அஸ்கிரிய, மல்வத்து பீட மாநாயக்க தேரர்களிடம் நிலைமையை எடுத்து கூறிய ஐ.தே.க.வினர்


kandy2நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மையை  முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உடனடியாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று ஐக்கியதேசிய கட்சியின் உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்கள் பலர் அடங்கிய குழு ஒன்று கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடத்தின் மாநாயக்க தேரர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்

பாராளுமன்றத்தின் கொரடாவாக இருந்த அமைச்சர் லக்‌ஷ்மன் கிரயெல்ல, அமைச்சர்களான பாடளி சம்பிக ரணவக, ரஞ்சித் மத்தும பண்டார, ரவீ கருநானாயக்க, காமினீ ஜயவிக்கிரம பெரேரா,  தயா கமகே உள்ளிட்ட ஐ.தே.க  மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி என்பவற்றின் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

முதலாவதாக இவர்கள் அஸ்கிரிய பீடத்திற்குச் சென்று அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க வண, வரகாகொட  ஶ்ரீ ஞானரதனதேரரையும், பின்னர் மல்வத்த பீடத்திற்குச் சென்று மல்வத்த பீடத்தின் மாநாயக்க வண, திப்படுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரையும் சந்தித்து ஆசி பெற்ற பின் தற்போதைய அரசியல் நிலை பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறினர்.

இதன்போது இங்கு கருத்து தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல,

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசில் ஸ்திரமற்ற தன்மையை  நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும்.

இருந்தபோதும்  சட்ட விரோதமான முறையில் நியமித்துள்ள புதிய பிரதமர் மஹிந்த ராஷபக்‌ஷவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால்  பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளனர்.  நாளை 5 ம் திகதி கூட்டுவதாகவும் பின்னர் 7 ஆம் திகதி கூட்டுவதாகவும் கூறிய போதும்   எதனையும் நம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே நாங்கள் சபாநாயகரிடம் கேட்டுக்கொள்வது  சபாநாயகர் என்ற வகையில் பாராளுமன்றத்தில் அவருக்கு  இருக்கும் அதிகாரத்தை   பயன்படுத்தி உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டவேண்டும். பாராளுமன்றத்தை கூட்டிய உடன் இப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.

இங்கு கருத்து தெரிவித்த பாட்ளி சம்பிக ரணவக,

ஒரு பிரதமர் இருக்கும் போது மற்றுமொரு பிரதமரை நியமிப்பது சட்டத்திற்கு முரனானதாகும். ஜனாதிபதிக்கு வாக்களித்த 62 இலட்சம் மக்களின்  எதிர்பார்புக்களுக்கு அது பாதகமானதாகும். எனவே தற்போது ஜனாதிபதிக்கு மக்கள் வழங்கிய ஆதரவு முடிவடைந்து விட்டது.  நாங்கள் உலக நாடுகளுடன் தொடர்புள்ள நாடு  என்ற வகையில் உலக நாடுகள் சட்ட பூர்வமான அரசாங்கள் எது என்று அறிந்துகொள்ள விரும்புகின்றார்கள். இந் நாட்டின். அதை நிரூபிப்பதற்கு பாராளுமன்றத்தை கூட்டுவது முக்கியமாகும் என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.

ரஞ்சித் மத்தும பண்டார,

மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமிப்பதற்கான காரணமாக ஜனாதிபதி அவர்களது கொலை முயற்சி ஒன்று பற்றிப் பேசப்படுகின்றது. இதுதொடர்பாக நாமல் குமார என்ற ஒருவர் முறைப்பாடு ஒன்றை செய்தார். அது தொடர்பாக நாங்கள் பக்கசார்பற்ற பூரண விசாரணை  ஒன்றை நடத்தினோம்.

124  ஒலிப்பதிவுகள் வழங்கப்பட்டன அதனை அரசின் பகுப்பாய்வாளரிடம் வழங்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்தோம் அதில் ஒரு இடத்திலேனும் ஜனாதிபதி மற்றும் கோத்தபாய ராஜபக்‌ஷ ஆகியோர் கொலை முயற்சி பற்றி பேசப்பட வில்லை. நான் சவால் விட விரும்புகின்றேன் இவ் ஒலி நாடாக்களை நாங்கள் மீண்டும் கேட்டு பார்ப்போம் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு