பொதுத் தேர்தல் ஜனவரி 5ஆம் திகதி


201811101211066642_srilankacrisis-election-2019-issue_SECVPFபாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான பொதுத் தேர்தல், 2019 ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால எல்லை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி, நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவதாகவும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதியன்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு