ஜெயபாலன் த

ஜெயபாலன் த

அமெரிக்க – பிரித்தானியாவின் ஆதரவோடு இஸ்ரேலின் இனவெறித் தாக்குதல்: காஸா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி! அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுடனான சந்திப்பை பாலஸ்தினிய விடுதலை அமைப்பின் தலைவர் அப்பாஸ் ரத்துசெய்துள்ளார்:

ஒக்ரோபர் 17 இன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவைச் சந்திக்கவும் அரபு நாடுகளின் ஆதரவைத் திரட்டவும் புறப்பட்டுள்ள நிலையில் இச்சந்திப்பு ஒருதலைப் பட்சமாக பாலஸ்தின, ஜோர்டன், எகிப்திய தலைமைகளால் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் மேற்கு நாடுகளும் வழங்கியுள்ள கேள்வியற்ற ஆதரவுடன் பாலஸ்தினிய அரபுக்களை முஸ்லீம்களை அழிக்கும் திட்டம் மிக வேகமாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே மத்திய கிழக்கு அரசுத் தலைமைகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

மத்திய கிழக்கில் பாலஸ்தினியர்களுக்கான ஆதரவு எப்போதுமே இருந்துள்ளது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் அண்மைக் காலம்வரை மேற்கு நாடுகளுடனும் இஸ்ரேலுடன் மிக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. ஆனால் ஓக்ரோபர் 7ம் திகதி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகந்து நடத்திய தாக்குதலும் இஸ்ரேல் தொடுத்த இன அழிப்பு யுத்தமும் இந்த உறவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்த இன அழிப்பு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 12 நாட்களாகியும் உத்தியோக பூர்வமான எந்தக் குரல்களும் வெளிப்படுத்தப்படவில்லை.

நேற்று ஒக்ரோபர் 16 ஐநா வின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஸ்யா கொண்டுவந்த யுத்தநிறுத்தத் தீர்மானத்தை அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் எதிர்த்திருந்தது. அதனைத் தொடர்ந்து பிரேசில் கொண்டு வந்த தீர்மானத்திற்கும் இந்நாடுகள் வாக்களிக்கவில்லை. பாலஸ்தினத்தில் நடக்கும் இன அழிப்பை ஊக்கப்படுத்துவதுடன் அதற்கு எண்ணை ஊற்றும் வகையில் அமெரிக்கா தன்னுடைய தாக்குதல் கப்பலை இஸ்ரேல் நோக்கி நகர்த்தி உள்ளது.

இன்று சில மணிநேரங்களுக்கு முன் காஸாவில் உள்ள அல் அஹாலி பப்ரிஸ்ற் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய அடிப்படை மனித விழுமியங்களுக்கு மாறான தாக்குதல் உலக நாடுகளின் பார்வையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய இன அழிப்பு இராணுவம் ஈவிரக்கமற்ற முறையில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்று பாரபட்சமில்லாத தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் காஸவில் வாழும் மக்குளுக்கான அடிப்படைத் தேவைகளான தண்ணீர், உணவு மற்றும் மருந்து விநியோகத்தையும் முற்றாக தடுத்து அவர்களை மரணத்தின் விழிம்புக்குள் தள்ளிக்கொண்டுள்ளது. பாலஸ்தினத்தில் கடந்த 12 நாட்களில் கொல்லப்பட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள்.

நூறு தமிழரைக் கொன்றால் அதில் ஒரு ஈழப் போராளியும் இருப்பான் என்று இஸ்ரேலின் புலனாய்வுத்துறை அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனவுக்கு ஆலொசணை வழங்கியிருந்தது. அதே செயற்திட்டத்தையே இஸ்ரேல் பாலஸ்தினத்திலும் மேற்கொண்டு வருகின்றது. அதற்கு அமெரிக்க – பிரித்தானிய மேற்கு நாட்டு தலைமைகள் தொடர்ச்சியாக ஆதரவளிக்கின்றனர்.

இந்த மேற்கு நாடுகள் உலகில் நடைபெறும் பெரும்பாலும் அனைத்து யுத்தங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பதுடன் இந்த யுத்தங்களை ஆரம்பிப்பவர்களாகவும் அதனை எண்ணையூற்றி வளர்ப்பவர்களாகவும் உள்ளனர். அது மட்டுமல்லாமல் அப்கானிஸ்தானில் அல்கைடாவை அமெரிக்கா உருவாக்கியது. அன்றிருந்த ரஸ்ய சார்பான மொஜஹிதீன்களுக்கு எதிராக அமெரிக்கா ஒசாமா பின் லாடனை உருவாக்கியது. அமெரிக்கா கற்றுக்கொடுத்ததை அல்கைடா ஒரு கட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்திய போது அமெரிக்கா அல்கைடாவை அழிக்க முனைந்தது.

அதே போல் யஸீர் அரபாத்தின் தலைமையிலான பாலஸ்தின விடுதலை அமைப்பை பலவீனப்படுத்த இஸ்ரேல் எண்பதுக்களில் உதவி அமைப்பாக செயற்பட்ட அமைப்பை ஹமாஸாக உருவாக்கி கொம்பு சீவிவிட்டது. சிரியாவிலும் அமெரிக்கா ஐஎஸ்ஐஎஸ் அடிப்படைவாதிகளுக்கு ஆயதங்களை விநியோகித்தது. பெரும்பாலான இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை உருவாக்கி வளர்த்துவிட்டவர்கள் முஸ்லீம்கள் அல்ல. அமெரிகாவினதும் அதன் நேசநாடுகளினதும் புலனாய்வுப் பிரிவினரே. காலனித்துவகால பிரித்தாளும் தந்திரத்தின் தொடர்ச்சியே இது. நவகாலனித்துவம்.

மனித உரிமைகள் என்று முதலைக்கண்ணீர் விடும் அமெரிக்க – பிரித்தானிய நேசநாடுகள் மிகமோசமான மனித அவலங்களுக்கு பொறுப்புடையவர்கள். அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகளிலும் மத்திய கிழக்கிலும் தங்களுடைய சொந்த நலன்களுக்காக தலையீடு செய்து அங்கு மிகப்பெரும் மனித அவலங்களை ஏற்படுத்தினர். இந்நாடுகளின் தலைவர்கள் தங்களுடைய அரசியல் லாபங்களுக்காகவும் நலன்களுக்காகவும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாட்டு மக்களின் பெயரில் வலிந்து தாக்குதல் நடத்தி உலக சமாதானத்தை சீர்குலைக்கின்றனர். தங்கள் நாடுகளில் தங்களுடைய இருப்புக்கு ஆபத்து வருகின்ற போது அவர்களுடைய வாக்கு வங்கி சரிகின்ற போது இவர்கள் உலகின் பதட்டமான பகுதியில் யுத்தத்தை ஆரம்பிப்பார்கள்.

பிரித்தானியாவின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பிரதமராக இருந்த போது தன்னுடைய பார்டிகேற்றை மறைக்க உக்ரைன் போருக்கு ஆயதங்களை வாரி வழங்கினார். உக்ரைனுக்கு ஆயதம் விற்று லாபமடைந்த ஜோ பைடன் குடும்பம் உக்ரைன் போரில் உரிந்துபோட்டு ஆடுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. இப்போது மோசடி, லஞ்சம், ஊழலுக்கு பெயர் போன இஸ்ரேலிய பிரதமருக்கு இஸ்ரேலிலேயே பல வழக்குகள் உள்ளது. இதில் இருந்து தப்பிக்கொள்ளவே அவர் ஹமாஸைச் சீண்டிவிட்டு இந்த யுத்தத்தில் ஆடாத ஆட்டம் ஆடுகின்றார்.

இதனாலேயே தற்போது உலகம் முழவதும் அமெரிக்கா – பிரித்தானிய நேச நாடுகளுக்கு எதிரான உணர்வுகள் கிளர்ந்துள்ளது. உலகம் முழவதும் இந்நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களுக்கு முன் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளது.

இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்படுவதுடன், இவற்றுக்கான மூலகாரணமாக இஸ்ரேலிய ஒடுக்குமுறை பாலஸ்தினிய பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். சுதந்திர பாலஸ்தீனம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அது நடைபெறாவிட்டால் ஹமாஸ் அழிக்கப்பட்டாலும் அதனிலும் மோசமான அமைப்பொன்று இன்னும் சில ஆண்டுகளில் உருவாகும். இஸ்ரேலின் அடக்குமுறைகளும் ஆக்கிரமிப்புகளும் ஹமாஸிலும் பார்க்க பல மடங்கு தீவிரமான தீவிரவாதிகளை உருவாக்கும். உலக அமைதி கேள்விக்குறியாகவே இருக்கும்.

இலங்கை அரசியல் வாதிகளை மிஞ்சும் ஒக்ஸ்போர்ட் பட்டதாரி பிரதமர் பொறிஸ் ஜோன்சன்!!!

உலகை ஆட்டிப்படைக்கும் விலைவீக்கம் – இன்பிளேசன் பிரித்தானியாவையும் விட்டுவைக்கவில்லை. இரண்டு வீதமாக இருக்க வேண்டிய விலைவீக்கம் பத்துவீதத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. பெற்றோல் மற்றும் எரிவாயுவின் விலைகள் எகிறிவருகின்றது. பொருளாதாரமட்டத்தில் விளிம்புநிலையில் உள்ள மக்களை காப்பாற்ற அவர்களுக்கு உதவும் படி தொழிற்கட்சி மற்றும் பொது அமைப்புகள் கேட்ட போது பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கொன்சவேடிவ் அரசு கடுமையாக மறுத்துவந்தது. இந்தப் பின்னணியில் பிரித்தானியாவின் எரிபொருள் நிறுவனங்கள் வரலாறு காணாத லாபத்தை ஈட்டின. அந்த லாபத்திற்கு கூட்டுத்தாபன வரியை அறவிடும்படி தொழிற்கட்சியும் ஏனைய அமைப்புகளும் சில மாதங்களாகவே கோரி வந்தன. கூட்டுத்தாபன வரியை எரிபொருள் நிறுவனங்கள் மீது விதித்தால் அவர்கள் மாற்று சக்திகளில் முதலீடுவது பாதிக்கும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட மாற்று சக்திகளில் முதலீட்டுக்கு தூண்ட வேண்டும் என்றெல்லாம் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான நிதியமைச்சர் ரிஷி சூனாக்கும் தெரிவித்து வந்தனர்.

ஆனால் இரவோடு இரவாக இவர்களுக்கு ஞானோதயம் பிறந்துவிட்டது. இன்று பொருளாதார நிலையில் கீழ்மட்டத்தில் உள்ள மக்களுக்கு மிகப்பெரும் உதவித் திட்டத்தை அறிவித்துள்ளனர். வறுமைக்கோட்டில் உள்ள ஒரு குடும்பம் வருடத்திற்கு 1200 பவுண்களை பெறும் அளவுக்கு உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுடைய சொந்தக் கட்சியினரே சோசலிசத்திற்கு இறைச்சியை வீசியெறிவதாக நையாண்டி பண்ணியுள்ளனர். பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் இந்த உதவித்திட்டம் இலங்கை அரசியல் வாதிகளின் சம்பள உயர்வு விரிக்குறைப்பையும் விஞ்சியுள்ளது.

உண்மையில் இந்த உதவி மக்களுக்குக் கிடைக்க வழி செய்தவர் சூ கிரே. இவர் தான் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ‘லொக்டவுன் பார்ட்டி’களை விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தவர். இந்த அறிக்கை நேற்று மே 25இல் வெளியிடப்பட்டது. அதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவருடைய சகபாடிகளும் மேற்கொண்ட 20 வரையான பார்ட்டிகள் அம்பலத்துக்கு வந்தது மட்டுமல்ல பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் பொய் சொன்னதும் அம்பலமாகிவிட்டது. இந்த நெருக்கடி நிலையைச் சமாளித்து மக்களையும் ஊடகங்களையும் திசை திருப்ப, பொறிஸ் அரசு மாபெரும் பல்டி அடித்து எரிபொருள் நிறுவனங்கள் மீது 10 பில்லியன் பவுண்கள் வரை வரி விதித்து அதனை மக்களுக்குப் பகிர முன்வந்துள்ளது. இப்போது பொறிஸ் ஜோன்சன் குடுமியில்லாமலேயே ஆட்டுகின்றார். இங்கு பொறிஸ் ஜோன்சனை பல்டி அடிக்க வைத்த சூ கிரேயுக்கு மிகுந்த பாராட்டுக்களை மக்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் தொழிற்கட்சியின் தலைவராக இருந்த ஜெரிமி கோபின் தன்னுடைய கடைசி தேர்தலில் வைத்த திட்டங்களை தற்போது பொறிஸ் ஜோன்சன் ஒவ்வொன்றாக நிறைவேற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். கடைசியாக தன்னுடைய ஊத்தைகளை மறைத்து பேசுபொருளை திசைதிருப்ப எட்டு மில்லியன் மக்கள் வரை பயனடையக்கூடிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் போட்ட கூத்தை வைத்து பாதிக்கப்பட்ட மக்கள் நன்மைபெறும் வகையில் சூ கிரேயின் அறிக்கை தகுந்த நேரத்தில் வெளி வந்திருக்கிறது. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் உக்ரைன் யுத்தத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதன் முக்கிய நோக்கமும் தன்னுடைய ஊத்தைகளை மூடி மறைக்கவே.

அண்மையில் லண்டன் ஸ்கூல் ஒப் மனேஜ்மன்ற் எடியுகேஸன் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பேராசிரியர் ஒருவர் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம் தான் பொறிஸ் ஜோன்சனையும் உருவாக்கியது என்று நக்கலும் நளினமும் கலந்து தெரிவித்ததுடன் லண்டன் ஸ்கூல் ஒப் மனேஜ்மன்ற் எடியுகேஸன் அதனிலும் பார்க்க தரமான பட்டதாரிகளை உருவாக்குவதாகத் தெரிவித்து இருந்தார்.

அண்மைய விலை வீக்கம் காரணமாக இரு பிள்ளைகளையுடைய கணவன் மனைவியை கொண்ட குடும்பத்தின் செலவீனம் 400 பவுண்களால் அதிகரித்துள்ளது. அதன்படி ஆண்டுக்கு 4,800 பவுண்கள் மேலதிக செலவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு அதில் 25வீதத்தையே தர நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டது. இந்த சூ கிரேயின் அறிக்கை வந்திருக்காவிட்டால் மக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி இருப்பார்கள்.

மே 31 இல் அரச பேரினவாதம் நூலகத்தை அழித்தது! தமிழர்கள் நூலகச் சிந்தனையை அழித்தனர்: த ஜெயபாலன்

ஆண்டுகள் உருண்டோடி யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டு நாற்பதாவது ஆண்டு ஆகிவிட்டது. ஆண்டுகளைக் கடந்து செல்வது போல் எமது வரலாறுகளையும் பதிவுகளையும் கூட நாம் மிக எளிதில் கடந்து அல்ல பாய்ந்தே சென்றுவிடுகின்றோம். வேகத்திற்கு அளித்த மதிப்பை விவேகத்திற்கு அளிகாததால் தமிழ் சமூகம் இன்று தனது இருத்தலுக்கான அடிப்படைகளையே இழந்துகொண்டிருக்கின்றது. ‘செய் அல்லது செத்துமடி’ என்ற விவேகமற்ற கோசங்கள் என்னத்தையாவது செய்ய வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி’ என்ற நிலையில் நிற்கின்றோம்.

இலங்கையில் தமிழ் அறிவுப்புலத்தின் மையப்புள்ளியாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் அமைந்தது. யாழ்ப்பாண நூலகம் பற்றிய குறிப்பு ஏப்ரல் 10 1894 இல் தி ஓவர்லன்ட் சிலோன் ஓப்சேர்வர் என்ற பத்திரிகையில் வெளியாகி இருந்தது. இது யாழ்ப்பாண நூலகத்தின் தொன்மையயை வெளிப்படுத்தி நிற்கின்றது. நூறாண்டுகளைக் கடந்த யாழ்ப்பாண நூலகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் யாழ்ப்பாண அறிவுப்புலத்தின் எழுச்சியயையும் வீழ்ச்சியயையும் பிரதிபலிக்கpன்றது. இது யாழ்ப்பாண அறிவுப்புலத்தை மட்டுமல்ல அச்சமூகத்தின் சிந்தனையையும் பிரதிபலிக்கும் ஒரு நிறுவனமாகவும் இலங்கைத் தமிழரின் அரசியல் நிலையின் பிரதிபலிப்பாகவும் அமைந்தது என்றால் மிகையல்ல.

வண. பிதா. லோங் அடிகளாரின் சிந்தனையில் தோண்றிய நூலக எண்ணக்கருவுக்காக ஆரம்பத்தில் அவருடைய உருவச்சிலையே நூலகத்தின் முன் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் சைவத்தின் எழுச்சியோடு அந்த இடத்தை கல்விக் கடவுளான சரஸ்வதி எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் 1981 மே 31 இரவு முதல் இலங்கைப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறையின் அடையாளச் சின்னமாக யாழ்பாணப் பொது நூலகம் உலகறியப்பட்டது. அந்த ஒடுக்குறை அடையாளத்தை புத்தனின் வெண்தாமரையை க் கொண்டு மறைக்க நூலகம் புதுப்பொலிவுடன் கட்டப்பட்டது.

ஆனால் மீளக்கட்டப்பட்ட நூலகத்தை திறந்து வைப்பதுஇ யார் திறந்து வைப்பது என்பதில் சிக்கல்கள் உருவானது. நூலகத்தை சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட அப்போதைய யாழ்ப்பாண மேயர் செல்லன் கந்தையன் திறந்து வைக்கக்கூடாது என்பதில் சாதிமான்களின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மிகத் தெளிவாக இருந்தனர். அதனால் கட்சியின் தலைவரான வி ஆனந்தசங்கரியயை வைத்து நூலகத்தைத் திறந்து தங்கள் அரசியல் லாபத்தையீட்ட தீவிரமாக செயற்பட்டனர். ஆனால் அது திறக்கப்படுவதை தங்கள் எதிரியான வி ஆனந்தசங்கரியினால் திறக்கப்படுவதை அரசியல் காரணங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. நூலக மீள்திறப்பு பந்தாடப்பட்டது.

அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்ட சாதிமான்களின் கூடாரமான தமிழர் விடுதலைக் கூட்டணி சாதுரியமாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்லன் கந்தையன் நூலகத்தை திறப்பதை விரும்பவில்லை என ஒரு பல்டி அடித்தது. பல புலி எதிர்ப்பு வாதிகளுக்கும் இந்த விளக்கம் மிகச்சௌகரிகமாக அமைந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணப் பொதுநூலகம் தமிழ் மக்களின் சிந்தனை மற்றும் செயற்பாடுகளின் ஒரு பிரதிபலிப்பாகவே இன்றும் உள்ளது.

யாழ்ப்பாணச் சமூகமானது தன்னுடைய செயற்பாடுகளுக்கும் சிந்தனைக்கும் இடையே பாரிய இடைவெளியயைக் கொண்ட சமூகமாகவே இன்றும் உள்ளது. சிங்கள சமூகத்தின் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையயை எதிர்த்த யாழ்ப்பாண சமூகம் தான் ஏனைய சமூகங்கள் மீது கட்டற்ற ஒடுக்குமுறையயை மிகத்தீவிரமாகக் கைக்கொண்டது. யாழ்ப்பாணப் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்படுவதற்கு முன்னதாகவே ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பள்ளி, நூலகம் என்பன யாழ் ஆதிக்க சமூகத்தினரால் எரியூட்டப்பட்டு இருந்தது. இன்றும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களை ஏற்றுக்கொள்ளாத அரச பாடசாலைகள் யாழ் மண்ணில் உள்ளது. மனித உரிமைகளைக் கோருகின்ற இன்றைய யாழ்ப்பாண சமூகம் ஏனைய சமூகங்களின் அடிப்படை உரிமைகளைக்கூட ஏற்றுக்கொள்ளத் தயாரற்ற சமூகமாகவே உள்ளது.

நாற்பது ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூருகின்ற யாழ்ப்பாண சமூகம் இன்னமும் அந்நூலகம் எந்நாளில் எரிக்கப்பட்டது என்ற விடயத்தில் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. வாய்மொழி வந்த செய்திகளிலும் அந்தச் செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டஇ பேசப்பட்ட விடயங்களையும் கொண்டே இந்தப் புனைவுகள் உருவாக்கப்பட்டு உள்ளது. ‘கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தன்’ என்ற பழமொழிக்கு ஏற்றாற் போல் எம்மத்தியில் உள்ள சில கேள்விச் செவியர்கள் ‘தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனர். அறிவியல் தேடலே இல்லாமல் கூடத்தின் வரலாற்று நிகழ்வொன்றின் முக்கிய தினத்தையே மாற்றிட முனைகின்றனர். இதுவும் ஒரு முரண்நகையே.

அறிவியலின் அடிப்படையே தேடல் ஆனால் யாழ்ப்பாண சமூகம் ஒரு தேடலற்ற சமூகமாக தேடுபவர்களை அவமதிக்கின்ற சமூகமாக மாறிவிட்டது. அறிவு என்பது பரீட்சையில் சித்தியடைவது என்ற நிலைக்கு யாழ்ப்பாணசமூகம் குறுகி நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பொதுவான விடயங்களைத் தேடுவதுஇ அறிவதுஇ கற்பது வீண் விரயம் என்று பாடப்புத்தகங்களுக்குள்ளேயே தன்னை அடக்கியது. பாடப் புத்தகங்களும் வீண் விரயமாகி தற்போது துரித மீட்டல் புத்தகங்களும் வினாவிடைப் புத்தகங்களும் படித்து குறுக்கு வழியில் அறிவைப் பெற்றுவிடலாம் என்று விழுந்து விழுந்து படித்து இப்போது யாழ்ப்பாணத்தினது மட்டுமல்ல தமிழர்களின் கல்வி நிலையே வீழ்ந்து கிடக்கின்றது. ஆனாலும் அங்கு நூலகங்களின் அவசியம் இன்னமும் உணரப்படவில்லை.

யாழ்ப்பாண நூலகம் 1981 மே 31இல் எரியூட்டப்பட்டது என்பதை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நுலகவியலாளராக வாழ்நாள் நூலகவியலாளராக உள்ள என் செல்வராஜா மிகத் தெளிவாக வரலாற்று ஆவணங்கள் மூலமாகப் பதிவு செய்துள்ளார். இன்று அவருடைய ஆவணத் தொகுப்புகள் மட்டுமே யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் வரலாற்றை அழிந்து போகாமல் காப்பாற்றிக்கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல.

2003இல் என் செல்வராஜாவினால் ‘றைஸிங் ப்ரொம் தி ஆஸஸ்’ என்ற ஆவணம் ஆங்கில மொழியில் 110 பக்கங்களுடன் தேசம் வெளியீடாக வெளிவந்தது. அதனை நான் (த ஜெயபாலன்) வடிவமைத்து இருந்தேன். தற்போது நூலகவியலாளர் என் செல்வராஜா மேலதிக தகவல்களைத் திரட்டி 200 வரையான பக்கங்களுடன் நூலக எரிப்பின் நாற்பதாவது ஆண்டை நினைவுகூரும் வகையில் வெளிக்கொணர்ந்துள்ளார். யாழ் நூலக எரிப்புப் பற்றி ஆங்கிலத்தில் உள்ள அறிவியல் சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஒரே ஆவணம் இதுவாகும். என் செல்வராஜா யாழ்ப்பாணப் பொது நூலகம் பற்றிய தமிழ் ஆவணத் தொகுப்பு ஒன்றையும் வெளயிட்டு உள்ளார்.

அரச பேரினவாதம் நூலகத்தையும் நூல்களையும் எரித்ததால் நாம் இன்றும் நூலகம் எரித்த நாளை நினைவுகூருகின்றோம். நூலகத்தின் பௌதீகக் கட்டமைப்பை அரசு எரித்து தீக்கிரையாக்கியது. ஆனால் நாம் நூலகச் சிந்தனையையே எமது அடியோடு அழித்துவிட்டோம். எத்தனை நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. எத்தனை பாடசாலைகளில் நூலகங்கள் இயங்குகின்றன. எத்தனை பேர் நூல்களை, பத்திரிகைகளை வாசிக்கின்றனர். அன்று அரச பேரினவாதம் நூலகத்தை எரித்திராவிட்டால் சிலசமயம் இன்று கறையான் அரித்திருக்கும். எரித்த நாளே எமக்கு தெரியாத போது அரித்தநாள் தெரிந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.

பிரித்தானியாவில் ஒரு நாளுக்கு 4 000 மரணங்கள் சம்பவிக்கலாம்!!! பொறிஸ் ஜோன்சனின் வினைத்திறனற்ற முடிவுகளின் விளைவு!

பிரித்தானிய பிரதமரின் அசமந்த போக்கு மேலும் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொல்ல இருக்கின்றது. கோவிட்-19 ஒரு நாளைக்கு நாலாயிரம் உயிர்களை பலி எடுக்கும் அபாயம் இருப்பதாக அரசின் விஞ்ஞான மருத்துவக்குழு எச்சரித்து உள்ளது. அவர்களின் மதிப்பீட்டின் படி நவம்பர் மாதத்தில் மரண எண்ணிக்கை நாளொன்றுக்கு 2000 முதல் 4000 வரை சம்பவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழமைக்கு மாறாக 20 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் பிரித்தானியாவைப் பொறுத்தவரை இன்னமும் வெப்பநிலை கணிசமான அளவில் வீழ்ச்சி அடையவில்லை. வழமைக்கு மாறாக நாடு இன்னமும் கடுமையான குளிருக்குச் செல்லவில்லை. வெப்பநிலை வீழ்ச்சி அடைந்து கடும் குளிர் ஏற்படும் போது நோயின் பரம்பல் மிகத்தீவிரமாகும். வழமையான காய்ச்சல் தடிமன் என்பன இக்காலகட்டத்திலேயே அதிகமாக பரவுவது வழமை. அதுவும் பாடசாலைகளே இந்நோய் பரம்பலின் மையமாக திகழ்ந்து வருகின்றன.

நவம்பர் 5ம் திகதி முதல் இங்கிலாந்தில் மிக இறுக்கமான லொக்டவுன் கொண்டுவரப்பட உள்ளது. ஒரு மாதகாலத்திற்கும் நீடிக்கும் இந்த லொக்டவுன் டிசம்பர் 2 வரை நீடிக்க உள்ளது. இவ்வாறான இறுக்கமான லொக்டவுன் காலத்திலும் பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை திறந்து வைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது. ஆனால் இது தேவையான அளவு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் தலைமையும் கொன்சவேடிவ் கட்சியின் பழமைவாத தனிநபர்வாத சிந்தனை முறையும் இதுவரை எண்பதிணாயிரத்துக்கும் அதிகமான உயிர்களைப் பலியெடுத்து உள்ளது. ‘சமூகம்’ என்ற ஒன்றில்லை என்ற சிந்தனை முறையோடு வாழ்கின்ற இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தனிநபர் சார்ந்து மட்டுமே சிந்திக்கின்றனர். பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது ‘சமூகம்’ என்ற ஒன்று இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அவரோ அவருடைய கட்சியின் கொள்கைகளோ அதனை ஒரு போதும் பிரதிபலிக்கவில்லை.

இந்தப் புதிய பிரித்தானிய அரசு கோவிட்-19 யை கையாண்ட முறை மிக மிக மோசமானது. தனது அரசின் விஞ்ஞான மருத்துவக் குழுக்களின் அலோசணைகளை புறம்தள்ளிவிட்டு குறுக்கு வழியில் தேர்தலை வெறிற்கொள்ள திட்டம் வகுத்த டொமினிக் கம்மிங்ஸ் போன்ற மண்டையன் குழுக்களின் அலோசனையின் படியே பொறிஸ் ஜோன்சன் ஆட்சி செய்கின்றார். அவருடைய நிதியமைச்சர் சான்ஸ்லர் ஒப் எக்செக்கர் ரிசி சுநாக் கூட புதிதான எந்த பொருளாதாரக் கொள்கை வகுப்பையும் மேற்கொள்ளவில்லை. ஜேர்மன் அரசு அறிவித்த உதவிநலத்திட்டங்களை தாங்களும் மறுநாள் அறிவித்தனர். அல்லது பல வாரங்கள் கழித்து அறிவித்தனர்.

ஐரோப்பிய நாடுகள் மார்ச்சில் லொக்டவுனுக்குச் சென்ற போது பிரித்தானிய அரசையும் லொக்டவுன் அறிவிக்க அழுத்தம் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பிரதமர் மறுத்துவிட்டார். அதனால் லொக்டவுன் அறிவிக்க ஏற்பட்ட தாமதத்தால் பிரித்தானியாவின் கோவிட்-19 பரவலும் மரணமும் உலக எண்ணிக்கையில் உச்சத்தைத் தொட்டது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இருவாரங்கள் முன்னதாக லொக்டவுனை அறிவித்து இருந்தால், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

முதற்தடவை கோவிட்-19 பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை; தவறு இழைக்கப்பட்டுவிட்டது என்றால். ஆனால் இரண்டாவது அலை பாராதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாலாம் என்ற எச்சரிக்கை ஆரம்பம் முதலே கூறப்பட்டு வந்தது. அரசின் விஞ்ஞான மருத்துவக் குழு தொடர்ச்சியாக அரசை எச்சரித்து வந்துள்ளது. பிரித்தானியாவில் வேல்ஸ், நொர்தன் ஐலன்ட்ஸ் அரசுகள் ஏற்கனவே ஒரு மாத லொக்டவுனை அறிவித்து பல நாட்கள் ஆகிவிட்டது. அப்படி இருந்தும் பொறிஸ் ஜோன்சன் ‘தனக்குத்தான் தெரியும் தான் தான் படைப்பன்’ என்று சன்னதம் ஆடிக்கொண்டு திரிகின்றார். ஒரு மனிதனுக்கு சுயபுத்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் புத்தி சொல்லக் கூடியவர்களின் புத்திமதியயையாவது கேட்கவேணும். இந்த இரண்டும் இல்லாத ஒன்று பிரித்தானிய வல்லரசுக்கு பிரதமர் ஆனால் மக்கள் வகை தொகையின்றி கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது.

கடந்த ஆறு மாதகாலத்திற்கு மேலாக கொரோனா தொற்று இல்லாத நாடாக தாய்வான் இருக்கின்றது. தங்களைப் பற்றிய பெரிய விம்பங்களைக் கட்டிக்கொண்டு திரிகின்ற இந்த காலனித்துவ சிந்தனையில் இருந்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் விடுபட வேண்டும். கொரோணாவுக்கு பிளீச் குடிக்க கொடுக்கும் அளவுக்கு – அமெரிக்க வல்லரசின் ஏஜென்டாக இருந்தாலும்; அவ்வளவு முட்டாள்கள் என்று சொல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அந்த நிலைக்குத் தான் பிரித்தானிய வல்லரசின் நிலை வந்து கொண்டிருக்கிறது.

இன்றைய அமெரிக்க பிரித்தானிய வல்லரசுகள் வெளியிடுகின்ற அறிக்கைகள் ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்றளவிற்கு கேவலமாகிவிட்டது. போதை ஏறியவுடன் வருகின்ற உசாரில் ‘வெட்டுவோம் பிடுங்குவாம்’ என்ற கணக்கில் தான் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும், அவருடைய கிட்டத்தட் அண்ணன் மாதிரியான டொனால்ட் ட்ரம்மும் விடுகின்ற ரீல்கள் உள்ளது. கோவிட்-19 க்கு வக்சீன் கோடிக்குள் இருக்கின்றது, ‘தைப்பொங்கலுக்கு தமிழீழம்’ என்ற கணக்கில் தான் ‘புதுவருசத்தில் கோவிட்-19 க்கு கோவிந்தா’ என்றெல்லாம் பிலா விடுகின்றார்கள்.

உண்மை நிலவரம் அதுவல்ல. கோவிட்-19 வக்சின் அண்மைக்காலத்தில் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அவ்வாறு வந்தாலும் அதனை முழு மக்கள் தொகைக்கும் வழங்குவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. அது அரசுடைய நோக்கமும் கிடையாது. இந்த கோவிட்-19 ஒட்டுமொத்த மக்கள்கொகைக்கும் பரவி இயற்கையான நிர்ப்பீடண சக்தி ஒவ்வொருவரது உடலிலும் ஏற்படுவதன் மூலமே இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மக்கள் தொகைக்குள் இந்நோய் பரவுகின்ற போது அதனை ஒரே நேரத்தில் பரவ அனுமதித்தால் நாட்டில் உள்ள சுகாதார சேவைகளால் அதனை தாக்குப் பிடிக்க முடியாது. கட்டுப்பாடின்றி பரவ அனுமதித்தால் காட்டாற்று வெள்ளத்தில் மக்கள் மரணிப்பது போல் தகுந்த சிகிச்சை இல்லாமல் பல்லாயிரம் மக்கள் மரணிக்க வேண்டி இருக்கும்.

அதனால் கோவிட்-19 மக்கள் தொகைக்குள் பரவுவதை மட்டுப்படுத்ப்பட்ட வீதத்தில் மேற்கொள்ள வேண்டும். இந்த மட்டுப்படுத்தல் என்பது நாட்டின் சுகாதார சேவையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய எண்ணிக்கையயை வைத்து தீர்மானிக்கப்படும்.

பிரித்தானியாவில் இந்நோய்க் கிருமியானது இதுவரை 15 வீதமான மக்களுக்கு பரவி இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்றது. உலகில் ஈரானிலேயே கூடுதல் மக்கள் தொகைக்கு – 28வீதம் – இந்நோய் பரவி உள்ளது. கீழுள்ள வரைபு வெவ்வேறு நாடுகளில் எவ்வளவு வீதமான மக்களுக்கு இந்நோய் பரவியுள்ளது என்பதைக் காட்டுகின்றது. ஒரு நாட்டின் எழுபது வீதமான மக்களுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டு இருந்தாலேயே அந்நாட்டில் மக்கள் குழும நீர்ப்பீடனம் ஏற்பட்டதாகக் கொள்ள முடியும். அப்படிப் பார்க்கின்ற போது எல்லா நாடுகளுமே முழு நாட்டுக்குமான நீர்ப்பீடனத்தை எட்டுவதற்கு மிகத் தொலைவிலேயே உள்ளனர். பிரித்தானியா அவ்வாறான ஒரு நீர்ப்பீடனத்தை பெறுவதற்கு இன்னும் ஓராண்டுக்கு மோலாகலாம். இப்பொழுதுள்ள நிலையில் ஈரான் மிகவிரைவில் ழுழுநாட்டுக்குமான குழும நீர்ப்பீடணத்தை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கோவிட்-19 ஏற்படுத்துகின்ற அடுத்த பெரும் பிரச்சினை பொருளாதார தாக்கம். தற்போது வரை கோவிட்-19க்காக செலவிடப்பட்ட நிதியயை மீளப் பெறுவதற்கு 50 பில்லியன் பவுண் வரியயை அரசு விதிக்க வேண்டியேற்படும். கோவிட்-19 க்கு முன்னதாகவே பிரித்தானிய சுகாதாரசேவைகள் உட்பட பொதுச்சேவைகளுக்கான நிதிவழங்கலை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கொன்சவேடிவ் அரசு குறைத்துக் குறைத்து வந்தது. பொதுச்சேவைகள் அனைத்தும் கோவிட்-19 க்கு முன்னதாகவே ரிம்மில் தான் ஓடிக்கொண்டிருந்தன. சில உதாரணங்களையும் அதன் விளைவுகளையும் மட்டும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

பிரித்தானிய சுகாதார சேவைகளில் 50,000 வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. ஏனெனில் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு சுகாதார சேவைகளிடத்தில் போதுமான நிதி இருக்கவில்லை. பாடசாலைகளில் 10,000க்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதற்கான நிதி பாடசாலைகளில் இல்லலை. பாடசாலைகளில் வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டில் வெளியானா ஆய்வின்படி கோவிட்-19 காலத்திற்கு முந்தைய நிலையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் மாணவர்களின் கல்வி மட்டத்திற்கும் சாதாரண மட்டத்தில் இருந்து வருகின்ற மாணவர்களின் கல்வி மட்டத்திற்குமான இடைவெளி இரண்டு ஆண்டுகளாக இருந்தது. கோவிட்-19 க்குப் பின் இவ்விடைவெளி ஐந்து மடங்காக அதிகரித்து இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதன்படி ஆண்டு 13இல் கல்வி கற்கின்ற பிற்படுத்தப்பட்ட சமூகமட்டத்தில் உள்ள ஒரு மாணவனின் கல்விமட்டமும் 9ம் ஆண்டில் கல்விகற்கின்ற ஒரு சாதாரண தரத்தில் உள்ள மாணவனின் கல்விமட்டமும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் எனக் கொள்ளலாம்.

அரசு ஏற்கனவே பல உள்ளுராட்சி நூலகங்களை மூடிவருகின்றது. பெரும்பாலான அரச பாடசாலைகளில் நூலகங்கள் இல்லை அல்லது பெயரளவிலேயே இயங்கி வருகின்றன. பிறக்கின்ற குழந்தையின் அடிப்படைத் தேவைகளில் அதன் வளர்ச்சியில் ஏற்படுத்தப்படுகின்ற போதாமைகள் அதன் எதிர்காலத்தை பாரதூரமாக பாதிக்கின்றன. இதன் காரணத்தினால் கோவிட்-19க்கு முன்னதாக பிரித்தானிய சிறைகளை நிரப்புகின்ற குற்றவாளிகளில் 80 வீதத்தினர் பாடசாலைகளில் இருந்து கலைக்கப்பட்ட மாணவர்களாக பாடசாலைக் கல்வியயை விட்டு ஒதுங்கியவர்களாக இருக்கின்றனர்.

பொதுச் சேவைகளில் முதலீடுகள் செய்யப்படாத போது வீட்டுத் திட்டங்கள் போக்குவரத்துக்கள் கல்வி என்று சகலவிடயங்களிலும் பிற்படுத்தப்பட்ட தரப்பினர் மிக மோசமாக பாதிக்கப்படுவர். சமூக ஏற்றத்தாழ்வின் இடைவெளி கோவிட்-19 க்கு பின் மிகமோசமடையும். சமூகப் பதட்டம் தவிர்க்க முடியாததாகும். இது பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.

2007இல் அமெரிக்காவின் வீட்டுச் சந்தையில் இலாபமீட்டும் வெறியர்களால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வீழ்ச்சியானது பிரித்தானியாவை மிக மோசமாகத் தாக்கியது. இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு மீண்டும் இப்பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னைய நிலைக்கு பிரித்தானியாவால் செல்ல முடியவில்லை. முன்னைய பொருளாதார நிலையயை எட்ட 12 ஆண்டுகள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து இந்த கோவிட்-19 ஏற்பட்டது. கோவிட்-19 ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சியானது 2007 இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியயைக் காட்டிலும் மோசமானது. அத்தோடு கோவிட்-19க்கு முன்னதாகவே உலக பொருளாதாரம் தொழில்நுட்பத்தில் அதீதமாக தங்கி இருக்கும் நிலையயை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது.

அதன்படி மனித உழைப்பு அதன் முக்கியத்துவத்தை இழந்துவருகின்றது. இந்த மனித உழைப்பின் அவசியத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது இந்த கோவிட்-19 தாக்கத்தினால் மேலும் கீழ்நிலைக்குச் சென்று விட்டது. அதன்படி இன்று உள்ள 60 வீதமான வேலைகள் இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் இல்லாமல் போய்விடும். சுப்பர்மார்க்கற், வங்கிகள், தபாலகங்கள், ஊபர் ரைவர்கள் ரக்ஸிகள் கணக்காளர்கள் பெற்றோல் நிலையங்கள் என்பன எமது வீதிகளில் இருந்து காணாமல் போய்விடும். வேலையின்மையும் வறுமையும் மலிந்திருக்கும் எதிர்காலம் என்பது பலருக்கு இருளாகவும் ஒரு சிலருக்கு மட்டுமே ஒளிமயமானதாகவும் இருக்கும். அதனால் அதற்கான திட்டமிடல்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமாகின்றது. அரசு எவ்வாறான சூழலானாலும் வர்த்தக நிறுவனங்களின் நலனையே முன்நிறுத்தும்.

இன்றும் இந்த கொரோனா காலத்திலும் ரெஸ்ற் அன் ரேர்ஸ் திட்டத்தை அரசிடம் உள்ள அனுபவம் மிக்க 40க்கும் அதிகமான வைரோலொஜி ஆய்வுகூடங்களுக்கு வழங்காமால் தனியார்களிடமே கையளித்துள்ளது. பிரிக்ஸிறின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு தனியார் நிறுவனங்களிடம் கடற்பாதைப் போக்குவரத்தை கையளித்தது. அவ்வாறு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஒரு நிறுவனம் தான் சீப்புரோன் அதனிடம் ஒரு பெரிகூட இருக்கவில்லை. அதனிடம் அது பற்றிய திட்டமும் இருக்கவில்லை. ஆனால் அரசு பல மில்லியன் ஒப்பந்தத்தை அந்நிறுவனத்துடன் கடந்த ஆண்டு மேற்கொண்டது.

மேலும் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஈரோரணல்க்கு அதில் கலந்துகொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்காததால் 33 மில்லியன் பவுண்கள் நஸ்ட்டஈட்டை அரசு வழங்கியது. ஆனால் பாடசாலைகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுமுறை காலத்திலும் உணவு வழங்குவதற்கான வவுச்சரை வழங்க அரசு மறுத்துவிட்டது. அதற்கான செலவு 5 மில்லயன் பவுண் மட்டுமே. இவ்வாறு தான் அரசு வினைத்திறன் அற்று செயற்படுகின்றது.

கோவிட்-19 தாக்கத்தனால் ஏனைய நோயாளிகள் வைத்திய சேவைகளைப் பெறுவதை தவிர்த்து வருகின்றனர். அதனால் எதிர்காலத்தில் அவர்களது உடல்நிலை மோசமடையவும் விரைவில் மரணத்தை எட்டவும் வாய்ப்பு உள்ளது. மேலும் கோவிட்-19 அபாயநிலை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிரித்தானியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பொருளாதார வீழ்ச்சியின் பக்கக விளைவுகளால் 700,000 பேர்களின் ஆயுட்காலம் குறைவடையும் அதாவது அவர்கள் விரைந்து மரணத்தை தழுவுவார்கள் என மதிப்பிட்டுள்ளது.

நீண்டகால தனிமைப்படுத்தல்களும் கை கழுவுதல் மற்றும் சுகாதார நடைமுறைகளும் கூட எதிர்காலத்தில் எமது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையயை வலுவிழக்கச் செய்யும். ஏனைய வைரஸ் மற்றும் பக்ரீரியா போன்ற நுண் கிருமிகளின் தாக்கத்திற்கு நாம் ஆளாக வாய்ப்பளிக்கும். எமது உடலானது நுண் கிருமிகளைப் பற்றிக்கொள்ளும் போதே தனது நோய் எதிர்ப்பு சக்தியயை வளர்த்துக்கொள்கின்றது. இதுவொரு இயற்கை வக்சின் போன்றது. மேலும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளையும் இந்தத் தனிமைப்படுத்தல்கள் ஊக்குவிக்கின்றது.

இதுவொரு மிகுந்த நெருக்கடியான கால கட்டம். இதனை கையாள்வதற்கு ஒவ்வொருவரும் பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது நடைமுறைசார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தங்களை இசைவாக்கிக் கொள்ள வேண்டும். தங்களை இசைவாக்கிக் கொள்ள முடியாதவர்களே பெரும்பாலும் கூடுதல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். முடிவெடுக்கும் ஆற்றல் என்பது ஒவ்வொருவருடைய நுண் திறன்சார்ந்தது. அதனை வளர்த்துக்கொண்டு சமயோசிதமாக முடிவெடுக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பிரச்சினைகளையும் பல வழிகளில் தீர்க்க முடியும். ஆனால் அந்ததந்த் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதில்லை. அதனால் அவர்கள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதன் விளைவால் கூடுதல் துன்பத்திற்கு ஆளாகின்றனர். நாங்கள் ஒவ்வொரு முடிவையும் எடுக்கின்ற போது நாங்கள் தவிர்கக்கின்ற முடிவுகளால் ஏற்டுகின்ற நன்மை தீமைகளையும் ஆராய்ந்து உணர்ச்சித் தூண்டலா முடிவெடுக்காமல் அறிவுபூர்வமாக முடிவெடுத்தால் நாம் எமது முடிவுகளில் வெற்றி பெறுவதங்கான வாய்ப்புகள் அதிகம்.

பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் கொரோனாவின் சமூகப் பரம்பலின் முக்கிய இடங்களாகும். அங்கு சமூக இடைவெளியயை ஏற்படுத்துவது அசாத்தியமான ஒன்று. பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து கற்கும் தொலைதூர கல்விக்குச் சென்றதால் பல்கலைக்கழகங்களில் நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால் பாடசாலைகளைப் பொறுத்தவரை மாணவர்கள் பாடசாலைக்கு வந்தே கல்வியயைத் தொடருகின்றனர். இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்துவதாக இருந்தால், அரசு தற்போது வந்த அரைத்தவணை விடுமுறையோடு பாடசாலைகளை நான்கு வாரங்களுக்கு மூடி, இதனைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

இப்போது அரைத்தவணை முடிந்து, பெரும்பாலான பாடசாலைகள் திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கும். ஆகையால் நோய்பரம்பலை அரசு எதிர்பார்க்கின்ற அளவுக்கு கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாது. தொழிற்கட்சி உட்பட அரசுக்கு பலர் எடுத்துக்கூறியும்; ஏனைய அதிகாரப்பகிர்வு செய்யப்பட்ட அரசுகள் விரைந்து செயற்பட்ட போதும்; பொறிஸ் ஜோன்சன் அரைத்தவணைக் காலத்தை வீணடித்துக்கொண்டார். இனி மரணங்கள் எகிறி மருத்துவமனைகள் நிரம்பிவழிய ஆரம்பிக்கவே அவர் பாடசாலைகள் மூடுவது பற்றி சிந்திப்பார். இது நோய்க்கிருமி பரவலை அதிகரிப்பதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்கான காலத்தையும் அதிகரிக்கும். விரைந்து செயற்படாததால் கூடுதலான கற்பித்தல் காலங்கள் வீணடிக்கப்படும்.

இன்றுள்ள இந்த பிரித்தானிய பிரதமரையும் அமெரிக்க ஜனாதிபதியயையும் அன்று தெரிவு செய்கின்ற போது மக்கள் சிந்தித்து ஆராய்ந்து உணர்ச்சிகளுக்கு இடம்கொடாமல் அறிவுபூர்வமாக சிந்தித்து முடிவெடுத்து இருந்தால் இந்தப் பேரழிவு இவ்வளவு மோசமானதாக அமைந்திருக்காது.

பிரித்தானிய பிரதமரின் அசமந்த போக்கு மேலும் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொல்ல இருக்கின்றது. கோவிட்-19 ஒரு நாளைக்கு நாலாயிரம் உயிர்களை பலி எடுக்கும் அபாயம் இருப்பதாக அரசின் விஞ்ஞான மருத்துவக்குழு எச்சரித்து உள்ளது. இன்னும் சில நாட்களில் இங்கிலாந்தில் மிக இறுக்கமான லொக்டவுன் கொண்டுவரப்பட உள்ளது. இவ்வாறான இறுக்கமான லொக்டவுன் காலத்திலும் பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை திறந்து வைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது. ஆனால் இது தேவையான அளவு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் தலைமையும் கொன்சவேடிவ் கட்சியின் பழமைவாத தனிநபர்வாத சிந்தனை முறையும் இதுவரை எண்பதிணா யிரத்துக்கும் அதிகமான உயிர்களைப் பலியெடுத்து உள்ளது. ‘சமூகம்’ என்ற ஒன்றில்லை என்ற சிந்தனை முறையோடு வாழ்கின்ற இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தனிநபர் சார்ந்து மட்டுமே சிந்திக்கின்றனர். பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது ‘சமூகம்’ என்ற ஒன்று இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அவரோ அவருடைய கட்சியின் கொள்கைகளோ அதனை ஒரு போதும் பிரதிபலிக்கவில்லை.

இந்தப் புதிய பிரித்தானிய அரசு கோவிட்-19 யை கையாண்ட முறை மிக மிக மோசமானது. தனது அரசின் விஞ்ஞான மருத்துவக் குழுக்களின் அலோசணைகளை புறம்தள்ளிவிட்டு குறுக்கு வழியில் தேர்தலை வெறிற்கொள்ள திட்டம் வகுத்த டொமினிக் கம்மிங்ஸ் போன்ற மண்டையன் குழுக்களின் அலோசனையின் படியே பொறிஸ் ஜோன்சன் ஆட்சி செய்கின்றார். அவருடைய நிதியமைச்சர் சான்ஸ்லர் ஒப் எக்செக்கர் ரிசி சுநாக் கூட புதிதான எந்த பொருளாதாரக் கொள்கை வகுப்பையும் மேற்கொள்ளவில்லை. ஜேர்மன் அரசு அறிவித்த உதவிநலத்திட்டங்களை தாங்களும் மறுநாள் அறிவித்தனர். அல்லது பல வாரங்கள் கழித்து அறிவித்தனர்.

ஐரோப்பிய நாடுகள் மார்ச்சில் லொக்டவுனுக்குச் சென்ற போது பிரித்தானிய அரசையும் லொக்டவுன் அறிவிக்க அழுத்தம் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பிரதமர் மறுத்துவிட்டார். அதனால் லொக்டவுன் அறிவிக்க ஏற்பட்ட தாமதத்தால் பிரித்தானியாவின் கோவிட்-19 பரவலும் மரணமும் உலக எண்ணிக்கையில் உச்சத்தைத் தொட்டது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இருவாரங்கள் முன்னதாக லொக்டவுனை அறிவித்து இருந்தால்,கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

முதற்தடவை கோவிட்-19 பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை; தவறு இழைக்கப்பட்டுவிட்டது என்றால். ஆனால் இரண்டாவது அலை பாராதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாலாம் என்ற எச்சரிக்கை ஆரம்பம் முதலே கூறப்பட்டு வந்தது. அரசின் விஞ்ஞான மருத்துவக் குழு தொடர்ச்சியாக அரசை எச்சரித்து வந்துள்ளது. பிரித்தானியாவில் வேல்ஸ், நொர்தன் ஐலன்ட்ஸ் அரசுகள் ஏற்கனவே ஒரு மாத லொக்டவுனை அறிவித்து பல நாட்கள் ஆகிவிட்டது. அப்படி இருந்தும் பொறிஸ் ஜோன்சன் ‘தனக்குத்தான் தெரியும் தான் தான் படைப்பன்’ என்று சன்னதம் ஆடிக்கொண்டு திரிகின்றார். ஒரு மனிதனுக்கு சுயபுத்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் புத்தி சொல்லக் கூடியவர்களின் புத்திமதியயையாவது கேட்கவேணும். இந்த இரண்டும் இல்லாத ஒன்று பிரித்தானிய வல்லரசுக்கு பிரதமர் ஆனால் மக்கள் வகை தொகையின்றி கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது.

கடந்த ஆறு மாதகாலத்திற்கு மேலாக கொரோனா தொற்று இல்லாத நாடாக தாய்வான் இருக்கின்றது. தங்களைப் பற்றிய பெரிய விம்பங்களைக் கட்டிக்கொண்டு திரிகின்ற இந்த காலனித்துவ சிந்தனையில் இருந்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் விடுபட வேண்டும். கொரோணாவுக்கு பிளீச் குடிக்க கொடுக்கும் அளவுக்கு – அமெரிக்க வல்லரசின் ஏஜென்டாக இருந்தாலும்; அவ்வளவு முட்டாள்கள் என்று சொல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அந்த நிலைக்குத் தான் பிரித்தானிய வல்லரசின் நிலை வந்து கொண்டிருக்கிறது.

இன்றைய அமெரிக்க பிரித்தானிய வல்லரசுகள் வெளியிடுகின்ற அறிக்கைகள் ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்றளவிற்கு கேவலமாகிவிட்டது. போதை ஏறியவுடன் வருகின்ற உசாரில் ‘வெட்டுவோம் பிடுங்குவாம்’ என்ற கணக்கில் தான் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும், அவருடைய கிட்டத்தட் அண்ணன் மாதிரியான டொனால்ட் ட்ரம்மும் விடுகின்ற ரீல்கள் உள்ளது. கோவிட்-19 க்கு வக்சீன் கோடிக்குள் இருக்கின்றது, ‘தைப்பொங்கலுக்கு தமிழீழம்’ என்ற கணக்கில் தான் ‘புதுவருசத்தில் கோவிட்-19 க்கு கோவிந்தா’ என்றெல்லாம் பிலா விடுகின்றார்கள்.

உண்மை நிலவரம் அதுவல்ல. கோவிட்-19 வக்சின் அண்மைக்காலத்தில் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அவ்வாறு வந்தாலும் அதனை முழு மக்கள் தொகைக்கும் வழங்குவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. அது அரசுடைய நோக்கமும் கிடையாது. இந்த கோவிட்-19 ஒட்டுமொத்த மக்கள்கொகைக்கும் பரவி இயற்கையான நிர்ப்பீடண சக்தி ஒவ்வொருவரது உடலிலும் ஏற்படுவதன் மூலமே இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மக்கள் தொகைக்குள் இந்நோய் பரவுகின்ற போது அதனை ஒரே நேரத்தில் பரவ அனுமதித்தால் நாட்டில் உள்ள சுகாதார சேவைகளால் அதனை தாக்குப் பிடிக்க முடியாது. கட்டுப்பாடின்றி பரவ அனுமதித்தால் காட்டாற்று வெள்ளத்தில் மக்கள் மரணிப்பது போல் தகுந்த சிகிச்சை இல்லாமல் பல்லாயிரம் மக்கள் மரணிக்க வேண்டி இருக்கும்.

அதனால் கோவிட்-19 மக்கள் தொகைக்குள் பரவுவதை மட்டுப்படுத்ப்பட்ட வீதத்தில் மேற்கொள்ள வேண்டும். இந்த மட்டுப்படுத்தல் என்பது நாட்டின் சுகாதார சேவையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய எண்ணிக்கையயை வைத்து தீர்மானிக்கப்படும்.

பிரித்தானியாவில் இந்நோய்க் கிருமியானது இதுவரை 15 வீதமான மக்களுக்கு பரவி இருக்கலாம் என்று நியூ சயன்றிஸ்ட் மதிப்பிடப்படுகின்றது. உலகில் ஈரானிலேயே கூடுதல் மக்கள் தொகைக்கு – 28 வீதம் – இந்நோய் பரவி உள்ளது. கீழுள்ள வரைபு வெவ்வேறு நாடுகளில் எவ்வளவு வீதமான மக்களுக்கு இந்நோய் பரவியுள்ளது என்பதைக் காட்டுகின்றது. ஒரு நாட்டின் எழுபது வீதமான மக்களுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டு இருந்தாலேயே அந்நாட்டில் மக்கள் குழும நீர்ப்பீடணம் ஏற்பட்டதாகக் கொள்ள முடியும். அப்படிப் பார்க்கின்ற போது எல்லா நாடுகளுமே முழு நாட்டுக்குமான நீர்ப்பீடணத்தை எட்டுவதற்கு மிகத் தொலைவிலேயே உள்ளனர். பிரித்தானியா அவ்வாறான ஒரு நீர்ப்பீடணத்தை பெறுவதற்கு இன்னும் ஓராண்டுக்கு மோலாகலாம். இப்பொழுதுள்ள நிலையில் ஈரான் மிகவிரைவில் ழுழுநாட்டுக்குமான குழும நீர்ப்பீடணத்தை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கோவிட்-19 ஏற்படுத்துகின்ற அடுத்த பெரும் பிரச்சினை பொருளாதார தாக்கம். தற்போது வரை கோவிட்-19க்காக செலவிடப்பட்ட நிதியயை மீளப் பெறுவதற்கு 50 பில்லியன் பவுண் வரியயை அரசு விதிக்க வேண்டியேற்படும். கோவிட்-19 க்கு முன்னதாகவே பிரித்தானிய சுகாதாரசேவைகள் உட்பட பொதுச்சேவைகளுக்கான நிதிவழங்கலை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கொன்சவேடிவ் அரசு குறைத்துக் குறைத்து வந்தது. பொதுச்சேவைகள் அனைத்தும் கோவிட்-19 க்கு முன்னதாகவே ‘ரிம்’மில் தான் ஓடிக்கொண்டிருந்தன.

பிரித்தானிய சுகாதார சேவைகளில் 50,000 வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. ஏனெனில் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு சுகாதார சேவைகளிடத்தில் போதுமான நிதி இருக்கவில்லை. பாடசாலைகளில் 10,000க்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதற்கான நிதி பாடசாலைகளில் இல்லலை. பாடசாலைகளில் வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டில் வெளியான ஆய்வின்படி கோவிட்-19 காலத்திற்கு முந்தைய நிலையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் மாணவர்களின் கல்வி மட்டத்திற்கும் சாதாரண மட்டத்தில் இருந்து வருகின்ற மாணவர்களின் கல்வி மட்டத்திற்குமான இடைவெளி இரண்டு ஆண்டுகளாக இருந்தது. கோவிட்-19 க்குப் பின் இவ்விடைவெளி ஐந்து மடங்காக அதிகரித்து இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதன்படி ஆண்டு 13இல் கல்வி கற்கின்ற பிற்படுத்தப்பட்ட சமூகமட்டத்தில் உள்ள ஒரு மாணவனின் கல்விமட்டமும் 9ம் ஆண்டில் கல்விகற்கின்ற ஒரு சாதாரண சமூகமட்டத்தில் உள்ள மாணவனின் கல்விமட்டமும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் எனக் கொள்ளலாம்.

அரசு ஏற்கனவே பல உள்ளுராட்சி நூலகங்களை மூடிவருகின்றது. பெரும்பாலான அரச பாடசாலைகளில் நூலகங்கள் இல்லை அல்லது பெயரளவிலேயே இயங்கி வருகின்றன. பிறக்கின்ற குழந்தையின் அடிப்படைத் தேவைகளில், அதன் வளர்ச்சியில், ஏற்படுத்தப்படுகின்ற போதாமைகள் அதன் எதிர்காலத்தை பாரதூரமாக பாதிக்கின்றன. இதன் காரணத்தினால் கோவிட்-19க்கு முன்னதாக பிரித்தானிய சிறைகளை நிரப்புகின்ற குற்றவாளிகளில் 80 வீதத்தினர் பாடசாலைகளில் இருந்து கலைக்கப்பட்ட மாணவர்களாக; பாடசாலைக் கல்வியயை விட்டு ஒதுங்கியவர்களாக இருக்கின்றனர்.

பொதுச் சேவைகளில் முதலீடுகள் செய்யப்படாத போது வீட்டுத் திட்டங்கள், போக்குவரத்துக்கள், கல்வி என்று சகல விடயங்களிலும் பிற்படுத்தப்பட்ட தரப்பினர் மிக மோசமாக பாதிக்கப்படுவர். சமூக ஏற்றத்தாழ்வின் இடைவெளி கோவிட்-19 க்கு பின் மிகமோசமடையும். சமூகப் பதட்டம் தவிர்க்க முடியாததாகும். இது பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.

2007இல் அமெரிக்காவின் வீட்டுச் சந்தையில் இலாபமீட்டும் வெறியர்களால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வீழ்ச்சியானது பிரித்தானியாவை மிக மோசமாகத் தாக்கியது. இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு, இப்பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னைய நிலைக்கு பிரித்தானியாவால் செல்ல முடியவில்லை. முன்னைய பொருளாதார நிலையயை எட்ட 12 ஆண்டுகள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து இந்த கோவிட்-19 ஏற்பட்டது. கோவிட்-19 ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சியானது 2007 இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியயைக் காட்டிலும் மோசமானது.

அத்தோடு கோவிட்-19க்கு முன்னதாகவே உலக பொருளாதாரம் தொழில்நுட்பத்தில் அதீதமாக தங்கி இருக்கும் நிலையயை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது. அதன்படி மனித உழைப்பு அதன் முக்கியத்துவத்தை இழந்துவருகின்றது. இந்த மனித உழைப்பின் அவசியத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது இந்த கோவிட்-19 தாக்கத்தினால் மேலும் கீழ்நிலைக்குச் சென்று விட்டது. அதன்படி இன்று உள்ள 60 வீதமான வேலைகள் இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் இல்லாமல் போய்விடும். சுப்பர்மார்க்கற்கள் போன்ற கடைத்தெரு வியாபார நிலையங்கள் (உணவகங்கள், மருந்தகங்கள், புடவைக்கடைகள் சில்லறைக் கடைகள்), வங்கிகள், தபாலகங்கள், ஊபர்கள் – ரக்ஸிகள், கணக்காளர்கள் பெற்றோல் நிலையங்கள் என்பன எமது வீதிகளில் இருந்து காணாமல் போய்விடும். வேலையின்மையும் வறுமையும் மலிந்திருக்கும். எதிர்காலம் என்பது பலருக்கு இருளாகவும் ஒரு சிலருக்கு மட்டுமே ஒளிமயமானதாகவும் இருக்கும். அதனால் அதற்கான திட்டமிடல்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமாகின்றது.

அரசு எவ்வாறான சூழலானாலும் வர்த்தக நிறுவனங்களின் நலனையே முன்நிறுத்தும். இன்றும் இந்த கொரோனா காலத்திலும் ரெஸ்ற் அன் ரேர்ஸ் திட்டத்தை அரசிடம் உள்ள அனுபவம் மிக்க 40க்கும் அதிகமான வைரோலொஜி ஆய்வுகூடங்களுக்கு வழங்காமால் தனியார்களிடமே கையளித்துள்ளது. பிரிக்ஸிறின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு தனியார் நிறுவனங்களிடம் கடற்பாதைப் போக்குவரத்தை கையளித்தது. அவ்வாறு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்றுதான் ‘சீப்புரோன்’ நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தமும். ஆனால் ‘சீப்புரோன்’ னிடம் ஒரு பெரி – ferry கூட இருக்கவில்லை. அதனிடம் அது பற்றிய திட்டமும் இருக்கவில்லை. ஆனால் அரசு பல மில்லியன் ஒப்பந்தத்தை அந்நிறுவனத்துடன் கடந்த ஆண்டு மேற்கொண்டது.

மேலும் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஈரோ ரணல்க்கு அதில் கலந்துகொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்காததால் 33 மில்லியன் பவுண்கள் நஸ்ட்டஈட்டை அரசு வழங்கியது. ஆனால் பாடசாலைகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுமுறை காலத்திலும் உணவு வழங்குவதற்கான வவுச்சரை வழங்க அரசு மறுத்துவிட்டது. அதற்கான செலவு 5 மில்லயன் பவுண் மட்டுமே. இவ்வாறு தான் அரசு வினைத்திறன் அற்று செயற்படுகின்றது.

கோவிட்-19 தாக்கத்தனால் ஏனைய நோயாளிகள் வைத்திய சேவைகளைப் பெறுவதை தவிர்த்து வருகின்றனர். அதனால் எதிர்காலத்தில் அவர்களது உடல்நிலை மோசமடையவும் விரைவில் மரணத்தை எட்டவும் வாய்ப்பு உள்ளது. மேலும் கோவிட்-19 அபாயநிலை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிரித்தானியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பொருளாதார வீழ்ச்சியின் பக்கக விளைவுகளால் 700,000 பேர்களின் ஆயுட்காலம் குறைவடையும் அதாவது அவர்கள் விரைந்து மரணத்தை தழுவுவார்கள் என மதிப்பிட்டுள்ளது.

நீண்டகால தனிமைப்படுத்தல்களும் கை கழுவுதல் மற்றும் சுகாதார நடைமுறைகளும் கூட எதிர்காலத்தில் எமது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையயை வலுவிழக்கச் செய்யும். ஏனைய வைரஸ் மற்றும் பக்ரீரியா போன்ற நுண் கிருமிகளின் தாக்கத்திற்கு நாம் ஆளாக வாய்ப்பளிக்கும். எமது உடலானது நுண் கிருமிகளைப் பற்றிக்கொள்ளும் போதே தனது நோய் எதிர்ப்பு சக்தியயை வளர்த்துக்கொள்கின்றது. இதுவொரு இயற்கை வக்சின் போன்றது. நீண்டகால தனிமைப்படுத்தலும் அதீத சுகாதாரப் பழக்கங்களும் நாங்கள் நோய்கிருமிகளுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்க்கும். அவ்வாறு நீண்ட காலத்திற்கு நோய்க்கிருமிகளில் இருந்து எமது உடலைப் பாதுகாத்து வந்தால் எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவிழக்கும். மேலும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளையும் இந்தத் தனிமைப்படுத்தல்கள் ஊக்குவிக்கின்றது.

இதுவொரு மிகுந்த நெருக்கடியான கால கட்டம். இதனை கையாள்வதற்கு ஒவ்வொருவரும் பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது நடைமுறைசார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தங்களை இசைவாக்கிக் கொள்ள வேண்டும். தங்களை இசைவாக்கிக் கொள்ள முடியாதவர்களே பெரும்பாலும் கூடுதல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். முடிவெடுக்கும் ஆற்றல் என்பது ஒவ்வொருவருடைய நுண் திறன்சார்ந்தது. அதனை வளர்த்துக்கொண்டு சமயோசிதமாக முடிவெடுக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பிரச்சினைகளையும் பல வழிகளில் தீர்க்க முடியும். ஆனால் அந்ததந்த் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதில்லை. அதனால் அவர்கள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதன் விளைவால் கூடுதல் துன்பத்திற்கு ஆளாகின்றனர். நாங்கள் ஒவ்வொரு முடிவையும் எடுக்கின்ற போது, நாங்கள் தவிர்கக்கின்ற முடிவுகளால் ஏற்டுகின்ற நன்மை தீமைகளையும் ஆராய்ந்து; உணர்ச்சித் தூண்டலால் முடிவெடுக்காமல் அறிவுபூர்வமாக முடிவெடுத்தால், நாம் எமது முடிவுகளில் வெற்றி பெறுவதங்கான வாய்ப்புகள் அதிகம்.

பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் கொரோனாவின் சமூகப் பரம்பலின் முக்கிய இடங்களாகும். அங்கு சமூக இடைவெளியயை ஏற்படுத்துவது அசாத்தியமான ஒன்று. பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து கற்கும் ஒன்லைன் கல்விக்குச் சென்றதால் பல்கலைக்கழகங்களில் நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால் பாடசாலைகளைப் பொறுத்தவரை மாணவர்கள் பாடசாலைக்கு வந்தே கல்வியயைத் தொடருகின்றனர். இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்துவதாக இருந்தால், அரசு தற்போது வந்த அரைத்தவணை விடுமுறையோடு பாடசாலைகளை நான்கு வாரங்களுக்கு மூடி, இதனைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும். இப்போது அரைத்தவணை முடிந்து, பெரும்பாலான பாடசாலைகள் திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கும். ஆகையால் நோய்பரம்பலை அரசு எதிர்பார்க்கின்ற அளவுக்கு கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாது. தொழிற்கட்சி உட்பட அரசுக்கு பலர் எடுத்துக்கூறியும்; ஏனைய அதிகாரப்பகிர்வு செய்யப்பட்ட அரசுகள் விரைந்து செயற்பட்ட போதும்; பொறிஸ் ஜோன்சன் அரைத்தவணைக் காலத்தை வீணடித்துக்கொண்டார். இனி மரணங்கள் எகிறி மருத்துவமனைகள் நிரம்பிவழிய ஆரம்பிக்கவே அவர் பாடசாலைகள் மூடுவது பற்றி சிந்திப்பார். இது நோய்க்கிருமி பரவலை அதிகரிப்பதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்கான காலத்தையும் அதிகரிக்கும். விரைந்து செயற்படாததால் கூடுதலான கற்பித்தல் காலங்கள் வீணடிக்கப்படும்.

இன்றுள்ள இந்த பிரித்தானிய பிரதமரையும் அமெரிக்க ஜனாதிபதியயையும் அன்று தெரிவு செய்கின்ற போது மக்கள் சிந்தித்து ஆராய்ந்து உணர்ச்சிகளுக்கு இடம்கொடாமல் அறிவுபூர்வமாக முடிவெடுத்து இருந்தால் இந்தப் பேரழிவு இவ்வளவு மோசமானதாக அமைந்திருக்காது. மக்கள் எடுத்த அரசியல் முடிவுக்கு அவர்கள் தற்போது கொடுத்துக்கொண்டிருக்கின்ற இந்த விலை மிக அதிகமானதே. அதற்கு அவர்கள் இனிவரும் காலங்களில் கொடுக்கப் போகின்ற விலை இன்னும் அதிகமாக இருக்கும். போது கொடுத்துக் கொண்டிருக்கின்ற இந்த விலை மிக அதிகமானதே. அதற்கு அவர்கள் கொடுக்கப் போகின்ற விலை இன்னும் அதிகமாக இருக்கும்.

மருத்துவமனைகளில் சிறுபான்மையின பணியாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகளைப் பெறுவதில் சிரமம்!

பிரித்தானிய மருத்துவமனைகளில் பணியாற்றிய ஆசிய ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு அங்கிகளைப் பெறுவதில் பெரும்பான்மை யினத்தவர்களைக் காட்டிலும் சிக்கல்கள் இருந்ததாக குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளது. மருத்துவமனைகளில் கோவிட்-19 தாக்கத்தினால் இறந்தவர்களில் ஆசிய ஆபிரிக்க சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை அடுத்தே அதனை அறிவதற்கான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டு இருந்தது. இன்று வெளிவநதுள்ள அறிக்கையில் ஆசிய ஆபிரிக்க சிறுபான்மையின பணியாளர்கள் பாதுகாப்பு அங்கிகளைப் பெறுவதில் கூடுதல் தடைகள் காணப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து மருத்துவமனைகளில் 44 விதமான மருத்துவர்களும் 22 வீதமான மருத்துவ தாதிகளும் ஆசிய ஆபிரிக்க இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த சனத்தொகையில் இவர்கள் 14 வீதத்தினரே.

மேலும் கோவிட்-19 தாக்கத்தில் ஆசிய ஆபிரிக்க இனத்தோர் கூடுதலாக மரணமடைவதற்கு ஆவர்கள் மத்தியில் கூடுதலாகக் காணப்படும் ஏனைய நோய்க்காரணங்களும் காரணமாக உள்ளது. அதைவிடவும் அவர்களுடைய பொருளாதார நிலை, ஒரே வீட்டில் மூன்று தலைமுறையினர் வரை ஒன்றாக வாழ்வது, பொருளாதார நிலைகாரணமாக வீடுகளில் கூடுதலான எண்ணிக்கையானோர் வாழ்வது போன்றனவும் ஆசிய ஆபிரிக்க சிறுபான்மைச் சமூகங்களில் கோவிட்-19 தாக்கம் அதிகமாகக் காணப்படுவதற்கு காரணமாக உள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸிற்கு பலியானவர்கள் 50,000 யை தாண்டிவிட்டது!

– பழம் பிடுங்கவும் ஆட்களில்லை வைத்தியம் பார்க்கவும் ஆட்களில்லை. சேர்ந்து வாழவும் தயாரில்லை –

பிரித்தானியாவில் கொரோனா வைரஸிற்குப் பலியானவர்கள் அரசு இன்று வெளியிட்டுள்ள எண்ணிக்கையைக் காட்டிலும் இரட்டிப்பானது என்பதே மிகக் கசப்பான உண்மை. இதுவரை அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் இறக்கின்ற போதே கொரோனா வைரஸினால் இறந்தவர்கள் எனப் பதிவு செய்கின்றனர். வயோதிபர் இல்லங்களில் மரணமடைந்தவர்கள் நேற்றுவரை இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆனால் இன்று முதல் வயோதிபர் இல்லங்களில் கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைபவர்களும் இப்பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக நேற்றுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 26,097 என்றே அரசு அறிவித்து உள்ளது.

அப்படியானால் 50,000 பேர் என்ற கணிப்பு எப்படி வந்தது என்பது முக்கியம். பதிவு செய்யப்படும் ஒவ்வொரு மரணமும் ஓஎன்எஸ் – Office for National Statistics புள்ளிவிபரத்திற்கு வந்தடையும். அதன்படி கடந்த ஆண்டுகளில் மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட மரணங்களுக்கும் இந்த ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட மரணங்களுக்கும் இடையே உள்ள எண்ணிக்கை வேறுபாடே 50,000 பேர் கோவெட்-19 காரணமாக நிகழ்ந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றது.

அப்படியானால் அரச புள்ளி விபரம் எப்படி இந்த இருட்டடிப்பைச் செய்தது என்ற மற்றுமொரு கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. அரசு ஏற்கனவே வீடுகளிலும் வயோதிபர் பராமரிப்பு இல்லங்களிலும் நிகழும் மரணங்களை கோவிட்-19 எனப் பதிவு செய்வதை தவிர்க்கின்ற வகையில் கடுமையான பதிவுமுறைகளை மேற்கொண்டுள்ளது. அதனால் பொதுமருத்துவர்கள் வயோதிபர்களின் மரணத்தைப் பதிவு செய்கின்ற போது கோவெட்-19 அல்லாத காரணங்களால் (chronic conditions such as heart disease, cancer, stroke, diabetes, and Alzheimer’s disease) மரணம் சம்பவித்ததாக பதிவு செய்கின்றனர். மேலும் கோவெட்-19 ரெஸ்ட் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்த மரணங்கள் கோவெட்-19 அல்லாத காரணங்களால் நிகழ்ந்ததாகவே பதிவு செய்யப்படுகின்றது.

மற்றுமொரு தொகை மரணங்கள் கோவெட்-19 அல்லாத காரணங்களினால் தூண்டப்படுகின்றது. குறிப்பாக புற்றுநோய், மாரடைப்பு, மற்றும் உயிராபத்து ஏற்படுத்தும் நோய்களைக் கொண்டவர்கள் மருத்துவமனைக்கு செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். மேலும் மருத்துவ வளங்கள் மனிதவளம் உட்பட கோவெட்-19க்கு திசை திருப்பப்பட்டு உள்ள நிலையில் பல அவசர சத்திர சிகிச்சைகள் கூட பிற்போடப்பட்டு உள்ளது. இவைகளும் கூட மரண எண்ணிக்கையை அதிகரிக்கின்றது. அரச அறிவிப்புகளிலேயே 25 வீதமான கூடுதலான மரணங்கள் நிகழ்வதை உறுதிப்படுத்தி உள்ளது.

பத்து ஆண்டுகள் கொன்சவேடிவ் ஆட்சியில் பிரித்தானிய மருத்துவத்துறை மிகப்பலவீனமான நிலையில் இருந்த போதே கோவெட்-19 ஆபாயத்திற்கு முகம் கொடுத்தது. அப்போது 50.000 வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலையிலேயே பிரித்தானிய சுகாதார சேவைகள் கோவிட்-19 உடனான தனது போரை ஆரம்பித்தது. தற்போது உலகின் வறிய நாடுகளில் இருந்து மருத்துவ தாதிகளை வரவழைப்பதற்கான கட்டுப்பாடுகளை உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் தளர்த்தி உள்ளார். அவ்வாறான மருத்துவ தாதிகளையும் மருத்துவர்களையும் வரவழைக்க முயற்சிக்கும் உள்துறை அமைச்சர் அவர்களின் குடும்பங்களை அழைத்து வருவதற்கான கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் இறுக்கமாகவே வைத்துள்ளார்.

பழம் பிடுங்கவும் ஆட்களில்லை வைத்தியம் பார்க்கவும் ஆட்களில்லை. ஆனால் மற்றையவர்களோடு சேர்ந்து வாழவும் தயாரில்லை என்ற நிலையில் பிரித்தானிய கொன்வேட்டிவ்கள் செயற்பட்டு வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வீம்போடு வெளியேறியவர்கள் இப்போது எல்லாவற்றுக்கும் மற்றவர் கைகளை எதிர்பார்க்கின்றனர்.

பிரித்தானியாவில் கோவிட்-19 தமிழர்களுக்கான உதவிச் சேவை

தமிழர்களுக்கான உதவிச்சேவை ஒன்று அண்மையயில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கோவிட்-19 நெருக்கடியான இக்காலகட்டத்தில் வீட்டில் இருந்தவாறே தொலைபேசி மூலமாக உங்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை தங்களால் வழங்க முடியும் என இவ்வமைப்பினர் தங்கள் இணையத் தளத்தில் குறிப்பிட்டு உள்ளனர். குறிப்பாக மருத்துவ ஆலோசணைகள் மனநலம் சார்ந்த மருத்துவ ஆலோசணைகள் இன்று குறிப்பாகத் தேவைப்படுகின்ற அரச உதவித் திட்டங்கள் பற்றிய ஆலோசணைகள், சட்ட ஆலோசணைகள், கல்வி தொடர்பான ஆலோசணைகள் சுகாதார சேவைகள் பற்றிய ஆலோசணைகளையும் இவர்கள் தமிழிலேயே உரையாடி வழங்கக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எமது நினைவுவெளிகளுக்கு அப்பால் நடந்துதுகொண்டிருக்கும் மிகப்பெரும் நெருக்கடியான நிலையில் இவ்வாறான ஆலோசணைகளும் உதவிகளும் வழிகாட்டல்களும் நிச்சயம் பலருக்கும் உதவியாக அமையலாம்.

இவ்வமைப்பை மருத்துவர் புவிநாதன் முன்னெடுத்துள்ளார். ஆலோசணைகளை வழங்குபவர்கள்: கணக்கியல் பால முரளி, ஆனந்தன் ஆர்நோல்ட், மருத்துவம் – மருத்துவர்கள் புவிநாதன், கவன், செல்வராணி பத்மபாஸ்கரன், தாரணி சிறிசற்குணம், ஹிமா புவிநாதன், சமூக சுசாதாரசேவை – ராஜேஸ்வரி சுப்பிரமணியம், அரச உதவித் திட்டங்கள்: கௌரி பரா

அவர்களுடைய தொடர்பு விபரங்கள்:

http://tamilshelpline.org/

United Kingdom
02035001573
07525050010

Medical@tamilshelpline.org
immigration@tamilshelpline.org
lawyer@tamilshelpline.org
business@tamilshelpline.org
finance@tamilshelpline.org
benefits@tamilshelpline.org
youth@tamilshelpline.org
community@tamilshelpline.org
housing@tamilshelpline.org

Opening Hours
Monday – Friday
09:00 – 18:00

Saturday
09:00 – 18:00

Sunday
10:00 – 16:00

பிரிடிஸ் ஏயர்வெய்ஸ் 12,000 பேரை இன்று வேலைநீக்கம் செய்தது!

பெரும் நிறுவனங்கள் வேலையில் இருந்து வேலைசெய்வோரை நிறுத்த ஆரம்பித்து விட்டன. இன்று பிரிடிஸ் ஏயர்வெய்ஸ் 12,000 பேரை வேலையில் இருந்து நிறுத்தியுள்ளது. கொரோனா வந்த அதிஸ்ரம் பெரும் நிறுவனங்கள் எல்லாம் கொள்ளை இலாபமீட்டும் வகையில் தங்கள் நிறுவன வேலைக்கட்டமைப்புகளை மாற்ற உள்ளன. சோசல் டிஸ்ரன்ஸ் வேர்க்கிங் புறம் ஹோம் எல்லாமே இந்த நிறுவனங்களுக்கு சாதகமாகிப் போய்க் கொண்டிருக்கின்றது. மேலும் சுப்பர்மாக்கற்றுக்கள் ஓட்டோமேட்டட் சிஸ்டத்தை ஏற்கனவே அறிமுகப்படுத்தி விட்டனர்.

இன்னும் பத்து ஆண்டுகளில் இப்போது நடைமுறையில் உள்ள 50 வீதமான வேலைகள் இல்லாமல் போய்விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த கொரோனாவின் வரவால் பத்து ஆண்டுகள் அல்ல இன்னும் சில ஆண்டுகளிலேயே தற்போதுள்ள பல வேலைகள் காணாமல் போய்விடும்.

அப்ப இந்த நுகர்வுப் பொருளாதாரத்துக்கு என்ன ஆகும்? வேலை இல்லாதவனிடம் காசு இல்லை. காசு இல்லாதவன் என்த்தை வாங்குவான். உலக நாடுகள் பொருளாதாரக் கொள்கையை மீள்வரைபு செய்ய நெருக்க வேண்டிய காலகட்டம் இது.

இவர்களில் ஒருவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தாள் என்ன ஆறுதல் சொல்வீர்கள்?

நேற்று முன் தினம் இடம்பெற்ற குழந்தைகளின் படுகொலையும் தந்தையின் தற்கொலை முயற்சியும் எமது சமூகம் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினைகளின் கொடுரமான வெளிப்பாடு.

– என் அன்புச் சினேகிதி ஒருத்திக்கு எழுதிய மடலில் இருந்து. –

கனடாவில் சில ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்த மூன்று குழந்தைகளின் தாய் – இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த போது காப்பாற்றப்பட்டார். லூசியம் பகுதியில் ஒரு இளம் தாய் தனது மூன்று பிள்ளைகளை கத்தியால் குத்திய பின் தற்கொலை செய்ய முயற்சித்த போது தாயும் ஒரு பிள்ளையும் மட்டும் காப்பாற்றப்பட்டனர். இவ்வாறான ஒரு சம்பவம் ஹரோவிலும் இடம்பெற்றது. இதே போல் அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழரை மணம் முடித்த வியட்நாம் பெண்ணும் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்ட போது காப்பாற்றப்பட்டார்.

இச்சம்பவங்கள் எல்லாம் கடந்த 10 ஆண்டுகளுக்குள் இடம்பெற்ற நிகழ்வுகள். இவற்றை செய்திகளாக பத்திரிகைகளில் அவர்களின் படங்களோடு பதிவு செய்திருக்கிறேன். லூசியத்தில் நடந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட குழந்தைகளின் இறுதி நிகழ்விலும் கலந்துகொண்டேன்.

நான் இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்குக் காரணம் இந்த மனம் தகவல்களைக் கையாள்கின்ற முறை, சிந்தனை, எண்ணங்கள்; அன்பும் அரவணைப்பும் கொண்ட இளம் தாய்மாரை எவ்வளவு மோசமான கொடுமையை, தங்கள் கருவில் உருவான பத்துமாதம் சுமந்த குழந்தைகளுக்கு செய்ய வைத்திருக்கின்றது பார்த்தீர்களா?

இந்தக் கொலைகளைச் செய்த தாய்மாருடைய மனநிலை அவர்கள் தங்கள் குழந்தைக்கு கொடுமை செய்வதாக எண்ணவில்லை. அக்குழந்தைகள் தாங்கள் இல்லாமல் கஸ்டப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே கொலை செய்யப்பட்டனர். இன்றைக்கும் இத்தாய்மார் உயிரோடு சிறையிலும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் உள்ளனர்.

இந்தத் தாய்மாருக்கு எற்பட்டது போஸ்ட் நட்டல் அல்லது போஸ்ட் ரோமற்றிக் டிஸ் ஓடர் – Postnatal Depression / Post Traumatic Depression – என்ற மனநிலை பாதிப்பு. அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டுகொண்டிருந்தால் இவர்களை மிக இலகுவாக இயல்பு வாழ்க்கைக்கு திருப்பி இருக்க முடியும். அந்த குழந்தைகளும் உயிரிழக்க வேண்டி வந்திராது. தாய்மாருடைய எதிர்காலமும் இவ்வாறு சீரழந்திருக்க மாட்டாது.

எமக்கு துன்பம் அல்லது கஸ்டம் வருகின்ற போது எங்களுடைய மனம் எமக்கு ஏற்பட்ட துன்பமான சம்பவங்கள் அல்லது கஸ்டமான விடயங்களை எல்லாம் ஞாபகத்துக்கு கொண்டு வந்துவிடுகின்றது. அது எங்களை மேலும் மேலும் வேதனைக்கு உட்படுத்தி எங்களை பலவீனப்படுத்திவிடும். இதனை நீங்கள் புரிந்து கொண்டு துன்பங்களையும் கஸ்டங்களையும் மீள மீள அசை போடாமல் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.
எமது மூளையில் தகவல்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டே சேமிக்கப்படுகிறது. துன்பங்களை கஸ்டங்ளை அசை போட்டால் அது தொடர்பான சம்பவங்கள் ஞாபகத்துக்கு வரும்.. மாறாக மகிழ்ச்சியான பொழுதுகளை நினைவுபடத்தினால் நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சியான காலங்கள் தொடர்ந்து வரும். இது கிட்டத்தட்ட google search பண்ணுவது போல். நீங்கள் தேடும் சொல்லோடு தொடர்புபட்ட எல்ல விடயங்களையும் தேடிக்கொண்டு வந்து கொட்டுகிறதல்லவா அப்படித்தான் எமது மனமும். அதனால் ‘எனக்குத் தான் எல்லா கஸ்டமும் வருகிறது’ என்று எண்ணி உங்களைப் பலவீனப்படுத்தி விட வேண்டாம்.

எங்கள் உடலில் இதயம் நுரையீரல் குடல் மூளை கை கால் என்றெல்லாம் அங்கங்கள் உறுப்புகள் இருக்கின்றது. ஆனால் எங்கள் உடலில் ‘மனம்’ என்றொரு அங்கம் உறுப்பு இல்லை. மூளையின் நினைவுப் (conscious mind) பகுதியிலும் நினைவுக்கு அப்பாற்பட்ட (unconscious mind) பகுதியிலும் பதிவில் உள்ள தகவல்களைக் கையாள்வதையே நாங்கள் ‘மனம்’ என்கிறோம்.

அன்பு, பாசம், காதல், மகிழ்ச்சி, துயரம், வேதனை, கோபம், விரக்தி எல்லாமே இந்த தகவ்களைக் கையாள்வதாலும் எமது உடலில் உள்ள ஹோர்மோன்களினாலுமே ஏற்படுகின்றது.

மனம் இந்தத் தகவல்களைக் கையாளும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த மனிதர்களால் முடியும். ஆனால் துரதிஸ்டவசமாக பலரும் அதனை முயற்சிப்பதில்லை. நாங்கள் சிந்திக்கின்ற முறையில் அல்லது நாங்கள் புரிந்துகொள்கின்ற முறையில் சிறிய மாற்றங்களை செய்வோமானால் பலரும் தங்கள் துன்பியல் வட்டத்துக்கு வெளியே வந்துவிடலாம். அப்படி வரத்தவறினால் இன்னும் இன்னும் துன்பியலை நோக்கியே அவர்கள் இழுக்கப்படுவார்கள்.

தமிழ் சமூகம் மனநிலை பாதிப்பு என்பதை ‘பைத்தியம்’ ‘சைக்கோ’ என்று மட்டுமே அறிந்து வைத்துள்ளது. சமூகத்தில் இது பற்றிய விழிப்புணர்வு இன்றும் இல்லை என்றே சொல்லலாம். இந்நிலை மாற வேண்டும்.

புத்தர் ஞானம் பெற்றதே இழப்பு தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த போதே. உறவும் பிரிவும் வாழ்வின் யதார்த்தம். அதனையும் கடந்து – மறந்து அல்ல – வாழ்வு நகர வேண்டும். எம்மீது அன்பும் பாசமும் காதலும் கொண்டவர்கள் பிரிகின்ற போது அவர்கள் நினைவுகளைச் சுமந்து – சோகத்தை அல்ல – மகிழ்ச்சியோடு முன்னேற வேண்டும். அதே போன்றே கொபத்தையும் வஞ்சத்தையும் கடந்து செல்ல வேண்டும்.

ஒருவருடைய பிரச்சினையை இன்னொருவரால் தீர்த்து வைப்பது என்பது மிகக் கடினமானது. அதுவும் குறிப்பாக மனம் சார்ந்த பிரச்சினைகளை இன்னொருவரால் தீர்த்து வைக்க முடியாது. இந்த ஆற்றுப்படுத்துபவர்கள் – counsellors – உங்கள் கவலைகளைக் கேட்டு தெரிந்துகொண்டு; உங்களை நீங்களே புரிந்துகொள்ள வைப்பதன் மூலம்; நீங்களாகவே இந்தத் துன்பியல் சுழற்சியில் இருந்து வெளியே வருவதற்கு உதவுவார்கள். இது ஓரிரு சந்திப்புகளிலும் நடக்கலாம் அல்லது வருடங்களும் ஆகலாம். அது பாதிக்கப்பட்டவருடைய மனநிலை அவர் எவ்வளவுதூரம் ஒத்துழைப்பார் என்பதில் தங்கி உள்ளது. பாதிக்கப்பட்டவர் முன்வருகின்ற போதே பாதித் துன்பியலுக்கு முடிவு வந்துவிடும் மிகுதி விரைவிலேயே காணாமல் போய்விடும்.

ஆனால் துன்பியலுக்குள்ளேயே வாழப் பழகிக் கொண்டால் அதற்குள்ளிருந்து வெளிவருவது மிகக்கடினமானதாகிவிடும்.

சிறுவர்கள் மத்தியில் புதிய நோய்த் தாக்கம் கவனத்தில் கொள்வதற்காக: தேவையேற்படின் மருத்துவ உதவியை நாடவும்!

அண்மைய நாட்களாக சிறுவர்கள் மத்தியில் புதிய நோய்த்தாக்கம் ஒன்று ஏற்ப்ட்டு வருவதாகவும் அதனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ஐசியு இல் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் என்எச்எஸ் அறிவித்து உள்ளது. சிறார்களின் உடலில் வித்தியாசமான தாக்கம் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு என்எச்எஸ் அறிவித்துள்ளது.

இது கோவிட்-19இன் தாக்கமா இல்லையா என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் பாதிக்கபட்ட சிறார்களில் கோவிட்-19 வைரஸ் இருந்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. உடலில் புள்ளி புள்ளி வீக்கங்கள் அவதானிக்கப்பட்டு உள்ளது.