மதுபானக் கடைகள்

Sunday, January 24, 2021

மதுபானக் கடைகள்

யாழ் பெருங்குடி மக்கள் கொரோனாவை உள்ளுக்கு விட்டு அடிக்கத் தயார்?

யாழ்ப்பாணத்தில் நீண்ட ஊரடங்கு உத்தரவுக்குப் பின் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது. மதுபானக் கடைகளில் நீண்ட வரிசையில் பெருங்குடி மக்கள் காத்துக் கிடந்தனர். சனிரைஸர் என்று சொல்லப்படும் கிருமிகொல்லி சோப்பில் 60 முதல் 70 வீதம் வரை அல்ககோல் உள்ளது. அதனால் வைரஸ் கிருமிகளை வெளியே இருந்து அழிப்பதிலும் பார்க்க போர்த் தந்திரமாக உள்ளுக்கு விட்டு அடிக்கலாம் என சில யாழ் பெரும்குடி மக்கள் நம்புகின்றனர் போல் தெரிகின்றது.

ரஸ்சியர்கள் சிலரும் இவ்வாறு தான் நம்பினர் என்பதையும் கவனிக்கவும். ஆனால் அமெரிக்கர்கள் பெரும் ஆயுதங்களை வாங்குவதற்காக துப்பாக்கி விற்கும் கடைகளில் பெரு வரிசையில் காத்து நின்றனர். வைரஸ்களை துப்பாக்கிச் சூட்டில் கொல்ல நினைக்கிறார்களோ என்னவோ.

ஒவ்வொரு மக்கள் குழுவும் வைரஸ்க்கு எதிராக பல முனைகளில் போராடுகின்றனர். இதனை குறைத்து மதிப்பிடக்கூடாது.😀😂🤣