விஸ்வா

விஸ்வா

நயினை நாகபூசணி அம்மன் திருவழாவில் அதிகளவிலான நகைகள் களவு போயின!

Naagapoosani_Amman_Kovilபல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நயினை நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றத் திருவிழாவில் அதிகளவு நகைள் களவாட்டப்பட்டுள்ளன. இம்முறை நடைபெற்ற  இவ்வாலயத் திருவிழாவில் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்தவர்களும் பெருமளவில் கலந்து கொண்டிருந்தனர். Jun 12 2010 நடைபெற்ற திருவழாவில் 18 பவுண் வரையிலான தங்க நகைகளை மக்கள் கள்வர்களிடம் பறிகொடுத்துள்ளனர்.

இக்களவுகளில் பெண்களே அதிகம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருவிழாவில் பெண்களின் பக்கம் ஆண்கள் சென்றால் பெண்கள் சந்தேகப்பட்டு அவதானமாக இருப்பார்கள் என்பதனால் பெண்களே பெண்களின் பக்கம் நெரிசலாக இருக்கும் போது சாதுரியமாக நகைகளை அபகரித்துக்கொண்டு நழுவி விடுவதாக அக்கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.

Naagapoosani_Amman_Kovilநடைபெறும் இக்களவுகள் காரணமாக பக்தர்கள் அவதானமாக இருக்கமாறும் கூடியவரை கோவிலுக்கு வரும்போது அதிகமான தங்க  நகைகள் அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் ஆலய நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நயினை நாகபூசணி அம்மன் திருவிழாவிற்கு  அதிகளவு பக்தர்கள்  சென்றதால் குறிக்கட்டுவான் இறங்குதுறையில் முப்பதிற்கும் மேற்பட்ட படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. படகுகளில் மக்கள் பாதுகாப்பு அங்கிகள் அணிந்தே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

”இந்தியப் பயணம் வெற்றியளித்துள்ளது.” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Douglas_D_and_Rajaparksa_Mஜனாதிபதி தலைமையிலான இந்தியப் பயணம் வெற்றிகரமானதாக அமைந்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடந்த 8ம் திகதி செவ்வாய் கிழமை ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இந்தியா பயணமாகினர். பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இக்குழுவினரோடு சென்றிருந்தார். இக்குழுவினர் நேற்று (Jun 11 2010) நாடு திரும்பியுள்ள நிலையில், இப்பயணம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பம் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும், இவற்றில் மீள்குடியேற்றம், மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் போன்ற விடயங்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டதாகவும், நடைமுறைச்சாத்தியமான விடயமாக தாம் வலியுறுத்தி வரும் 13வது திருத்தச்சட்டத்துடன் மேலதிக அதிகாரங்கள் அடங்கியதான தீர்வுத்தட்டம் ஒன்றையே இந்தியாவும் விரும்புகிறது எனவும்,  இந்தியப் பிரதமர் இதனை ஜனாதிபதிடமும் வலியுறுத்தியபோது  ஜனாதிபதியும் அதனை ஒப்புக் கொண்டு, அது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், ஜனாதிபதி பிரதிபா பட்டீல், காங்கிரஸ் கடசியின் தiலைவி திருமதி சோனியா காந்தி. ஏதிர்கட்சியினர், மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் ஆகியோருடனான சந்திப்பகளில் பல விடயங்களை  அவர்கள் எற்றுக்கொண்டுள்ளனர். வடமாகாணத்தில் புகையிரத பாதை அமைப்பதற்கு இலகு கடனாக 800மில்லியன் அமெரிக்க டொலர்களையும். காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானநிலையம் ஆகியவற்றின் புனரமைப்பு, யாழ்.துரையப்பா விளையாட்டரங்கை சர்வதேச தரத்திற்கு உயர்த்துதல், யாழில் கலாசார மண்டம் ஒன்றை அமைத்தல் போன்றவற்றிற்கான ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.  நாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வடக்கு மக்களுக்கு 50 ஆயிரம் விடுகளை அமைக்க ஆயிரம் கோடி ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளார் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நூறு வீடுகளை அமைக்க இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் உதவி.

red-cross.jpgகிளி நொச்சியில் 50 வீடுகளை அமைப்பதற்கான முதற்கட்ட உதவிகளை இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 50 குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்கும் ஆரம்பப் பணிகளுக்காக தலா 50 ஆயிரம் ரூபா நிதியுதவி செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேசப் பிரிவில் நூறு வீடுகளை அமைப்பதற்கு செஞ்சிவைச்சங்கம் திட்டமிட்டுள்ளது. இவை கரைச்சிப் பிரதேசச் செயலர் பிரிவிலுள்ள விவேகானந்தநகர், அனந்தபுரம்,  கணேசபுரம்  ஆகிய கிராமங்களில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை அலுவலகத்தை கிளிநொச்சியில் அமைக்க ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

cha.jpgவட மாகாணசபை அலுவலகத்தை கிளிநொச்சி அறிவியல் நகரில் ஆரம்பிப்பது தொடர்பாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது திருகோணமலையில் இயங்கிவரும் இந்த அலவலகம் வடமாகாணத்தின் மையப்பகுதியில் அமைக்கப்படுவதே பொருத்தமானது என கருதப்படுவதால்ää கிளிநொச்சி நகருக்கும் இரணைமடுச்சந்திக்கும் இடைப்பட்டää ஏ-9 விதிக்கு மேற்காக அமைந்துள்ள அறிவியல்நகர் இதற்குப் பொருத்தமான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் முன்னர் விடுதலைப்பலிகளால் அமைக்கப்பட்டுள்ள பல கட்டடங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளிமாவட்டங்களில் தற்காலிகமாக வசிக்கும் கிளிநொச்சி மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர அழைப்பு.

நிவாரண முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளிமவாட்டங்களில் வசித்துவரும் கிளிநொச்சி மாவட்ட கண்டாவளைப் பிரதேசச் செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் சோந்த மக்களும் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியமர்வதற்கான ஆயத்தநிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பதிவுகளை உரிய பகுதிகளில் நீக்கம் செய்து விட்டு எதிர்வரும் 21, 22 அகிய திகதிகளில்  கிளிநொச்சி தர்மபுரம் மகாவித்தியாலயத்தில் காலை 9 மணிதொடக்கம் பிற்பகல் 2 மணிவரை வருகை தந்து மீள் குடியமர்வதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் கோரியுள்ளார்.

மேலும் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசச் செயலர் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சிää சிவிக்சென்ரர், மாயவனூர்,  இராமநாதபுரம்ää ஆகிய கிராமசேவை அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் தாங்கள் தற்காலிகமாக தங்கியிருக்கும் இடங்களிலுள்ள பதிவுகளை நீக்கிவிட்டு எதிர்வரும் 22ம் திகதி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தில் தங்கள் பதிவகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணிபுரிய வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது – அரசாங்கம் தெரிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கான உதவிப்பணிகளை மேற்கொள்ள வெளிநாட்டு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களை அனுமதிக்குமாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் வன்னியில் 3000 அரசசார்பற்ற நிறுவனங்கள் இயங்கி வந்தன எனவும், அவை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் எனவும்  அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் இந்நிறுவனங்கள் வன்னியில் பணிபுரிய அனுமதிக்கப்படமாட்டாது என அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வன்னியில் போரினால் அழிவடைந்துள்ள பொதுமக்களின் வீடுகளைக் கட்டிக்கொடுக்க அரசாங்கத்திடம் பணமில்லை என அரசாங்கம் வெளிப்படையாகவே அறிவித்துவிட்ட நிலையில் அரசசார்பற்ற வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களின் உதவி அத்தியாவசி தேவையாக இருப்பதனை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். மீளக்குடியமரும் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 12 கூரைத்தடுகளினால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டில்களில் நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிப்பது சிரமமானதாக உள்ளமையை வன்னியில் மீளக்குடியமர்நதுள்ள மக்களின் நிலையை நேரில் பார்வையிடுகின்ற பொது தெரிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கின்றது. தற்போது  இடைக்கிடையே பெய்து வருகின்ற மழையினால் அவதிப்படுகின்ற இம்மக்கள் எதிர்வரும் பருவமழையின் போது பெரும் அவலங்களை எதிhகொள்ள வேண்டிவரும் என்பதும் குறிப்படத்தக்கது.

நெடுங்கேணி கொள்ளைச் சம்பவத்தில் துப்பாக்கிச் சுட்டிற்கு இலக்கானவர் உயிரிழந்தார்.

நெடுங்கேணி கொள்ளைச் சம்பவத்தில் துப்பாக்கிச்சு10ட்டிற்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி வவுனியா வைத்தியசாலையில் உயிழந்தார். கடந்த 9ஆம் திகதி நெடுங்கேணியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் பெண்ணொருவரின் கைகளைத்தண்டித்து அவரது நகைகளை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனா. அப்பெண்ணின் கணவரான இராசலிங்கம் (வயது 64) என்பவரை துப்பாக்கியாலும் சுட்டனர். கைத் துண்டிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் மருத்துவ சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த பெண்ணின் கணவரான இராசலிங்கம் சிகிச்சைப் பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது மனைவியான விக்னேஸ்வரி கைத்துண்டிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் புளியங்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இச்சம்பவத்தோடு தொடர்புடைய மேலும் இருவர் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். நகரில் முறையற்ற நடைபாதை வியாபாரிகள் மீது நடவடிக்கை.

யாழ். நகரப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட இடங்களில் நடைபாதை வியாபாரம் செய்த வந்த 24 பேர் Jun 10 2010ல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 17 பேர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்ட்டவர்களின் விற்பனைப் பொருட்களும் அகற்றப்பட்டன. பழவகைகள். உடைகள், ‘பான்ஸி’ பொருட்கள் என்பனவற்றை விற்பனை செய்த நடைபாதை வியாபாரிகள் மீதே இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் சிலருக்கு  நீதிமன்றத்தினால்  தலா 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. சில பொருட்கள் மீள ஒப்படைக்கப்பட்டன. சில பொருட்கள் ஒப்படைக்கப்படவில்லை. ஏனையோர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

போர் முடிவடைந்து ஏ-9 பாதை திறந்த விடபட்டதன் பின்  தென்னிலங்கையிலிருந்து வந்த பெருமளவிலான நடைபாதை வியாபாரிகள் யாழ்.நகரை முற்றுகையிட்டு கண்ட இடங்களிலும் தங்கள் வியாபரத்தை மேற்கொண்டனர். யாழ. பஸ்நிலையம் உட்பட பல இடங்களிலிருந்த இவ்வியாபார நடவடிக்கைகள் அகற்றப்பட்டுள்ள போதிலும் மேலும் பல இடங்களில் பொதுமக்களுக்கு சிரமம் தரக்கூடிய,  சுகாதாரமற்ற வியாபார நடவடிக்iகைகளை சில வியாபாரிகள் மேற்கொண்டு வருகின்றனா. இவ்வாறு வியாபாரா நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள. மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

புலிகள் தொடர்பான படங்களை கைத்தொலைபேசியில் வைத்திருந்ததாக வவனியாவில் ஒருவர் கைது.

கைத்தொலைபேசியில் புலிகள் தொடர்பான விடியோ காட்சிப் படங்களை வைத்திருந்தாகக் கூறி வவனியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பாவற்குடாப் பகுதியில் வைத்து இவர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் பற்றிய வீடியோ காட்சிகள், புகைப்படங்கள், பாடல்கள் என்பன அவரது கைத்தொலைப்பேசியில் காணப்பட்டதாகக் கூறியே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மேலதிக விசாரணகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு உணவு நிவாரணப் பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளது,

வவுனியா அகதி முகாம்களிலிருந்து வெளியேறிய மக்களுக்கான உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளது. முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட  மக்களுக்கு ஆறு மாத காலமே  உணவு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையிலுள்ள மக்களுக்கே இந் நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளது.

வவனியா மற்றும், யாழ்.குடாநாட்டிலுள்ள அகதி முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் தங்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளில் இன்னமும் வசித்து வருகின்றனர். இவ்வாறானவர்களில் முல்லைத்தீவுப் பகுதிகளில் இன்னமும் மீள் குடியேற்றப்படாதவர்களுக்கு கிளிநொச்சிப் பகுதிகளில்  அழிவடைந்த. சேதமுற்ற தங்கள் வீடுகளை மீளமைத்துக்கொள்ள முடியாதவர்களும் அடங்குகின்றனர்.

ஆறுமாத காலத்திற்குள் அம்மக்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டு அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும், இதனடிப்படையில் ஆறுமாத காலத்திற்குப் பின்னர் அவர்களுக்கான  உணவு நிவாரணம் நிறுத்தப்படும் எனவும் முன்னர் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால், எவ்வித இழப்பீடுகளோ, தொழில்களுக்கான உதவிகளோ அம்மக்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில், உணவு நிவாரண உதவியிலேயே அவர்கள் பெரிதும் தங்கியிருந்தனர். தற்போது இந்நிவாரணம் நிறுத்தபட்ட நிலையில் பாதிக்கப்பட்ட இம்மக்கள் மேலும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.