இன நல்லிணக்கத்தை வலியுறுத்தி தனிமனித கவனயீர்ப்பு போராட்டம்


1-8-720x450இன நல்லிணக்கத்தை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் டி.எம்.ஆனந்த என்ற சகோதர இனத்தவர் ஒருவரால் இன்று வவுனியா  பொலிஸ் நிலையம் அருகில் முன்னெடுக்கப்பட்டது.

இக் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,

தென்னிலங்கையில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய மக்கள் இன ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். குறிப்பாக 90 வீதமானோர் இன ஒற்றுமையை விரும்புகின்றனர். ஆனால் வடக்கில் குறித்த ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயற்படுகின்றனர். பெரும்பாலானோர்  இந்த ஒற்றுமையை விரும்பும் நிலையில் வடக்கில் சுமந்திரன், சிவாஜிலிங்கம் போன்றோர் ஒற்றுமையை சிதைக்கும் நோக்குடன் செயற்படுகின்றனர்.

குறிப்பாக தென்னிலங்கையில் சுமந்திரன், சம்பந்தன் உள்ளிட்டோர் அரச சலுகைகளை முழுமையாக அனுபவிப்பதோடு, அரசுடன் நெருக்கமாக உறவாடி வருகின்றனர். பணங்களும் அவர்கள் கைகளில் கிடைக்கின்றது. மக்களோ இன்றும் பல்வேறு துன்பங்களுடனேயே வாழ்கின்றனர். தாங்கள் சுகபோகங்களை அனுபவித்தும், தென்னிலங்கையில் உறவுகளை வதைத்துக்கொண்டும் இங்கு மக்களை இன ரீதியில் பிரிக்கின்றனர்.

இவ்வாறான சம்பவங்களை மாற்றியமைத்து, இலங்கையில் அனைத்து இனத்தவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதற்காகவே தான் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு