பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக ஐ.தே.க.வினர் நாளை முறைப்பாடு


0a785842d1965ae62a9e8464b55ef971_XLபாராளுமன்றத்தின் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 19 ஆவது அரசியலமைப்பிற்கு முரணாக பாராளுமன்றத்தினை கலைத்துள்ளமை அரசியலமைப்பிற்கு முரணாகும் என சுட்டிக் காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார,  இதற்காக உரிய தீர்வினை பெற்றுக் கொள்ள  நாளை உயர்நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பொது தேர்தலைக் கண்டு ஐக்கிய தேசிய கட்சி அஞ்சப்போதும் இல்லை. நீதிக்கமைய தேர்தல்கள் உரிய நேரத்தில் இடம்பெறுமாயின் அதனை வெற்றிகொள்ள தயாராகவே உள்ளோம். அவ்வாறு இல்லாமல் அரசியலமைப்பினை மீறி ஜனாதிபதியின் எண்ணத்துக்கு ஏற்றவாறு நாட்டின் ஆட்சிநிலை சர்வாதிகார போக்கில் செல்லுமாயின் அதற்கு கடும் எதிர்ப்பினையே வெளியிடுவோம் எனவும் தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு