அருண்மொழி

Saturday, July 31, 2021

அருண்மொழி

”சிறுபையன் என்று என்னை தாக்கி பேசினர்” – கொட்டகலையில் ஜீவன் தொண்டமான்

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத்தேர்தல் முடிவுகளின் படி அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற  தமிழ்வேட்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ள நுவரெலிய தேர்தல் மாவட்ட வேட்பாளராக ஜீவன் தொண்டமான் அவர்கள் சாதனை படைத்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக களமிறங்கியிருந்த ஜீவன் தொண்டமான்  சுமார்  109,155 வாக்குகள் அபற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொதுத்தேர்தல் வெற்றியின் பின்னர் கொட்டகலையில் வைத்து இன்று (07.05.2020) ஊடகங்களிடம் தன்னுடையை வெற்றி பற்றிய விடயங்களை முன்வைத்திருந்தார்.  இதன்போது “புதிய மலையகத்தை உருவாக்குவேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் எனக்கு பேராதரவை வழங்கியுள்ளனர். எனவே, மக்களின் எதிர்ப்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவேன். எனக்கு கிடைத்த வெற்றியை மக்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நுவரெலியா மாவட்டத்தையும் கைப்பற்றி வெற்றி பெற வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாக இருந்தது. தந்தையும் இதனையே கூறியிருந்தார். அந்தவகையில் மாவட்டத்தை கைப்பற்றி விருப்பு வாக்கு பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கின்றது.

இந்த பெரும் வெற்றியை கண்டு மகிழ்வதற்கு எனது தந்தை அருகில் இல்லாமை பெரும் கவலையளிக்கின்றது. ஆனால் எனது தந்தையை நேசித்த மக்கள் என்னுடன் இருக்கின்றார்கள். அது போதும்.

தேர்தல் காலங்களில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சிறுபையன் என்றுகூட என்னை தாக்கி பேசியிருந்தனர். ஆனால், என்மீது நம்பிக்கை வைத்து இளைஞர்களும், மக்களும் பேராதரவை வழங்கியுள்ளனர்.

புதியதொரு மலையகத்தை உருவாக்க முடியும் என மக்கள் நம்பியுள்ளனர். அந்த நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவேன். எனது வெற்றியை மக்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். சொல்லில் அல்லாமல் எனது சேவைகளை செயலில் காட்டுவதற்கே விரும்புகின்றேன்.

நான் முதல் முதலில் பாராளுமன்றம் செல்கின்றேன். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும், மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்ப்பார்ப்பு. அதனை முன்னிலைப்படுத்தியே பிரச்சாரமும் செய்தேன். நுவரெலியா மாவட்ட மக்கள் மட்டுமல்ல வெளி மாவட்ட இளைஞர்களும் எமக்கு பேராதரவை வழங்கினர்.

இதனால்தான் கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களில் ஆசனங்களை பெறமுடியாவிட்டாலும் எமக்கான வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. எனவே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு வாக்களித்த அதேபோல் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கொள்கை அடிப்படையிலேயே எமது அரசியல் பயணம் தொடர்கின்றது. கட்சி, தொழிற்சங்க பேதங்களுக்கு இடமில்லை. வெற்றியின் பங்காளியாக எமது மக்களும் மாறியுள்ளனர். எனவே, மாற்றத்தை நோக்கி பயணிப்போம் என்றார்.

மட்டக்களப்பின் விருப்புவாக்கு விபரங்கள் – பிள்ளையான் முதலிடத்தில் !

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. விருப்பு வாக்கு விபரங்களினடிப்படையில் சிறையிலிருந்தவாறே பிள்ளையான் எனப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தன் முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

தமிழ் மக்கள் விடுதலை புலிகள்

சிவனேசதுறை சந்திரகாந்தன் – 54,198

இலங்கை தமிழரசு கட்சி

சாணக்யா ராஹுல் – 33,332

கோவிந்தன் கருணாகரன் – 26, 382

ஶ்ரீங்கா பொதுஜன பெரமுன

சதாசிவம் வியாழேந்திரன் – 22,218

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

அஹமட் செய்னுலாப்தீன் நசீர் – 17,599

யாழ் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் – அங்கஜன் ராமநாதன் முதலிடம் !

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான யாழ் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. வழமையான முடிவுகளை போலல்லாது பல மாற்றங்ளை யாழ் மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகளில் காணக்கூடியதாகவுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சிக்கு 3 ஆசனங்களும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியவற்றிற்கு தலா 1 ஆசனம் வீதம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி

அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி

சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள்

எம்.ஏ சுமந்திரன் – 27,834 வாக்குகள்

தர்மலிங்கம் சித்தார்த்தன் – 23,840 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

டக்லஸ் தேவனந்தா – 32,146 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

கஜேந்திர குமார் பொன்னம்பலம் – 31,658 வாக்குகள்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி

சி.வி விக்னேஸ்வரன் – 21,554 வாக்குகள்

டுவிட்டர் தளத்தில் தமிழ் மொழியில் வாழ்த்து செய்தியை வெளியிட்ட ஜனாதிபதி !

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜக்க்ஷ தனது டுவிட்டர் தளத்தில் தமிழ் மொழியில் பதிவு செய்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் என்னால் முன்வைக்கப்பட்ட “சுபீட்சத்தின் நோக்கு” எனும் கொள்கையை மீண்டும் ஒரு முறை உங்கள் சக்தியின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

வன்னியின் விருப்பு வாக்குகள் வெளியாகின!

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான வன்னி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டவண்ணமுள்ளன.

அதன் அடிப்படையில் வன்னி தேர்தல் மாவட்டத்தினுடைய விருப்பு வாக்கு நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சிக்கு 3 ஆசனங்களும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றிற்கு தலா 1 ஆசனம் வீதம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் வன்னி மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி

ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி

சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்

செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்

யோகராஜலிங்கம் – 15,190 வாக்குகள்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி

காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

 

அச்சமின்றி வாக்களித்த அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி – சஜித்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் முழுமையாக வெளியாகி இருக்கின்றன.

அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலையில் உள்ளது.

அதேபோல் ரணிலை பின்னுக்குத்தள்ளி சஜித் தனது வெற்றியை பதிவுசெய்துள்ளார்.

இந்த நிலையில் தமது கருத்தை சஜித் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில்

ஜனநாயக மற்றும் வளமான நாட்டிற்காக சமகி ஜன பாலவேகாவுக்கு (ஐக்கிய மக்கள் சக்தி) அச்சமின்றி வாக்களித்த அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி. என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் பொதுஜன பொரமுன அமோக வெற்றி ! – ஐ. தே.கட்சி வரலாற்றுச் சரிவு. முழுமையான முடிவுகள் இதோ..!

2020ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிவுகள் முழுமைவெளியாகி உள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளதுடன் இரண்டாவது இடத்தினை  ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. 

அதற்கமைய நாடாளவிய ரீதியில் கட்சிகள் பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையும், ஆசனங்களின் விபரங்களும் வெளியாகி உள்ளன.

 • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – SLPP – 6,853,693 (59.09%) 145 ஆசனங்கள்
 • ஐக்கிய மக்கள் சக்தி – SJB – 2,771,984 (23.90%) 54 ஆசனங்கள்
 • தேசிய மக்கள் சக்தி – NPP / JJB – 4,45,958 (3.84%) 3 ஆசனங்கள்
 • இலங்கை தமிழரசு கட்சி – ITAK – 3,27,168 (2.82%) 10 ஆசனங்கள்
 • ஐக்கிய தேசிய கட்சி – UNP – 249,435 (2.15%) 1 ஆசனம்
 • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – AITC – 67,766 (0.58%) – 2 ஆசனங்கள்
 • OPPP – 67,758 (0.58%) – 1 ஆசனம்
 • தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – TMVP – 67,692 (0.58%) 1 ஆசனம்
 • இலங்கை சுதந்திர கட்சி – SLFP 66,579 (0.57%) 1 ஆசனம்
 • ஈழமக்கள் ஜனநாயக கட்சி – EPDP – 61,464 (0.53%) 2 ஆசனங்கள்
 • MNA – 55,981 (0.48%) 1 ஆசனம்
 • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – TMTK – (0.44) 1 ஆசனம்
 • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ACMC (0.37%) 1 ஆசனம்
 • தேசிய காங்கிரஸ் – NC – 39,272 (0.34%) 1 ஆசனம்
 • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – SLMC – 34,428 (0.3%) 1 ஆசனம்

இந்த தேர்தல் முடிவுகளுக்கு அமைய பெரும்பான்மை பலத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதுடன், சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, புதிய பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார்.

 

திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டாரா…? சசிகலா ரவிராஜ் !

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் அறிவிப்பில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையினை தொடர்ந்து வாக்கெண்ணும் நிலையமாக உள்ள யாழ்.மத்திய கல்லூரியில் கட்சி ஆதரவாளர்களிடையே குழப்பமான சூழல் இன்று அதிகாலையில் ஏற்பட்டது.

இந்நிலையில் இது குறித்து தனது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குழறுபடி ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட எனக்கு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரண்டாவது இடம் கிடைத்திருந்தது. இதனை, ஊடகங்களும், சில அதிகாரிகளும் உறுதிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருந்தேன்.

நள்ளிரவு 2 மணிவரை காத்திருந்து சரியான நிலைவரத்தை அறிவிக்கும்படி நான் கேட்டிருந்தேன். இருந்தாலும் அவர்கள் காலதாமதம் செய்தார்கள். அதன் பின்னர் இறுதியாக எனது விருப்பு வாக்கு நிலை நான்காவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த மாற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பது மிகவும் ஆச்சரியமாகவும், கேள்விக்குறியாகவும் உள்ளது. இருப்பினும் இதனைப்பற்றி தமிழரசுக் கட்சித் தலைவரிடம் முறையிடவுள்ளேன். அத்துடன், தேர்தல் ஆணையாளரிடமும் இதைப்பற்றி தெரிவித்து இதற்கான விளக்கங்களைக் கோரவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது ஆதரவாளர்கள் சிலர் குறித்த குழப்பகரமான சூழ்நிலையில் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்ட வாக்கெண்ணும் நிலையமாக உள்ள யாழ்.மத்திய கல்லூரி முன்பாக  சுமந்திரனுக்கு எதிராக இளைஞர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வெளியாகியது ..வவுனியா தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள் !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது வன்னி தேர்தல் மாவட்டத்தினுடைய  வவுனியா தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

வவுனியா தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 22849
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18696
ஐக்கிய மக்கள் சக்தி – 11170

இதனடிப்படையில் வவுனியா தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது

தலைநகரின் தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றி !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது கொழும்பு தேர்தல் மாவட்டத்தினுடைய மத்திய கொழும்பு, கொழும்பு வடக்கு, மற்றும் தெஹிவளை போன்ற  தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 64692
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16688
ஐக்கிய தேசிய கட்சி – 2978
தேசிய மக்கள் சக்தி – 1230

கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 41059
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16775
ஐக்கிய தேசிய கட்சி – 2676
தேசிய மக்கள் சக்தி – 1230 

தெஹிவளை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 18,611
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -18,244
தேசிய மக்கள் சக்தி – 2,094
ஐக்கிய தேசிய கட்சி -1706

பொரளை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 20,450
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -17,680
தேசிய மக்கள் சக்தி – 1,931
ஐக்கிய தேசிய கட்சி – 1,500

இதனடிப்படையில் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளை விட ஐக்கிய மக்கள் சக்திக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது.