வடமாகாண சபையின் இறுதி அமர்வு 24 ஆம் திகதி


cvk-300x200வடமாகாண சபையின் 5 வருட காலப் பகுதியில் 437 பிரேரணைகளும் 19 நியதிச் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையில்  இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபை தனது 5 வருட கால ஆட்சிக்காலத்தில் 133 அமர்வுகளை இதுவரை நடாத்தியுள்ளது. எதிர்வரும் 24 ஆம் திகதி இறுதி அமர்வான 134 வது அமர்வு நடைபெறவுள்ளது.

இதுவரை நடைபெற்ற 133 அமர்வுகளில் 437 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றுள் தமிழர்கள் மீதான இனப் படுக்கொலை மற்றும் தாக்குதல்கள் தொடர்பான 6 முக்கியமான பிரேரணைகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் மக்கள் நலன் சார்ந்த 437 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதே போல் குறை நிரப்பு நியதிச் சட்டங்கள் உள்ளடங்கலாக இதுவரை 29 நியதிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களில் பாலி ஆற்றிலிருந்து யாழ். குடா நாட்டுக்கு நீரை கொண்டு வரும் தீர்மானம் எனக்கு ஆத்ம திருப்பதியை கொடுத்துள்ளது.

மக்கள் அடையவுள்ள நன்மைகளின் அடிப்படையில் அந்த தீர்மானம் மிக முக்கியமானது. மேலும், அந்த தீர்மானம் மிக முக்கியமானது. அந்த தீர்மானமாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப்படுகின்றது என குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு