::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றாவது புலிகள் சரணடையவேண்டும் – கோஹன

palitha_koahana.jpgவிடுதலை புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றாவது புலிகள் ஆயுதங்களை களைந்து சரணடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித்த கோஹன தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பிலேயே பாலித்த கோஹன இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து சரணடையவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல சர்வதேச நாடுகளும் புலிகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடையவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றன. இலங்கை அரசாங்கமும் இந்த கோரிக்கையையே முன்வைத்துவருகின்றது.

தற்போதைய நிலைமையில் சர்வதேச சமூகம் கடுமையான தொனியில் புலிகளுக்கு அழுத்தம் தெரிவித்து வருகின்றது. எனவே சர்வதேசத்தின் கோரிக்கைக்கு தற்போதைய நிலைமையிலாவது புலிகள் இணங்கி அரசாங்கப் படையினரிடம் சரணடையவேண்டும் என்றார்.

3ஆவது நாளாகவும் கிறீன் ஓசியன் கப்பல் முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்

ship.jpgமூன்றாவது நாளாகவும் உணவுப்பொருட்களை ஏற்றிக் கொண்டு முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கிறீன் ஓசியன் கப்பல் பயணிக்கிறது. 500 தொன் உணவுப் பொருட்களுடன் ஓரியன்டல் பிரின்சஸ் கப்பல் புறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக இரண்டு தினங்கள் முயன்றும் முள்ளிவாய்க்கால் பகுதியைச் சென்றடைய முடியாமல் திருகோணமலைக்குத் திரும்பிய கிறீன் ஓசியன் கப்பல் இன்று காலை மீண்டும் முல்லைத்தீவு பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஐசிஆர்சியின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

நலன்புரி நிலையங்களுக்கு ‘யூனிசெப்’ 1000 மலசலகூடங்கள் அன்பளிப்பு

unicef.jpgஅரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குத் தப்பி வந்து வவுனியாவில் உள்ள நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு 1000 மலசலகூடங்களை அமைத்துக் கொடுக்க  ‘யுனிசெப்’ நிறுவனம் முன்வந்துள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அணர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் யு.எல்.எம். ஹால்தீன் தெரிவிக்கையில், வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோருக்கு மலசலகூட வசதிகளைச் செய்துகொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தையொன்று , அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது. மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் யுனிசெப் நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோருக்கு அரசாங்கம் சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அவர்களது தேவைகள் இனங்காணப்பட்டு நாளாந்தம் அவை நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ள 1000 மலசலகூடங்கள் முதற்கட்டமாக தற்போது இயங்கி வரும் நலன்புரி நிலையங்களிலேயே அமைக்கப்படும். இவ்வாறு அமைக்கப்பட்டு எஞ்சுகின்றவை புதிதாக அமைக்கப்படவுள்ள நிவாரணக் கிராமங்களுக்கு வழங்கப்படும் எனக் கூறினார்.

புலிகளின் முயற்சி படையினரால் முறியடிப்பு – பிரிகேடியர் உதய நாணயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgபடையினரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள்ளிருக்கும் முல்லைத்தீவு, சரவாத்தோட்டம் பிரதேசத்தைக் மீண்டும் கைப்பற்றுவதற்காக விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை மேற்கொண்ட முயற்சி இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்த முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மூன்று தற்கொலைப் படகுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் சில படகுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. இதில் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது சரவாத்தோட்டம் பகுதியில் நிலைக்கொண்டுள்ள படையினரின் பாதுகாப்பு அரணைத் தகர்த்து அந்தப் பகுதியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியிலேயே விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை முயற்சித்தனர். இதில் நான்கு தற்கொலைப் படகுகள், 15 தற்கொலைக் குண்டுதாரிகள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று இரவு 9 மணிமுதல் அதிகாலை 1.30 வரையான சுமார் நான்கு மணிநேரமாக இடம்பெற்ற படையினரின் இந்த முறியடிபபுத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஷெல் தாக்குதலில் பலி

medical_lorry.jpgசர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஒருவர் மோதல் இடம்பெறும் பகுதியில் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.ஷெல் தாக்குதலில் உயிரிழந்தவர் நீர் விநியோகம் தொடர்பான தொழில்நுட்பவியலாளராக கடமையாற்றியவர் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு பிள்ளையின் தந்தையான இவரும், இவரது தாயாரும் ஷெல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோதல் வலயத்தில் இதுவரை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் 3 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

பாதுகாப்பற்ற நிலைமைகளினால் பொதுமக்களை வெளியேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது – போல் கஸ்டல்லா

paul_castella.jpgவன்னி யுத்த சூன்ய பிரதேசத்தில் இடம்பெற்று வரும் மோதல்களினால் பிரதேசத்தில் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் இதனால் யுத்த சூன்ய பிரதேசத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் போல் கஸ்டல்லா தெரிவித்துள்ளார்

கிறின் ஓசோன் கப்பல் மீண்டும் முல்லைத்தீவு சென்றுள்ளது

ship.jpgபாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கான உணவுப் பொருட்களுடன் கிறீன் ஓசோன் கப்பல் இன்று (13.05.2009) புல்மோட்டையில் இருந்து முல்லைத்தீவை நோக்கி சென்றுள்ளதாக சென்சிலுவை சங்க ஊடகப் இணைப்பாளர் சரசிவிஜயரத்தன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கடற்பிராந்தியத்திற்குள் கப்பல் பிரவேசித்த போதும் அங்கு பொருட்களை இறக்கக்கூடிய சாத்தியங்கள் குறைவாக காணப்படுவதாகவும் இது குறித்து இரு தரப்பினரிடமும் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் நேற்றும் அந்த பகுதிக்கு சென்று பொருட்களை இறக்க முடியாது புல்மோட்டைக்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வவுனியா முகாம்களுக்கு விஜயம்

manik-farm.jpgஇலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இன்று, காலை வவுனியா நலன்புரி முகாம்களுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இக்குழுவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால தலைமைத்துவ பதவியை ஏற்கவுள்ள சுவீடன் பிரதிநிதி, அதன் ஆணைக்குழுவின் பிரதிநிதி மற்றும் செயலாளர், காரியாலய பிரதிநிதிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிக்பாம் நிவாரண கிராமங்களில் கூட்டுச் சமையலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

group_cooking.jpgவவுனியா மனிக்பாம் பகுதியில் உள்ள நிவாரண கிராமங்களில் குறிப்பாக இடம்பெயர்ந்தவர்கள் புதிதாககத் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களில் கூட்டு சமையலை மேற்கொள்வதற்கு தொண்டு நிறுவனங்களும் அரசாங்கமும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மனிக்பாம் 4 ஆம் பிரிவிற்கு (ஸோன் 4) இடம்பெயர்ந்த மக்கள் அனுப்பி வைக்கப்பட்டதும், அங்கு உடனடியாக கூட்டுச் சமையலை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இடம்பெயர்ந்த மக்களின் நலன்களைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் விமான எஞ்சின் மற்றும் உதிரிப்பாகங்கள் கண்டுபிடிப்பு!

புலிகளின் விமான எஞ்சின் மற்றும் உதிரிப்பாகங்கள் என்பவற்றை புதுக்குடியிருப்பு தெரவிக்குளம் பிரதேசத்திலிருந்து படையினர் இன்று காலை கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இராணுவத்தின் 57 ஆவது படையணியின் கீழ் இயங்கும் பீரங்கிப் படையினர் நடத்திய தேடுதலின்போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன. விமான இறக்கைகள், தகவல் பரிமாற்ற உபகரணங்கள, ஓடுபாதை விளக்குகள், மற்றும் விமான இயக்கம் தொடர்பான தஸ்தாவேஜுகள் என்பன கைப்பற்றபபட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.