ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு


ankayan2015 ஆம் ஆண்டு சிறுபான்மை மக்கள் விவசாயியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை வைத்தே அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ததாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று (13) கொழும்பில் உள்ள ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், வடக்கு கிழக்கில் உள்ள சிறுபான்மை மக்கள் அனைவரும் எங்களது புதிய அணிக்கு ஆதரவு வழங்குவார்கள் என நம்பிக்கை வைக்கின்றோம்.

2015 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி மீது மாத்திரம் நம்பிக்கை வைத்து சிறுபான்மை மக்கள் வாக்களிக்கவில்லை எனவும் விவசாயியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவருக்கு வாக்களித்து ஜனாதிபதி ஆக்கினார்கள்.

சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரே ஒரு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமேயாகும்.

சிறுபான்மை மக்கள் தமிழ் கட்சிகளை போன்று உணர்ச்சிவசப்பட்டு தீர்மானங்களை எடுக்க கூடாது. பொலன்னறுவைக்கு பின்னர் ஜனாதிபதி அதிகமாக யாழ்ப்பாணத்திற்கே வருகை தந்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு கண்டிப்பாக தீர்வு கிடைக்கும். எனவே இந்த சந்தர்ப்பத்தினை தவறவிட்டால் வரலாறு எம்மை குறை சொல்லும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சிக்கு மாத்திரம் சார்ப்பாக இல்லாமால் நடுநிலமையாக இருந்திருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு