மைத்திரி – மஹிந்த அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்க முடியாது – வாசுதேவ


Maithripala.Sirisena.Mahinda.Rajapaksaமஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கொண்ட இந்த புதிய அரசாங்கமே தொடரும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – மஹிந்தராஜபக்ஷ இணைந்து அமைத்துள்ள அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்க முடியாது. ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையை நிரூபிப்பது அநாவசியமானது  என தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சில் இன்று வியாழக்கிழமை  கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் தொடர்பான எந்தவொரு தீர்மானத்தை எந்தவொரு கட்சியும் எடுக்க முடியாது. காரணம் பாராளுமன்றம் அரசியலமைப்பிற்கு இணங்கவும், அரசாங்கம் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு இணங்கவுமே செயற்படும். 14 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற அமர்வுக்கான ஒழுங்கு பத்திரம் தயாரிக்கப்படும். அதன்படியே அன்றைய அமர்வுகள் இடம்பெறும். இதனை சபாநாயகர் தீர்மானிப்பார் என்றார்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு