புதிய பிரதமர் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு மேல்மாகாண சபையில் பிரேரணை


625.500.560.350.160.300.053.800.900.160.90ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு மேல்மாகாண சபையில் மக்கள் விடுதலை முன்னணியினர் தனிநபர் பிரேரணையினை முன்வைத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலும்  தெரிய வருவதாவது,

மேல்மாகாண சபைக்கூட்டத் தொடரானது ஒரு மாதத்திற்கு இரு தடவைகள் கூட்டப்படும் நிலையில் இம்மாத  கூட்டத்தொடரானது நவம்பர் மாதம் 05 ஆம் திகதியான இன்றைய தினம் மேல்மாகாண சபைத்தலைவர் தலைமையில் கூட்டப்பட்டது.

அதன்போது ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான மேல்மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முன்னணியினர், ஜாதிக ஹெல உறுமைய கட்சியின்  உறுப்பினர்கள் ஆகியோர் கறுப்பு உடை மற்றும் கறுப்புப் பட்டி அணிந்து சபையில் பிரசன்னமாகினர்.

இந்த நிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினரால் மேற்படி புதிய பிரதமரின் நியமனமானது சட்டத்திற்கு முரணானது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் தனிநபர் பிரணை ஒன்று  முன்வைக்கப்பட்டது.

அதனை அடுத்து சபையில் பிரசன்னமாகி இருந்த ஆளும் கட்சி தரப்பினரான ஜாதிக்க ஹெல உறுமைய உறுப்பினர்களான நிசாந்த சிறிவர்ணசிங்க மற்றும் நிரோஷ அத்துக்கோரள ஆகியோர் மேற்படி பிரேரணைக்கு தமது ஆதரவை தெரிவித்ததை அடுத்து சபை நடுவே  எதிர் தரப்பினரால் மகிழ்ச்சிக் கோஷங்கள் எழுப்பப்பட்டன .

அதனை தொடர்ந்து சபை தலைவரால் சபை நடவடிக்கைகள் இரண்டு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்டதுடன் மூன்றாவது தடவையாக சபை நடவடிக்கைகள்  ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மஹிந்தவின் நியமனமானது சட்டத்திற்கு முரணானது ஆகவே அதற்கு எதிராக முறையான நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனநாயகம் நிலை நாட்டப்படவேண்டும் எனவும் கோரி சபையில் தொடர்ந்தும் கோஷங்கள் எழுப்பட்டன .

ஆகவே , மேல்மாகாணசபையின் கூட்டத்தொடரானது எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு சபைத் தலைவரைல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு