர்களுக்கு உற்சாகமளிக்கும் முகமாக ஈ.பி.டி.பி யின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அநுராதபுரத்தில் வைத்து அவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

இதன்போதுகருத்துத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறைகளில் அடைத்து வைப்பதில் அர்த்தமில்லை.

அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி இலங்கை அரசு தமது நல்லெண்ணத்தை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வரவு செலவுத்திட்டம் மீதான ஆதரவு நிபந்தனையாக அரசுக்கு முன்வைக்க வேண்டும். தமது பிர்ச்சினைகளுக்கான தீர்வுகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் இன்று வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் தாமே இந்த அரசை ஆட்சிபீடம் ஏற்றியதாக தம்பட்டம் அடிக்கும் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்காமல் கண்மூடித்தனமாக அரசுக்கு முண்டு கொடுப்பது கண்டிக்கத்தக்கதாகும் என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு