புன்னியாமீன் பி எம்

புன்னியாமீன் பி எம்

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் -03 : மிகப் பெரும் மீதி முறை சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு நன்மை பயக்கத்தக்கதே – புன்னியாமீன்

election_cast_ballots.jpgவிகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் 6 படி முறைகளில் போனஸ் ஆசனத்தை வழங்குதல்,  குறைந்த பட்சம்  5 வீத வாக்குகளைப் பெறாத கட்சிகள் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல் போன்ற இரண்டு படி முறைகளையும்,  இந்த இரண்டு படிமுறைகளினூடாகவும் இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினருக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், கடந்தவாரம் நோக்கினோம். ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் ஏனைய முறைகள் பற்றி இன்று நோக்குவோம்.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் மூன்றாவது படி முறை தொடர்புடைய வாக்குகளை கணிப்பீடு செய்வதாகும். இதனையும், நாம் ஏற்கனவே குறிப்பிட்ட உதாரணம் மூலமாகவே விளக்குவோம். அதாவது x எனும் தேர்தல் மாவட்டத்தில் 10 ஆசனங்கள் உள்ளன என்றும், இந்தப் 10 ஆசனங்களுக்குமாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் 3 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன என்றும்: போட்டியிட்ட கட்சிகளும், குழுக்களும் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளன எனவும் கொள்வோம்.

கட்சி A  = 5400 வாக்குகள்
கட்சி B  = 3600 வாக்குகள்
கட்சி C  = 1410 வாக்குகள்
சுயேட்சைக்குழு 1 = 540 வாக்குகள்
சுயேட்சைக்குழு 2 = 750 வாக்குகள்
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 11850
நிராகரிக்கப்பட்ட வாக்கு 150
செல்லுபடியான வாக்கு 11700

இரண்டாம் படி  முறையின் கீழ் வெட்டுப் புள்ளி வாக்கினைப் பெறாத சுயேட்சைக்குழு 1 போட்டியிலிருந்து நீக்கப்பட்டது.

மூன்றாவது படி முறை தொடர்புடைய வாக்குகளைக கணிப்பிடுதல்.

இங்கு தொடர்புடைய வாக்குகள் எனும் போது தேர்தல் முடிவுகளின் படி ஒரு அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்புடைய வாக்கினைக் குறிக்கும். அதாவது,  ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் இருந்து,  5 வீதத்துக்குக் குறைவான வாக்குகளைப் பெற்று நீக்கப்பட்ட கட்சிகள் பெற்ற வாக்குகளையும்,  நிராகரிக்கப்பட்ட வாக்குகளையும்,  கழித்துப் பெறப்படுவதே தொடர்புடைய வாக்குகளாகும். 

தொடர்புடைய வாக்குகள் = அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – (நீக்கப்பட்ட வாக்குகள் +  நிராகரிக்கப்பட்ட வாக்குகள்)

எமது உதாரணப்படி அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 11, 850 . இவ்வாக்குகளில் இருந்து நீக்கப்பட்ட வாக்குகள் 540 உம், நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 150உம் கழிக்கப்பட்டு பெறப்படுவதே தொடர்புடைய வாக்குகள் ஆகும்.

அதாவது
தொடர்புடைய வாக்குகள்  = 11850 – (540+150)  = 11160
இங்கு பயன்படுத்தப்படும் வாக்குகள் 11160 மட்டுமே.

4வது படிமுறை – முடிவான எண்ணைக் கணிப்பீடு செய்தல்

ஓர் ஆசனத்தைப் பெற குறைந்தபட்சம் ஒரு கட்சி புறைந்த பட்சம் பெற வேண்டிய வாக்கே முடிவான எண்ணாகும். அதாவது ஆசன எண்ணிக்கையில் இருந்து ஒன்றைக் கழித்து வரும் விடையினால் தொடர்புடைய வாக்குகளை வகுத்தல் வேண்டும்.

முடிவான எண் = தொடர்புடைய வாக்குகள்/ ஆசன எண்ணிக்கை – 1

எமது உதாரணப்படி
முடிவான எண்  = 11160 /  (10-1)  =  1240

ஏற்கனவே போனஸ் ஆசனம் வழங்கப்பட்டமையால் இங்கு மொத்த ஆசன எண்ணிக்கையிலிருந்து 1 கழிக்கப்படும். எமது உதாரணப்படி 1240 வாக்குகளைப் பெற்ற ஒவ்வொரு அரசியல் கட்சிகளும்,  குழுக்களும் ஓர் ஆசனத்தைப் பெற உரித்துடையதாகும்.

5வது படிமுறை – முடிவான எண்ணுக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்

போட்டியிலுள்ள ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற மொத்த வாக்குகளை முடிவான எண்ணால் வகுத்து முழுமையான எண்ணுக்கமைய ஆசனங்களை வழங்குதல்.

எமது உதாரணப்படி 

A கட்சி பெற்ற வாக்குகள் 5400/ 1240 = 4
இங்கு  முழுமையான எண்ணுக்கமைய 4 ஆசனங்கள் முதலில் ஒதுக்கப்படும்.
354 வாக்குகள் மீதியாகின்றன.

B கட்சி பெற்ற வாக்குகள் 3600/ 1240 = 2
இங்கு  முழுமையான எண்ணுக்கமைய 2 ஆசனங்கள் முதலில் ஒதுக்கப்படும்.
903 வாக்குகள் மீதியாகின்றன.

C கட்சி பெற்ற வாக்குகள் 1410/ 1240 = 1
இங்கு  முழுமையான எண்ணுக்கமைய 1 ஆசனங்கள் முதலில் ஒதுக்கப்படும்.
137 வாக்குகள் மீதியாகின்றன.

சுயேட்சைக்குழு – 1 போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. சுயேட்சைக்குழு – 2 முடிவான எண்ணைப் பெறாமையால் ஆசனத்தைப் பெறவில்லை. இருப்பினும் சுயேட்சைக்குழு 2 பெற்ற 900 வாக்குகளும் பயன்படுத்தப்படாமையால் இந்த 900 வாக்குகளும் மீதியாகின்றன.

எனவே 5ம் படிமுறை முடிவின்போது 10 ஆசனங்களைக் கொண்ட X தேர்தல் மாவட்டத்தில் ஆசனங்கள் பின்வருமாறு பகிரப்பட்டிருக்கும்.

           கட்சி           போனஸ்    முடிவான எண்ணுக்கமைய
கட்சி   A                         01                                    04
கட்சி B                           –                                      02
கட்சி C                           –                                       01
சுயேட்சை 1                –                                         –
சுயேட்சை 2                –                                         –

5ம் படிமுறை நிறைவில் 08 ஆசனங்களே பகிரப்பட்டிருக்கும் மீதான 2 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ள 6 வது படிமுறையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

6ம் படிமுறை – மிகப் பெரும் மீதி முறை

பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது விகிதாசார முறையில் பிரச்சினைக்குரிய ஆசனங்களைப் பெற, கடைப்பிடிக்கப்படும் மிகப்பெரும் மீதி முறையே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுபான்மைக் கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் வாய்ப்பாக அமைகின்றதெனலாம்.

5ம் படிமுறையின் போது முடிவான எண்ணுக்கமைய ஆசனங்கள் பகிரப்பட்ட பின்பு மிகுதியாக உள்ள வாக்குகளின் பெரும்பான்மைக்கமைய பிரச்சினைக்குரிய ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும். இம்முறையையே மிகப்பெரும் மீதி முறை என அழைப்பர்.

எமது உதாரணப்படி மிகுதிகள் வருமாறு:

A கட்சி மீதி      354 வாக்குகள்
B கட்சி மீதி      903 வாக்குகள்
C கட்சி மீதி       137 வாக்குகள்
சுயேட்சை 2     மீதி     900 வாக்குகள்

எனவே பிரச்சினைக்குரிய 2 ஆசனங்களும் ஆகக் கூடுதலான மீதியைப் பெற்றுள்ள B கட்சிக்கு ஓர் ஆசனம் என்றும்,  இரண்டாவது மீதியைப் பெற்றுள்ள சுயேட்சைக் குழு 2க்கு ஓர் ஆசனம் என்றும் பகிரப்படும்.

எனவே, இறுதித்தேர்தல் முடிவானது பின்வருமாறு அமையும்.

A கட்சி  போனஸ் முறையின் கீழ் 01ஆசனத்தையும்,  முடிவான எண்ணுக்கமைய 4 ஆசனங்களையும், கொண்டதாக மொத்தம் 5 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும்.

B  முடிவான எண்ணுக்கமைய 2 ஆசனங்களையும், மிகப் பெரும் மிகுதிக்கமைய ஒரு ஆசனத்தையும், கொண்டதாக மொத்தம் 3 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும்.

C முடிவான எண்ணுக்கமைய 1 ஆசனத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ளும்.

சுயேட்சைக் குழு 2 மிகப் பெரும் மிகுதிக்கமைய 1 ஆசனத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ளும். மேற்குறிப்பிட்ட அடிப்படையில் X மாவட்டத்தில் 10 ஆசனங்களும், வழங்கப்படும். 

எனவே குறைவான வாக்குகளைப் பெற்ற போதிலும் கூட மிகப் பெரும் மிகுதி முறையின் கீழ் சுயேட்சைக்குழு 2 இனால் ஓர் ஆசனத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

2000ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலை எடுத்துநோக்கும் போது மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆசனங்களை வென்றெடுக்கவும், தேசிய ஐக்கிய முன்னணி (NUA) சில ஆசனங்களை வென்றெடுக்கவும் மிகப் பெரும் மிகுதி முறையே காரணமாக அமைந்தது. கண்டி தேர்தல் மாவட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணி ஓர் ஆசனத்தை வென்றெடுத்தமைக்குக் காரணம் இந்த மிகப்பெரும் மிகுதி முறையே.

எனவே விகிதாசார தேர்தல்முறை காரணமாக சிறுபான்மைக் கட்சிகளும், மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளும் அதிக பயனைப் பெறுகின்றன என்றால் மிகையாகாது.

விருப்பு வாக்குகள்

ஆசனப்பகிர்வின் போது கட்சிகள் பெற்ற ஆசனங்களுக்கமைய,  வெற்றி பெற்ற கட்சியில் கூடிய விருப்பத் தெரிவினைப் பெற்ற அபேட்சகர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்.

தேசியபட்டியல் மூலம் மீதான பிரதிநிதிகளைத் தெரிவு செய்தல் முறை பற்றி அடுத்த வாரம் நோக்குவோம்.

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் – 02 : போனஸ் ஆசன முறை சிறுபான்மையினருக்கான விமோசனம் அல்ல – புன்னியாமீன்

srilanka_parliament_02.jpgவிகிதாசார தேர்தல் முறையின் கீழ் தேர்தல் தொகுதிகள் வரையறை செய்யப்படும்போது தேர்தல் மாவட்டங்களாகவே வரையறை செய்யப்படுவதினால் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்தினைவிட,  விகிதாசார பிரதிநிதித்துவத்தின் மூலமாக சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்தகவு அதிகமானது என்பதைக் கடந்த வாரம் நோக்கினோம்.

பெரும்பான்மை தேர்தல் முறையினையும்,  விகிதாசார தேர்தல் முறையினையும் ஒப்பிட்டு ஆராயக்கூடிய ஏனைய தலைப்புக்களை இன்று நோக்குவோம்.

நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும்முறை

முதலாம் குடியரசு அரசியலமைப்பின் 70ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவின்படி தேசிய அரசுப் பேரவை (நாடாளுமன்ற) உறுப்பான்மைக்கான தகுதியின்மை எனும் தலைப்பில் விபரிக்கப்பட்ட தகுதியீனங்களுக்கு உரித்தாகாத தேர்தல் யாப்பில் பெயர் பதிவாகியுள்ள எந்த ஆளுக்கும்,  நியமனப் பத்திரம் தாக்கல் செய்கையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியொன்றின் மூலமாகவோ, சுயேட்சை வேட்பாளராகவோ நேரடியாகத் தாக்கல் செய்ய முடியும்.
இந்த முறையின் கீழ் தகுதியுள்ள அனைவருக்கும் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் உரிமை இருந்தாலும் கூட,  மக்கள் மத்தியில் பிரபல்யமான அரசியல் கட்சியொன்றினூடாக சிறுபான்மை வேட்பாளர் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது கேள்விக் குறியே.

ஏனெனில்,  தேர்தல் தொகுதியொன்றிற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் ஒரு வேட்பாளரை மாத்திரமே அபேட்சகராக நிறுத்தமுடியும். எனவே,  சிறுபான்மை இனத்தவர்கள் செறிவாக வாழும் வடக்கு,  கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களில் அமைந்துள்ள தொகுதிகளில் – குறிப்பாக பெரும்பான்மையினர் அதிகமாக வாழும் தொகுதிகளில் பிரதான கட்சிகள் இச்சந்தர்ப்பத்தினை வழங்கமாட்டாது. (பல அங்கத்துவ,  இரட்டை அங்கத்துவ தொகுதிகள் நீங்கலாக)  இதனால் விகிதாசார தேர்தல் முறை அறிமுகமானதை அடுத்து இலங்கையில் தோற்றம் பெற்றுள்ள சிறுபான்மை அரசியல் கட்சிகளால் வடக்கு,  கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எந்தவொரு பிரதிநிதியையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும்.
யதார்த்த பூர்வமாக நோக்குமிடத்து வடக்கு – கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களிலும் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியையும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் சுற்றியே வாக்காளர்களின் விருப்புக்கள் அமைவதினால் சுயேட்சையாகவோ,  அன்றேல் ஒரு சிறுபான்மைக் கட்சியின் மூலமாகவோ போட்டியிட்டு வெற்றி பெறுவது கடினமான காரியமே.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் நியமனப் பத்திரம் தாக்கல் செய்தல்

1978 யாப்பின் கீழ் நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் யாப்பின் 99ம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1 ம் குடியரசு அரசியலமைப்பைப் போல இங்கு நேரடியாக நியமனப்பத்திரம் தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் மாவட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஊடாக அல்லது சுயேட்சை குழுவாக ஒரு பட்டியலையே தாக்கல் செய்ய வேண்டும்.

யாப்பின்படி பட்டியலைத் தாக்கல் செய்கையில் தேர்தல் மாவட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கையுடன் மூன்றிலொரு பங்கு அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக பட்டியல் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்படல் வேண்டும். யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்திற்கமைய பட்டியலைத் தயாரிக்கும்போது தேர்தல் மாவட்டத்திற்குத் தெரிவாகவுள்ள அங்கத்தவர் எண்ணிக்கையுடன் மூன்றைக் கூட்ட வேண்டும்.

உதாரணமாக கண்டி தேர்தல் மாவட்டத்திற்கு 12 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டுமாயின் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும் அல்லது சுயேட்சைக் குழுக்களும் பின்வரும் எண்ணிக்கைக்கமைய பட்டியலைத் தயாரித்தல் வேண்டும். 12+03 = 15 வேட்பாளர்கள் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்போது பிரதான கட்சிகள் அத்தேர்தல் மாவட்டத்திலுள்ள சிறுபான்மைச் சமூகங்களினது வாக்குகளையும் பெற்றுக் கொள்ள விழைவதினால் பட்டியலில் சிறுபான்மை சமூக வேட்பாளர்களுக்கும் இடம் வழங்குதல். எனவே,  பெரும்பான்மை பிரதிநிதித்துவ முறையில் கிடைக்காத வாய்ப்பு இங்கு விகிதாசார பிரதிநிதித்துவத்தினால் கிடைக்கிறது.

வாக்களிக்கும் முறை

1972ம் ஆண்டு குடியரசு யாப்பின் கீழ் வாக்களிப்பது நேரடி முறையாகும். வாக்குரிமை பெற்ற எவரும் தொகுதி ரீதியாக தான் விரும்பும் வேட்பாளருக்கு நேரடியாக புள்ளடி இடுவதன் மூலம் வாக்களிக்கலாம். எனவே,  பெரும்பான்மைச் சமூகத்தினர் அதிகமாக வாழும் தேர்தல் தொகுதிகளில் பெரும்பான்மைப் பிரதிநிதிகள் தெரிவாக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இங்கு அதிகமாக உள்ளன.

2ம் குடியரசு யாப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் போது வாக்களிப்பு 2 கட்டங்களாக நிகழ்த்தப்படும்.

1. தான் விரும்பும் கட்சிக்கு சுயேட்சைக் குழுவிற்கான வாக்கு.
2. விருப்புத் தெரிவு வாக்கு

விகிதாசார முறையின் கீழ் வாக்களிக்கும் விளக்கங்கள் 1981 இலக்கம் 1 பாராளுமன்ற தேர்தல் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளாலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்டியல் சிங்கள அகரவரிசைக்கமைய வரிசைப்படுத்தப்பட்டு,  அபேட்சகர்களுக்கு இலக்கங்கள் ஒதுக்கப்படும். இதில் கூடியது 3 அபேட்சகர்களுக்கு விருப்புத் தெரிவு வாக்குகளை வழங்குமாறு வாக்காளர் கோரப்படுவர்.

விருப்புத் தெரிவு வாக்குமுறை வேட்பாளர் மத்தியில் போட்டி நிலையையும்,  குரோதங்களையும் ஏற்படுத்துவதால்,  விருப்புத் தெரிவு முறை பற்றி பலத்த கண்டனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும்கூட சிறுபான்மையினத்தவர்களுக்கு தமது சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு வாக்களிக்கும் நிலை சாத்தியப்படுவதை நிராகரித்து விடமுடியாது.

உதாரணமாக 2000ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலின்போது கண்டி மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 2 முஸ்லிம் பிரதிநிதிகளும்,  தேசிய ஐக்கிய முன்னணியின் சார்பில் ஒரு முஸ்லிம் பிரதிநிதியுமாக மொத்தம் 3 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்றால் விகிதாசார தேர்தல் முறையில் விருப்புத் தெரிவு வாக்குமுறையும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட முடியாது.  மாறாக பெரும்பான்மைத் தேர்தல்முறை அமுல்படுத்தப்பட்டிருந்தால் 3 முஸ்லிம் பிரதிநிதிகள் கண்டி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாக முடியுமா என்பது கேள்விக்குறியே.

ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யும்முறை

பெரும்பான்மைத் தேர்தல் முறையின் கீழ் தொகுதி ரீதியாக நடைபெறும் தேர்தலில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் நேரடியாக உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார். உதாரணமாக x எனும் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட A, B, C  ஆகிய வேட்பாளர்கள் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளனர் எனக் கொள்வோம்.

A – 18.332
B – 16.218
C – 573

இதில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் A ஆவார். இதன்படி X எனும் தேர்தல் தொகுதிக்கு A என்பவர் உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார்.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்தல்.
1978ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் ஆசனங்களைப் பகிர்ந்தளிக்க பின்வரும் 6 படிமுறைகள் கையாளப்படும்.

1ம் படிமுறை : போனஸ் ஆசனத்தினை வழங்குதல்
2ம் படிமுறை : வெட்டுப்புள்ளிகளைப் பெறாத கட்சிகள்
    குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல்
3ம் படிமுறை : தொடர்புடைய வாக்குகளைக் கணித்தல்
4ம் படிமுறை : முடிவான எண்ணைக் கணித்தல்
5ம் படிமுறை : முடிவான எண்ணுக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்
6ம் படிமுறை : மிகுதிப் பெரும்பான்மை முறைக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்

மேற்குறித்த 6 படிமுறைகளுக்கமையவே தேர்தல் மாவட்டத்துக்கான பிரதிநிதிகளைத் தீர்மானிப்பர். இப்படிமுறைகளினால் சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பாதிப்புக்களும் உள்ளன. நன்மைகளும் உள்ளன. இதனைப் பின்வரும் உதாரணத்துக்கமைய ஆராய முடியும்.

உதாரண எடுகோள்

X எனும் தேர்தல் மாவட்டத்தில் 10 ஆசனங்கள் உள்ளன என்றும்,  இந்தப் 10 ஆசனங்களுக்குமாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் 3 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன என்றும்: போட்டியிட்ட கட்சிகளும், குழுக்களும் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளன எனவும் கொள்வோம்.

கட்சி A = 5,400 வாக்குகள்
கட்சி B = 3,600 வாக்குகள்
கட்சி C = 1,410 வாக்குகள்
சுயேட்சைக்குழு 1 = 540 வாக்குகள்
சுயேட்சைக்குழு 2 = 750 வாக்குகள்
மொத்தமாக செல்லுபடியான வாக்குகள் 11700

1 ம்படிமுறை – போனஸ் ஆசனத்தினை வழங்குதல்

விகிதாசார தேர்தல் முறையில் ஆசனங்களைப் பதிவு செய்யும்போது பேணப்படும் 1வது படிமுறை போனஸ் ஆசனத்தை வழங்குவதாகும். அதாவது குறிப்பிட்ட ஒரு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது குழுக்களுள் எந்தக் கட்சி அல்லது குழு அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதோ, அந்தக் கட்சி அல்லது குழுவிற்கு வழங்கப்படும் அன்பளிப்பு ஆசனத்தையே போனஸ் பிரதிநிதித்துவ ஆசனம் என அழைக்கின்றோம்.

எனவே, எமது உதாரண எடுகோளின்படி அதிக வாக்குகளைப் பெற்றுள்ள கட்சி A ஆகும். எனவே A கட்சிக்கு ஒரு போனஸ் ஆசனம் வழங்கப்படும்.
போனஸ் ஆசன முறையின் கீழ் சிறுபான்மைக் கட்சிகளுக்கு வாய்ப்புக்கள் உண்டு எனப்பொருள் கொள்ள முடியாது. பெரும்பாலும் இதன் மூலம் பிரதானக் கட்சிகளுக்கே வாய்ப்பு அதிகம். இலங்கையில் இதுகால வரை நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களில் போனஸ் ஆசனங்கள் பெற்ற கட்சிகளைப் பின்வரும் அட்டவணை மூலம் கண்டு கொள்ளலாம்.; வடக்கு,  கிழக்கு மாகாணங்களில் மாத்திரமே சிறுபான்மைக் கட்சிகள் நன்மை பெற்றுள்ளன.

1989/ 1994 /2000/ 2001/ 2004ம் ஆண்டுப் பொதுத் தேர்தல்களில் மாவட்ட ரீதியாக கட்சிகள் பெற்ற அதிகமான வாக்குகளைக் கொண்டு போனஸ் ஆசனம் பகிரப்பட்ட முறை. மேற்குறிப்பிட்ட ஆண்டு ஒழுங்கில் மாவட்டத்தில் வெற்றியடைந்த கட்சிகள் தரப்பட்டுள்ளன.

தேர்தல் மாவட்டம் : 1989/1994/ 2000/ 2001 / 2004
1. கொழும்பு : ஐ.தே.க / பொ.ஜ.மு /ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க.  
2. கம்பஹா:  ஐ.தே.க/ பொ.ஜ.மு/ பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
3. களுத்துறை: ஐ.தே.க/ பொ.ஜ.மு/ பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
4. கண்டி: ஐ.தே.க /ஐ.தே.க /பொ.ஜ.மு / ஐ.தே.க/ ஐ.தே.க.
5. மாத்தளை : ஐ.தே.க/பொ.ஜ.மு/ பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
6. நுவரெலியா : ஐ.தே.க/ ஐ.தே.க / பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
7. காலி : ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
8. மாத்தறை : ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
9. ஹம்பாந்தோட்டை:  ஐ.தே.க / பொ.ஜ.மு / ஐ.தே.க / ஐ.தே.க/ பொ.ஜ.மு. 
10. யாழ்ப்பாணம்: சுயேட்சை/ சுயேட்சை/ ஈ.பி.டி.பி/ த.ஐ.வி.மு/  இ.த.அ.க
11. வன்னி : த.வி.கூ/ புளொட் / டெலோ/ த.ஐ.வி.மு/ இ.த.அ.க
12. மட்டக்களப்பு:த.வி.கூ/ த.வி.கூ / த.வி.கூ/ த.ஐ.வி.மு/ இ.த.அ.க
13. திகாமடுல்லை: ஐ.தே.க / ஐ.தே.க/ பொ.ஐ.மு/ ஸ்ரீ.ல.மு.க /பொ.ஜ.மு. 
14. திருகோணமலை: ஸ்ரீ.சு.க/ ஐ.தே.க / பொ.ஐ.மு / ஐ.தே.க /  இ.த.அ.க
15. குருநாகலை : ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க /   பொ.ஜ.மு. 
16. புத்தளம்: ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
17. அநுராதபுரம்:  ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க /   பொ.ஜ.மு
18. பொலன்னறுவை: ஐ.தே.க / பொ.ஜ.மு / ஜ.தே.க / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
19. பதுளை: ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க.
20. மொனராகலை: ஐ.தே.க / பொ.ஜ.மு/ பொ.ஜ.மு / பொ.ஐ.மு /  பொ.ஜ.மு. 
21. இரத்தினபுரி : ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க /   பொ.ஜ.மு. 
22. கேகாலை: ஐ.தே.க / ஐ.தே.க / பொ.ஐ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த போனஸ் ஆசன முறையால் ஆளும்கட்சிக்குத் தன் பலத்தை ஓரளவேனும் அதிகரித்துக் கொள்ளும் ஒரு ஏற்பாடாகவே இம்முறை காணப்படுகின்றது என கூறப்படுகின்றது. மேலும், இலங்கையில் இதுவரை நடைபெற்ற 5 பாராளுமன்ற தேர்தல்களின் போதும் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்கள் தவிர ஏனைய 19 தேர்தல் மாவட்டங்களிலும் ஐ.தே.க.கட்சியும், பொ.ஐ. முன்னணியுமே முன்னணியில் நிற்பதையும் அவதானிக்க முடிகின்றது.

2ம் படிமுறை : வெட்டுப்புள்ளிகளைப் பெறாத கட்சிகள் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல்

ஒரு தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 1/20 பங்கு (5%) வாக்குகளைப் பெறாத கட்சிகளை அல்லது சுயேட்சைக் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல். வெட்டுப்புள்ளி வாக்குக் கணிப்பு, சிறுபான்மைக் கட்சிகளின் வளர்ச்சிக்கும் , சிறிய கட்சிகளின் வளர்ச்சிக்கும், பெரிதும் தடையாகும். விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் இந்த வெட்டுப்புள்ளி 1/8 பங்கு (அதாவது 12.5 % ஆகக் காணப்பட்டது. 1988ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பிரகாரமே 1/20 பங்காக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உதாரண எடுகோளை எடுத்து நோக்கும்போது வெட்டுப்புள்ளிக் கணிப்பு பின்வருமாறு அமையும். வெட்டுப்புள்ளி வாக்கு = செல்லுபடியான வாக்கு X 1/20 எமது உதாரணத்தின்படி =11700X1/20 =    585

எனவே 585 வெட்டுப்புள்ளி வாக்குகளைப் பெறாத கட்சிகள், குழுக்கள் நீக்குதல் வேண்டும். இதன்படி 540 வாக்குகளைப் பெற்ற சுயேட்சைக்குழு 1 போட்டியிலிருந்து நீக்கப்படும்.

இதே போல நடைபெறக்கூடிய பாராளுமன்றத் தேர்தலிலும்,  5 வீத வாக்குகளைப் பெறாத கட்சிகள் போட்டியிலிருந்து நீக்கப்படும். எதிர்வரும் பாராளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் 8 இல் இடம்பெறவுள்ள நிலையில் வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கை அரசியல் திட்டத்துக்கு அமைய 22 மாவட்டங்களில் இருந்து மக்களை பிரதிநிதிதுவம் படுத்தும் வகையில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

இருபத்து நான்கு அரசியல் கட்சிகளிலும், 312 சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூடாக 3859 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3691 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். கடந்த கால அனுபவங்களை வைத்து நோக்குமிடத்து இம்முறை போட்டியிடக்கூடிய கட்சிகள், சுயேட்சைக் குழுக்களில் 90 வீதத்துக்கும் அதிகமான கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் ஐந்து வீத வாக்குகளைப் பெறாமல் நீக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

மாவட்டங்களுக்கு ஆசனங்கள் பகிர்ந்தளிக்கக் கூடிய முறைப்பற்றியும, சிறுபான்மைக்கு ஏற்படக்கூடிய சாதக பாதக நிலைப் பற்றியும் தொடர்ந்தும் இடம்பெறும்.

(தொடரும்…….)

சர்வதேச மகளிர் தினம் (International Women’s Day) – புன்னியாமீன்

international-womens-day.jpgஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதை குறிப்பிடத்தான் சர்வதேச மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. 

ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உற்பட பல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப் படுத்தியுள்ளது. இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்க வேண்டும். இக்கொண்டாட்டங்களில் குறிப்பாக உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆக்கபூர்வமான பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்கள் தனியாகவும், குழுக்களாகவும் அமைப்புக்கள் சார்ந்தும், அக்கபூர்வமான செயல்வாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகளிர் தினத்தின் சுருக்க வரலாறு.

மகளிர் தினத்தின் சுருக்க வரலாற்றினைப் பின்வருமாறு இனங்காட்டலாம். வரலாற்றுக் காலம் முதல் பெண்கள் போகப்பண்டங்களாகவும்,  அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் காணப்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக மீண்ட நிலை இந்நிகழ்வின் பின்னணிக்கு அடிப்படையாக அமைகின்றது. 1789ம் ஆண்டு ஜூன் 14ம்தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் (அரசனின் ஆலோசனைக் குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப்புரட்சியின்போது பாரீஸில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும் வேலைக்கேற்ற ஊதியம், எட்டுமணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!

ஆர்ப்பாட்டக்காரர்களைச் சமாதானம் செய்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மன்னன் வாக்களித்தான். ஆனால், அது அவனால் இயலாமற்போகவே மன்னன் லூயிஸ் முடிதுறந்தான். இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள பெண்களும்  கிளர்ச்சியை ஆரம்பித்தனர். இக்கட்டத்தில் இத்தாலியிலும் பெண்கள்  இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயன்று  தங்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராட ஆரம்பித்தனர். கிரீஸ் நாட்டில் ‘விஸிஸ்ட்ரடா என்பவரின் தலைமையில், ஆஸ்த்ரியா, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, ஆளும் வர்க்கம் அசைந்துகொடுக்கத் தொடங்கியது.

பிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில் 2வது குடியரசை நிறுவிய லூயிஸ் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைக்குழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தான். அந்த நாள் மார்ச் 8. 1848 ஆகும். உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே, “மகளிர் தின”மாக அமைய அடிப்படை வித்தாக அமைந்தது!

1857ல் நியூயோர்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி, போராட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. இப்போரட்டங்களால் ஆட்சியாளர்கள் நிலைகுலைந்தார். உலகநாடுகள் அனைத்திலும் பரவிய இப்போராட்டங்களின் விளைவாக, 1910ல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்றது. இம்மகாநாட்டில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சியின் மகளிர் அணித்தலைவியான க்ளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் ஒரு யோசனையை முன்வைத்தார். பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோர சர்வதேசம் முழுதும் ஒரு தினத்தை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். 17 நாடுகளிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை ஏகமனதாக வரவேற்றனர். இதைத் தொடர்ந்து ஆண்டில் (1911) க்ளாரா ஜெட்கினால் 19 மார்ச்சில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஜெர்மனில் The Vote for Women  மற்றும் ஆஸ்திரேலியாவில் Women’s Day என்ற பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் உரிமைகள், பாராளுமன்றத்தில் பெண்கள், உட்பட பல கட்டுரைகளை வெளியிட்டன. எல்லாப் பத்திரிகைகளுமே பெண்களுக்கு பாராளுமன்றத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. 1911ல் சர்வதேச மகளிர் தினத்திற்கு கிடைத்த வெற்றி எட்டுத் திக்கிலும் பரவியது. அந்த வெற்றியைத் தொடர்ந்து 1848ல் பிரான்ஸ் மன்னன் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புக்கொண்ட நாளான மார்ச் 8 ஐ, நினைவுகூரும் வகையில், 1913 முதல் மகளிர் தினத்தை மார்ச் 8-க்கு மாற்றியமைத்து. ஆனாலும் அது உத்தியோக பூர்வமானதாக இருக்கவில்லை. இது குறித்து 1917 மார்ச் 8ந் திகதி ரஷ்யாவில் உள்ள சென்பீற்றர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடாத்தப்பட்டது. இப் போராட்டத்தில் அலெக்ஸ்சாண்ட்ரா கொலன்றா என்ற ரஸ்யப் பெண்ணிலைவாதியும் கலந்து கொண்டார். இப்போராட்டத்தையடுத்து 1921 ம் ஆண்டு மார்ச் 8ந் திகதியே சர்வதேச பெண்கள் தினமாக உத்தியோக பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து மார்ச் 8ந் திகதி சர்வதேசப் பெண்கள் தினமாகக் அனுஸ்டிக்கப் பட்டு சம உரிமைகளுக்கான பெண்களது போராட்டம் தொடர்கிறது.

ஐ.நாவும் பெண்கள் முன்னேற்றத்துக்காவும் அவர்கள் சமத்துவ
கோரிக்கைகளுக்காவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. 1945-ல் சான்பிரான்ஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி பெண்களுக்கு சம உரிமை என்பது அடைப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேச கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் திட்டங்கள், இலட்சியங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடு உழைத்துள்ளது..

1975- ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடு அறிவித்தது. 1977-ல் ஐக்கிய நாடு பொதுச் சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடு பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடு ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடை பிடிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் நலன் குறித்து சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.

இச்சந்தர்ப்பத்தில் பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்துக்கள் குறித்துச் சற்றுச் சிந்தித்தல் அர்த்தமுள்ளதாக இருக்கும். பெண்ணியத்தை எடுத்து நோக்குமிடத்து ஆண்கள் பெற்றுள்ள சட்டபுர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் எழுந்தது. குடும்பம்இ உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்த மார்க்சியப் பெண்ணியம், தந்தை வழிக்கோட்பாட்டுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம் என்பன பெண் என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி உடற்கூற்றை  (Biological Foundation ) அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளைப் பெண் என இந்தப் பெண்ணியக் கருத்தாக்கங்கள் அடையாளம் கண்டன. நாம் பெண் என்ற சொல்லின் கருத்தை அணுகுவதற்கு பெண்ணியம் Feminism என்பது பெண்ணை ஓர் ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடாகும். Feminism என்கின்ற ஆங்கிலச்சொல் கிபி 19 ஆம் நூற்றாண்டில்தான் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது.

முதலாளித்துவ வாதத்திற்கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியாளர்களை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இதுதான் பெண்ணியத்தின் அடிப்படை என்றும் இதிலிருந்துதான் பின்னர் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக உருவாகியது என்றும் மார்க்கசியப் பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.

பெண்ணிய ஆய்வாளரான கேட் மில்லட் என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் என்பவன் பெண் என்பவளை அதிகாரம் செய்யக்கூடிய பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் பால்வகைப் பிரிவு என்பதாகும். ஆண் என்பவன் தனக்குரிய சமூகக்களமாக இராணுவம் தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில் நுட்பம், கல்வி போன்றவற்றை முன்னரே தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டான்.

பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை அவன் கட்டுப்படுத்தினான். ஆதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் என்பவள் தனது சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும்போது அவளை சுயசிந்தனை இல்லாதவளாக ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்கு துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY) உயிரியல், (BIOLOGY)  சமூகவியல் (SOCIOLOGICAL) வர்க்கம் (CLASS)  பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION) சக்தி (FORCE)  மானுடவியல் (ANTHOROPOLOGY)  உளவியல் (PHYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் மேலும் குறிப்பிடுகிறார்.

சர்வதேச மகளிர் தினம் தொடர்பாக கோட்பாட்டு, வரலாற்று விளக்கங்கள்  மேற்குறித்தவாறு காணப்பட்டாலும் கூட பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதா என்பது கேள்விக்குறியே. சர்வதேசப் பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை கோரும் பெண்ணாக உயர்த்தியது என்பது ஓரவுக்கு ஏற்றுக்கொள்ள முடிந்த போதிலும் கூட எமது பெண்களில் அனேகமானோர் நினைக்கிறார்கள் வேலைக்குப் போகவும், சொப்பிங் செய்யவும் கணவனிடமிருந்து அனுமதி கிடைத்து விட்டால் அதுதான் பெண் விடுதலை என்று. இந்த அறியாமை மாற வேண்டும். பெண் விடுதலை என்பதன் பொருளை இவர்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். பெண்விடுதலை என்பது, சமஉரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை… இவைகளில் தொடங்கி சமையலறை, படுக்கையறை, மனஉணர்வுகள்…. வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விடயம் என்பதை முதலில் பெண்களே புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து அதை அவர்கள் அவர்களை அண்டியுள்ள ஆண்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் பெண் விடுதலையின் தாற்பரியம் பற்றி சமூக ரீதியானதொரு புரிந்துணர்வு ஏற்படும்.

பெண் விடுதலை உலகளாவிய ரீதியாகக் கிடைக்க வேண்டும். பெண் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வீட்டுக்குள் நடைமுறுத்தப்படும் எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும். பெண்ணை இறுகப் பற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் பெண்ணின் உயிரையும் உள்ளத்தையும் வதைக்கின்ற அத்தனை விலங்குகளும் உடைத்தெறியப்பட வேண்டும்.

இவ்விடத்தில் 2007ம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் விடுத்துள்ள செய்தியில்  ‘அனைத்து சமூகத்திலுள்ள பெண்களின் துன்பங்களையும் அறவே ஒழிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைப்பது மட்டும் இலக்கு அல்ல; இவ்வுலகில் வாழ்வதற்கான நல்ல சூழலை ஏற்படுத்துவதே நமது நோக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மனித நேயம் தழைப்பதற்கு ஒவ்வொருவரும் சர்வதேச மகளிர் தினத்தில் உறுதி கொள்ள வேண்டும் என்ற அவர், அனைத்து நாடுகளிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்கள் பின்னுக்கே தள்ளப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்திருந்தார். அத்துடன், பெண்கள் முன்னேற்றத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியிருந்தார். இவ்வறிக்கையையும் இவ்விடத்தில் கருத்திற் கொள்வது பயனுடையதாக இருக்கும்.

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் – 01 : ஏப்ரல் 8ல் நடைபெறப் போவது விகிதாசார முறையின் இறுதித் தேர்தலா? – புன்னியாமீன்

srilanka_parliament_02.jpgஇலங்கையில் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 08ம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சி வெற்றி பெறுமிடத்து, இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையினை முதலில் மாற்றியமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், விகிதாசார முறையின் கீழ் இலங்கையில் நடைபெறும் இறுதித் தேர்தலாக இது அமையுமா? என்ற சந்தேகமும் எழுகின்றது.

விகிதாசார தேர்தல் முறை அமுலில் உள்ள இக்காலகட்டத்தில் இம்முறையின் கீழ் சிறுபான்மை சமூகத்தினரின் பாராளுமன்ற உறுப்புரிமை அதிகரித்திருப்பதைப் போல பழையபடி பெரும்பான்மை முறையை அல்லது பெரும்பான்மை முறையையும்,  விகிதாசாரமுறையையும் இணைத்த ஒரு புதிய தேர்தல் முறை அமுல்படுத்தப்படுமிடத்து சிறுபான்மையினரினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதித்துவம்,  பெருமளவிற்கு பாதிப்படையலாம், என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினரின் ஆதரவு இல்லாமலே,  ஜனாதிபதி வெற்றி பெற்றதினால் பெரும்பான்மை சமூகத்தினரைக் கொண்டே ஆட்சி,  அதிகாரங்களைக் கைப்பற்றலாம் என்ற புதிய நிலையொன்று தோன்றியுள்ள இந்நிலையில், விகிதாசாரத் தேர்தல் முறை பற்றி முன்வைக்கப்படும் வாதப்பிரதி வாதங்கள் அழுத்தமாக சிந்திக்கப்பட வேண்டியதொன்றாகும்.

2010 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன்,  தொடர்புபடுத்தி இப்பாராளுமன்றத் தேர்தலை அணுகுமிடத்து,  சுமார் 140 ஆசனங்களுக்கு மேல் ஆளுங்கட்சியால் வெற்றி பெறக்கூடிய நிகழ்தகவு உண்டு. எனவே ஆளுங்கட்சியினரின் மூன்றில் இரண்டு என்ற இலக்கு சாத்தியப்பாடுமிக்கதல்ல என்று உதாசினப்படுத்த முடியாது. அவ்வாறு மூன்றில் இரண்டு பாராளுமன்றப்பலம் கிடைக்குமிடத்து விகிதாசாரத் தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அவ்வாறானதொரு நிலை ஏற்படுமிடத்து, ஆளும் கட்சியைச் சார்ந்த,  சிறுபான்மை சமூக பிரதிநிதிகளும் நிச்சயமாக ஆதரவு வழங்குவார்கள் என்பது மறுப்பதற்கு இயலாது. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் இலங்கையில் தேர்தல் முறைகள் பற்றி சற்று விரிவாக ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும்.

பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் என்றால் என்ன?
நவீன உலகில்,  ஜனநாயக ஆட்சி நிலவும் நாடுகளில்,  மக்கள் தம்பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்வதற்காக பெற்றுக் கொள்ளும் உரிமையே ஜனநாயக உரிமையாகக் கொள்ளப்படுகின்றது. இன்றைய உலகில் பெரும்பான்மையான நாடுகளில் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக யாப்புகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இரண்டு முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

1. பெரும்பான்மைப் பிரதிநிதித்துவ முறை.
2. விகிதாசார பிரதிநிதித்துவமுறை என்பவையே அவை.

1910ம் ஆண்டில் குருமெக்கலம் அரசியலமைப்பின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் 1977ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாரளுமன்றப் பொதுத்தேர்தல் வரை இலங்கையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களும்,  பெரும்பான்மைப் பிரதிநிதித்துவ முறைக்கமையவே நடைபெற்றன. (தேர்தல்) தொகுதிவாரியாக,  மக்கள் தம் பிரதிநிதிகளை நேரடியாகத் தெரிந்து கொள்வர். ஒரு தொகுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவார். இம்முறையே பெரும்பான்மைத் தேர்தல் முறை எனப்படும்.

உதாரணமாக : X எனும் தேர்தல்; தொகுதியில்  போட்டியிட்ட A,B,C,D என்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு அமைந்தன எனக் கொள்வோம்.

A = 15,833
B = 12,217
C  = 2,893
D  = 518
இம்முடிவின்படி ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற A என்பவர் X தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவார். இவர் பெற்ற மேலதிக வாக்குகள் 3616 ஆகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை என்றால் என்ன?
1978ம் ஆண்டில் இரண்டாம் குடியரசு யாப்பு (இலங்கையின் 8வது அரசியலமைப்பு) அமுல்படுத்தப்பட்டதையடுத்து இலங்கையில் விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகமானது. 1850களில் டியுனிஸ் அரசியல்வாதியான ஸி.ஸி.ஜி. அந்திரேயும், பிரித்தானியாவைச் சேர்ந்த பாரிஸ்டர் தோமஸ் குரேயும் விகிதாசாரத் தேர்தல் முறையினை அறிமுகப்படுத்திய போதிலும் கூட, உலகளாவிய ரீதியில் இத்தேர்தல் முறை பிரபல்யம் அடையக் காரணமாக இருந்தவர் “ஜோன் ஸ்டுவார்ட் மில்” என்பவராவார்.

விகிதாசாரத் தேர்தல் முறை எனும் போது ஒரு குறிப்பிட்ட (பல அங்கத்தவ) தேர்தல் தொகுதியில் (அல்லது ஒரு தேர்தல் மாவட்டத்தில்) வேட்பாளருக்கு அல்லது பல வேட்பாளர்களை உள்ளடக்கிய (பட்டியல்) ஒரு குழுவிற்கோ அல்லது கட்சிக்கோ அளிக்கப்படும் வாக்குகளின் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசனங்களை ஒதுக்கும் உபாயங்களைக் கொண்ட வாக்களிக்கும் முறையே விகிதாசார முறை எனப்படும்.

இந்த விகிதாசார முறையானது இரண்டு பிரதான மாதிரிகளைக் கொண்டதாகும். அவை:

1. தனிமாற்று வாக்குரிமை
2. பட்டியல் முறை
தனிமாற்று வாக்குரிமையின் கீழ் இலங்கையில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் நடைபெறும். இத்தகையத் தேர்தல் 1982,1988,  1994,  1999, 2005,  2010ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பட்டியல் முறையின் கீழ் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மாகாண சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், உள்ளுராட்சி சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் (மாநகர, நகரசபை, பிரதேச சபை) என்பன நடைபெறும். இம்முறைக்கமைய 1989,  1994,  2000,  2002, 2004ம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே இத்தேர்தல் நடைமுறைகளை அவதானிக்கும் போது சிறுபான்மை இனத்திற்கு எத்தேர்தல் முறை நன்மை பயக்கும் என்பதை இனங் காட்டக்கூடியதாக இருக்கும்.

எனவே பாராளுமன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக, 1972ம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பெரும்பான்மைத் தேர்தல் முறைமையும், 1978ம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கையின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் விகிதாசாரத் தேர்தல் முறையினையும் ஒப்பிட்டு ஆராய பின்வரும் தலைப்புக்களின் கீழ் நோக்குதல் பொருத்தமானதாக அமையும்.

1. தேர்தல் தொகுதிகள் பிரிக்கும் முறை.
2. நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் முறை.
3. வாக்களிக்கும் முறை.
4. ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் முறை.
5. வெற்றிடமேற்படும் போது மீள்நிரப்பப்படும் முறை

தேர்தல் தொகுதி பிரிக்கப்படும் முறையினால் சிறுபான்மையினருக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?

பெரும்பான்மைத் தேர்தல்முறை இடம்பெற்ற முதலாம் குடியரசு யாப்பில் ( 1972ம் ஆண்டு யாப்பு) தேர்தல் தொகுதிகளை வரையறுத்தல் தொடர்பான ஏற்பாடுகள் யாப்பின் 77 முதல் 81 வரையுள்ள உறுப்புரைகளில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இதன்படி 78(2) உறுப்புரையின் பிரகாரம் இலங்கையில் 75, 000 மக்களுக்கு (மக்கள் தொகை) ஒரு பிரதிநிதியென்றும், 1000 சதுரமைல்களுக்கு ஒரு பிரதிநிதியென்றும், வரையறை செய்யப்பட்டுள்ளது.

ஓவ்வொரு தடவையும் குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து மூவரைக் கொண்ட தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவொன்றை,  ஜனாதிபதி அமைத்தல் வேண்டும் என்றும் யாப்பின் 77(1) உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி 1974ம் ஆண்டில் திரு. நோயல் தித்தவெல (முதலாம் குடியரசு யாப்பு நிர்ணய ஆணைக்குழுவின் செயலாளராகப் பணியாற்றியவர்) என்பவரின் தலைமையில் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் சிபார்சுக்கமைய தேசிய அரசுப் பேரவையினால் (பாராளுமன்றத்தால்) 1975ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில், 1ம் குடியரசு யாப்பில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது திருத்தமாக 78(2) உறுப்புரையில் 90, 000 மக்களுக்கு ஒரு தொகுதி என்ற நிலை பேணப்பட்டது.

திரு. நோயல் தித்தவெல ஆணைக்குழுவின் அறிக்கை 1976ம் ஆண்டில் ஜனாதிபதி வில்லியம் கோபல்லாவை மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்படி 1977ம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது உறுப்பினர் எண்ணிக்கையும், தொகுதிகளும் பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டது.

1 சனத்தொகை அடிப்படையில் மொத்த சனத்தொகை 90, 000 ஆல் வகுக்கப்பட்டு 143 அங்கத்தவர்களும்.

2 பரப்பளவின் அடிப்படையில் இலங்கையின் மொத்தப் பரப்பளவான 25, 332 சதுரமைல்கள் 1000ஆல் வகுக்கப்பட்டு 25 அங்கத்தவர்களுமாக மொத்தம் 168 பிரதிநிதிகள் தேசிய அரசுப் பேரவையில் இடம்பெற வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த 168 பிரதிநிதிகளும் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகவே அமைவர். (நியமன அங்கத்துவம் இங்கு நீக்கப்பட்டது) இந்த 168 பிரதிநிதிகளும் இலங்கையில் ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்த 160 தொகுதிகளினூடாக தெரிவு செய்யப்படல் வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது.

1947ம் ஆண்டில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியலமைப்பில் இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மை இனத்தவர்களின் அரசியல் காப்பீடு ஏற்பாடாக பல அங்கத்துவத் தேர்தல் தொகுதி முறை அல்லது இரட்டை அங்கத்தவர் தேர்தல் தொகுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு தேர்தல் தொகுதியில் பெரும்பான்மை,  சிறுபான்மை இனங்கள் அண்ணளவாக சமமாக வாழ்ந்தால் சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும்,  அல்லது ஒரு தேர்தல் தொகுதியில் இரண்டு சிறுபான்மை இனத்தவர்களினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும்,  இத்தகைய பல அங்கத்துவ தேர்தல் தொகுதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதன்படி கொழும்பு மத்தி, நுவரெலிய,  மஸ்கெலியா (மூன்று அங்கத்துவத் தொகுதிகளாகவும்) பேருவளை,  ஹாரிஸ்பத்துவ,  பொத்துவில்,  மட்டக்களப்பு என்பன இரட்டை அங்கத்துவத் தொகுதிகளாகவும் வகுக்கப்பட்டன.

இதன்படி பல அங்கத்துவர் தொகுதி 6இல் இருந்தும் 14 பிரதிநிதிகளும், தனி அங்கத்துவர் தொகுதிகள் 154இல் இருந்தும், 154 பிரதிநிதிகளுமாக 160 தேர்தல் தொகுதிகளிலும் இருந்து 168 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ், தேர்தல் தொகுதி வரையறை செய்யப்படல்.

விகிதாசார தேர்தல் தொகுதியின் கீழ் தேர்தல் தொகுதிகள் வரையறை செய்யப்படுவதில்லை. மாறாக தேர்தல் மாவட்டங்களே வரையறை செய்யப்படுகின்றன. 2ம் குடியரசு யாப்பின் 96ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவு பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ‘ஜனாதிபதியால் அமைக்கப்படும் தேர்தல் வரையறை ஆணைக்குழு இலங்கையை  இருபதுக்குக் குறையாததும், இருபத்து நான்கிற்கு மேற்படாததுமான தேர்தல் மாவட்டங்களாகப் பிரித்து அவற்றிற்குப் பெயர்களைக் குறித்தொதுக்குதல் வேண்டும்.’

அரசியலமைப்பின் 95ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவுக்கமைய 1978– 11– 29ம் திகதி திரு ஜீ.பீ.ஏ சில்வா என்பவரின் தலைமையிலான தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழுவினை இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா அமைத்தார். இவ்வாணைக் குழுவின் அறிக்கை 1981 தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழு அறிக்கை எனப்படுகின்றது. இவ்வறிக்கையின் படி (26ம் பக்கம்) இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாக வரையறை செய்யப்பட்டது. இலங்கையில் விகிதாசார முறையின் கீழ் இதுவரை நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாகவே வரையறை செய்யப்பட்டிருந்தமை அவதானிக்கத்தக்கதாகும்.

சுதந்திர இலங்கையின் செயற்பட்ட சோல்பரி அரசியலமைப்பிலோ, 1ம் குடியரசு அரசியலமைப்பிலோ பாராளுமன்ற அங்கத்துவர் எண்ணிக்கை வரையறை செய்யப்பட்டிருக்கவில்லை. (நெகிழும் அங்கத்துவத்தைக் கொண்டதாகவே அங்கத்துவ எண்ணிக்கை அமைந்திருந்தது) ஆனால் 2ம் குடியரசு யாப்பில் இலங்கைப் பாராளுமன்ற அங்கத்துவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ‘அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கிணங்க அமைக்கப்பட்ட பல்வேறு தேர்தல் மாவட்டங்களில் தேருநர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 196 உறுப்பினர்களைப் பாராளுமன்றம் கொண்டிருக்க வேண்டும்.’ அதே நேரம் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்துக்கிணங்க (1988ல்) இந்த எண்ணிக்கை 225 ஆக உயர்த்தப்பட்டது. இந்த 225 அங்கத்தவர்களும் பின்வரும் ஒழுங்கில் இடம்பெறுவர்.

1 இலங்கையின் முழு வாக்காளர் தொகையையும்,  கருத்திற் கொண்டு 160  உறுப்பினர்கள் மாவட்ட ரீதியாகத் தெரிவுசெய்யப்படுதல்.

2.  ஒரு மாகாணத்திற்கு 4 என்ற வீதம் 9 மாகாணங்களுக்கும்,  36 உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்.(ஆக மேற்படி 196 உறுப்பினர்களும், 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து நேரடியாக மக்கள் மூலம் தெரிவு செய்யப்படுவர்)

தேசிய ரீதியில் ஒவ்வொரு கட்சிகளும், குழுக்களும் பெறும் வாக்கு விகிதாசாரத்துக்கு அமைய மீதமான 29 பிரதிநிதிகளும் தேசியப் பட்டியல் மூலம் இடம்பெறுவர்.

தேர்தல் தொகுதி வரையறை செய்யப்படக்கூடிய முறையினை நோக்குமிடத்து பெரும்பான்மைத் தேர்தல் முறையினை விட விகிதாசாரத் தேர்தல் முறையில் சிறுபான்மையினருக்குத் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்ள அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

ஏனென்றால் வடக்கு,  கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களில் சிறுபான்மை சமூகத்தினர் சிதறியே வாழ்ந்து வருகின்றனர். எனவே தொகுதி ரீதியாக அமையும் போது சிறுபான்மை சமூகத்தினருக்கு ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பது மிகக் கடினமானதொன்றாகும். ஆனால் விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் தேர்தல் மாவட்டமாக வரையறை செய்யப்படுவதினால் மாவட்டத்தில் சிதறிவாழும் சிறுபான்மையினருக்கு ஓரிரு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கலாம். எனவே பெரும்பான்மைத் தேர்தல் முறையினை விட விகிதாசாரப் பிரதிநிதித்துவம் சிறுபான்மை சமூகத்தினருக்கு அதிக வாய்ப்புண்டு என்பது மறுக்க முடியாததாகும்.

ஏனைய நடைமுறைகளை அவதானிக்கும் போதும் இந்த நிலையை மேலும் உறுதிப்படுத்தலாம்.

(தொடரும்…….)

விடைபெறுவீர் அமுதுப் புலவரே….. : என்.செல்வராஜா (நூலகவியலாளர், லண்டன்.)

tn.jpgஅமுதுப் புலவர் என எம்மவரால் அன்புடன் அழைக்கப்படும் இளவாலை அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் 23.2.2010 அன்று காலை 11.00 மணியளவில் தன் உலகவாழ்வைவிட்டு நீங்கிய செய்தி என் இதயத்தைக் கனக்கச் செய்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவுவைப் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அமுதுப் புலவர். தம்பிமுத்து – சேதுப்பிள்ளை தம்பதியினரின் மகனாக 1918ம் ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி பிறந்த இவர், தன் ஆரம்பக் கல்வியை புனித சார்ள்ஸ் வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், உயர் கல்வியை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த்துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றிருந்த இளவாலை அமுது, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டத்தையும், இலங்கைக் கல்வித் திணைக்களத்தின் பண்டிதர் பட்டத்தையும் பெற்றவர்.

ஓய்வுபெற்ற முதலாம் தர ஆசிரியரான இவர், இளவாலை அமுது என்று ஈழத்துத் தமிழ்; இலக்கிய உலகில் பரவலாக அறிமுகமானவர். 1984ம் ஆண்டு முதல் தாயகத்திலிருந்து குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வந்து லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் வாழ்ந்து வந்தார்.

சுமார் ஏழு தசாப்தங்களாக இலக்கியத்துறையில் வேரோடி விழுதெறிந்து ஆலமரமாக வீற்றிருக்கும் அமுதுப்புலவரின் முதலாவது ஆக்கம் 1938ம் ஆண்டு சத்தியவேத பாதகாவலனில் மாதா அஞ்சலி என்ற தலைப்பில் பிரசுரமாகியிருந்தது. இதே காலப்பகுதியில் ஆசிரியர் கலாசாலையின் தூதன் என்ற சஞ்சிகையின் ஆண்டுமலருக்கு மலராசிரியராகப் பணியாற்றியும் இளவயதிலேயே தன் திறமையை அமுதுப்புலவர் வெளிப்படுத்தியிருந்தார். இளம் பத்திரிகையாளராக 1940ம் ஆண்டில் இளைஞர் அமுதசாகரன், போதினி என்ற பத்திரிகையையும் நடத்தியிருந்தார். அன்றுமுதல் இன்றுவரை இலங்கையின் அனைத்துத் தேசிய பிராந்திய தமிழ்ப் பத்திரிகைகளிலும், பெரும்பாலான சஞ்சிகைகளிலும், உலகெங்கும் வெளியாகியுள்ள பல்வேறு சிறப்பு மலர்களிலும் அமுதுப் புலவரின் படைப்புக்கள் வெளிவந்திருக்கின்றன.

நூலுருவில் வெளிவந்த இவரின் வெளியீடுகளான நெஞ்சே நினை, இவ்வழிச் சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள், அன்பின் கங்கை அன்னை தெரேசா, மடுமாதா காவியம் அல்லது மருதமடு மாதா காவிய மல்லிகை, அன்னம்மாள் ஆலய வரலாறு, அமுதுவின் கவிதைகள், இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள், ஆகிய நூல்கள் ஈழத்துத் தமிழ் மக்களின் இல்லம் தோறும் வலம் வந்து மனதைத் தொடும் வசனங்களாலும் மரபுக்கவிதைகளாலும் அவர்களிடையே இலக்கிய மணம் பரப்பி வருகின்றன.

அன்னை திரேசாவின் வாழ்க்கை வரலாற்று நூலும் மடுமாதா காவியம் என்ற ஈழத்து மருதமடுத்  திருத்தலம் பற்றிய காவிய நூலும் கடந்த காலங்களில் பரவலாக விதந்து பேசப்பெற்றவை. அமுதுவின் கவிதைகள் நூல் அமுதுப்புலவரின் கவிதாபுலமையை கச்சிதமாகப் பதிவுசெய்துவைத்திருக்கும் ஒரு இலக்கியப் பெட்டகமாகும். இன்று வளரும் இளம் கவிஞர்களின் கைகளில் தவழ்ந்துவரும் இந்த நூலும் அண்மைக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அமுதுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டினைக் கெளரவிக்கும் வகையில் பல்வேறு அறிவுசார் நிறுவனங்களும் அவரைக் கௌரவித்திருக்கின்றன. இவரின் சமய இலக்கியத் தொண்டினை கௌரவித்து 2004ம் ஆண்டில் ரோமாபுரியில் பரிசுத்த பாப்பரசரினால் செவாலியர் விருது வழங்கப்பட்டது. பின்னர் 2005இல் இலங்கை அரசு கலாபூஷணம் விருதையும் அமுதுப் புலவருக்கு வழங்கியிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொளரவ இலக்கிய கலாநிதிப் பட்டத்தையும் அதே ஆண்டில் வழங்கியிருந்தது. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது.

தனது தொன்னூற்றிரண்டு வயதினைக் கடந்து இதுவரை திடகாத்திரமான முதிய இளைஞனாக நம்மிடையே வலம்வந்த அமுதுப் புலவர் இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தியை மனது என்னவோ நம்பவே மறுக்கின்றது.

அமுதுப் புலவரின் முன்னைய படைப்புகளின் ஒருங்கிணைந்த தொகுப்பாக 1600 பக்கங்களில் வெளியாகிய “இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்”  என்ற நூலின் வெளியீடும், அமுதுப் புலவருக்கு மூதறிஞர் பட்டமளித்துப் பாராட்டும் விழாவும் இம்மாதம் ஏழாம் திகதிதான் (07.02.2010) வெகு சிறப்பாக நடந்தேறியிருந்தது.

முத்தமிழ் அறிஞர் தாசீசியஸ் அவர்களின் தலைமையில் இலக்கிய விழாக்களின் வழமைக்கு மாறாக மண்டபம் நிறைந்த அரங்கில் (Greenford Hall) லண்டனில் வாழும் இலக்கியப் பிரமுகர்கள் வாழ்த்துக்கூற, அமுதுப் புலவர் 92 வயதிலும் தளராத உறுதியுடன் அங்கு மேடையில் புன்முறுவலுடன வீற்றிருந்ததை இனி வாழ்வில் மறக்கமுடியாது.

அந்த மேடையிலே, இலங்கையிலிருந்து வந்திருந்த வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீ கஜன் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடமும், பத்து நிமிடமும் கறாராக பேச வழங்கிக்கொண்டிருந்த தலைவர் – அமுதுப் புலவருடைய பேச்சை மட்டும் நிறுத்தவேயில்லை. சலிப்பையே தராத – நகைச்சுவையும், நெகிழ்வும், கிண்டலும் கலந்த அந்த உரை இன்னமும் எனது காதுகளில் ரீங்காரமிடுகின்றன. 45 நிமிடங்களுக்கும் அதிகமாகப் பேசியிருப்பார். குறுக்கீடில்லாத அந்த உரையே அவரது இறுதி உரை என்பதை அவரே அன்று மேடையில் கூறியவேளை சிரித்தவர்களும் சிரிப்பை மறந்தனர். அன்றைய மேடையில் நான் உரையாற்ற வாய்ப்புக் கிட்டவில்லை. அதனை அவர் நன்றாக உணர்ந்துமிருந்தார். தனது உரையிலேயே அதனைக் குறிப்பிட்டதுடன், பின்னர் மேடையில் அவரது நூலைப் பெற்றுக்கொள்ளச் சென்ற வேளையில் ஒரு தந்தையின் பரிவுடனும், பாசத்துடனும் என்னைக் கட்டியணைத்து உச்சிமோந்து- நூலை வழங்கியமை என்னை மெய்சிலிர்க்கவைத்ததுடன் கண்களில் நீரையும் வரவழைத்தது.

அன்றைய நிகழ்வினை ஒழுங்குசெய்த அமுதுப் புலவரின் குடும்பத்தினரும் விழாக் குழுவினரும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஒரு பாரிய திருப்திகரமான சேவையைச் செய்திருக்கிறார்கள். தன் வாழ்நாளில் வளமுடனும், நிறைவுடனும் ஒரு கவிஞராக வாழ்ந்து முதுமையை எட்டிய ஒரு முழமையான மனிதரை அவர் வாழ்ந்த தமிழ் அறிவோர் சமூகம் வாழ்த்தி மன நிறைவுடன் வழியனுப்பி வைத்துள்ளது. இத்தகைய திருப்திகரமானதும் மன நிறைவானதுமான வழியனுப்புதல்கள் எங்கள் அனைவருக்கும் வாய்ப்பதில்லை.

மறைந்தும் மறையாத அமுதுப்புலவர் அடைக்கலமுத்து அமுதசாகரன் – கலாபூசணம் புன்னியாமீன்

அமுதுப் புலவர் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த இளவாலை அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் 23.2.2010 இலண்டனில் தன் உலக வாழ்வைவிட்டு நீங்கிய செய்தி எம் இதயங்களைக் கனக்கச் செய்தது. அன்னாரின் மறைவையிட்டு இந்தக் கட்டுரை இடம்பெறுகின்றது.

வடமாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவுக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் ‘இளவாலை அமுது’ எனும் பெயரில் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலும்,  புலம்பெயர்ந்த இலக்கியப் பரப்பிலும் நன்கு அறிமுகமான மூத்த எழுத்தாளரும்,  கவிஞருமாவார். அமுது, மறைமணி எனும் பெயர்களிலும் எழுதி வந்த ‘அமுதுப் புலவர்’ 1984ம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்துக்குப் புலம்பெயர்ந்து தனது குடும்பத்துடன் லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் வாழ்ந்து வந்தார்;

தம்பிமுத்து,  சேதுப்பிள்ளை தம்பதியினரின் புதல்வாரன இவர் யாழ்ப்பாணம் சென். சார்ள்ஸ் வித்தியாலயம்,  யாழ். சேன் பற்றிக்ஸ் கல்லூரி, கொலம்பகம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை,  பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த் துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ‘வித்துவான்’ பட்டமும் இலங்கை கல்வித்தணைக்களத்தில் ‘பண்டிதர்’ பட்டமும் பெற்ற இவர்,  ஓய்வுபெற்ற முதலாம்தர ஆசிரியருமாவார்.

சுமார் 7 தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்துறையில் முனைப்புடன் செயற்பட்டு வரும் அமுதுப் புலவரின் கன்னியாக்கம் 1938ம் ஆண்டு இலங்கையில் முதலாவது தமிழ்ப் பத்திரிகையெனக் கருதப்படும் ‘சத்தியவேத பாதுகாவலன்’ எனும் பத்திரிகையில் ‘மாதா அஞ்சலி’ எனும் தலைப்பில் பிரசுரமானது. இதே காலப்பகுதியில் ஆசிரியர் கலாசாலையின் ‘தூதன்’ என்ற சஞ்சிகையின் 100வது ஆண்டு மலருக்கு ஆசிரியராக நின்று பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. அன்றிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் வீரகேசரி,  தினகரன்,  சத்தியநேசன், காவலன், ஈழநாடு, உதயன், ஈழகேசரி,  புதினம், அஞ்சல்,  தொடுவானம்,  ஈழமுரசு போன்ற பல்வேறு சஞ்சிகைகளிலும்,  பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. பல வானொலி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன.

இத்தகைய இவரது ஆக்கங்களில் சில இதுவரை 11 நூல்களாக வெளிவந்துள்ளன. 1940ம் ஆண்டில் வெளிவந்த ‘மாதா அஞ்சலி’ எனும் நூல் இவரின் முதலாவது நூலாகும். இதைத் தொடர்ந்து வெளிவந்த இவரின் நூல்கள் பின்வருமாறு:

நெஞ்சே நினை (வரலாறு)
இவ்வழி சென்ற இனிய மனிதன் (சிறுகதைத் தொகுதி)
காக்கும் கரங்கள்
அமுதுவின் கவிதைகள்
அன்பின் கங்கை அன்னை திரேசா
மருத மடு மாதா காவிய மல்லிகை
அமுதுவின் கவிதைகள் (திருத்திய இரண்டாம் பதிப்பு)
அன்னம்பாள் ஆலய வரலாறு
இந்த வேலிக்குக் கதியல் போட்டவர்கள்.
“இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்” 

அமுதுப் புலவரின் முன்னைய படைப்புகளின் ஒருங்கிணைந்த தொகுப்பாக 1600 பக்கங்களில் வெளியாகிய “இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்”  என்ற நூலின் வெளியீடும், அமுதுப் புலவருக்கு மூதறிஞர் பட்டமளித்துப் பாராட்டும் விழாவும் இம்மாதம் ஏழாம் திகதிதான் (07.02.2010) வெகு சிறப்பாக லண்டனில் அவரது 92வது வயதில் நடந்தேறியமையும் குறிப்பிடத்தக்கது.

இவரின் ‘அமுதுவின் கவிதைகள்’ என்ற நூலின் முதற்பகுதி சில்லாலை வைத்தியர் இன்னாசித்தம்பி அவர்களின் நினைவாக நிறுவப்பெற்ற ‘தம்பி’ தமிழ் அரங்கத்தினால் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் இவர் தெரிவித்திருந்த சில கருத்துக்கள் அனைவரினதும் மனங்களை நெருடக்கூடியவை. அதனை அவரின் வரிகளிலேயே தருவது பொருத்தமானதாக அமையும்.

“….வீட்டிலும்,  நாட்டிலும் இரத்தத்துளிகள். தமிழன் என்ற  வேருக்கே கோடாரி வைக்கப்பட்டது. இடம்பெயர்ந்து இங்கிலாந்துக்கு வரவேண்டியதாயிற்று. ஒரு ஒற்றைத் தாளைத் தானும் உடன் கொண்டு வந்தால்,  இடையே உள்ள இருபது தடைமுகாம்களிலும்,  ஆபத்தை விலைக்கு வேண்டுவதாய் முடியும். இந்த நிலையில் நான்  நீண்ட காலமாகத் தேடித் திரட்டிய நூல்களையும்,  எனது கவிதைக் கோவைகளையும்,  என் இல்லத்தில் பக்குவமாய் வைத்து விட்டுப் பிறநாடு வந்து சேர்ந்தேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு என் இல்லத்துக்குச் சென்ற போது அங்கே சுடுகாட்டின் மௌனம் தோன்றியது. கடுகு மணியொன்றைக் கண்டெடுத்தாலும்,  காகிதத் துண்டு ஒன்றைக் காணமுடியவில்லை. திருடர்கள் திருவிழா நடத்தியிருக்க வேண்டும.; வாழ்ந்த சுவடுகள் கூடத் திருடப்பட்டு விட்டன…..”

இது அமுதுப் புலவரின் முகவுரை வரிகள். இந்த வரிகள் அமுதுப்புலவரின் சொந்த வரிகள் அல்ல. தாயகத்தை விட்டுப் புகலிடம் வந்த பலரின் ஆத்மாவின் குரல்கள் இளவாலை அமுதுவின் தொலைந்து போன கவிதைகள் கூட இன்று நூலுருவில் வெளியாக அவருக்கு ஒரு நண்பர் இருந்திருக்கிறார். சட்டத்தரணி இரா. ஜெயசிங்கம் அவர்கள் அமுதுவின் கவிதைகளை பத்திரிகைகளில் இருந்து தனது ஆர்வத்தின் காரணமாகத் தொகுத்து வைத்திருக்கின்றார். அந்தக் கவிதைகளும் சேர்ந்தே முதலாவது பதிப்பாக ‘அமுதுவின் கவிதைகள்’ வெளிவந்தன.

இளவாலை அமுதுவின் சில நூல்கள் பற்றி பிரபல எழுத்தாளரும், நூலாசிரியருமான என். செல்வராஜா அவர்கள் தனது நூல் தேட்டம் பாகம் 1இல் 508, 874வது பதிவுகளாகவும், பாகம் 3 இல் 2098, 2867வது பதிவுகளாகவும் பாகம் 4இல் 3648 வது பதிவாகவும் பதிவாக்கியிருந்தார். அக்குறிப்புகளைப் பின்வருமாறு அவதானிக்கலாம்.

அன்பின் கங்கை, அன்னை திரேசா: இளவாலை அமுது (இயற்பெயர்- அமுதசாகரன் அடைக்கலமுத்து) லண்டன்: தமிழரங்கம், மே 1997. (லண்டன்: வாசன் அச்சகம்)
(16),230 பக்கம், புகைப்படங்கள். விலை: ஸ்டேர்லிங் பவுண் 5.00. அளவு: 20X14.5 சமீ.

அன்னை திரேசா என்ற பெயர் பலருக்குத் தெரிந்த ஒன்று. ஆனால் அந்தப் பெயருக்குள் இருக்கும் அன்னையின் பணிகளைத் தெரிந்தவர்கள் ஒரு சிலரே. அவர் வாழ்க்கை இனிய தமிழில் நூலுருவாகியுள்ளது. கத்தோலிக்கத் துறவியாக அழைப்புப்பெற்று ஆசிரியராக இந்து முஸ்லீம் மக்களிடையே கடமையாற்றிய வேளை வாழ்வின் விளிம்பில் நின்று தவிப்போருடன் தொடர்பு கொண்ட அன்னை திரேசாவின் கதையை இளவாலை அமுது நூலாகப் படைத்துள்ளார். இக்கதை ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாறாக மட்டு மின்றி ஒரு தொண்டர் நிறுவனத்தின் வரலாறாகவும் அமைகின்றது.

நெஞ்சே நினை: சுவாமி ஞானப்பிரகாசர் வாழ்க்கை வரலாறு. ச.அடைக்கலமுத்து, (புனைபெயர்: இளவாலை அமுது). யாழ்ப்பாணம்: யாழ். மறைமாவட்ட இலக்கியக் கழகம், ஆயர் இல்லம், 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
(16), 210 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 21X14 சமீ.

மானிப்பாயில் பிறந்து, அச்சுவேலியில் வளர்ந்து நல்லூரிலிருந்து முழு உலகிற்கும் தொண்டாற்றி 1947 தைத்திங்கள் 22ம் நாள் மறைந்த பன்மொழிப்புலவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களின் வாழ்வும் பணியும் இங்கு இலக்கியச் சுவை சொட்டக் கூறப்பட்டுள்ளது.

இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள்:  இளவாலை அமுது. லண்டன் SW17 7EZ: புதினம் 10ஆவது ஆண்டு நிறைவு வெளியீடு, 38, Moffat Road , 1வது பதிப்பு, மே 2006. (யாழ்ப்பாணம்; புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், 360 பிரதான வீதி).
213 பக்கம், விலை: ஸ்டேர்லிங் பவுண் 5., அளவு: 21X14.5 சமீ.

புலவர்மணி கலாநிதி இளவாலை அமுது அவர்கள் லண்டன் புதினம் இருவாரப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்த வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. தமிழ் வளர்த்த சான்றோர்கள் மாத்திரமன்றி, சமகால ஊடகத்துறையினர், எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் என்று 44 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை முதல் மறைந்த மனிதகுல மாணிக்கம் இரண்டாம் யோவான் பவுல் (பாப்பாண்டவர்) வரை விரிந்துள்ள இத்தொடரில், சமகால புகலிடக் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

மருத மடுமாதா காவிய மல்லிகை. அமுதசாகரன் அடைக்கல முத்து (புனைபெயர்: அமுது). லண்டன்: தமிழ் அரங்கம்,  87, Hazelmere Walk, Northolt, Middlesex, UB5 6UR. 1வது பதிப்பு, 1998 (கொழும்பு 13: லங்கா பப்ளிசிங் ஹவுஸ்)
(32),162 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21ஒ13.5 சமீ.

இலங்கையில் மருதமடுத்திருப்பதியில் வீற்றிருக்கும் மடுமாதா பேரில் பாடப்பெற்றதும், மரபுக்கவிதைகளில் எழுதப்பெற்றதுமான காவிய நூல். அட்டையில் மடுமாதா காவியம் என்ற தலைப்புடன் வெளிவந்துள்ளது.

அமுதுவின் கவிதைகள். இளவாலை அமுது. இலண்டன்:  Tamil Literary Society 2வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 1991. (சென்னை 17: Manimekalai Prasuram, T. Nagar).
240 பக்கம், விலை: இந்திய ரூபா 100, அளவு: 21.5X14.5 சமீ.

வைத்தியர் இன்னாசித்தம்பி அவர்களின் நினைவாக நிறுவப்பெற்ற பண்டத்தரிப்பு தம்பி தமிழ் அரங்கத்தின் முதலாவது பதிப்பாக 1991இல் வெளியான அமுதுவின் கவிதைகளின் திருத்திய மறு பதிப்பு இதுவாகும். அமுதுப்புலவர், இளவாலை அமுது என்று நம்மிடையே அறிமுகமாகியுள்ள அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்களின் இத்தொகுதி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசியபானம் என்ற தலைப்பில் 17 கவிதைகளையும், சிந்தனைச் சந்தனம் என்ற பிரிவில் 35 கவிதைகளையும், முல்லையில் கிள்ளிய மொட்டுக்கள் என்ற தலைப்பில் 20 கவிதைகளையும், நெஞ்சில் தோன்றிய நினைவுச் சுடர்கள் என்ற தலைப்பில் தமிழ்ப் பெரியார்கள் பற்றிய 27 கவிதைகளையும், கதிரொளியில் சில துளிகள் என்ற தலைப்பில் 11 கவிதைகளையும் உள்ளடக்கியுள்ளன.

தமிழ்மொழிக்கு இவர் ஆற்றியுள்ள பங்களிப்பு, தமிழர் பண்பாட்டுக்கு இவரின் பணி, சமயத்துக்காக இவரின் சேவைகள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு 2004ம் ஆண்டில் உரோமா புரியில் பரிசுத்த பாப்பாண்டவர் அவர்களினால் “செவாலியர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதைத் தம் வாழ்வில் கிடைத்த மாபெரும் கௌரவமாக கருதி வரும் இளவாலை அமுது அவர்களுக்கு, ஸ்ரீ  லங்கா அரசு 2005ம் ஆண்டில் ‘கலாபூஷணம்” விருது வழங்கியும், யாழ் பல்கலைக்கழகம் ‘கலாநிதி’ பட்டம் வழங்கியும் கௌரவித்துள்ளன. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது. அத்துடன் தாயகத்திலும் புகலிடத்திலும், பல்வேறு அமைப்புக்கள் கவிமாமணி, தமிழ் கங்கை,  மதுரகவி,  சொல்லின் செல்வர்,  புலவர் மணி,  செந்தமிழ்ச் செல்வர் போன்ற பட்டங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

எத்தகைய பட்டங்களைப் பெற்றாலும், எதுவித கர்வமுமின்றி இனிதாகப் பழகும் சுபாவம் கொண்ட இம்முதுபெரும் ‘தமிழ் வித்தகர்” ஆரம்ப காலங்களில் தான் இலக்கியத் துறையில் ஈடுபடுவதற்கும்,  அதே போல பல்வேறுபட்ட மனச்சோர்வுகளுடன் புலம்பெயர்ந்த பின்பு தனது எழுத்துத் துறை ஆர்வத்தைத் தூண்டி, எழுத மீண்டும் ஊக்கமளித்தவர்கள் என்ற அடிப்படையிலும், பண்டிதமணி கணபதிப்பிள்ளை,  புலவர் இளமுருகனார், ஆயர் தியோகிப்பிள்ளை,  கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் ஈ. கே. இராஜகோபால் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வந்தார்.

மரபுக் கவிதையே வழிவழி தொடர வேண்டும் என்ற அவாக் கொண்டிருந்த இவரின் அன்பு மனைவி ஆசிரியை திரேசா ஆவார். எழுத்துத்துறையிலும், கவிதைத்துறையிலும் பல்வேறு பட்ட சாதனைப் புரிந்துள்ள, இளவாலை அமுது அவர்கள் சுமார் அறுபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பத்திரிகையாளராக ‘இளைஞர் போதினி’ எனும் பத்திரிகையை (1940ம் ஆண்டில்) நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

அமுதுப் புலவர் – இளவாலை அமுது இன்று காலமானார்!

அமுதுப் புலவர் இளவாலை அமுது ஆகிய பெயர்களால் அறியப்பட்ட அடைக்கலமுத்து இன்று (பெப்ரவரி 23) காலமானார். பல்வேறு சிறப்புப் பட்டங்களைப் பெற்ற இவரின் ஆக்கங்களின் தொகுப்பு சில வாரங்களுக்கு முன்னதாக லண்டனில் வெளியிடப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களான கலாநிதி சந்திரகாந்தன் கலாநிதி வசந்தன் ஆகியோரின் தந்தையார் ஆவர். கலாநிதி வசந்தன் லண்டனிலும் கலாநிதி சந்திரகாந்தன் கனடாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘சம்பந்தர் ஐயாவை மலைபோல நம்பியிருந்தேன். ஆனால்….”: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியுடன் நேர்காணல்: – புன்னியாமீன் –

thangeswary.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வேட்புமனுப் பத்திரத்திலும் இவர் கையொப்பமிட்டுள்ளார்.  தங்கேஸ்வரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடவே இறுதி நேரம் வரை காத்திருந்த போதிலும் கூட இறுதி நேரத்தில் அவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம் வழங்கப்படவில்லை.  இது விடயமாக தேசம்நெற் இணையத்தளத்திற்கு தங்கேஸ்வரி பிரத்தியேகமாக அளித்த பேட்டி கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. 

கேள்வி: ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் நீங்கள் போட்டியிட முன்வந்தமைக்கான காரணம் என்ன?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழேயே போட்டியிட வேண்டும் என்று  இறுதிநேரம் வரை நான் காத்திருந்தேன். ஆனால், இறுதி நேரத்தில் எனது பெயரை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்கிவிட்டதாக உறுதிப்படுத்திக் கொண்டதையடுத்து ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிட முடிவெடுத்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிநேரத்தில் இம்முடிவினை அறிவித்திருந்தால் எனக்கு இத்தேர்தலில் போட்டியிட முடியாது போயிருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான ஒரு நிலையை   ஏற்படுத்துவதற்காகவே அபேட்சகர் பெயர் பட்டியலை தயாரிப்பதில் தாமதத்தைக் காட்டி வந்தது என்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து தங்கள் பெயர் ஏன் நீக்கப்பட்டது?

பதில்: இது பற்றி எனக்கு எந்தவிதமான உத்தியோகபூர்வமான பதில்களும் தரப்படவில்லை. ஆரம்பத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள்  கூட்டமைப்பு பட்டியலில் மட்டக்களப்பு மாவட்ட வேட்புமனுவில் என்னை இணைத்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார். அவரால் தரப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படுமென்றே நான் இறுதிநேரம் வரை எதிர்பார்த்திருந்தேன். எனக்கு கிடைக்கும் நம்பகமான தகவல்களின்படி ஏற்கெனவே நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துவிட்டதாக கூட்டமைப்பில் எனது சகோதர பாராளுமன்ற அங்கத்தவர் ஒருவர் இரா. சம்பந்தன் ஐயாவிடம் பொய்யாகக் கூறியதாகவும்  இதனை வைத்துக் கொண்டே சம்பந்தன் ஐயா இந்தமுடிவை எடுத்ததாக அறியமுடிகின்றது. நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவத்தைப் பெறும் முடிவினை நேற்றிரவே (20.02.2010) எடுத்தேன். அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எனக்கு இடம் ஒதுக்கப்படாது என்று தெரிந்த பின்பே.

கேள்வி: இது பற்றி தலைவர் சம்பந்தன் அவர்கள் தங்களிடம் விசாரித்தாரா?

பதில்: இல்லை. நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டதாக அவர் என்னிடம் எந்தவிதமான கேள்விகளையும்  கேட்கவில்லை.  ஓர் அனுபவமிக்க சிரேஸ்ட தலைவர் என்ற வகையிலும், ஒரு கௌரவமிக்க தலைவர் என்ற வகையிலும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அவர் என்னிடம் விசாரித்த பின்பே முடிவினை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு நடக்காமை வேதனைக்குரிய விடயம். சம்பந்தன் ஐயாவை ஒரு தலைவர் என்ற வகையில் நான் மலைப்போல் நம்பியிருந்தேன். ஆனால், அவர் இவ்வாறு நடந்து கொண்டது என்னால் ஜீரணிக்க முடியாதுள்ளது.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு பாராளுமன்ற கூட்டமைப்பு ஆசனங்கள் வழங்கப்போவதில்லை என தலைவர் ஆர். சம்பந்தன் லண்டனில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சில புலம்பெயர்ந்த ஊடகங்கள் செய்திகளையும், கட்டுரைகளையும் கூட  வெளியிட்டிருந்தன. இது பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்.?

பதில்: இது பற்றி நான் இணையத்தளங்கள் வாயிலாக செய்தி அறிந்தேன்.  லண்டணிலிருந்து சிலர் என்னிடம் நேரடியாக தொடர்புகொண்டும் கதைத்தனர். 

இவ்விடத்தில் ஒரு விடயத்தைக் கேட்க விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப்  புலிகளால் நியமிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கு ஆசனங்களை வழங்குவதில்லையென தலைவர்  தெரிவித்திருந்தால்

விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் தான் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார்களா?    

புலிகளால் நியமிக்கப்படாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற  உறுப்பினர்கள் புலிகளுக்கெதிராகவா செயற்பட்டனர்.?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் . கடந்த காலத்தில் புலிகளின் ஆணைப்படியே செயல்பட்டதை இவர்கள்  மறந்துவிட்டார்களா?

சம்பந்தன் ஐயா கூறியபடி இருப்பின் தற்போதுள்ள 22  அங்கத்தவர்களில் யாருக்குத் தகுதியுள்ளது?

கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையும் முடிவினை நீங்கள் குறிப்பிடுவதைப் போல இவ்வளவு கெதியாக எவ்வாறு எடுத்தீர்கள்.?

பதில்: இந்நேரம் வரை (இப்பேட்டி வழங்கப்பட்டது 21ம் திகதி இரவிலாகும்)  நான் சுதந்திரக் கட்சியில் அங்கத்துவத்தைப் பெறவில்லை. நேற்று முன்தினம்   ஜனாதிபதி அவர்கள் என்னிடம் தொடர்புகொண்டார். நேற்று  பசில் ராஜபக்ஸ அவர்கள் என்னிடம் கதைத்தார்.  அச்சந்தர்ப்பத்தில் இன்று  ஜனாதிபதி அவர்களை நேரடியாகச் சந்திக்க ஏற்பாடு   செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்று சந்திக்கவில்லை. இருப்பினும்,  சுதந்திரக்  கட்சியில் இணைவதை நான் முடிவாக எடுத்துவிட்டேன். (22ம் திகதி ஜனாதிபதி அவர்களை தங்கேஸ்வரி நேரடியாக சந்தித்துள்ளார்.)

கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பொதுவேட்பாளர் சரத்பொன்சேக்காவை நீங்கள் ஆதரித்தீர்கள். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடிவெடுத்துள்ளீர்கள்.  இதனை சந்தர்ப்பவாத அரசியலாக தங்கள் வாக்காளர்கள் கருதமாட்டார்களா?

பதில்: கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சரத்பொன்சேக்காவை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஏனெனில்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  சரத்பொன்சேக்காவை ஆதரிக்க வேண்டுமென்று முடிவெடுத்த பின்பு கட்சியின் முடிவினையேற்று நடக்க வேண்டிய கடமை எமக்குள்ளது. இவ்வடிப்படையிலேயே கட்சியின் முடிவுக்கமையவே சரத்பொன்சேக்காவை நான் ஆதரித்தேன்.

கேள்வி: அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் முடிவினை  எடுக்கும்போது தாங்களும் அதனை ஆதரித்ததாக ஊடகங்களில் செய்திகள்  வெளிவந்தனவே.

பதில்: இதில் உண்மையில்லை. ஜனாதிபதித் தேர்தலின்போது சரத்பொன்சேக்காவை  ஆதரிக்க வேண்டுமென கட்சியின் தலைமை உட்பட சிலரின் முடிவே அங்கு எடுபட்டது. முடிவெடுக்கப்பட்ட பின்பு கட்சியின் போக்குக்கு இணங்க வேண்டியது. அதன் அங்கத்தவர்கள் என்ற வகையில் எமது கடமை என்பதை நீங்கள்  உணர்ந்து கொள்வீர்கள்.

கேள்வி: தங்கள் தற்போதைய முடிவினை தங்கள் தொகுதி வாக்காளர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

பதில்: நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரைப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயல்பட்டு வருகின்றேன். எமது பிரதேச மக்களுக்கு இன்று பிரதானமாக தேவைப்படுவது அபிவிருத்தியே. இந்த மக்களிடையே அடிப்படை பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது இப்பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியமானதாகும். கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையின் கீழ் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள விடயத்தை எமது பிரதேச தலைவர்களிடம் கதைத்தபோது அவர்களில் 90வீதமானோர் தமது ஆதரவினை   வழங்கினர். ஜனாதிபதியின் தலைமையின் கீழ் எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்குண்டு.

கேள்வி: இத்தேர்தலில் உங்கள் தொகுதி மக்களிடம் எந்த அடிப்படையில் வாக்குகளைக்  கேட்கவுள்ளீர்கள்.?

பதில்: பிரதேச அபிவிருத்தியை முதன்மைப்படுத்தியே மக்களிடம் வாக்குகளைக் கேட்கவுள்ளேன்.

கேள்வி: தங்கள் பிரதேச அபிவிருத்தியினை தற்போதைய ஜனாதிபதியின் மூலமாக  நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்குள்ளதா?

பதில்: நிச்சயமாகவுள்ளது. ஜனாதிபதி அவர்கள் தேசத்தின் அபிவிருத்தியை முதன்மைப்படுத்தியே மஹிந்த சிந்தனை இரண்டினை முன்வைத்துள்ளார். எனவே, நான் வெற்றி பெறுமிடத்து எனது பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும்,  பிரதேச அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

கேள்வி: கடந்த பாராளுமன்றத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தால் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும் ஒதுக்கீட்டுப் பணத்தினை மக்களுக்காக செலவிடாமல் திரைச்சேரிக்கே  திரும்பியதாக சில கருத்துக்கள் நிலவுகின்றன. இது பற்றி தங்களது கருத்து  என்ன? தங்களது ஒதுக்கீட்டுப் பணத்தினை மக்களுக்காக  முறையாகப்  பயன்படுத்தினீர்களா?

பதில்: இது பற்றி எனக்கு முழுமையாகப் பதிலளிக்க முடியாது. ஆனால், எனக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டுப் பணத்தினை நான் முறையாக ஆண்டுதோறும் என் தொகுதி அபிவிருத்திக்காக வழங்கியுள்ளேன். எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்தப் பணமும் திரைச்சேரிக்கு திரும்பிச் சென்றதில்லை.

கேள்வி: வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த பல வருடங்களாக தமது தொகுதி பக்கமே தலைகாட்டியதில்லை எனவும் தற்போது சில மாதங்களாகத் தான் அவர்களது முகங்களை தொகுதி மக்களால் காணமுடிகின்றது என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றனவே. இது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: இக்கருத்துக்களில் உண்மையுண்டு. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய தன்னால் சில ஆயுதகுழுக்களின் பயமுறுத்தலினாலும் கொலை அச்சுறுத்தல் காரணமாகவும்  தொகுதிக்குச் செல்லவில்லை என்பது  உண்மை.  தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவதாயின் எனது சொந்த வீடு கூட தாக்குதலுக்குட்பட்டது. நான் பல வருடங்களாக சேகரித்து வைத்திருந்த பல   தொல்பொருட்கள் கூட அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது எனக்கென என்  தொகுதியில் சொந்த வீடில்லை. வாடகை வீடொன்றையே நான் பெறவுள்ளேன்.  உயிரச்சம் காரணமாக எமது கட்சியின் ஆலோசனைப்படி நான் கொழும்பிலேயே தங்கியிருந்தமையால் எனது தொகுதிக்கு செல்ல முடியவில்லை. தற்போது இத்தகைய அச்சுறுத்தல்கள் இன்மை காரணமாக எமக்கு எமது தொகுதிகளுக்குச் சென்றுவர முடிகின்றது. நான் கொழும்பில் இருந்தாலும்  எனது தொகுதி மக்களுக்காக வேண்டி ஆற்ற வேண்டிய சேவைகளை  ஆற்றியுள்ளேன்.  அம்மக்களின் பிரச்சினைகளை இயலுமான வரை தீர்த்துள்ளேன். எனக்கு ஒத்துழைப்பாக எனது செயலாளர் என் தொகுதியிலே இருந்தார். இதனால் தொகுதி மக்களுக்கும் எனக்குமிடையிலான தொடர்பில் இடைவெளி  ஏற்படவில்லை என்றே எண்ணுகின்றேன்.

கேள்வி: வடக்கு கிழக்கில் கடந்த கால யுத்த அனர்த்தங்களின்போது  பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாகவும்ää பாதிக்கப்பட்ட நிலையிலும் இருக்கின்றார்கள். வடக்கு கிழக்கு பகுதிகளில் போட்டியிடக் கூடிய அரசியல் கட்சிகள் பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை  அதிகரிக்க வேண்டுமென்று பெண்ணுரிமை அமைப்புக்கள் கோரிக்கைவிட்டு வருகின்றன.  இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா?

பதில்: நிச்சயமாக இல்லை.  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் கடந்த தேர்தலில்  இரண்டு பெண் பிரதிநிதிகள் தெரிவாகினர். ஒன்று நான். மற்றயவர் யாழ்  மாவட்டத்தில் பத்மினி. இந்த இருவருக்குமே இம்முறை தமிழ்த்தேசியக்  கூட்டமைப்பில் ஆசனம் மறுக்கப்பட்டுள்ளது. பெண்கள் உரிமை சம்பந்தமாக  எவ்வளவு கோசங்கள் எழுப்பியபோதிலும்கூட அவற்றின் முக்கியத்துவம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு விளங்கமாட்டாது. விளங்கிக் கொள்ள  வேண்டிய தேவையுமில்லை.

கேள்வி: அவ்வாறாயின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் எந்தவொரு பெண் வேட்பாளரும் இல்லை என்று குறிப்பிடுகின்றீர்களா?

பதில்: அவ்வாறுதான் தோன்றுகின்றது.

சிறுபான்மை இனத்தவர்கள் இலங்கை அரசியலில் தீர்மான சக்தியல்ல என்பதை உணர்த்தி நிற்கும் 6வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்: புன்னியாமீன்

mrpr.jpgநடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 57.88 வீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளார். இவர் பொது வேட்பாளர் சரத் பொன்சேக்காவை விட 1,842,749 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றுள்ளதுடன், இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கூடுதலான மேலதிக வாக்குகளைப் பெற்ற  சாதனையையும் படைத்துள்ளார். இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ 16 தேர்தல் மாவட்டங்களில் அமோக வெற்றியீட்டியதுடன்,  06 மாவட்டங்களில் தோல்வியினை தழுவியிருந்தார். இந்த 06 மாவட்டங்களும் சிறுபான்மை சமூகத்தினர் செறிவாக வாழும் மாவட்டங்களாகும். வட மாகாணத்தில் யாழ்ப்பாணம்,  வன்னி தேர்தல் மாவட்டங்களிலும்,  கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு,  திகாமடுல்லை,  திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும்,  மத்திய மாகாணத்தில் தோட்டத் தொழிலாளர் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் இவர் தோல்வியடைந்தார்.

இதுகாலவரை இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்களில் சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துவந்துள்ளன. ஆனால், இந்தத் தேர்தல் முடிவானது பெரும்பான்மை இனத்தவர் ஒன்றிணைந்தால் வெற்றி பெறலாம் என்ற உணர்வினை பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலை எதிர்கால அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல.

பொதுவாக பெரும்பான்மை இனத்தவர்கள் அதிகமாக வாழக்கூடிய மாவட்டங்களிலும், தேர்தல் தொகுதிகளிலும் மஹிந்தவின் வெற்றி சுமார் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன்  நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியும் இதனால் வெளிப்படுத்தப்படக்கூடிய உணர்வலைகளும் தற்போதைய மஹிந்தவுக்கு மாத்திரமல்ல எதிர்கால அரசியல் போக்குகளுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை தோற்றுவிக்கக்கூடிய நிலையிருப்பதை இவ்விடத்தில் சிந்தித்தல் வேண்டும்.

ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தாம் விரும்பிய தலைவனுக்கோ, கட்சிக்கோ வாக்களிக்க முடியும். இதில் யார் யாருக்கு வாக்களித்தார்கள்? என்று ஆராய்வதால் எவ்வித பலனும் கிட்டிவிடப் போவதில்லை. ஆனால்,  இலங்கைப் போன்ற பல்லின மக்கள் வாழக்கூடிய ஒரு நாட்டில் குறிப்பாக இனவாத சிந்தனைகளைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் இவ்விடயத்தைப் பற்றி இன்னும் தீர்க்கமான முறையில் ஆராயப்பட வேண்டியது அவசியமானதாகும்.

வெளிவந்த தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மை சமூகத்தினர் என்றடிப்படையில் தமிழர்கள்,  முஸ்லிம்களின் அரசியல் நடத்தைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை இவ்விடத்தில் நோக்குவது அவசியமானதாக இருக்கும். இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மை சமூகத்தவர்களே அதிகமாக வாழ்கின்றனர். தேர்தல் முடிவுகளின் படி வடக்கு,  கிழக்கு மாகாணங்களின் தேர்தல் தொகுதி ரீதியாக முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

வட மாகாணம்: யாழ்ப்பாண மாவட்டம்

ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி
மஹிந்த ராஜபக்ஸ  4, 611  46.19%
சரத்பொன்சேக்கா 3,976  39.88 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  53,111
அளிக்கப்பட்ட வாக்குகள்  10,321

வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 11,712  62.68%
மஹிந்த ராஜபக்ஸ 4,247  22.73 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  63,991
அளிக்கப்பட்ட வாக்குகள்  19,436

காங்கேசந்துறை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 8,216  56.90 %
மஹிந்த ராஜபக்ஸ  4,559  31.57%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  69,082
அளிக்கப்பட்ட வாக்குகள்  14,933

மானிப்பாய் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 13,390  62.01 %
மஹிந்த ராஜபக்ஸ  5,749  26.62 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  71,114
அளிக்கப்பட்ட வாக்குகள்  22,475

கோப்பாய் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 13,151  64.13 %
மஹிந்த ராஜபக்ஸ  4,538  22.13%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  65,798
அளிக்கப்பட்ட வாக்குகள்  21,133

உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 8,974  67.20 %
மஹிந்த ராஜபக்ஸ  2,545  19.06 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  56,426
அளிக்கப்பட்ட வாக்குகள்  13,955

பருத்தித்துறை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 8,585  69.30 %
மஹிந்த ராஜபக்ஸ  2,361  19.06 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  48,613
அளிக்கப்பட்ட வாக்குகள்  12,828

சாவகச்சேரி தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 11,599  62.39 %
மஹிந்த ராஜபக்ஸ  4,567  24.57%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  65,141
அளிக்கப்பட்ட வாக்குகள்  19,450

நல்லூர் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 11,543  70.42 %
மஹிந்த ராஜபக்ஸ  3,554  21.68 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  72,588
அளிக்கப்பட்ட வாக்குகள்  16,948

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 7,914  66.17 %
மஹிந்த ராஜபக்ஸ  3,296  27.56 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  64,714
அளிக்கப்பட்ட வாக்குகள்  12,414

கிளிநொச்சி தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 4,717  75.11 %
மஹிந்த ராஜபக்ஸ  991  15.78 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  90,811
அளிக்கப்பட்ட வாக்குகள்  6,566

யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 தேர்தல் தொகுதிகளில் 10 தேர்தல் தொகுதிகளில் சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 113,877   இது  63.84வீதமாகும்.  யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 721,359 ஆகும். இதில் 185,132 வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 25.66 வீத வாக்குப் பதிவுகளாகும். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாக 1.21 வீத வாக்காளர்களே வாக்களித்திருந்தனர். 1988, 1994ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் முறையே 21.72.  2.97 வீத வாக்காளர்களே வாக்களித்தனர். 1982ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 46.30 வீத வாக்காளர்கள் வாக்களித்தனர். எனவே 82ம் ஆண்டை அடுத்து வந்த தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்ட வாக்காளர்கள் மிகக் குறைவான வாக்கு வீதத்திலே வாக்களித்து வருகின்றனர். முன்னைய காலங்களில் இவர்களின் வாக்களிப்புக்கு சில தடைகள் இருந்திருக்கலாம். தற்போதைய நிலையில் இம்மக்களுக்கு வாக்களிக்க விருப்பற்ற நிலையிருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஜனநாயக நிலையில் இது ஒரு ஆரோக்கியமான நிலையல்ல. 

தேர்தல் முடிவுகளின் படி வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் தொகுதி ரீதியாக முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

வன்னி மாவட்டம்

மன்னார் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 20,157  70.19 %
மஹிந்த ராஜபக்ஸ  6,656  23.18 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  85,322
அளிக்கப்பட்ட வாக்குகள்  29,172

வவுனியா தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 31,796  66.02 %
மஹிந்த ராஜபக்ஸ  13,742  28.53 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  1,12,924 
அளிக்கப்பட்ட வாக்குகள்  49,498

முல்லைத்தீவு தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 6,882  73.47%
மஹிந்த ராஜபக்ஸ  1,126  18.43%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  68,729
அளிக்கப்பட்ட வாக்குகள்  9,625

வன்னி மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதியிலுமே சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 70,367   ஆகும்  இது 66.86வீதமாகும். வன்னி மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 266,975 ஆகும். இதில் 107,680 வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 40.33 வீத வாக்குப் பதிவுகளாகும். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வன்னி மாவட்டத்தில் மொத்தமாக 34.30 வீத வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.
 
கிழக்கு மாகாணம் கிழக்கு மாகாணத்தில் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தை நோக்குமிடத்து முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

அம்பாறை தேர்தல் தொகுதி
மஹிந்த ராஜபக்ஸ  73,389  67.94 %
சரத்பொன்சேக்கா 32,895  30.45 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  145,479
அளிக்கப்பட்ட வாக்குகள்  108,634

சம்மாந்துறை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 27,003  55.95%
மஹிந்த ராஜபக்ஸ  19,991  41.42%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  71,442
அளிக்கப்பட்ட வாக்குகள்  48,818

கல்முனை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 32,946  75.76 %
மஹிந்த ராஜபக்ஸ  9,564  21.95 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  66,135
அளிக்கப்பட்ட வாக்குகள்  44,030

பொத்துவில் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 54,374  59.69 %
மஹிந்த ராஜபக்ஸ  33,979  37.42 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  131,779
அளிக்கப்பட்ட வாக்குகள்  91,862

திகாமடுல்லை மாவட்டத்தில் 04 தேர்தல் தொகுதிகளில் 03 தேர்தல் தொகுதிகளில் சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 153,105  இது  49.94  வீதமாகும்.  திகாமடுல்லை மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 309,474 ஆகும். இதில் 306,562 வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 73.54 % வீத வாக்குப் பதிவுகளாகும்.

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தை நோக்குமிடத்து முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 69,975  68.74%
மஹிந்த ராஜபக்ஸ  28,090  27.59%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  1,55,537
அளிக்கப்பட்ட வாக்குகள்  1,03,685

கல்குடா தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 35,608  60.45%
மஹிந்த ராஜபக்ஸ  20,112  34.14%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  97,135
அளிக்கப்பட்ட வாக்குகள்  60,186

பட்டிருப்பு தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 36,776  80.12%
மஹிந்த ராஜபக்ஸ   5,968  13.00%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  80,972
அளிக்கப்பட்ட வாக்குகள்  47,065

மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதியிலுமே சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 146,057   ஆகும்  இது 68.93வீதமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 333,644 ஆகும். இதில் 216,287 வாக்காளர்களே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

திருகோணமலை மாவட்ட தொகுதி ரீதியான முடிவுகள் வருமாறு

மூதூர் தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 32,631  51.09%
மஹிந்த ராஜபக்ஸ  21,002  38.03%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  85,401
அளிக்கப்பட்ட வாக்குகள்  55,915
 
திருகோணமலை தேர்தல் தொகுதி
சரத்பொன்சேக்கா 35,887  69.42 %
மஹிந்த ராஜபக்ஸ  13,935  26.9 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  86685
அளிக்கப்பட்ட வாக்குகள்  52748

சேருவில் தேர்தல் தொகுதி
மஹிந்த ராஜபக்ஸ  27,932  63.10 %
சரத்பொன்சேக்கா 15,260  34.47 %
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  69,047
அளிக்கப்பட்ட வாக்குகள்  44,832

திருகோணமலை மாவட்டத்தில் 03 தேர்தல் தொகுதிகளில் 02 தேர்தல் தொகுதிகளில் சரத்பொன்சேக்கா வெற்றியீட்டினார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 87,661 இது  54.09  வீதமாகும்.  திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 241,133 ஆகும். இதில் 152,428 வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

அளிக்கப்பட்ட முடிவுகளைப் பார்க்குமிடத்து இங்குள்ள வாக்காளர்களில் அனைவரும் சரத் பொன்சேக்காவுக்கு மாத்திரமே வாக்களித்துள்ளனர் என்று எடுத்துக் கொள்ள முடியாது. மஹிந்தவுக்கும் சிறுபான்மை வாக்குகள் சென்றடைந்திருக்கும். ஆனால், மேலெழுந்த வாரியாக நோக்குமிடத்து ஒரு தேர்தல் தொகுதியின் தோல்வி, ஒரு தேர்தல் மாவட்டத்தின் தோல்வி என்று கூறும்பொழுது தமிழ், முஸ்லிம் மக்கள் மஹிந்தவுக்கு வாக்களிக்கவில்லை என்ற ஓர் உணர்வினையே ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலை உருவாகலாம். மஹிந்த ராஜபக்ஸ மேல் மாகாணம் கொழும்பு மாவட்டத்தில் வெற்றிபெற்றாலும்கூட, கொழும்பு மாவட்டத்திலும் சிறுபான்மை சமூகத்தினர் செறிவாக வாழக்கூடிய தேர்தல் தொகுதிகளில் மஹிந்த ராஜபக்ஸ தோல்வியுற்றிருந்தமையும் அவதானிக்கத்தக்க ஒன்றாகும்.

இந்நிலைக்கு என்ன காரணம்? என்பதையும் அவதானித்தல் வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழக்கூடிய மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதில் வாதப்பிரதிவாதமில்லை. மஹிந்த ராஜபக்ஸ இறுதி யுத்தத்தை முன்னெடுத்த ஜனாதிபதி. விடுதலைப் புலிகளின் தோல்விக்குக் காரணமாக இருந்த ஒரு ஆட்சியாளர். இந்நிலையில் மஹிந்த நிராகரிக்கப்பட்டது மக்களின் பார்வையில் நியாயமுண்டு. அதேநேரம், கடைசி யுத்தத்தை முன்னெடுத்த தளபதி பொன்சேக்கா. இவர் தளபதியாக இருக்கும்போது இலங்கையிலுள்ள சிறுபான்மையினர் வந்தேறுகுடிகள் என்று பகிரங்கமாக கூறியவர். மேலும், இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் நிகழ்ச்சித் திட்டத்திற்கமையவே வாழவேண்டும் என்று கூறியவர். யுத்த நிலையுடன் ஒப்புநோக்கும்போது மஹிந்தவைவிட பொன்சேக்கா உயர்ந்தவர் என்று எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

மறுபுறமாக தமிழர்களின் பிரச்சினைக்கு மஹிந்த ராஜபக்ஸவினால் அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. அதேநேரம், பொன்சேக்கா தான் ஆட்சிக்கு வந்தால் அத்தகைய ஒரு தீர்வினை வழங்குவதாக எவ்விடத்திலும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

சர்வதேச ஊடகங்கள் குறிப்பாக மேற்குலக நாடுகள் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி அமைப்பதில் விரும்பவில்லை என்பது அவர்களின் நடவடிக்கைகளின் மூலமாக வெளிப்படுகின்றது. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸவுக்கு இந்தியா,  சீனா போன்ற நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான உறவின் காரணமாக மேற்குலக நாடுகள் மஹிந்த அரசாங்கத்தை பலவழிகளிலும் தாக்குதல்களுக்கு உட்படுத்தி வந்தமை அறிந்ததே. பொதுவாக இச்சக்திகள் அனைத்தும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டுமென்பதை விரும்பியது உண்மை. இந்நிலையில் இச்சக்திகளின் தூண்டுதலுக்கு சிறுபான்மையினர் இரையானார்களா என்பதும் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகவே இருக்கின்றது.

இங்கு இன்னுமொரு உண்மையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். அதாவது,  வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆளும்கட்சி சார்பாக இருந்த சிறுபான்மை அரசியல் தலைவர்கள் தமது மக்களுக்கு உரிய சேவையினை வழங்க தவறிவிட்டார்கள் என்பதையே இம்முடிவுகள் பெருவாரியாக எடுத்துக் காட்டுகின்றன. வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி, தமிழ் அரசியல்வாதிகளும் சரியே,  முஸ்லிம் அரசியல்வாதிகளும் சரியே தத்தமது ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், தாம் சமூகத்தின் பிரதிநிதிகளாக காட்டிக் கொள்ளவும் வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட வியூகங்களும் இங்கு மக்களால் நேரடியாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே,  இது விடயம் குறித்து ஆழமான பார்வையொன்றை செலுத்த வேண்டியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்சி அதிகாரத்திலுள்ள எந்தவொரு அமைச்சராலும், எந்தவொரு முதலமைச்சராலும் அவர்களின் ஆசனங்களை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

தேர்தல் முடிவு வந்துமுடிந்துவிட்டது. இதனை தற்போது அலசுவதால் எவ்வித நன்மையும் பயக்கப்போவதில்லை. ஆனால்,  ஒரு உண்மையை நாங்கள் இவ்விடத்தில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மையினரால் ஆட்சியை அமைக்க முடியுமென்ற ஒரு நிலை தற்போது இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. இங்கு மஹிந்தவுக்கு இந்நிலை தற்போது சாதகமாக இருககலாம்;. பெரும்பான்மை சமூகத்தினர் ஒன்றிணைய வேண்டும் என்ற ஓர் உணர்வு இனி பெரும்பான்மை அரசியல் கட்சிகளில் ஆணித்தரமான கருப்பொருளாக மாற்றமடையக் கூடிய நிலை உருவாகியுள்ளது. ஆளும் தரப்பினரால் பெற்றப்பட்ட இந்த வெற்றி எதிர்காலத்தில் எதிரணிகளின் மனங்களிலும் விதைக்கப்படமாட்டாது என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமுமில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இம்முறை வழங்கப்பட்ட வாக்குகளை விட மஹிந்த ராஜபக்ஸ பெற்ற மேலதிக வாக்குகள் அதிகமானவை. 160 தேர்தல் தொகுதிகளில் 130 தொகுதிகளில் வெற்றிபெற்றார். இந்த 130 தேர்தல் தொகுதிகளில் சிங்கள மக்கள் சார்பான தேர்தல் தொகுதிகளே அதிகம். அவர் தோல்வியடைந்த 30 தேர்தல் தொகுதிகளுள் சிறுபான்மை செரிவு அதிகம்.

இத்தேர்தல் முடிவுகளை பாடமாகக் கொண்டு இதன் பிற்பாடாவது முஸ்லிம்,  தமிழ் அரசியல்வாதிகள் தமது மக்களுக்காகவும்,  சமூகத்துக்காகவும் உண்மையான சேவையினை ஆற்ற முன்வர வேண்டும். தொடர்ந்தும் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது என்பதை உணர வேண்டும். தமது மக்கள் என்றும் கற்பனையுலகில் வாழத் தயாரானவர்கள் அல்ல என்பதை இவர்கள் ஆழமாக தமது மனங்களில் பதித்துக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் எமக்கு இத்தனைப் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். மாகாணசபையில் எமது சமூகத்தை இத்தனைப் பிரதிநிதிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். அமைச்சரவையில் எமக்கு இத்தனை அமைச்சர்கள் இருக்கின்றார்கள் என்று கூறிக் கொள்வதால் சிறுபான்மையினராகிய எமக்கு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. எண்ணிக்கை முக்கியமல்ல,  செயற்றிறன்மிக்க தலைமைத்துவம் தான் இன்றைய சமூகத்தின் முக்கியத்துவம். வாக்காளர்களை என்றும் ஏமாற்ற முடியாது.

இத்தேர்தலால் ஏற்பட்ட வடுக்கள் நிச்சயமாக பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது தவிர்க்க முடியாதது. இது சடுதியாக ஏற்படாவிட்டாலும்கூட,  ஒரு நீண்ட கால அடிப்படையில் அத்தகைய உணர்வுகள் ஏற்படும். அதற்கான வழியினை இத்தேர்தலில் நாங்கள் காட்டிவிட்டோம். இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவின் எதிரொலியினை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் நிச்சயம் அவதானிக்க முடியும். மஹிந்தவின் இலக்காகக் காணப்படுவது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தைப் பெறுவதே. தற்போதைய தேர்தல் முடிவுகளை ஆய்வு ரீதியாக நோக்குமிடத்து இலங்கையில் காணப்படக்கூடிய விகிதாசார தேர்தல் முறையின் கீழ் அந்நிலை உருவாகக் கூடிய சாத்தியம் கணிசமான அளவிற்கு இருக்கின்றது. இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவை வெற்றியடையச் செய்வதற்கு ஒன்றிணைந்த சிங்கள வாக்காளர்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இதைவிட ஒரு ஒன்றிணைப்பைக் காட்டலாம்.

யதார்த்த நிலைகளை தமிழ் மக்களும், சரி முஸ்லிம் மக்களும் சரி உணர்ந்து கொள்ளாவிடின் அல்லது இந்தத் தேர்தல் உதாரணங்களை படிப்பினையாக எடுத்துக் கொள்ளாவிடின் எதிர்காலம் மேலும், மேலும் ஐயப்பாடுமிக்கதாக மாறும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். இவ்விடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை நாம் விமர்சிக்கலாம் ஆனாலும், இவர்களின் குரல்களுக்கு வாக்காளர் மத்தியில் ஒரு மதிப்பு உண்டு என்பதை எம்மால் ஒரேயடியாக நிராகரித்துவிட முடியாது. எனவே இக்கட்சியினரும் தமது சுயநல நோக்கங்களைக் கைவிட்டுவிட்டு தமது சமூக நலனின்பால் உண்மையானதும்,  யதார்த்த பூர்வமானதுமான ஒரு நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் தற்போது உருவாகியுள்ளது. இதனை நாம் ஒவ்வொருவரும் நன்கு ஆலோசித்து சமூகத்தின்பால் உண்மையான நோக்குடன் செல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும். 

மேலதிக வாசிப்புக்கு..

ஜனாதிபதித் தேர்தலில் தீர்மான சக்தி சிறுபான்மையினத்தினரே. ஆனால், ஆறாவது ஜனாதிபதியைத் தீர்மானிக்கப்போவது…? – பீ.எம். புன்னியாமீன் –
http://thesamnet.co.uk/?p=18803

மஹிந்தவுக்கு அமோக வெற்றி – இறுதி தேர்தல் முடிவு : மஹிந்த 6,015,934 (57.88%), பொன்சேக்கா 4,173,185 (40.15%), ஏனையவர்கள் 204,494(1.97%) – புன்னியாமீன்

mr.jpgஆறாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அமோக வெற்றிகள் கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. இதுவரை வெளிவந்த முடிவுகள் படி பெரும்பான்மை சமூகத்தினர் செறிவாக வாழக்கூடிய தேர்தல் தொகுதிகளில் இதுகாலவரை கிடைக்காத வாக்குவீதத்தை அவர் பெற்றுவருகின்றார். அதேநேரம், தமிழ், முஸ்லிம் மக்கள் செறிவாக வாழக்கூடிய தேர்தல் தொகுதிகளில் பொன்சேக்காவுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்துவருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் வாழக்கூடிய பிரதேசங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட பிரசாரங்கள் கூடியளவு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையே கிழக்கு மாகாணத்தில் இதுவரை வெளிவந்த முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. அதேபோல தமிழ் மக்கள் வாழக்கூடிய செறிவாக வாழக்கூடிய பிரதேசங்களிலும் பொன்சேக்காவே முன்னணியில் திகழ்கின்றார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஆறாவது ஜனாதிபதி தேர்தல் நேற்று (26.01.2010) நடைபெற்றது. இத்தேர்தலில் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 11 ஆயிரத்து 98 வாக்களிப்பு நிலையங்களில் நேற்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை வாக்களிப்பு நடைபெற்றது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கியிருந்தனர். இவர்களுள் 17 வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினூடாகவும் ஐந்து வேட்பாளர்கள் சுயேச்சையாகவும் போட்டியிட்டனர். பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஒருவருடன் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் போட்டிக்கு களமிறங்கியிருந்தது இதுவே இலங்கையில் முதல் தடவையாகும். அதேநேரம், ஜனாதிபதி பதவியில் இருப்பவர் பதவிக் காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாக தேர்தல் நடைபெறுவதும் இதுவே முதல் தடவையாகும். இத்தேர்தலில் ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருந்தனர். 

சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடத்தி முடிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்திருந்தன. அமைதியானதும், வன்முறையற்றதுமான தேர்தல் ஒன்றை நடத்தி முடிப்பதற்குத் தேவையான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் திட்டமிட்ட அடிப்படையில் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டிருந்தது. நாட்டில் சில பிரதேசங்களில் சிற்சில அசம்பாவிதங்கள் இடம்பெற்ற போதிலும்கூட, பாரியளவிலான அசம்பாவிதங்கள் இடம்பெறவில்லை. வடக்கு கிழக்கு பிரதேசம் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் அதிகாலை முதல் மக்கள் வாக்களிப்பில் சுறுசுறுப்பாக பங்கேற்றனர். முன்னைநாள் தேர்தல்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது இம்முறை மக்களின் ஆர்வம் மிகைத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

வடக்கு,  கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800 பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக முப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதற்கு மேலதிகமாக பொலிஸாரும், முப்படையினரும் உள்ளடக்கப்பட்ட 2523 நடமாடும் சேவைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.  ஒவ்வொரு குழுவிலும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இரண்டு பொலிஸார், முப்படை வீரர்கள் இருவர் என்றடிப்படையில் ஐவர் இந்தக் குழுவில் அடங்கியிருந்தனர்.

இம்முறை, நாடு முழுவதும் வாக்குகளை எண்ணுவதற்கென 888 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இவற்றில் சாதாரண வாக்குகளை எண்ணுவதற்கென 737 நிலையங்களும், தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்கென 139 நிலையங்களும், இடம்பெயர்ந்தவர்களின் வாக்குகளை எண்ணுவதற்கென 12 நிலையங்களும் அடங்கும்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் 17 கட்சிகளின் சார்பில் 17 பேரும் சுயேச்சை வேட்பாளர்கள் ஐவருமாக 22 பேர் போட்டியிடுகிறார்கள். எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் போட்டியாக இந்தத் தேர்தலில் கடுமையான போட்டு நிலவியது.

இம்முறை தேர்தலில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டிருந்தனர். பொதுநலவாய மற்றும் தெற்காசிய பிராந்திய நாடுகளிலிருந்து இலங்கை வந்திருந்த 85க்கு மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாவட்ட ரீதியிலான முடிவுகள் வெளிவந்ததும் முழுமையாக உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.  

Final District Result – Colombo District
 
Mahinda Rajapaksha UPFA    614740    52.93%
Sarath Fonseka NDF     533022    45.90%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP 1798 0.15%
Mohomad Cassim Mohomad Ismail DUNF 1606 0.14%
Channa Janaka Sugathsiri Gamage UDF 1579 0.14%
Achala Ashoka Suraweera JSWP 1540 0.13%
W.V. Mahiman Ranjith IND3 1219 0.10%
Vickramabahu Karunaratna LF 1052 0.09%
Lal Perera ONF 680 0.06%
Sarath Manamendra NSU 629 0.05%
Ukkubanda Wijekoon IND4 600 0.05%
M.K. Sivajilingam IND5 548 0.05%
Sirithunga Jayasuriya USP 544 0.05%
Idroos Mohomad Ilyas IND1 437 0.04%
Wije Dias SEP 338 0.03%
Battaramulle Seelarathana Thero JSP 176 0.02%
Sanath Pinnaduwa NA 169 0.01%
Mohamed Musthaffa IND2 154 0.01%
Upali Sarath Kongahage UNAF 144 0.01%
Aruna de Zoysa RJP 143 0.01%
Senaratna de Silva PNF 136 0.01%
Muthu Bandara Theminimulla OWORS 128 0.01%
 
Valid 1,161,382 99.03%
Rejected 11,394 0.97%
Polled 1,172,776 77.06%
Electors 1,521,854

Final District Result – Galle District

Mahinda Rajapaksha   UPFA    386,971    63.69%
Sarath Fonseka   NDF    211,633    34.83%
Achala Ashoka Suraweera   JSWP    1,770    0.29%
Mohomad Cassim Mohomad Ismail    DUNF    1,256    0.21%
W.V. Mahiman Ranjith   IND3    1,080    0.18%
Channa Janaka Sugathsiri Gamage UDF    804    0.13%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP    627    0.10%
Ukkubanda Wijekoon IND4    549    0.09%
Idroos Mohomad Ilyas IND1    435    0.07%
Sarath Manamendra NSU    397    0.07%
Sirithunga Jayasuriya USP   384    0.06%
Lal Perera ONF     336    0.06%
Vickramabahu Karunaratna LF     239    0.04%
M.K. Sivajilingam IND5    168     0.03%
Wije Dias SEP    157    0.03%
Senaratna de Silva PNF     140    0.02%
Sanath Pinnaduwa NA     126     0.02%
Mohamed Musthaffa IND2    124    0.02%
Aruna de Zoysa RJP    120    0.02%
Battaramulle Seelarathana Thero JSP    115    0.02%
Muthu Bandara Theminimulla OWORS    101    0.02%
Upali Sarath Kongahage UNAF    89    0.01%
 
Valid     607,621     99.38%
Rejected    3,765    0.62%
Polled     611,386    80.25%
Electors     761,815

Final District Result – Nuwara-Eliya District 
 

Sarath Fonseka NDF    180604     52.14%
Mahinda Rajapaksha UPFA      151604     43.77%
Mohomad Cassim Mohomad Ismail DUNF     4134      1.19%
Channa Janaka Sugathsiri Gamage UDF      1729      0.50%
Achala Ashoka Suraweera JSWP     1568     0.45%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP      932     0.27%
M.K. Sivajilingam IND5 698 0.20%
W.V. Mahiman Ranjith IND3 687 0.20%
Sarath Manamendra NSU 657 0.19%
Lal Perera ONF 633 0.18%
Sirithunga Jayasuriya USP 522 0.15%
Ukkubanda Wijekoon IND4 452 0.13%
Vickramabahu Karunaratna LF 339 0.10%
Wije Dias SEP 310 0.09%
Sanath Pinnaduwa NA 294 0.08%
Idroos Mohomad Ilyas IND1 268 0.08%
Aruna de Zoysa RJP 192 0.06%
Battaramulle Seelarathana Thero JSP 181 0.05%
Mohamed Musthaffa IND2 178 0.05%
Senaratna de Silva PNF 170 0.05%
Muthu Bandara Theminimulla OWORS 126 0.04%
Upali Sarath Kongahage UNAF 104 0.03%
 
Valid 346,382      98.17%
Rejected 6,462     1.83%
Polled 352,844     77.19%
Electors 457,137

 Final District Result – Puttalam District

Mahinda Rajapaksha UPFA   201981   58.70%
Sarath Fonseka NDF 136233    39.59%
Mohomad Cassim Mohomad Ismail DUNF   1415 0.41%
Achala Ashoka Suraweera JSWP   767 0.22%
W.V. Mahiman Ranjith IND3 670    0.19%
Channa Janaka Sugathsiri Gamage UDF 587     0.17%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP 380    0.11%
Ukkubanda Wijekoon IND4 285    0.08%
Sarath Manamendra NSU 263    0.08%
Lal Perera ONF 246    0.07%
Sirithunga Jayasuriya USP 244   0.07%
Idroos Mohomad Ilyas IND1 228 0.07%
Vickramabahu Karunaratna LF 153 0.04%
M.K. Sivajilingam IND5 132 0.04%
Wije Dias SEP 102 0.03%
Sanath Pinnaduwa NA 87 0.03%
Mohamed Musthaffa IND2 67 0.02%
Senaratna de Silva PNF 65 0.02%
Battaramulle Seelarathana Thero JSP 62 0.02%
Upali Sarath Kongahage UNAF 52 0.02%
Muthu Bandara Theminimulla OWORS 50 0.01%
Aruna de Zoysa RJP 44 0.01%
 
Valid 344,113 99.17%
Rejected 2,886 0.83%
Polled 346,999 70.02%
Electors 495,575

Final District Result – Ratnapura District

Mahinda Rajapaksha UPFA   377734   63.76%
Sarath Fonseka NDF    203566    34.36%
Mohomad Cassim Mohomad Ismail DUNF 1767 0.30%
Achala Ashoka Suraweera JSWP 1525 0.26%
W.V. Mahiman Ranjith IND3 1383 0.23%
Channa Janaka Sugathsiri Gamage UDF 1126 0.19%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP 905 0.15%
Lal Perera ONF 589 0.10%
Sarath Manamendra NSU 552 0.09%
Ukkubanda Wijekoon IND4 534 0.09%
Sirithunga Jayasuriya USP 528 0.09%
Idroos Mohomad Ilyas IND1 300 0.05%
Vickramabahu Karunaratna LF 291 0.05%
M.K. Sivajilingam IND5 278 0.05%
Sanath Pinnaduwa NA 231 0.04%
Wije Dias SEP 216 0.04%
Mohamed Musthaffa IND2 176 0.03%
Battaramulle Seelarathana Thero JSP 160 0.03%
Senaratna de Silva PNF 150 0.03%
Aruna de Zoysa RJP 143 0.02%
Muthu Bandara Theminimulla OWORS 140 0.02%
Upali Sarath Kongahage UNAF 132 0.02%
 
Valid 592,426 99.26%
Rejected 4,430 0.74%
Polled 596,856 81.24%
Electors 734,651

Final District Result – Kandy District

Mahinda Rajapaksha UPFA 406636   54.16%
Sarath Fonseka NDF 329492    43.89%
Mohomad Cassim Mohomad Ismail DUNF   2810    0.37%
Achala Ashoka Suraweera JSWP 1950    0.26%
Channa Janaka Sugathsiri Gamage UDF 1624    0.22%
W.V. Mahiman Ranjith IND3   1200   0.16%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP   1059    0.14%
Sarath Manamendra NSU   848    0.11%
Ukkubanda Wijekoon IND4    711   0.09%
Lal Perera ONF 703 0.09%
Sirithunga Jayasuriya USP 600 0.08%
Idroos Mohomad Ilyas IND1 523 0.07%
Vickramabahu Karunaratna LF 462 0.06%
M.K. Sivajilingam IND5 442 0.06%
Wije Dias SEP 305 0.04%
Sanath Pinnaduwa NA 295 0.04%
Mohamed Musthaffa IND2 243 0.03%
Battaramulle Seelarathana Thero JSP 216 0.03%
Aruna de Zoysa RJP 192 0.03%
Senaratna de Silva PNF 178 0.02%
Muthu Bandara Theminimulla OWORS 158 0.02%
Upali Sarath Kongahage UNAF 139 0.02%
 
Valid 750,786 98.85%
Rejected 8,700 1.15%
Polled 759,486 78.26%
Electors 970,456

Final District Result – Matale District

Mahinda Rajapaksha UPFA   157953    59.74%
Sarath Fonseka NDF    100513    38.01%
Mohomad Cassim Mohomad Ismail DUNF    1105    0.42%
Achala Ashoka Suraweera JSWP    841    0.32%
W.V. Mahiman Ranjith IND3     635    0.24%
Channa Janaka Sugathsiri Gamage UDF    623    0.24%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP   372   0.14%
Ukkubanda Wijekoon IND4    340    0.13%
Sirithunga Jayasuriya USP     300    0.11%
Sarath Manamendra NSU     299    0.11%
Lal Perera ONF     249    0.09%
M.K. Sivajilingam IND5    192    0.07%
Idroos Mohomad Ilyas IND1   174   0.07%
Vickramabahu Karunaratna LF  157    0.06%
Sanath Pinnaduwa NA 117 0.04%
Wije Dias SEP 103 0.04%
Mohamed Musthaffa IND2 92 0.03%
Battaramulle Seelarathana Thero JSP 89 0.03%
Aruna de Zoysa RJP 86 0.03%
Senaratna de Silva PNF 74 0.03%
Muthu Bandara Theminimulla OWORS 57 0.02%
Upali Sarath Kongahage UNAF 48 0.02%
 
Valid 264,419 99.00%
Rejected 2,666 1.00%
Polled 267,085 77.94%
Electors 342,684

Final District Result – Matara District
 
Mahinda Rajapaksha UPFA 296155 65.53%
Sarath Fonseka NDF 148510 32.86%
Achala Ashoka Suraweera JSWP 1381 0.31%
Mohomad Cassim Mohomad Ismail DUNF 1088 0.24%
W.V. Mahiman Ranjith IND3 829 0.18%
Channa Janaka Sugathsiri Gamage UDF 736 0.16%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP 597 0.13%
Sirithunga Jayasuriya USP 345 0.08%
Ukkubanda Wijekoon IND4 329 0.07%
Sarath Manamendra NSU 313 0.07%
Idroos Mohomad Ilyas IND1 284 0.06%
Lal Perera ONF 283 0.06%
Vickramabahu Karunaratna LF 199 0.04%
M.K. Sivajilingam IND5 154 0.03%
Battaramulle Seelarathana Thero JSP 125 0.03%
Wije Dias SEP 112 0.02%
Aruna de Zoysa RJP 107 0.02%
Senaratna de Silva PNF 97 0.02%
Sanath Pinnaduwa NA 82 0.02%
Mohamed Musthaffa IND2 81 0.02%
Muthu Bandara Theminimulla OWORS 66 0.01%
Upali Sarath Kongahage UNAF 56 0.01%
 
Valid 451,929 99.34%
Rejected 3,025 0.66%
Polled 454,954 78.60%
Electors 578,858

Final District Result – Kalutara District

Mahinda Rajapaksha UPFA 412562 63.06%
Sarath Fonseka NDF 231807 35.43%
Achala Ashoka Suraweera JSWP 1683 0.26%
Mohomad Cassim Mohomad Ismail DUNF 1242 0.19%
Channa Janaka Sugathsiri Gamage UDF 1181 0.18%
W.V. Mahiman Ranjith IND3 1075 0.16%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP 765 0.12%
Ukkubanda Wijekoon IND4 582 0.09%
Sirithunga Jayasuriya USP 472 0.07%
Sarath Manamendra NSU 453 0.07%
Lal Perera ONF 421 0.06%
Idroos Mohomad Ilyas IND1 379 0.06%
Vickramabahu Karunaratna LF 305 0.05%
M.K. Sivajilingam IND5 248 0.04%
Wije Dias SEP 224 0.03%
Sanath Pinnaduwa NA 159 0.02%
Mohamed Musthaffa IND2 154 0.02%
Battaramulle Seelarathana Thero JSP 143 0.02%
Senaratna de Silva PNF 120 0.02%
Aruna de Zoysa RJP 120 0.02%
Muthu Bandara Theminimulla OWORS 78 0.01%
Upali Sarath Kongahage UNAF 76 0.01%
 
Valid 654,249 99.31%
Rejected 4,541 0.69%
Polled 658,790 81.01%
Electors 813,233
 
Final District Result – Badulla District

Mahinda Rajapaksha UPFA 237579 53.23%
Sarath Fonseka NDF 198835 44.55%
Mohomad Cassim Mohomad Ismail DUNF 1292 0.29%
Achala Ashoka Suraweera JSWP 1214 0.27%
Channa Janaka Sugathsiri Gamage UDF 1212 0.27%
W.V. Mahiman Ranjith IND3 795 0.18%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP 733 0.16%
Lal Perera ONF 669 0.15%
Sarath Manamendra NSU 580 0.13%
Ukkubanda Wijekoon IND4 525 0.12%
Sirithunga Jayasuriya USP 506 0.11%
M.K. Sivajilingam IND5 450 0.10%
Idroos Mohomad Ilyas IND1 265 0.06%
Sanath Pinnaduwa NA 263 0.06%
Vickramabahu Karunaratna LF 248 0.06%
Wije Dias SEP 246 0.06%
Aruna de Zoysa RJP 179 0.04%
Mohamed Musthaffa IND2 165 0.04%
Senaratna de Silva PNF 164 0.04%
Battaramulle Seelarathana Thero JSP 153 0.03%
Muthu Bandara Theminimulla OWORS 117 0.03%
Upali Sarath Kongahage UNAF 104 0.02%
 
Valid 446,294 98.66%
Rejected 6,083 1.34%
Polled 452,377 78.70%
Electors 574,814

Final District Result – Hambantota District

Mahinda Rajapaksha UPFA 226887 67.21%
Sarath Fonseka NDF 105336 31.20%
Achala Ashoka Suraweera JSWP 957 0.28%
Mohomad Cassim Mohomad Ismail DUNF 947 0.28%
W.V. Mahiman Ranjith IND3 716 0.21%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP 444 0.13%
Channa Janaka Sugathsiri Gamage UDF 409 0.12%
Ukkubanda Wijekoon IND4 260 0.08%
Lal Perera ONF 236 0.07%
Sarath Manamendra NSU 217 0.06%
Sirithunga Jayasuriya USP 209 0.06%
Idroos Mohomad Ilyas IND1 160 0.05%
M.K. Sivajilingam IND5 136 0.04%
Vickramabahu Karunaratna LF 130 0.04%
Battaramulle Seelarathana Thero JSP 102 0.03%
Mohamed Musthaffa IND2 87 0.03%
Sanath Pinnaduwa NA 81 0.02%
Wije Dias SEP 67 0.02%
Aruna de Zoysa RJP 59 0.02%
Senaratna de Silva PNF 56 0.02%
Upali Sarath Kongahage UNAF 34 0.01%
Muthu Bandara Theminimulla OWORS 34 0.01%
 
Valid 337,564 99.35%
Rejected 2,218 0.65%
Polled 339,782 80.67%
Electors 421,186
 
Final District Result – Kurunegala District

Mahinda Rajapaksha UPFA 582784 63.08%
Sarath Fonseka NDF 327594 35.46%
Mohomad Cassim Mohomad Ismail DUNF 3112 0.34%
Achala Ashoka Suraweera JSWP 1943 0.21%
W.V. Mahiman Ranjith IND3 1669 0.18%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP 922 0.10%
Channa Janaka Sugathsiri Gamage UDF 912 0.10%
Ukkubanda Wijekoon IND4 813 0.09%
Sarath Manamendra NSU 604 0.07%
Lal Perera ONF 553 0.06%
Sirithunga Jayasuriya USP 492 0.05%
Idroos Mohomad Ilyas IND1 475 0.05%
Vickramabahu Karunaratna LF 399 0.04%
M.K. Sivajilingam IND5 302 0.03%
Wije Dias SEP 220 0.02%
Sanath Pinnaduwa NA 203 0.02%
Mohamed Musthaffa IND2 185 0.02%
Senaratna de Silva PNF 177 0.02%
Battaramulle Seelarathana Thero JSP 171 0.02%
Aruna de Zoysa RJP 146 0.02%
Muthu Bandara Theminimulla OWORS 118 0.01%
Upali Sarath Kongahage UNAF 99 0.01%
 
Valid 923,893 99.29%
Rejected 6,644 0.71%
Polled 930,537 78.62%
Electors 1,183,649

Final District Result – Anuradhapura District

Mahinda Rajapaksha UPFA 298448 66.32%
Sarath Fonseka NDF 143761 31.94%
Mohomad Cassim Mohomad Ismail DUNF 1921 0.43%
Achala Ashoka Suraweera JSWP 1268 0.28%
W.V. Mahiman Ranjith IND3 1115 0.25%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP 488 0.11%
Channa Janaka Sugathsiri Gamage UDF 477 0.11%
Ukkubanda Wijekoon IND4 417 0.09%
Sarath Manamendra NSU 325 0.07%
Lal Perera ONF 295 0.07%
Idroos Mohomad Ilyas IND1 254 0.06%
Sirithunga Jayasuriya USP 237 0.05%
Vickramabahu Karunaratna LF 183 0.04%
M.K. Sivajilingam IND5 146 0.03%
Wije Dias SEP 110 0.02%
Battaramulle Seelarathana Thero JSP 102 0.02%
Aruna de Zoysa RJP 101 0.02%
Senaratna de Silva PNF 93 0.02%
Mohamed Musthaffa IND2 87 0.02%
Sanath Pinnaduwa NA 82 0.02%
Muthu Bandara Theminimulla OWORS 77 0.02%
Upali Sarath Kongahage UNAF 51 0.01%
 
Valid 450,038 99.17%
Rejected 3,785 0.83%
Polled 453,823 78.35%
Electors 579,261

Final District Result – Polonnaruwa District

Mahinda Rajapaksha UPFA 144889 64.92%
Sarath Fonseka NDF 75026 33.62%
Mohomad Cassim Mohomad Ismail DUNF 619 0.28%
W.V. Mahiman Ranjith IND3 507 0.23%
Achala Ashoka Suraweera JSWP 477 0.21%
Channa Janaka Sugathsiri Gamage UDF 236 0.11%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP 219 0.10%
Sarath Manamendra NSU 201 0.09%
Ukkubanda Wijekoon IND4 195 0.09%
Lal Perera ONF 172 0.08%
Sirithunga Jayasuriya USP 115 0.05%
Idroos Mohomad Ilyas IND1 73 0.03%
Vickramabahu Karunaratna LF 71 0.03%
Sanath Pinnaduwa NA 62 0.03%
M.K. Sivajilingam IND5 54 0.02%
Wije Dias SEP 54 0.02%
Mohamed Musthaffa IND2 45 0.02%
Senaratna de Silva PNF 38 0.02%
Battaramulle Seelarathana Thero JSP 32 0.01%
Muthu Bandara Theminimulla OWORS 31 0.01%
Upali Sarath Kongahage UNAF 30 0.01%
Aruna de Zoysa RJP 29 0.01%
 
Valid 223,175 99.34%
Rejected 1,472 0.66%
Polled 224,647 80.13%
Electors 280,337

Final District Result – Gampaha District

Mahinda Rajapaksha UPFA    718716    61.66%
Sarath Fonseka NDF 434506    37.28%
Mohomad Cassim Mohomad Ismail DUNF 2059    0.18%
Achala Ashoka Suraweera JSWP 1979 0.17%
W.V. Mahiman Ranjith IND3 1379 0.12%
Channa Janaka Sugathsiri Gamage UDF 1230 0.11%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP 992 0.09%
Ukkubanda Wijekoon IND4 710 0.06%
Idroos Mohomad Ilyas IND1 526 0.05%
Lal Perera ONF 524 0.04%
Vickramabahu Karunaratna LF 510 0.04%
Sarath Manamendra NSU 500 0.04%
Sirithunga Jayasuriya USP 499 0.04%
M.K. Sivajilingam IND5 303 0.03%
Wije Dias SEP 238 0.02%
Mohamed Musthaffa IND2 173 0.01%
Battaramulle Seelarathana Thero JSP 168 0.01%
Sanath Pinnaduwa NA 146 0.01%
Upali Sarath Kongahage UNAF 135 0.01%
Aruna de Zoysa RJP 130 0.01%
Senaratna de Silva PNF 123 0.01%
Muthu Bandara Theminimulla OWORS 102 0.01%
 
Valid 1,165,648 99.24%
Rejected 8,960 0.76%
Polled 1,174,608 79.66%
Electors 1,474,464
 
Final District Result – Jaffna District

Sarath Fonseka NDF      113877     63.84%
Mahinda Rajapaksha UPFA 44154 24.75%
Mohomad Cassim Mohomad Ismail DUNF 3370 1.89%
Channa Janaka Sugathsiri Gamage UDF 3325 1.86%
M.K. Sivajilingam IND5 3205 1.80%
Achala Ashoka Suraweera JSWP 1310 0.73%
Vickramabahu Karunaratna LF 1128 0.63%
Sirithunga Jayasuriya USP 840 0.47%
Sarath Manamendra NSU 732 0.41%
Lal Perera ONF 696 0.39%
Ukkubanda Wijekoon IND4 683 0.38%
Wije Dias SEP 657 0.37%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP 645 0.36%
W.V. Mahiman Ranjith IND3 571 0.32%
Upali Sarath Kongahage UNAF 518 0.29%
Idroos Mohomad Ilyas IND1 485 0.27%
Mohamed Musthaffa IND2 485 0.27%
Sanath Pinnaduwa NA 412 0.23%
Senaratna de Silva PNF 358 0.20%
Aruna de Zoysa RJP 351 0.20%
Battaramulle Seelarathana Thero JSP 307 0.17%
Muthu Bandara Theminimulla OWORS 260 0.15%
 
Valid 178,369 96.35%
Rejected 6,763 3.65%
Polled 185,132 25.66%
Electors 721,359
 
Final District Result – Vanni District

Sarath Fonseka NDF     70367     66.86%
Mahinda Rajapaksha UPFA 28740 27.31%
Mohomad Cassim Mohomad Ismail DUNF 2021 1.92%
Channa Janaka Sugathsiri Gamage UDF 791 0.75%
M.K. Sivajilingam IND5 549 0.52%
Achala Ashoka Suraweera JSWP 343 0.33%
Sarath Manamendra NSU 294 0.28%
W.V. Mahiman Ranjith IND3 279 0.27%
Lal Perera ONF 274 0.26%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP 227 0.22%
Vickramabahu Karunaratna LF 217 0.21%
Sirithunga Jayasuriya USP 212 0.20%
Wije Dias SEP 133 0.13%
Upali Sarath Kongahage UNAF 132 0.13%
Sanath Pinnaduwa NA 130 0.12%
Ukkubanda Wijekoon IND4 115 0.11%
Mohamed Musthaffa IND2 84 0.08%
Idroos Mohomad Ilyas IND1 82 0.08%
Senaratna de Silva PNF 74 0.07%
Battaramulle Seelarathana Thero JSP 70 0.07%
Aruna de Zoysa RJP 65 0.06%
Muthu Bandara Theminimulla OWORS 53 0.05%
 
Valid 105,252 97.75%
Rejected 2,428 2.25%
Polled 107,680 40.33%
Electors 266,975

Final District Result – Trincomalee District

Sarath Fonseka NDF 87661   54.09%
Mahinda Rajapaksha UPFA 69752   43.04%
Mohomad Cassim Mohomad Ismail DUNF 1115   0.69%
Channa Janaka Sugathsiri Gamage UDF 765    0.47%
W.V. Mahiman Ranjith IND3 346     0.21%
Achala Ashoka Suraweera JSWP 311    0.19%
M.K. Sivajilingam IND5 302    0.19%
Sarath Manamendra NSU 252    0.16%
Sirithunga Jayasuriya USP 247    0.15%
Lal Perera ONF 240 0.15%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP 218 0.13%
Ukkubanda Wijekoon IND4 147 0.09%
Vickramabahu Karunaratna LF 125 0.08%
Idroos Mohomad Ilyas IND1 105 0.06%
Sanath Pinnaduwa NA 82 0.05%
Wije Dias SEP 80 0.05%
Mohamed Musthaffa IND2 76 0.05%
Aruna de Zoysa RJP 58 0.04%
Upali Sarath Kongahage UNAF 55 0.03%
Senaratna de Silva PNF 48 0.03%
Muthu Bandara Theminimulla OWORS 45 0.03%
Battaramulle Seelarathana Thero JSP 42 0.03%
 
Valid 162,072 98.52%
Rejected 2,432 1.48%
Polled 164,504 68.22%
Electors 241,133 

 Final District Result – Batticaloa Dictrict

Sarath Fonseka NDF     146057    68.93%
Mahinda Rajapaksha UPFA 55663 26.27%
Mohomad Cassim Mohomad Ismail DUNF 3016 1.42%
Channa Janaka Sugathsiri Gamage UDF 1666 0.79%
Sarath Manamendra NSU 645 0.30%
M.K. Sivajilingam IND5 633 0.30%
Achala Ashoka Suraweera JSWP 612 0.29%
Lal Perera ONF 541 0.26%
W.V. Mahiman Ranjith IND3 484 0.23%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP 468 0.22%
Vickramabahu Karunaratna LF 366 0.17%
Sirithunga Jayasuriya USP 284 0.13%
Ukkubanda Wijekoon IND4 232 0.11%
Sanath Pinnaduwa NA 201 0.09%
Wije Dias SEP 185 0.09%
Mohamed Musthaffa IND2 172 0.08%
Idroos Mohomad Ilyas IND1 125 0.06%
Senaratna de Silva PNF 124 0.06%
Aruna de Zoysa RJP 121 0.06%
Upali Sarath Kongahage UNAF 107 0.05%
Battaramulle Seelarathana Thero JSP 102 0.05%
Muthu Bandara Theminimulla OWORS 87 0.04%
 
Valid 211,891 97.97%
Rejected 4,396 2.03%
Polled 216,287 64.83%
Electors 333,644

 Final District Result – Digamadulla District
 
Sarath Fonseka NDF 153105 49.94%
Mahinda Rajapaksha UPFA 146912 47.92%
Mohomad Cassim Mohomad Ismail DUNF 1270 0.41%
Channa Janaka Sugathsiri Gamage UDF 1101 0.36%
W.V. Mahiman Ranjith IND3 683 0.22%
Achala Ashoka Suraweera JSWP 641 0.21%
Lal Perera ONF 447 0.15%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP 404 0.13%
M.K. Sivajilingam IND5 369 0.12%
Sarath Manamendra NSU 308 0.10%
Ukkubanda Wijekoon IND4 240 0.08%
Sirithunga Jayasuriya USP 223 0.07%
Mohamed Musthaffa IND2 139 0.05%
Idroos Mohomad Ilyas IND1 135 0.04%
Vickramabahu Karunaratna LF 115 0.04%
Sanath Pinnaduwa NA 94 0.03%
Wije Dias SEP 84 0.03%
Senaratna de Silva PNF 71 0.02%
Battaramulle Seelarathana Thero JSP 70 0.02%
Aruna de Zoysa RJP 58 0.02%
Muthu Bandara Theminimulla OWORS 48 0.02%
Upali Sarath Kongahage UNAF 45 0.01%
 
Valid 306,562 99.06%
Rejected 2,912 0.94%
Polled 309,474 73.54%
Electors 420,835

Final District Result – Moneragala District
 
Mahinda Rajapaksha UPFA 158435 69.01%
Sarath Fonseka NDF 66803 29.10%
Achala Ashoka Suraweera JSWP 874 0.38%
Mohomad Cassim Mohomad Ismail DUNF 684 0.30%
W.V. Mahiman Ranjith IND3 604 0.26%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP 364 0.16%
Channa Janaka Sugathsiri Gamage UDF 342 0.15%
Sarath Manamendra NSU 191 0.08%
Ukkubanda Wijekoon IND4 186 0.08%
Lal Perera ONF 171 0.07%
Sirithunga Jayasuriya USP 158 0.07%
Vickramabahu Karunaratna LF 119 0.05%
Idroos Mohomad Ilyas IND1 109 0.05%
M.K. Sivajilingam IND5 107 0.05%
Sanath Pinnaduwa NA 73 0.03%
Mohamed Musthaffa IND2 68 0.03%
Wije Dias SEP 63 0.03%
Battaramulle Seelarathana Thero JSP 56 0.02%
Senaratna de Silva PNF 53 0.02%
Aruna de Zoysa RJP 52 0.02%
Upali Sarath Kongahage UNAF 40 0.02%
Muthu Bandara Theminimulla OWORS 32 0.01%
 
Valid 229,584 99.02%
Rejected 2,272 0.98%
Polled 231,856 77.12%
Electors 300,642

Final District Result – Kegalle District
 
Mahinda Rajapaksha UPFA 296639 61.80%
Sarath Fonseka NDF 174877 36.44%
Mohomad Cassim Mohomad Ismail DUNF 1377 0.29%
Achala Ashoka Suraweera JSWP 1312 0.27%
Channa Janaka Sugathsiri Gamage UDF 835 0.17%
W.V. Mahiman Ranjith IND3 821 0.17%
Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP 661 0.14%
Ukkubanda Wijekoon IND4 476 0.10%
Sarath Manamendra NSU 424 0.09%
Lal Perera ONF 395 0.08%
Sirithunga Jayasuriya USP 391 0.08%
Idroos Mohomad Ilyas IND1 309 0.06%
Vickramabahu Karunaratna LF 247 0.05%
M.K. Sivajilingam IND5 246 0.05%
Wije Dias SEP 191 0.04%
Sanath Pinnaduwa NA 134 0.03%
Battaramulle Seelarathana Thero JSP 128 0.03%
Aruna de Zoysa RJP 122 0.03%
Senaratna de Silva PNF 111 0.02%
Mohamed Musthaffa IND2 99 0.02%
Muthu Bandara Theminimulla OWORS 99 0.02%
Upali Sarath Kongahage UNAF 70 0.01%
 
Valid 479,964 99.25%
Rejected 3,604 0.75%
Polled 483,568 78.76%
Electors 613,938

Official Results
All Island Final Result
 

     Mahinda Rajapaksha UPFA   6,015,934   57.88%
 
     Sarath Fonseka NDF   4,173,185   40.15%
 
     Mohomad Cassim Mohomad Ismail DUNF   39226   0.38%
 
     Achala Ashoka Suraweera JSWP   26266   0.25%
 
     Channa Janaka Sugathsiri Gamage UDF   23290   0.22%
 
     W.V. Mahiman Ranjith IND3   18747   0.18%
 
     Panagoda Don Prince Soloman Anura Liyanage SLLP   14220   0.14%
 
     Sarath Manamendra NSU   9684   0.09%
 
     M.K. Sivajilingam IND5   9662   0.09%
 
     Ukkubanda Wijekoon IND4   9381   0.09%
 
     Lal Perera ONF   9353   0.09%
 
     Sirithunga Jayasuriya USP   8352   0.08%
 
     Vickramabahu Karunaratna LF   7055   0.07%
 
     Idroos Mohomad Ilyas IND1 6131 0.06%
 
     Wije Dias SEP 4195 0.04%
 
     Sanath Pinnaduwa NA 3523 0.03%
 
     Mohamed Musthaffa IND2 3134 0.03%
 
     Battaramulle Seelarathana Thero JSP 2770 0.03%
 
     Senaratna de Silva PNF 2620 0.03%
 
     Aruna de Zoysa RJP 2618 0.03%
 
     Upali Sarath Kongahage UNAF 2260 0.02%
 
     Muthu Bandara Theminimulla OWORS 2007 0.02%
 
Valid 10,393,613 99.03%
Rejected 101,838 0.97%
Polled 10,495,451 0.74%
Electors 14,088,500

 

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)
   5,196,807

குறைந்தபட்ச வாக்குகளை விட மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்   
819,127

இரண்டாம் இடத்தைப் பெற்ற சரத்பொன்சேகா அவர்களை விட மஹிந்த ராஜபக்ஸ  அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
1,842,749

 

ஜனாதிபதித் தேர்தலில் தீர்மான சக்தி சிறுபான்மையினத்தினரே. ஆனால், ஆறாவது ஜனாதிபதியைத் தீர்மானிக்கப்போவது…? – பீ.எம். புன்னியாமீன் –

pon-mahi.jpgஎதிர்வரும் 26ஆந் திகதி இலங்கையில் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றினை நோக்குமிடத்து 1982ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலையடுத்து நாட்டில் சுமுகமான நிலையில் நடைபெறும் ஒரு தேர்தலாகவே இந்த ஜனாதிபதித் தேர்தலை குறிப்பிட முடியும்.

1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற வேளையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகளின் பலத்த நெருக்கடிகள் காணப்பட்டிருந்தன. அதேநேரம், தென்னிலங்கையிலும் மக்கள் விடுதலை முன்னணியினரின் எதிர்ப்பு நடவடிக்கைகள் உச்ச நிலையையடைந்திருந்தன. மிகவும் பயங்கரமான ஒரு நிலையிலேயே இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்தனர். 1994ஆம் ஆண்டு மூன்றாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலகட்டத்திலும் விடுதலைப் புலிகளின் தாக்கங்கள் நாடளாவிய ரீதியில் வியாபித்தே காணப்பட்டிருந்தன. இத்தேர்தலில் போட்டியிட்ட பிரதம வேட்பாளர்களில் ஒருவரான காமினி திசாயநாயக்கா கொலை செய்யப்பட்டார். அச்சமிகு சூழ்நிலையில் இத்தேர்தல் நடைபெற்றது. இதேபோல 1999ஆம் ஆண்டு நான்காவது ஜனாதிபதித் தேர்தலின்போதும் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தலின்போதும் விடுதலைப்புலிகளின் தாக்கங்கள் அதிகரித்துக் காணப்பட்டிருந்தன. இத்தேர்தல்களில் ஒப்பீட்டு ரீதியாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாக்களிப்பு வீதம் வெகுவாகக் குறைந்திருந்தன.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலின் நடைபெறும் இக்காலகட்டமானது நாட்டில் மிகவும் ஒரு சுமுகமான நிலைமை நிலவும் ஒரு காலகட்டமாகும். 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்பு விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் பூச்சிய நிலையை அடைந்தன. அதேநேரம், தென்பகுதியில் விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படும் குண்டுத்தாக்குதல்கள் முற்றுமுழுதாக இல்லாமல் போய்விட்டது. எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் சரி, இலங்கையின் தென்பகுதியிலும் சரி தேர்தல் வாக்களிப்பு தொடர்பான எவ்வித நெருக்கடிகளுமின்றி இயல்பு நிலையில் நடைபெறும் ஒரு தேர்தலாக இத்தேர்தலை இனங்காட்ட முடியும். அரசியல் அவதானிகளின் கருத்துப்படி இத்தேர்தலில் 72க்கும் 78க்குமிடைப்பட்ட வீதத்தினர் வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு இயல்பு நிலையயடைந்தாலும்கூட, தேர்தலில் போட்டியிடும் பிரதான அபேட்சகர்களின் ஆதரவாளர்களின் தேர்தல் அடாவடித்தனங்கள் அதிகரித்து வருவதை இத்தேர்தலில் அவதானிக்க முடிகின்றது. ஐக்கிய நாடுகள் சபைகூட இலங்கைத் தேர்தல் வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் 1988ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலே தேர்தல் வன்முறைகள் மிகைத்த ஒரு தேர்தலாக இனங்காட்டப்பட்டது. அத்தேர்தலில் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்தையடுத்து தேர்தல் தினம் வரை 500க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இத்தேர்தலின் போது இதுவரை 4 கொலைகள் இடம்பெற்று விட்டன.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தாலும்கூட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவுக்குமிடையிலான போட்டியே முதன்மைப்படுத்தப்பட்டு உள்ளது.

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு ஜனாதிபதி ஆதரவு நிலை மிகவும் அதிகரித்தே காணப்பட்டது. யுத்த முடிவின் பின்பு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் இதனை நன்கு வெளிப்படுத்தின. இத்தகைய சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தியே தனது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடுத்தார். இவரின் பிரதான எதிர்பார்க்கையாக ஜனாதிபதித் தேர்தலில் தான் அமோக வெற்றியீட்டுவதுடன்,  அதைத் தொடர்ந்து வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவது இருந்திருக்கலாம். இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் நடைபெற இருந்த போதிலும்கூட, பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் நோக்கம் மேற்குறிப்பிட்டவாறே அமைந்திருக்கலாம். ஆனாலும் யுத்த முடிவடைந்த நிலையில் காணப்பட்ட யுத்த வெற்றி மனோநிலை மக்கள் மத்தியில் படிப்படியாக குறைவடையலாயிற்று. குறிப்பாக இலங்கையில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் யுத்தத்தால் மூடிமறைக்கப் பட்டிருந்தாலும்கூட,  யுத்த முடிவினையடுத்து அப்பிரச்சினைகளும் மெல்ல மெல்ல தலை தூக்க ஆரம்பித்தன.

2009 நவம்பர் மாதமளவில் வடக்கு யுத்த வெற்றிற்கு இராணுவ தலைமை வழங்கிய ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவார் என்ற நிலை தெரிய வந்ததும் யுத்த வெற்றிகள் பகிரப்படுவதைப் போல மக்கள் மத்தியில் ஒரு சலன நிலை ஏற்பட்டது. யுத்த வெற்றிற்கு தனித்துவமான உரிமையாளராகக் காணப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ: சரத் பொன்சேகா களம் இறக்கப்பட்டதும் அவரின் தனித்துவ நிலை மக்கள் மத்தியில் பிளவடைந்து பரவலடையலாயிற்று. எனவே,  ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரே அடுத்த ஜனாதிபதி மஹிந்தவா? பொன்சேகாவா? என்ற நிலை ஐம்பதுக்கு ஐம்பது என்ற நிலையில் தளம்பலடையக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாயிற்று.

இலங்கை சுதந்திரமடைந்தது முதல் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும், ஐக்கிய தேசியக்கட்சி தனித்துவ சக்தியாக யானை சின்னத்தின் கீழ் அனைத்துத் தேர்தல்களையும் எதிர்கொண்டே வந்துள்ளது. ஆனால்,  தனது கட்சியின் தற்போதைய தலைமைத்துவத்தில் நம்பிக்கையிழந்த நிலையிலேயே பொதுவேட்பாளர் என்ற அடிப்படையில் சரத் பொன்சேக்காவை ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்தியதுடன்,  இலங்கையில் நடைபெற்ற பிரதான தேர்தலொன்றில் முதல் தடவையாக தனது கட்சி சின்னத்தையும் விட்டுக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் எதிர்பார்க்கப்படும் பிரதான எதிர்பார்க்கையாக இருப்பது ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்கா வெற்றியீட்டினால் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை 6 மாதங்களுக்குள் நீக்கப்பட்டு பாராளுமன்ற ஆட்சிமுறை ஏற்படுத்தப்படுமெனவும் பாராளுமன்ற ஆட்சிமுறையின் கீழ் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க நிறைவேற்றதிகாரம் கொண்ட பிரதமராக செயலாற்றக்கூடிய நிலை உருவாகும் என்பதுமாகும்.

ஆனால்,  ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் தான் பதவிக்கு வந்தவுடன் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பேன் என்று வாக்குறுதி வழங்குவது இது முதற் தடவையல்ல. 1994ஆம் ஆண்டு தேர்தலில் அப்போதைய பொதுசன ஐக்கிய முன்னணி வேட்பாளர் சந்திரிக்கா குமாரதுங்க மிகவும் அழுத்தமான முறையில் தான் பதவிக்கு வந்தவுடன் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பல இடங்களில் பல வாக்குறுதிகளை வழங்கினார். இந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிட்ட நிஹால் கலபதி போட்டியிலிருந்து விலகி சந்திரிக்காவுக்கு ஆதரவளித்தமையும் குறிப்பிடத்தக்கது. அதேபோல மஹிந்த ராஜபக்ஸவும் ஜனாதிபதி ஆட்சிமுறை நீக்கப்படுமென்று வாக்குறுதிகளை 2005ஆம் ஆண்டு அளித்திருந்தார். அச்சந்தர்ப்பத்திலும் மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதிக்கு பூரண ஆதரவை வழங்கியது.

ஆனால், அதிகாரத்துக்கு வந்த பிறகு எந்த ஜனாதிபதியும் ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாதொழிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில் பொன்சேக்கா இவ்வாக்குறுதியை எவ்வளவு தூரம் நிறைவேற்றுவார் என்பது இலங்கையில் படித்த மக்கள் மத்தியில் ஒரு கேள்வியை தோற்றுவித்துள்ளது. மறுபுறமாக இவர் இலங்கையில் இராணுவத் தளபதியாக இருந்தவர். ஆகவே அதிகாரம் கைக்குக் வந்தவுடன் அதிகாரத்தை எடுத்த எடுப்பிலே கொடுத்துவிடுவாரா? ஏன்பதும் சிந்திக்கக்கூடிய ஒரு விடயமே. மறுபுறமாக இவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுமிடத்து பிரதம மந்திரியாக ரணில்விக்கிரமசிங்க அல்ல முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா ஏதாவொரு வகையில் கொண்டு வரப்படுவார் என்ற ஒரு ஊகமும் பரவலாக இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாதொழிப்பதாயின் அரசியலமைப்பிலே பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மாற்றியமைக்க வேண்டும். ஒரு பிரதான கட்சியே இல்லாத நிலையில் பொன்சேகாவால் இது சாத்தியப்படுமா?…. எவ்வாறாயினும்,  இத்தேர்தலில் சரத் பொன்சேக்கா வெற்றிபெற்றாலும், மஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்றாலும் உண்மையிலேயே தோல்வியடைப் போவது ஐக்கிய தேசியக் கட்சியும், ரணிலுமே என்பது மக்கள் மத்தியில் பரவலான கருத்தாக நிலவுகின்றது.

மறுபுறமாக பொன்சேக்காவை ஜனாதிபதி பொது வேட்பாளராகக் கொண்டு வருவதில் மக்கள் விடுதலை முன்னணியும்,  ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்த மங்கள சமரவீரவும் பிரதான பாகம் ஏற்றனர். இந்நிலையில் பொது வேட்பாளர் பொன்சேகா ஐக்கிய தேசியக்கட்சியினதும், மக்கள் விடுதலை முன்னணியினதும் வேட்பாளராகவே மக்கள் முன் காட்சியளித்தார். சரத் பொன்சேகா பொது வேட்பாளராக இருந்த போதிலும்கூட, நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக மஹிந்தவும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் இணைவேட்பாளராக பொன்சேகாவும் என்ற நிலையே வலுவடைந்தது.

1956ஆம் ஆண்டின் பின்பு இலங்கை அரசியலில் தேர்தல்களை விரிவாக ஆராயுமிடத்து எந்த சந்தரப்பத்திலும் 30 தொடக்கம் 32 சதவீதத்தினர் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்களாகவும், 20 தொடக்கம் 22 சதவீதத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்ளாகவுமே இருந்துள்ளனர். இவ்விரு கட்சிகளுக்கும் நிலையாக வாக்குகளாகக் கூட இவற்றைக் கொள்ளலாம். 1980களின் இறுதியில் மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் ரொஹன விஜயவீர கொல்லப்பட்டதுடன்,  படிப்படியாக ஜே.வி.பி. ஜனநாயக நீரோட்டத்தில் மீண்டும் கலந்தது. பொதுவாக 4 வீதமான வாக்குகள் ஜே.வி.பி.க்கு உள்ளதென கருதப்பட்ட போதிலும்கூட,  தற்போதைய நிலையில் ஜே.வி.பி.க்கு சுமார் 2.5வீதமான வாக்குகள் நிலையான வாக்குகளாக இருக்கலாம் என கணிக்கப்படுகின்றது. இத்தகைய நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியும், பாராளுமன்றத் தேர்தல்களில் பாராளுமன்ற உறுப்பினர்களையும் நிர்ணயிக்கும் சக்தியாக 40க்கும் 45 வீதத்துக்குமிடைப்பட்ட மிதக்கும் வாக்காளர்களாகவே உள்ளனர். எனவே,  6வது ஜனாதிபதித் தேர்தலையும் இந்த மிதக்கும் வாக்காளர்களே தீர்மானிக்கப் போகின்றார்கள்.

தேர்தலுக்கு முன்பு ஜனாதிபதித் தேர்தல் களத்தில் நிகழ்ந்து வரும் அதிரடி நிகழ்வுகள் நிலையில் மிதக்கும் வாக்காளர்களையும் தளம்பல் நிலையை  ஏற்படுத்தியது. மஹிந்தவினதும், பொன்சோக்காவினதும் வெற்றி நிலையின் உறுதிப்பாடு நாளுக்குநாள் தளம்பலடைந்து வந்ததையே அவதானிக்க முடிந்தது.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில் யுத்தவெற்றியே பலவகைகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்கலாம். மஹிந்த ராஜபக்ஸவின் பிரசாரத்தில் பிரதான இடத்தைப் பிடித்த கருப்பொருளாக விளங்கியதே தான் 2005ஆம் ஆண்டு பதவிக்கு வரும்போது யுத்தத்தை முடித்துத் தர வேண்டுமென்றே மக்கள் தனக்கு ஆணை தந்தனர் எனவும், அதற்கமைய தனது பதவிக்காலத்தில் உலகிலே பயங்கரவாத இயக்கங்களில் முதலாமிடத்தை வகித்த விடுதலைப் புலிகளை ஒழித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டுக்கு அமைதியை ஏற்படுத்தியதை தனது பதவிக்கால சாதனையாகவே கூறிவந்தார். மறுபுறமாக சரத் பொன்சேக்கா இராணுவத் தளபதி என்ற வகையில் மாவிலாறு பிரதேசத்தில் விடுதலைப் புலிகளை அடக்க மேற்கொண்ட நடவடிக்கையை இறுதிவரை தொடர்ந்து வெற்றிக்கு தானே காரணம் என்பதை கூறிவந்தார்.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை எதிர்வு கூறுவது மிகவும் கடினமான ஒரு விடயம். தேர்தல் நிலவரங்கள் நாளுக்குநாள் மாறிக் கொண்டு வருவதே இதற்குப் பிரதான காரணம். இருப்பினும்,  ஆய்வு ரீதியாக நோக்குமிடத்து இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினர் செறிவாக வாழக்கூடிய பிரதேசங்களிலும்,  நகர்சார் பிரதேசங்களினதும் ஆதரவு பொதுவேட்பாளர் சரத் பொன்சேக்காவுக்கு இருப்பதையும், சிங்கள மக்கள் செறிவாக வாழக்கூடிய பிரதேசங்களில் குறிப்பாக கிராமப்புற மக்களின் ஆதரவு மஹிந்த ராஜபக்ஸவுக்கு சார்பாக இருப்பதையும் இந்நிலையில் அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஒரு பிரதான தேர்தலாகும். உள்ளுராட்சித் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள், பாராளுமன்றத் தேர்தல்கள்  என்பன குறிப்பிட்ட பிரதேசத்தில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் செல்வாக்கு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால்,  ஜனாதிபதித் தேர்தலை எடுத்துநோக்குமிடத்து போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் முழு நாட்டுக்குமுரிய வேட்பாளர். நாடளவில் குறித்த வேட்பாளருக்கு சில பிரதேசங்களில் செல்வாக்கு அதிகரித்திருக்கும். சில பிரதேசங்களில் செல்வாக்குக் குறைவாகக் காணப்பட்டிருக்கும். இலங்கையிலுள்ள 22 மாவட்டங்களிலும் வைத்து உத்தேச ரீதியிலான தீர்மானங்களை எடுப்பதும் கணிப்பீட்டுக் கருத்துக்களைப் பெறுவதும் கடினமான காரியம். அதேநேரம்,  சகல ஆட்சி அதிகாரங்களைத் தீர்மானிக்கக் கூடிய சக்தி இந்த ஜனாதிபதித் தேர்தலினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றது. இத்தேர்தலில் வெற்றிபெறக்கூடிய அபேட்சகர் சார்பான கட்சி நிச்சயமாக எதிர்வரும் மாதங்களில் நடைபெறக்கூடிய பாராளுமன்ற தேர்தல்களில்  நிச்சயமாக வெற்றியீட்டும். இதில் சந்தேமில்லை.

இலங்கையில் நடைபெற்ற 5வது ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. 2005ஆம் ஆண்டு இத்தேர்தல் நடைபெற்ற காலகட்டங்களில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவார் என்ற பரவலான நிலையே காணப்பட்டது. தேசிய சர்வதேச ஊடகங்கள்கூட அன்று ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை முன்கூட்டியே உறுதிப்படுத்தி  கருத்துக்களை வெளியிட்டன. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முதன்மைப்படுத்திய பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்து சுமார் 11 ஆண்டுகளாகிய நிலையில் அக்கட்சியின் போக்கு மீது மக்களுக்கு ஒரு வெறுப்பு நிலை ஏற்பட்டிருந்ததும் மாறாக அச்சூழ்நிலையில் மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பியதும் இந்நிலைக்குக் காரணமாகும்.  2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் சிறுபான்மையின சார்புக் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பகிரங்க ஆதரவினை வெளிப்படுத்தின. ஆனால், அத்தேர்தலின்போது மக்கள் விடுதலை முன்னணியும், இடதுசாரி கட்சிகளும் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளித்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செல்வாக்கு நிலை மிகைத்திருந்த காலகட்டமாகவே இக்காலகட்டம் விளங்கிற்று. 2002ஆம் ஆண்டு பிரதம மந்திரியாக ரணில்விக்கிரமசிங்க பதவியேற்றபோது விடுதலைப் புலிகளுக்கும்,  ரணில் அரசாங்கத்துக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையில் வன்னிப் பிரதேசம் உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளின் கை ஓங்கிய நிலையே காணப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கும் ரணிலுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக விடுதலைப் புலிகளின் ஆதரவு ரணிலுக்குக் கிடைக்குமென்ற நிலைப்பாடு தென்பகுதியில் உறுதியாக நிலவியது.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஒப்புநோக்குமிடத்து சிறுபான்மை இனத்தினர் செறிவாக வாழக்கூடிய மாகாணங்களின் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் சகல மாவட்டங்களிலும் ரணில்விக்கிரமசிங்கவே அமோக வெற்றியீட்டினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 79.51 வீத வாக்குகள் கிடைத்தன.  மஹிந்த ராஜபக்ஸவினால் 18.87 வீத வாக்குகளையே பெறமுடிந்தது. அதேபோல திகாமடுல்லை மாவட்டத்தில் 55.81 வீத வாக்குகளையும், திருக்கோணமலை மாவட்டத்தில் 61.33 வீத வாக்குகளையும் பெற்று ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டினார். வட மாகாணத்தில் வாக்களிப்பில் கலந்து கொள்வதற்கு விடுதலைப் புலிகள் கடைசிநேரத்தில் வாக்காளர்களுக்கு தடைவிதித்தனர். இத்தடையே ரணிலின் தோல்வியை உறுதிப்படுத்திய கருவியாக அமைந்தது. வடமாகாணத்தில் வன்னி மாவட்டத்தில் 77.89வீத வாக்குகளையும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 70.20வீத வாக்குகளையும் ரணில்விக்கிரமசிங்க பெற்றபோதிலும்கூட, இம்மாவட்டங்களில் வாக்களிப்போர் வீதம் இலங்கைத் தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு குறைவாக இருந்தது. வன்னி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களுள் 34.30வீத வாக்குகளும், யாழ் மாவட்டத்தில் 1.21வீத வாக்குகளும் மாத்திரமே பதிவாகின. யாழ், வன்னி மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு திறந்த அடிப்படையில் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டிருப்பின் அந்த வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் ரணிலுக்கே சென்றிருக்க முடியும் என எதிர்பார்க்க முடியும்.

இதேபோல மலையகத்தில் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க அதிகூடிய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார். நுவரெலியா மாவட்டத்தில் ரணில்விக்கிரமசிங்க பெற்ற வாக்குகள் 250,428 ஆகும். (70.37வீதமாகும்) இங்கு மஹிந்த ராஜபக்ஸவால் 99, 550 வாக்குகளையே பெற முடிந்தது. இது 27.97 வீதமாகும்.) இதேபோல மலையகப் பகுதியில் பதுளை மாவட்டத்திலும் ரணில் விக்கிரமசிங்கவே வெற்றியீட்டியிருந்தார். மேலும், கண்டி மாவட்டம், மாத்தளை மாவட்டம் ஆகியவற்றிலும் நகர்சார் பிரதேசமான கொழும்பு மாவட்டத்திலும் ரணிலால் வெற்றிபெற முடிந்தது.

கிட்டத்தட்ட மக்களின் மனோநிலைகளையும், மக்களின் எழுச்சிகளையும் பார்க்கும்போது மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் இந்தத் தேர்தலில் சரத் பொன்சேக்காவுக்கு உறுதியான ஆதரவு நிலை காணப்படுகின்றது. ஆனாலும்,  2005ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டிய நுவரெலியா,  பதுளை ஆகிய மாவட்டங்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நேரடியாகத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதினாலும் கிழக்கு மாகாணத்தில் கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் மஹிந்தவுக்கு ஆதரவான பிரசாரங்கள் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப் படுவதினாலும் கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்குவீதம் குறைவடையலாம் என எதிர்பார்க்கலாம். 23 ஆம் திகதி செப்டம்பர் மாதம் 2008 இல் கனடாவின் “நெசனல் போஸ்ட்” இதழுக்கு சரத் பொன்சேகா வழங்கிய பேட்டியில் “சிறுபான்மையினராக இருக்கின்றோம் என்ற காரணத்துக்காக மித மிஞ்சிய விடயங்களுக்கு அவர்கள் கோரிக்கை விடுக்கக் கூடாது” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். “இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரியது என்று நான் உறுதியாக நம்புகின்றேன். சிறுபான்மையினர் இங்கு விருந்தாளிகள் மட்டுமே” என்று அவர் ஏற்கனவே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கடைசி நேரத்தில் சிறுபான்மை மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்தடுத்தியுள்ளது என்பது பல அவதானிகளின் கருத்தாக உள்ளது. 

அரசாங்க ஊடகங்கள் தவிர, பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் பொன்சேகா சார்பு நிலையை எடுத்திருப்பதையும் சர்வதேச ஊடகங்கள் மஹிந்தவுக்கு எதிரான முறையில் பொன்சேகாவுக்கு ஆதரவை வழங்குவதையும் வைத்து நோக்குமிடத்து பொன்சேகாவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாகவே தோன்றியது. 2005ஆம் ஆண்டிலும் ரணிலின் வெற்றியும் இதேபோல காணப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையை நோக்குமிடத்து,  சிறுபான்மை சமுகத்தினரின் வாக்குகள் அரைவாசிக்கு அரைவாசி இரு பிரதான வேட்பாளர்களுக்கும் பிரிந்து போகலாம் என கருதப்படுகின்றது. அவ்வாறு ஏற்படுமிடத்து ஜனாதிபதித் தேர்தலில் தீர்மான சக்தி சிறுபாண்மை இனத்தவர் வாக்கு என்ற நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

தேர்தலுக்கு முந்திய ஒரு வாரத்தை அவதானிக்கும்போது இலங்கையில் சிங்களக் கிராமப்புறங்களில் மஹிந்த ராஜபக்ஸ ஆதரவு நிலையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் தேசியக் கூட்டணியினர் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள நிலை கிராமப்புற சிங்கள மக்கள் மத்தியில் ஒரு ஐயப்பாட்டையே உருவாக்கியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டணியினர் யுத்த காலத்தில் கடைசி நிமிடம் வரை விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சித் திட்டத்திற்கமையவே செயற்பட்டார்கள். இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தோல்வியையடுத்து சில சர்வதேச புலம்பெயர்ந்த தமிழர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் நாடுகடந்த தமிழீழத்துக்கான வாக்கெடுப்புகளும் வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கான வாக்கெடுப்புகளும் சிங்கள மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கி விடுமோ என்ற ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்த நிலையில் கடைசிநேரத்தில் இரா. சம்பந்தன் பிரதம வேட்பாளரான சரத் பொன்சேகாவுடனும் மஹிந்த ராஜபக்ஸவுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்கள். அப் பேச்சுவார்த்தைகளின்போது பொன்சேகாவின் பக்கத்திலிருந்து தமக்கு சாதகமான நிலை கிடைத்ததினால் பொன்சேகாவை ஆதரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தல் விடுத்தது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் துரைசிங்கம் இலங்கையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் சரத் பொன்சேக்கா பதவிக்கு வருமிடத்து உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்படுமெனவும், கைதிகளாக்கப்பட்ட விடுதலைப் புலிகள் விடுவிக்கப்படுவார்கள் எனவும், வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்படும் எனவும் இதன் மூலம் சுயாட்சி,  சுயநிர்ணய உரிமைக்கான வழி திறக்கப்படுமெனவும் தெரிவித்தார். மேற் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் சரத் பொன்சேக்கா கையொப்பமிட்டு,  ஒப்பந்தத்துக்கு இணங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இக்கருத்து தமிழ் வாக்காளர்களைக் கவர்வதற்காகக் கூறப்பட்டாலும்கூட,  கிராமம்சார் சிங்கள வாக்காளர்களை வெகுவாகப் பாதித்த ஒரு கூற்றாகவே இருக்கின்றது. அதேநேரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது தேர்தல் பிரசாரங்களின் போது சம்பந்தன் தன்னுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய நேரத்தில் உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட வேண்டும்,  விடுதலைப் புலிக் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும், வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும்,  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் நீக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்ததாகவும் அக்கோரிக்கைகளை தான் தேசத்தின் நலன்கருதி தான் நிராகரித்ததாகவும் தேர்தல் என்பதைவிட தனக்கு நாடு தான் முக்கியம் என பகிரங்கமாக அறிவித்தார். இக்கருத்து ஊடகங்களில் முக்கியத்துவப் படுத்தப்பட்டன.

இந்நிலையில் சிங்கள மக்களை பாதித்த இக்கருத்தானது மஹிந்தவின் ஆதரவு நிலையை சிங்கள மக்கள் மத்தியில் மேலும் உறுதிப்படுத்துவதாகவே காணப்படுகின்றது. தேர்தலுக்கு முந்திய வாரங்களில் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் மூலமாக அவர்களின் ஏற்பாட்டின் கீழ் ஒவ்வொரு சிங்களக் கிராமங்களிலும் “வீட்டுக் கென்வசிங்” மூலம் இக்கருத்துக்கள் வாக்காளர்கள் மத்தியில் தனித்தனியாக விதைக்கப்பட்டன. இதனை மஹிந்த சார்பு தேர்தல் பிரசார வியூகங்களில் ஒன்றாகவும் கொள்ளலாம். மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இப்பிரசார வியூகம் மிதக்கும் வாக்குகளிலும் தாக்கங்களை உருவாக்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. மறுபுறமாக சரத் பொன்சேக்கா ஜனாதிபதி வேட்பாளராக நியமனப் பத்திரம் தாக்கல் செய்த பின்பு யுத்த நிலையை காட்டிக் கொடுத்தமைக்கான குற்றச்சாட்டும், அதைத் தொடர்ந்து அவரின் ஆயுதக் கொள்வனவு ஊழல் சம்பந்தமான குற்றச்சாட்டும் இத்தகைய தேர்தல் பிரசாரங்களில் மக்களுக்கு தெளிவுபடுத்தப் பட்டதாகவும் தெரியவருகின்றது.

இத்தகைய தேர்தல் உத்திகள் சிங்களப் பிரதேசங்களில் பொன்சேக்காவின் ஆதரவு நிலையை கடைசிநேரத்தில் சரியச் செய்துள்ளன. ஆட்சி மாற்றம் ஒன்றை வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பது உண்மை. அதேநேரம்,  தற்போது இலங்கையில் நிலவும் அமைதியான நிலைமை தொடர வேண்டும் என்பதையும் விரும்புகின்றார்கள் என்பதும் உண்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பொன்சேகா மீண்டும் பதவிக்கு வரும்போது விடுதலைப் புலிகள் வளர்க்கப்படலாம் என்ற ஒரு ஐயப்பாடு சிங்கள வாக்காளர்கள் மத்தியில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளமையினால் இறுதி நேரத்தில் மஹிந்த ராஜபக்ஸ சிறிய வாக்கு வீதத்தில் வெற்றியீட்டலாம் என்ற நிலை தற்போது வலுவடைந்து வருகின்றது. அது மாத்திமன்றி,  இந்த நிலைமை தொடர்பான பிரசாரங்கள் மிக வேகமாக வாக்காளர்கள் முன் எடுத்துச் செல்லவும் படுகின்றன.

எவ்வாறாயினும் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ளன. சரத் பொன்சேக்கா வெற்றியீட்டினாலும்,  மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டினாலும் அவர்கள் இருவரும் தனித்தனியாக எதிர்பார்ப்பதைப் போன்று கூடிய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்ட முடியாது என்பது மாத்திரமே உண்மை.     

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும்: 07- புன்னியாமீன்

sri-lanka-election-07.jpgதொடர்ச்சி…

தமிழீழ விடுதலைப் புலிகளின் முடிவைத் தேடித்தந்த  ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல்

இலங்கையில் 3வது ஜனாதிபதித் தேர்தல் 1994.11.09ஆந் திகதி நடைபெற்றது.  இத்தேர்தலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரிக்கா குமாரதுங்கவின் பதவிக்காலம் 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆந் திகதி முடிவடைவதற்கு இருந்தது.  இந்நிலையில்தான் 4வது ஜனாதிபதித் தேர்தலை 1999.12.21ஆந் திகதி தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக அரசியல் அமைப்பின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கிணங்க முன்கூட்டியே நடத்தினார். இத்தேர்தலிலும் வெற்றியீட்டிய சந்திரிக்கா குமாரதுங்க 199.12.22ஆந் திகதி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

2005ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் சந்திரிக்கா குமாரதுங்க 4வது ஜனாதிபதித் தேர்தலின்போது முன்கூட்டி தேர்தலை நடாத்தியதால் தமது எஞ்சிய பதவிக் காலத்துக்கும் ஜனாதிபதியாக இருக்க வேண்டுமென்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இதன்படி சந்திரிக்கா குமாரதுங்கவின் முதலாவது பதவிக்காலம் 6 ஆண்டுகாலம் முடிவடையும் நேரத்திலும் (2000 நவம்பர்) அவர் மீளவும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் 2006ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் இலங்கையில் ஒரு அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தியது. இதனடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக வெளிக்கிளம்பிய ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல் 2006 இல் தேர்தல் என்ற எதிர்பார்ப்பை முறியடித்துக் கொண்டு 2005 இலேயே இடம்பெற வேண்டியதாயிற்று. இதன்படி 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 02 ஆம் பிரிவின் கீழான கட்டளைத் தேர்தல்கள் ஆணையாளரால் 2005.09.19 ஆம் திகதிய 1411/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

21.11.1999 இல் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் 21.11.2005 இல் முடிவடையவிருந்ததால் அரசியலமைப்பின் உறுப்புரை 31(3) இற்கு அமைய வேட்பு மனுக்களைக் கையேற்றல், 07.10.2005 இல் மேற்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு 17.11.2005 இல் நடத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.

சந்திரிக்கா குமாரதுங்க இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்ததினால் அரசியலமைப்பு விதிகளின்படி அவருக்கு இத்தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் பிரதான அரசாங்கக் கட்சியின் சார்பில் பிரதமராகவிருந்த மகிந்த ராஜபக்ஸ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பிலும் பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் களமிறங்கினர். இலங்கையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தமான சுனாமிப் பேரலை ஏற்பட்ட பின் ஓராண்டுக்குள் நடைபெற்ற தேர்தலாக இது அமைந்திருந்தது. இத்தேர்தல் சூழ்நிலையில் 2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட சமதான ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பற்ற பகுதிகளின் வாக்கெடுப்பு மாவட்டங்கள் சார்பாக பாதுகாப்பான பகுதிகளில் நிறுவப்பட்ட 294 மொத்த வாக்கெடுப்பு நிலையங்களில் 102 வாக்கெடுப்பு நிலையங்கள் முகமாலையிலும் 88 வாக்கெடுப்பு நிலையங்கள் ஓமந்தையிலும் நிறுவப்பட்டன. அவ்வாக்கெடுப்பு நிலையங்களில் 1,89,918 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும் அவர்களில் ஒரு வாக்காளர் மாத்திரமே வாக்களித்தார் என்பது ஒரு வரலாற்றுத் தகவலாகும். இத்தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருசதவீதமான வாக்காளர்கள் மாத்திரமே வாக்களித்திருந்தனர்.

இத்தேர்தலின்போது வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகமாகக் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வடக்கு, கிழக்கு மாகாண வாக்காளர்கள் குறிப்பாக வட மாகாண வாக்காளர் இத்தேர்தலில் வாக்களிக்காத நிலையானது மஹிந்தவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. மொத்தமாக நாடெங்கிலும் அமைக்கப் பெற்றிருந்த 10,486 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கெடுப்பின்போது 98,26,908 பேர் வாக்களித்திருந்தனர். 10,9,869 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 73.77% வீதமானோர் வாக்குகளைப் பிரயோகித்திருந்தனர். இதன்படி செல்லுபடியான தொண்ணூற்றி ஏழு இலட்சத்து பதினேழாயிரத்து முப்பத்தொன்பது வாக்குகளும் மகிந்த ராஜபக்ஸ  பெற்றுக்கொண்ட வாக்குகள் 48,87,152. அதற்கிணங்க மொத்த செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கு மேலதிகமாக 28,632 வாக்குகளைப் பெற்ற மகிந்த ராஜபக்ஸ அவர்கள் இலங்கை ஜனநாயக சோஸலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக 1419/11 ஆம் இலக்க 2005.11.18 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரமானது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆந் திகதி பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதுடன் இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முற்றுப்பெற்றது. பலவிதமான சர்வதேச நெருக்கடிகள் ஏற்பட்டபோதிலும்கூட, மஹிந்த ராஜபக்ஸ விடாப்பிடியாக யுத்தத்தை இடைநிறுத்தாது வெற்றிகொண்டு இந்த யுத்தத்தின் வெற்றி நாயகனாக வரலாற்றில் பதிவானார். சிலநேரங்களில் 2005 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்களின் வாக்குரிமை உரிய முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் தற்போதைய நிலைமையில் பல மாற்றங்கள் உருவாகியிருக்கலாம். இந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளின் முடிவைத் தேடித்தந்த ஒரு தேர்தலாகவே இத்தேர்தல் அமைகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் 2005 –

மாவட்டத் தேர்தல் முடிவுகள்

மேல்மாகாணம்

கொழும்பு மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
534,431     (47.96%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   569,627(54.12%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,624  (0.21%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  2,057  (0.18 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  E.L.P.P.  2,174  (0.20 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 775  (0.07%)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  519  (0.05%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 422 (0.04%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   601  (0.05%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.)  398  (0.14%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி S.E.P   410 (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி S.P.F    131     (0.01%)
திரு. எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U.N.A.F  74    (0.01%)

செல்லுபடியான வாக்குகள்  1,114,250 (96.86 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  12,879  (1.14 %)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1,127,129 (76.75%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1,468,537

கம்பஹா மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  596,698   (51.78%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 481,764  (44.23%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)  2,790 (0.26%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)   2,371  (0.22 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  E.L.P.P.   1,983  (0.18 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 856 (0.08 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)   631  (0.06%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  570 (0.05%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   609 (0.06 %)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A). 418   (0.04%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   343  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)  157    (0.01 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )   8 (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  1,089,277  (98.94%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  11,724  (1.06%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1,101,001  (80.71%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1,364,180

களுத்துறை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  341,693 (55.48%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 266,013 (43.00 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,623  (0.43%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)   1,921  (0.31 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  E.L.P.P.          865  (0.14 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 614  (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  468 (0.08%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  422  (0.07%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   424  (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  D.U.A.  339  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  215  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  165   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  68    (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  615,860  (98.95%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  6,517   (1.05%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 622,377  (81.43%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 764,305 

மத்திய மாகாணம்

கண்டி மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
315,672 (44.30%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  387,150  (54.33%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,775  (0.39%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 2,589  (0.36 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).  1091 (0.15 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  717  (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  487 (0.07%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  584 (0.08%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   529 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  372  (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   307  (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )   219  (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U. N.A.F   228   (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  712,620  (98.64%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  9,817  (1.36%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 722,437  (79.65%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 907,038  

மாத்தளை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
120,533 (48.09%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 125,937 (50.25%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1212 (0.48%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 1217 (0.49 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.) .     342  (0.14%)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 360  (0.14 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  224  (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  228 (0.09%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   208  (0.08%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.)  141  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   95  (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  76   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   51  (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  250,620 (98.51%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  3,785  (1.49%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 254,405  (79.04%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 311,876 

நுவரெலியா மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
99,550 (27.97%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   250,428  (70.37%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2,622  (0.74%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1,465  (0.41 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)  376  (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 287 (0.08 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  202  (0.06%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  199 (0.06%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   215  (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  164  (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி S.E.P   146  (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி S.P.F   137     (0.04 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U. N.A.F   84   (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  355,825  (98.50%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  5,410   (1.50%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 361,285  (80.78%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 447,225

தென்மாகாணம்

காலி மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  317,233  (58.11%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 239,320 (40.26%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2244  (0.38%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  173  (0.37 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)  892 (0.15 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 524  (0.09 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 517  (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 469(0.08%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   388 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  305  (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P  ) 221  (0.04%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  136   (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  65   (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  594,468  (99.08%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  5,540    (0.92%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 600,008  (81.94%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 732,289

மாத்தறை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)   279,411   (61.85%)
ரணில் விக்கிரமசிங்க  – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 165,837  (36.71 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1687 (0.37%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1877 (0.42 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   554  (0.12 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 524 (0.12 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  451  (0.10%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   451  (0.10%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   207  (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A).    320  (0.07%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  140  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   119     (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   74   (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  451,722  (99.11%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  4,077  (0.89%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 455,799  (80.96%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 562,987

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  202,918 (63.43%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 112,712  (35.23%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1066  (0.33%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1217  (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).  430  (0.13 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 370 (0.12 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  352  (0.11%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  290  (0.09%)
அநுர டி சில்வா ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   162  (0.05%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  D.U.A.  196  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   84  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  100   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   28   (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  319,925  (99.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,928   (0.91%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 322,853  (81.41%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 396,595

வடமாகாணம்

யாழ்ப்பாண மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
1967  (25.00%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  5523  (70.20 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 72  (0.92%)
அசோகா சுரவீர – தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  34  (0.43 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).   120  (1.53 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 24  (0.31 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  12  (0.15%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   15  (0.19%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   21  (0.27%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A). 
31  (0.39%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   29  (0.37%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  16    (0.20 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   4   (0.05 %)

செல்லுபடியான வாக்குகள்  7,868   (92.30%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  656   (7.70%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 8,524  (1.21%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 701,968

வன்னி மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
17,197  (20.36%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   65,798   (77.89%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 520  (0.62%)
அசோகா சுரவீர –  தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  286  (0.34 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).          115  (0.14 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)
133  (0.16 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  71  (0.08%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   68  (0.08%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி  (U.L.F)   62  (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A. ) 107  (0.13%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   69  (0.08%)
திரு. நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  27     (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  23    (0.03 %)

செல்லுபடியான வாக்குகள்  84,476   (98.37%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  1,388   (1.63%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 85,874  (34.30%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 250,386

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
28,836  (18.87%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   121,514  (79.51%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 892  (0.58%)
அசோகா சுரவீர –  தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 578  (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).   225  (0.15 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 149  (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  124  (0.08%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  43  (0.03%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   142  (0.09%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  153  (0.10%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  104  (0.07%)
நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )  59  (0.04 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  18   (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  152,837  (98.85%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  1,778   (1.15%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 145,615  (48.51%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 348,728 

திகாமடுல்லை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
122,329 (42.88%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  159,198  (55.81 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1,091  (0.38%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 1,072  (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).   331  (0.38 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 188  (0.07 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)   297  (0.07%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  134  (0.05%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)  203  (0.03%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A).  215  (0.08%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   82  (0.03%)
நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   89      (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   38    (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  285,267  (98.98%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,941   (1.02%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 288,208  (72.70%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 396453

திருகோணமலை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
55,680  (37.04%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  92,197  (61.33 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 792  (0.53%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  588  (0.37 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   276  (0.18 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 157  (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  157 (0.10%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  71 (0.05%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   132  (0.09%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A).  165  (0.11%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   67  (0.04%)
நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)    56      (0.04 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F  ) 26    (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  150,334  (98.63%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,094   (1.37%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 152,428  (63.84%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 238,755

வடமேல் மாகாணம்

குருநாகல் மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  468,597  (52.26%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 418,809 (46.72 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 2357  (0.26%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 2369  (0.26 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   1142  (0.13 %)
சமில் ஜெயநெத்தி புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 695  (0.08 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  613  (0.07%)
திரு. விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   566(0.06%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)    524 (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A).  363  (0.04%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   255  (0.03%)
நெல்சன் பெரேரா –  இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   187      (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)  110    (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  896,497   (99.07%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  8,458    (1.94%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 904,955  (80.41%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 1,124,076

புத்தளம் மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)
160,686 (48.14%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 169,264 (50.71 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1063  (0.32%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P) 811  (0.02 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   502  (0.15 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 287  (0.09 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)   292  (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  203 (0.06%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   214  (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A).  183  (0.05%)
விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  175  (0.01%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)    72    (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   31    (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  333,883  (98.94%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  3,536  (1.05%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 337,319  (71.68%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 470,604

வடமத்திய மாகாணம்

அநுராதபுரம் மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  231,040 (55.08%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 182,956 (43.62 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 1,378  (0.33%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1,448  (0.35 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P).  478  (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 569  (0.14 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P) 128  (0.10%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  367 (0.09%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   261 (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A. )207  (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   115  (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   115   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   72    (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  419,434  (98.92%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  4,563  (1.08%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 423,997  (78.98%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 536,808

பொலநறுவை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  110,499 (52.61%)
ரணில் விக்கிரமசிங்க  – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  97,142  (46.25 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)  589  (0.28%) அசோகா சுரவீர –  தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  683  (0.33 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   226  (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  226 (0.11 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  221 (0.11%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)   119  (0.06%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   141 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.)  81  (0.04%)   
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   31  (0.01%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F )   48    (0.02 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  24   (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  210,030  (99.06%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,002  (0.94%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 21,232  (80.43%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 263,609

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L) 
192,734  (45.18%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)   226,582  (53.11%)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)
2,327  (0.55%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1,990  (0.47 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.) 614  (0.14 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 468 (0.11 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  101 (0.09%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  322  (0.08%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   363  (0.09%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A).  239 (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  224  (0.05%)
நெல்சன் பெரேரா இலங்கை முன்னேற்ற முன்னணி  (S.P.F )  217     (0.05 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  118   (0.03 %)

செல்லுபடியான வாக்குகள்  426,599  (98.43%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  6,825   (1.57%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 433,424  981.29%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 533,163

மொனராகலை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  126,094 (56.94%)
ரணில் விக்கிரமசிங்க  – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P)  92,244  (41.65 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 673  (0.30%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  943  (0.43 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)   239  (0.11 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F) 295  (0.13 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  286 (0.13%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  200 (0.09%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   133 (0.06%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.)  124  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   102  (0.05%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   73   (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F )  44   (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  241,450  (98.82%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  2,636  (1.18%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 224,086  (81.46%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 276,109 

சப்ரகமுவ மாகாணம்

இரத்தினபுரி மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  294,260 (53.01%)
ரணில் விக்கிரமசிங்க  – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 252,838 (45.55 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)  2220  (0.10%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)   2122  (0.38 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)  795  (0.14 %)
சமில் ஜெயநெத்தி – புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  645  (0.12 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  557 (0.10%)
விமல் கீகனகே – ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  496 (0.09%)
அநுர டி சில்வா –  ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   393 (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.) 
330  (0.06%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   334  (0.02%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)    206 (0.01 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   78  (0.01 %)

செல்லுபடியான வாக்குகள்  555,074  (99.02%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  5,510   (0.98%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 560,584  (83.89%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 668,217

கேகாலை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  293,184 (51.02%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 223,483 (47.62 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P)  1804  (0.38%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  1457  (0.31 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.)  707  (0.15 %)
சமில் ஜெயநெத்தி புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  437 (0.09 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  375 (0.08%)
விமல் கீகனகே ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F)  400 (0.09%)
அநுர டி சில்வா ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   355  (0.08%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு (D.U.A.) 231   (0.05%)
விஜேடயஸ் – சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P)   152     (0.03%)
நெல்சன் பெரேரா – இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)    117  (0.07 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (U. N.A.F)   71    (0.02 %)

செல்லுபடியான வாக்குகள்  468,773  (98.99%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  4,795   (1.01%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 473,564  (81.19%)
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 583,282

ஜனாதிபதித் தேர்தல் 2005

இறுதித் தேர்தல் முடிவுகள்

மஹிந்த ராஜபக்ஸ – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (U.P.F.L)  4,887,152     (50.29%)
ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக்கட்சி (U.N.P) 4,706,366 (48.43 %)
சிரிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிசக் கட்சி (U. S. P) 35,425   (0.36%)
அசோகா சுரவீர -தேசிய அபிவிருத்தி முன்னணி (J.S.P)  31,238    (0.32 %)
விக்டர் ஹெட்டிகொட – ஐக்கிய இலங்கை பொது மக்கள் முன்னணி  (E.L.P.P.) 14,458   (0.15 %)
சமில் ஜெயநெத்தி –  புதிய இடதுசாரி முன்னணி (N.L.F)  9,296   (0.10 %)
அநுர டி சொய்சா – ருகுனு மக்கள் கட்சி (R.J.P)  7,685   (0.08%)
விமல் கீகனகே –  ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (S.N.F) 6,639    (0.07%)
அநுர டி சில்வா – ஐக்கிய லலித் முன்னணி (U.L.F)   6,357   (0.07%)
அஜித் ஆராச்சிகே – ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  (D.U.A.)  5,082  (0.05%) விஜேடயஸ் –  சோசலிஸ சமத்துவக் கட்சி (S.E.P )  3,500   (0.04%)
நெல்சன் பெரேரா இலங்கை முன்னேற்ற முன்னணி (S.P.F)   2,525 (0.03 %)
எச். தர்மத்வஜ – ஐக்கிய தேசிய மாற்று முன்னணி U. N.A.F   1,316    (0.01%)

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 13,327,160 
அளிக்கப்பட்ட வாக்குகள் 9,826,778
செல்லுபடியான வாக்குகள் 9,717,039
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 109,739

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)
   4,858,520

குறைந்தபட்ச வாக்குகளை விட மஹிந்த ராஜபக்ஸ  அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்    
28,632

இரண்டாம் இடத்தைப் பெற்ற ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட மஹிந்த ராஜபக்ஸ  அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
180,786