செய்திகள்

செய்திகள்

செய்திகள்

முல்லைத்தீவிலிருந்து 7வது தொகுதி காயமடைந்தவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் என 157 பேர் நேற்று அழைத்துவரப்பட்டனர்

trico.gifமுல்லைத் தீவிலிருந்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடல் வழியாக 7வது தொகுதியாக நோயாளர்கள் கர்ப்பிணிகள் காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 157 பேர் நேற்று இரவு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் 50 ஆண்கள் 81 பெண்கள் 26 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். இதில் 42 ஆண்களும் 45 பெண்களும் வைத்திய சிகிச்சைகளுக்கு அழைத்துவரப்பட்டுள்ளது. ஏனையவர்கள் அவர்களுடன் உதவிக்கு வந்த உறவினர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 11ம் திகதி முதல் இதுவரை 7 தொகுதிகளில் கடல் வழியாக நோயாளர்கள் காயமடைந்தவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என மொத்தம் 2553 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ரோஹித போகொல்லாகம இன்று பாகிஸ்தான் போய்ச் சேர்ந்தார்

rohitha-sir-john.jpg வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இன்று பாகிஸ்தான் போய்ச் சேர்ந்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேபாள விஜயத்தில் பங்கேற்றிருந்த வெளிவிவகார அமைச்சரை இலங்கை கிரிக்கட் அணியினர் மீது நேற்று பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து உடனடியாக அங்கு செல்லுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிணங்க இன்று பாகிஸ்தானுக்குச் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடல்களின் பின்னர் இஸ்லாமாபாத்தில் இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் போகொல்லாகம கலந்துகொள்ளவுள்ளார் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

அவசர காலச் சட்டம் 62 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

srilanka-parliament.jpgநாட்டில் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை 62 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

இப்பிரேரணைக்கு ஆதரவாக 74 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

புலிகளின் 2100 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இரு விமானக் குண்டுகள் படையினரால் மீட்பு

bobobo.jpgதமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட 2100 கிலோ எடைகொண்ட வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இரு விமானக் குண்டுகளை இராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த இரு குண்டுகளையும் விமானம் மூலம் கொண்டு வந்து புறக்கோட்டைப் பிரதேசத்தில் போட்டிருந்தால் அந்தப் பிரதேசம் முற்றாக அழிந்திருக்குமெனவும் அந்தளவுக்கு இந்தக் குண்டுகள் சக்திமிக்கவையாகக் காணப்பட்டதாகவும் இராணுவத் தரப்புத் தெரிவித்துள்ளது.

ஜானக பெரேரா மீதான தாக்குதலுக்காக புலிகள் 63 இலட்சம் ரூபாவை வழங்கினர்

வடமத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீதான தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விடுதலைப்புலிகள் 63 இலட்சம் ரூபா வழங்கியுள்ளது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இரகசியப் பொலிஸார் அநுராதபுரம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். கடந்த திங்களன்று அநுராதபுரம் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் இரகசிய பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர்.

தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரினதும் மனைவியினதும் மதவாச்சி மக்கள் வங்கிக்கணக்கில் 35 இலட்சம் ரூபா விடுதலைப்புலிகளால் வைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும், 28 இலட்சம் ரூபா பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகளால் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர்களிருவரதும் வங்கிக்கணக்குகளிலும் 35 இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், தமக்கு 28 இலட்சம் ரூபாவை பல்வேறு தடவைகளில் புலிகள் வழங்கியதாக சந்தேக நபர்கள் இருவரும் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலைக் குண்டுதாரி தனது தேசிய அடையாள அட்டையின் பிரதியை வழங்கி கையடக்கத் தொலைபேசி சிம் ஒன்றையும் கண்டியிலுள்ள கடையொன்றில் பெற்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்த இரகசியப் பொலிஸார், தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

முல்லைத்தீவிலிருந்து திங்கட்கிழமை இரவு திருகோணமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பொதுமக்கள்

army-help.jpg01. மிதுலா (இறப்பு)
02. நல்லதம்பி, புதுக்குடியிருப்பு (வயது 80)
03. எஸ்.செல்வமணி, உருத்திரபுரம், (வயது 31)
04. வி. ரவிச்சந்திரன், யாழ்ப்பாணம், மானிப்பாய் (வயது 42),
05. வி.சிவதாசன், ஒட்டுசுட்டான், (வயது 40)
06. ஜோதிலட்சுமி, முல்லைத்தீவு, (வயது 39)
07. மாசிலாமணி சிவராசா, கிளிநொச்சி, மருதுநகர், (வயது 43)
08. ஆலியம்மா, புதுக்குடியிருப்பு, (வயது 62)
09. கே.அம்பலநாதன், முல்லைத்தீவு, புனாக்காடு, (வயது 45)
10. வி.மதிவேணி, அம்பாள்புரம், வவுனிக்குளம், (வயது 37)
11. முத்தையா சிவகுரு, தொண்டமனாறு, (வயது 85)
12. வி.கோபிகா, அம்பாள்புரம், வவுனிக்குளம், (வயது 06)
13. வி. சேனுகா, அம்பாள்புரம், வவுனிக்குளம், (வயது 12),
14. அவசர சிகிச்சைப் பிரிவில் (பெயர் இல்லை)
15. பௌசிகா, வல்லிபுரம், (வயது 12)
16. எஸ். கினிதேவி, (வயது 41)
17. பூபாலசிங்கம் தனபாலசிங்கம், பலாலி வீதி, யாழ்ப்பாணம், (வயது 41)
18. விநாயகமூர்த்தி, சகுந்தலாதேவி, முல்லைத்தீவு, பொக்கணை, (வயது 63)
19. இராசம்மா, முல்லைத்தீவு, முள்ளியவளை, (வயது 67)
20. வி. வரதராசா, வற்றாப்பளை, (வயது 49)
21. பொன்னம்பலம் பாக்கியநாதன் கலாசாலைவீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், (வயது 58),
22. நந்து, ஆண்டான்குளம்,
23. ஏ.பழனியம்மா, மன்னார், (வயது 62),
24. நந்தகுமார், முல்லைத்தீவு, முள்ளியவளை, (வயது 45),
25. எஸ். சிவபாதம், முல்லைத்தீவு, வற்றாப்பளை, (வயது 58),
26. எஸ். தவமணி, கிளிநொச்சி, உதயநகர், (வயது 45)
27. செல்வம், கிளிநொச்சி, உதயநகர், (வயது 1.5)
28. டபிள்யூ. இந்திராணி, கிளிநொச்சி, திருமுறிகண்டி, (வயது 57)
29. சர்மிலா, கிளிநொச்சி, திருமுறிகண்டி, (வயது 04)
30. சிவபாக்கியம், மூர்வீதி, மன்னார், (வயது 84)
31. இறப்பு, பெயர் தரப்படவில்லை.
32. ஆர். சண்முகநாதன், முல்லைத்தீவு, உடையார் கட்டு (வயது 62)
33. இராஜலட்சுமி, நெடுங்கேணி, (வயது 53)
34. எஸ். நாகம்மா, வட்டக்கச்சி, (வயது 69),
35. ஜே. பரணிதரன், நெடுங்கேணி, (வயது 07)
36. எஸ். செல்வரத்தினம், (வயது 77)
37. எஸ். செந்தில்நாதன், மாத்தளன், (வயது 28)
38. மேரிலூத், இளவாலை, (வயது 64)
39. மேரிபெனடிக்ற் மத்யூ, யாழ்ப்பாணம், (வயது 46)
40. கே. டினேஷ், யாழ்ப்பாணம், கோண்டாவில், (வயது 15)
41. எஸ். கனகம்மா, புதுக்குடியிருப்பு, (வயது 48)
42. வி. வேலாயுதம், முல்லைத்தீவு, முள்ளியவளை, (வயது 75)
43. எஸ். தனிகரன், புதுக்குடியிருப்பு, (வயது 28)
44. அகல்விழி, குமுழமுனை, (வயது 1.5),
45. பி. முல்லைச்செல்வி, குமுழமுனை, (வயது 03)
46. எஸ். ரத்னகுமார், யாழ்ப்பாணம், நல்லூர், (வயது 39)
47. எஸ். ருக்மணி, வவுனிக்குளம், (வயது 74)
48. பி. தங்கம்மா, மல்லாவி, (வயது 55)
49. பாக்கியம், (வயது 80)
50. வி. கந்தன், புத்தூர், (வயது 17)
51. கே. நஹினி, முல்லைத்தீவு, (வயது 65)
52. ஆர். வள்ளிநாயகி, பூநகரி, (வயது 68)
53. ஜீவன் நிலுக்ஷன், பூநகரி, (வயது 06)
54. ஏ. சிந்துஜா, கிளிநொச்சி, கணேசபுரம், (வயது 28)
55. ஜீவன்சிகு, மல்லாவி, (வயது 02)
56. எஸ். பொன்னம்மா,
57. என். இராமசாமி, பூநகரி, (வயது 74)
58. கே. சிவகுரு, பேராளை, பளை, (வயது 70)
59. ஏ.சகமலர், அடம்பன், (வயது 38),
 60. ஏ. அக்குத்தம்மா, அடம்பன், (வயது 69),
61. ஜயனுதன், அடம்பன், (வயது 1.5)
62. ரி. சசிதா, கிளிநொச்சி, திருவையாறு, (வயது 31)
63. எஸ். பிரதீப், முல்லைத்தீவு, செல்வபுரம்,
64. எஸ். செல்வராசா, கொடிகாமம், (வயது 47)
65. எஸ். மாணிக்கம், யாழ்ப்பாணம், அளவெட்டி, (வயது 71)
66. எஸ். சாருஸன், முல்லைத்தீவு, செல்வபுரம், (வயது 07)
 

முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் சர்வாதிகார செயற்பாடுகள் அம்பலம்

bush.jpgஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டப்ளியு. புஷ் பயங்கரவாதத்துக்கெதிரான போராட்டம் என்ற போர்வையில் முன்னெடுத்த போரின் கொடுமைகள்,அநீதிகள், பாரபட்சங்கள் என்பன தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அமெரிக்க நீதித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கைகளிலிருந்து இவை அம்பலமாகியுள்ளன. அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் முதல்முறையாக இவை வெளிச்சத்துக்கு விடப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதியின் போர் உபாயங்கள் அனைத்தும் முரண்பாடுகளை உண்டாக்கியதுடன்  மனித உரிமைகளை மீறும் செயல்களாக அமைந்திருந்ததாக அமெரிக்க நீதித் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் பராக் ஒபாமா தனது போர்த் திட்டங்களை மாற்றி அப்பாவிகள் தண்டிக்கப்படுவதையும் அமெரிக்காவுக்கெதிராக உலகளவில் வியாபித்து வரும் எதிர்ப்புக்கள்ää வெறுப்புக்களை துடைத்தெறியவும் முயற்சிக்கவுள்ளார்.

அமெரிக்க நீதித் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்கா தாக்கப்பட்டதிலிருந்து ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடந்து வரும் அட்டூழியங்கள்ää அத்துமீறல்களை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க காங்கிரஸ் வழங்காத அதிகாரங்களை ஜோர்ஜ் புஷ் தன்னிச்சையாகப் பெற்றுக்கொண்டு போரை நடத்திய முறை தனிமனித சுதந்திரத்தை சீரழித்துள்ளதுடன் புஷ்ஷை ஒரு சர்வாதிகாரியாக்கியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001ஆம், 2002ஆம்,2003ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான இராணுவ சித்திரவதைகள், கைதுகள், தாக்குதல்கள், மற்றும் அபுகுரைப், குவான்தனாமோ சிறைகளின் துன்பங்கள்,  கொடுமைகளை இந்த அறிக்கை தெளிவாகக் காட்டியுள்ளதுடன் அவை அனைத்தும் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதென்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள பிரபல சட்டவல்லுனர்கள், நீதிபதிகள், குற்றவியல் நிபுணர்கள் இந்த அறிக்கையைத் தயாரிக்க உதவியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பதவிக்கு வந்ததும் போர் உத்திகளை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்டார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள நீதித் திணைக்களத்தின் அறிக்கை ஒபாமாவின் போர்க் கொள்கையில் விரைவில் மாற்றம் ஏற்படுத்த வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் தொடர்பாடலுக்கான யூதர்கள் நிலையத்தில் பேசிய ஹோல்டர், பயங்கரவாதத்துக்கெதிரான போரில் நடந்தேறிய கொடுமைகளை என்னால் ஏற்கமுடியாது. சரிப்படுத்த இயலாது. நியாயப்படுத்தவும் முடியாது என்றார்.

குவான்தனாமோ சிறைச் சாலையிலுள்ள கைதிகள் உடனடியாக விசாரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கான அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட வேண்டும். மேலும் அச்சிறைச்சாலை மூடப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி பராக் ஒபாமா முன்னர் கூறியிருந்தார். சுமார் 800 சிறைக்கைதிகள் ஒபாமா பதவியேற்றபின்னர் விடுதலை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று நாடு திரும்பினர்

crc-04032009.jpg பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளனர்.தாயகம் திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களைக் குடும்பத்தினர் விமான நிலையம் சென்று அழைத்துவந்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை பாகிஸ்தான் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய சமவத்தின் போது காயமடைந்த திலான் சமரவீர சத்திரசிகிச்சைகளுக்காக நவலோக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருந்த போதிலும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

crc-04032009-01.jpg

முல்லைத்தீவிலிருந்து திருமலை ஆஸ்பத்திரியில் சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டோர் விபரம்

vanni-injured.gifபெப்ரவரி 28 சனிக்கிழமை இரவு திருகோணமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட (முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட) 281 பொதுமக்களின் பெயர் விபரங்கள் வருமாறு;

1.ரி.நிதர்ஸனா, மாங்குளம், (வயது9),
2.ரி.கவிப்பிரியா, மாங்குளம், (7 மாதம்),
3.ரி.சிவமணி, மாங்குளம், (வயது30),
4.ரி.சிவயாகம், மாங்குளம், (வயது4),
 5.ரி.சிதுஜா, மாங்குளம், (வயது7),
 6.ரி.ஆண்டியம்மா, மாங்குளம், (வயது39),
 7.எஸ்.சுஜோதனன், வற்றாப்பளை, (வயது14),
 8.எஸ்.வசந்தாதேவி, வற்றாப்பளை, (வயது40),
9.பி.சேதுநாயகி, முரசுமோட்டை, (வயது71),
10.கே.பஞ்சாட்சரம், முரசுமோட்டை, (வயது72),
11.எஸ்.குருசேன, மாங்குளம், (வயது21),
12.சித்திரசேன, மாங்குளம், (வயது25),
13.ஏ.பொன்னுத்துரை, மாங்குளம், (வயது75),
14.கே.ரசீன்குமார், பூநகரி, (வயது33),
15.ஏ.செல்வராசா, விசுவமடு, (வயது58),
16.சிவபாதசுந்தரம், பருத்தித்துறை, (வயது34),
17.எஸ்.செபஸ்டின், விசுவமடு, (வயது68),
18.கே.பிரபாகரன், முரசுமோட்டை, (வயது33),
19.பி.எப்ரஹாம், அக்கராயன்குளம், (வயது14),
20.ஆர்.பத்மலோஜினி, பூநகரி, (வயது23),
21.கே.அன்னபூரணம், பூநகரி, (வயது56),
 22.பி.தர்மலிங்கம், பொக்கணை, (வயது67),
23.கே.நாகநாதினி, முல்லைத்தீவு, (வயது26),
24.கே.விதுஸா, முல்லைத்தீவு, (வயது2),
25.என்.நவநீதன், வலையர்மடம், (வயது26),
26.எம்.அன்பழகன், முத்தையன்கட்டு, (வயது34),
27.பி.செல்வமதி, முத்தையன்கட்டு, (வயது33),
28.யு.குவிந்தன், இரணைப்பாலை, (வயது05),
29.யு.சித்திரா, இரணைப்பாலை, (வயது30),
30.யு.தனுஷன், இரணைப்பாலை, (வயது08),
31.பி.தவயோகராஜா, மாத்தளன், (வயது42),
32.நவரத்னம், கட்டைக்காடு, (வயது75),
33.எஸ்.மாணிக்கராசா, முல்லைத்தீவு, (வயது72),
34.என்.உமாந்தினி, கிளிநொச்சி, (வயது25),
 35.நவரசன், கிளிநொச்சி, 3மாதம்,
36.கே.மகேந்திரநாதன், கிளிநொச்சி,
37.ஆர்.சொக்கலிங்கம், பொக்கணை, (வயது64),
38.கே.ரோசம்மா, பொக்கணை, (வயது83),
39.எஸ்.தம்பையா, (வயது64),
40.என்.சண்முகநாதன், வட்டக்கச்சி, (வயது35),
41.எஸ்.சுப்பிரமணியம், பொக்கணை, (வயது71),
42.எஸ்.நஸீதா,
43.பெயர் தரப்படவில்லை,
44.வி.ராதா, கிளிநொச்சி, (வயது36),
45.வி.அஜந்தன், கிளிநொச்சி, (வயது05),
46.ஏ.மரியதாஸ், வள்ளியர்மடு, (வயது74),
47.ரி.யோகராஜா, பளை, (வயது40),
48.ஆர்.வேலாயுதம்,
49.எஸ்.நடராசா,
50.எஸ்.கோகிலாதேவி, உருத்திரபுரம், (வயது35),
51.எஸ்.கிஷாந்த், உருத்திரபுரம், (வயது09),
52.யசிதா,
53.எஸ்.பதிரதனன்,
54.என்.லெட்சுமி,
55.சி.சருபாஸ்,
56.எஸ்.துளசிங்கம்,
57.எஸ்.சாந்தி, மல்லாவி, (வயது79),
58.கே.பசுபதி, நெடுங்குளம், (வயது87),
59.எஸ்.ஜனசுந்தரி, கிளிநொச்சி, (வயது55),
60 எஸ்.அழகராணி, (வயது40),
61.ஆர்.சுந்தரலிங்கம், மல்லாவி, (வயது45)
62.ஜெகதீஸ்வரி, பளை, (வயது33),
63.சுஜந்தினி, பளை, (வயது05),
64.ஜே.துஸீபன், பளை, (வயது2),
65.என்.சுகந்திரன், புதுக்குடியிருப்பு, (வயது69),
66.எஸ்.ஆலன், புதுக்குடியிருப்பு, (வயது52),
67ஆர்.மகேஸ்வரி, வேறாவில், (வயது67),
68.எஸ்.ஜரின்சன், புதுக்குடியிருப்பு, (வயது16),
69.சகாயநாதன், புதுக்குடியிருப்பு, (வயது47),
70.ஆர்.ரேணுகா, யாழ்ப்பாணம், (வயது15),
71.ஏ.அன்னலட்சுமி, மாத்தளன், (வயது5),
72.டினோஜினி, இரணைப்பாலை, (வயது8),
73.ஆர்.நிவாதா, இரணைப்பாலை, (வயது10),
74.டி.ஜனம்மா, யாழ்ப்பாணம், (வயது60),
75.ரி.ராமேஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது31),
76.ரி.டிலுக்ஷன், (வயது1), 77.ரி.ஜன்ஸிலா, (வயது36),
78. ஜே. ஜெயபாலன், பொக்கணை, ( 33 வயது),
79. பிரதீஷன்,பொக்கணை, (2 மாதம்),
80. சரஸ்வதி, கிளிநொச்சி,(36 வயது),
81. யு.சிவாஜினி,முல்லைத்தீவு, (30 வயது),
82. ஜே. சிவமணி,வலையர்மடம், (50 வயது),
83. யு.கிஷாலன், வலையர்மடம்,(04 வயது),
84. மகிதா, பளை, (04 வயது),
85. சந்திரோதயம், பளை,(54 வயது),
86. பெயர்தரப்படவில்லை,
87. எஸ். மீனாட்சி, விசுவமடு, (69 வயது),
88. பி. சந்திராவதி, மாத்தளன், (32 வயது),
89. பி.அனுராசன், மாத்தளன்,(02 வயது),
90. பி. கயல்விழி, மாத்தளன், (07 வயது),
91. ஐ.மருதனார்,வன்னிக்குளம்,(73 வயது),
92. முனியாண்டி, யாழ்ப்பாணம், (71 வயது),
93.வள்ளியம்மா,வல்லிபுரம்,புதுக்குடியிருப்பு,(53 வயது),
94. என்.புவனேஸ்வரி, கிளிநொச்சி, (52 வயது),
95. ஆர். மகேஸ்வரி, பூநகரி,(67 வயது),
96. கே.ராசையா,புதுக்குடியிருப்பு, (59 வயது),
97. ரி.சிவபாக்கியம், அச்சுவேலி,(77 வயது),
98. ரி. சச்சிதானந்தம், சாவகச்சேரி,(66 வயது),
99. வை. யோகரூபன், மாங்குளம், (15 வயது),
100. எஸ்.சின்னராசா,கிளிநொச்சி, (60 வயது),
101. ஆர்.தம்பிநாதன், ஐயங்குளம், மல்லாவி,(73 வயது),
102. ரி. திலகவதி, மல்லாவி,(72 வயது),
103. லெயானியா, வட்டக்குளம் ,முள்ளியவளை, (8 வயது),
104. ரி. ஜெகதீஸ்வரி, கட்டவெளி, மல்லாவி, (39 வயது),
105. எஸ்.நாகலிங்கம்,(64 வயது),
106. வை.யோகசுகந்தினி,மாங்குளம், (10 வயது),
107. யோகதர்ஷினி, மாங்குளம்,(12 வயது),
108. எஸ். யோகநாதன்,மாங்குளம்,(51 வயது),
109. வை. யோகமதுஷன், மாங்குளம், (5 வயது),
110.எஸ். சிவதர்ஷினி, மூங்கிலாறு, (31 வயது),
111. எஸ். கலைக்குமரன்,மூங்கிலாறு , (8 மாதம்),
112. எஸ்.சின்னத்துரை, கிளிநொச்சி, (81 வயது),
113. பி. இராசையா ,திருவையாறு (65 வயது),
114. கே.ராஜா,மாத்தளன் , (33 வயது),
115. கே.பவிசா, மாதளன், (4 மாதம்),
116. ஆர். குவின்சி, பூநகரி, (28 வயது),
117. எம். சின்னமலர் , பூநகரி, (56 வயது),
118. யு.ஜெயந்தினி, கந்தரபுரம்,(36 வயது),
119. யு. சருஸன் , கந்தபுரம், (8 மாதம்),
120. கே.சர்மிளா, கந்தபுரம் (4 வயது),
121. ஜி. பிரதீபா ,மாங்குளம், ( 26 வயது),
122. ஜே.ஜெயந்த பத்மினி, கிளிநொச்சி, (53 வயது),
123. பி.பொன்னம்பலம் , மாத்தளன், (67 வயது),
124. ஜே. லோஜினி தேவி ,பொக்கணை, (25 வயது),
125. என்.சரஸ்வதி, புதுக்குடியிருப்பு, (60வயது),
126. மது,புதுக்குடியிருப்பு, (8 மாதம்),
127. ஜி.அந்தனிப்பிள்ளை,கிளிநொச்சி, (90வயது),
128.ஏ.அபிராமி, இணுவில், (29வயது),
129.ஏ.கோபிஷன், இணுவில், (4வயது),
130.ஏ.கோபிகா, இணுவில், (2வயது),
131.பி.முருகேசன், யாழ்ப்பாணம், (77வயது),
132. ஜே.சரஸ்வதி, புதுக்குடியிருப்பு, (65வயது),
133.எஸ்.வர்ஸிகா, புதுக்குடியிருப்பு, (2வயது),
134.எஸ்.மேகலா, புதுக்குடியிருப்பு, (27வயது),
135.கே.உமாதேவி, திருகோணமலை, (65வயது),
136.ஆர்.கலியுகவரதன், திருமலை, (68வயது),
137.ரி.விஸ்நவி, மாத்தளன், (1.5வயது),
138.ரி.சங்கீதா, மாத்தளன், (27வயது),
139.சோயிட், தேவிபுரம், (77வயது),
140.எஸ்.சூசைநாயகம், அடம்பன், (53வயது),
141.தேவநாயகி, மாத்தளன், (66வயது),
142.ஜே.சின்னப்பிள்ளை, கிளிநொச்சி, (73வயது),
143.எஸ்.வல்லசாமி, மன்னார், (76வயது),
144.எஸ்.நாகமணி, யாழ்ப்பாணம், (68வயது),
145.எஸ்.குகனேஸ்வரி, முள்ளியவளை, (26வயது),
146.எம்.ஜெயதுஷா, முள்ளியவளை, (25வயது),
147.ஜே.அன்னலட்சுமி, மாத்தளன், (35வயது),
148.எஸ்.விதுஜலிங்கம், பரந்தன், (92வயது),
149.யு.குகன்ஜன், வவுனியா, (22வயது),
150.ஜி.சுதர்ஸா, கிளிநொச்சி, (11வயது),
151.ஜி.சித்திரதேவி, கிளிநொச்சி, (40வயது),
152.ஜி.லக்ஸிகா, கிளிநொச்சி, (07வயது),
153.ரி.மீதோமியா, மன்னார், (84வயது),
154.எம்.மரியதாஸ், மன்னார், (78வயது),
155.அனுராஜா, பூநகரி, (18வயது),
156.எஸ்.செபமாலை, மன்னார், (69வயது),
157.அருளானந்தம், மன்னார், (85வயது),
158.ஆர்.யோகமலர், உருத்திரபுரம், (58வயது),
159. ஆர். தவச்செல்வி, உருத்திரபுரம் (வயது 33),
160. ரட்ணசிங்கம், புதுக்குடியிருப்பு, (வயது 62),
161. எஸ். கதிரேசன், பொக்கணை, (வயது 64)
162. எஸ். சந்திரதேவி, பரந்தன், (வயது 65),
163. பி.ரசக்கனிஜா, இரணைப்ப்பாலை, (வயது 52)
164. பி. பாலரஜினி, இரணைப்பாலை, (வயது 25),
165. கே. ரேஷ்வரி, முறிகண்டி, (வயது 60),
166. எஸ். தங்கமலர், துணுக்காய், (வயது 44),
167. பேபிக்கா, துணுக்காய், (வயது 14),
168. எஸ். சிறிகாந்தன், திருநகர், கிளிநொச்சி, (வயது 60),
169. வீ.செல்வதி, கோயிலடி, தம்பலகமம், (வயது 25),
170. நிலோஷன், கோயிலடி, தம்பலகமம், (வயது 1.5),
171. பி. அன்னப்பிள்ளை, காத்தார்குளம், மன்னார், (வயது 56),
172. ஏ.சியாமளா, மன்னார், (வயது 27),
173. ஏ. அபிநயா, மன்னார், (வயது 3.5),
174. கே.மலர்மதி, தம்பலகமம், (வயது 44),
175. விக்டோரியா, அடம்பன், (வயது 47),
176. ரி. கவிரேக்ஷன், கிளிநொச்சி (வயது 22),
177. அலிலன், கிளிநொச்சி (வயது 1),
178. கே. சாந்தி, இரணைப்பாளை, (வயது 29),
179. செய்துன் பீபீ, பலாங்கொட, (வயது 62),
180. காதர் முகைதீன், வன்னிக்குளம், (வயது 72),
181. அஞ்சலி லிங்கம், ஆட்காட்டிவெளி, கிளிநொச்சி (வயது 80),
182. செபஸ்டியன் பிள்ளை, பாஷையூர், (வயது 50),
183. கருணாநிதி, நல்லூர், யாழ்ப்பாணம், (வயது 68),
184. இந்திராணி, வவுனியா, (வயது 80),
185. சி.சந்திரகுமாரி, துணுக்காய், (வயது 31),
186. எஸ். தனுஷா, இரணைப்பாலை, (வயது 19),

187. சி.சந்திரசீலன், துணுக்காய், (வயது 31),
188. சி. சண்முகநாதன், இரணைப்பாலை, (வயது 50)
189. சரோஜினிதேவி, இரணைப்பாலை, (வயது 49),
190. வி. பராசக்தி, சாவகச்சேரி, (வயது 70),
191. ரி. தனுஷா, உதயநகர், கிளிநொச்சி, (வயது 33),
192. தர்ஷிகா, உதயநகர் கிளிநொச்சி, (வயது 05),
193.திலோயன், உதயநகர், கிளிநொச்சி, (வயது 03),
194. கே. புஷ்பவதி, நல்லூர், பூநகரி, (வயது 72),
195. பி.நாகம்மா, இரணைப்பாலை, (வயது 63),
196. மகிளினி, கிளிநொச்சி, (வயது 05),
197. வி.ராதிகா, கிளிநொச்சி, (வயது 40),
198. ரி. செல்வகுமார், கரவெட்டி, (வயது 21),
199. எஸ். சஜிவா, கிளிநொச்சி, (வயது 07),
200. எஸ். ஐங்கரன், கிளிநொச்சி, (வயது 09),
201. எஸ். அலைச்செல்வி, கிளிநொச்சி, (வயது 02),
202. எஸ். புஷ்பமலர், கிளிநொச்சி, (வயது 34),
203 கே. சிவதேவி, தண்ணீரூற்று, (வயது 59),
204. வி. பொன்னம்மா, முல்லைத்தீவு, (வயது 77),
205. எம். சரஸ்வதி, கல்மடு, (வயது 64),
206. வி. முத்துப்பளை, கிளிநொச்சி, (வயது 63),
207. எஸ். அன்னம்மா, காங்கேசன்துறை, (வயது 77),
208. ஜே. விஜேகுமாரி, முழங்காவில், (வயது 41),
209. ஜே.ஜெயமனோகரன், முழங்காவில், (வயது 41),
210. ரி. மல்லிகாதேவி, மும்முலமுனை, (வயது 41),
211. கே. பரமேஸ்வரி, புத்தூர், (வயது 73),
212. எஸ். அன்னம்மா, குமழமுனை, (வயது 74),
213. ஜே. வள்ளியம்மா, கிளிநொச்சி, (வயது 62),
214. கே. சேதுப்பிள்ளை, நகுலம், (வயது 79),
215. எஸ். அன்னீஸன், கிளிநொச்சி, (வயது 73),
216. எஸ். கருப்பையா, முல்லைத்தீவு, (வயது 63),
217. ஏ. புஷ்பலீலா, பளை, (வயது 59),
218. எஸ். பெருமாள், மாத்தளன், (வயது 69),
219. கே. பிரமவன், மல்லாவி, (வயது 07),
220. கே. தயாளினி, மல்லாவி, (வயது 37),
221. பாக்கியம், பளை, (வயது 57)
222. வி. சண்முகம், மன்னார், (வயது 72),
223. ரி. ஞானசேகரம், புதுக்குடியிருப்பு, (வயது 49),
224. ராஜேஸ்வரி, புதுக்குடியிருப்பு, (வயது 55),
225. எஸ். வேதநாயகம், மன்னார், (வயது 68),
226. அம்பிகாவதி, மன்னார், (வயது 62),
227. பத்திரகாளி, அடம்பன், (வயது 58),
228. சியம்பு, அடம்பன், (வயது 72),
229. எஸ். இராசதுரை, கிளிநொச்சி, கல்லாறு, (வயது 55),
230. ஏ. எலிஸபத், முழங்காவில், (வயது 74),
231. எம். ஆரோக்கியம், முழங்காவில், (வயது 72),
232. தயானந்த ராசா, பல்லவராயன்குளம், (வயது 03),
233. நிலவன், கிளிநொச்சி, (வயது 1.5),
234. சாலினி, கிளிநொச்சி, (வயது 06),
235. சர்யசன், பல்லவராயன்குளம், (வயது 03),
136. ஜெயலினி, பல்லவராயன்குளம், (வயது 09),
237. நாகேஸ்வரன், இரணைப்பாலை, (வயது 08),
238. கிருஷ்ணகுமார், இரணைப்பாலை, (வயது 32),
239. கே.தயாகரன், பளை, (வயது 30),
240. என். கண்மணி, பொக்கணை, (வயது 70),
241. கே. பரமேஸ்வரி, வவுனியா, (வயது 62),
242. ரி. பரமேஸ்வரி, முல்லைத்தீவு, (வயது 65),
243. ரி. கமலா, தண்ணீரூற்று, (வயது 60),
244. ரி. செல்லம்மா, பாரதிபுரம், (வயது 70),
245. ஆர். கண்ணிமணி, வவுனியா, (வயது 63),
246. கே.இராசையா, தர்மபுரம், (வயது 62),
247. வி. பிரதீஷ், புதுக்குடியிருப்பு, (வயது 13),
248. எஸ்.விமலநாதன், புதுக்குடியிருப்பு, (வயது41),
249. எஸ்.செல்வராசா, மாத்தளன், (வயது 65),
250. என்.யோகநாதன், யாழ்ப்பாணம், (வயது65),
251. கே.முத்தம்மா, கிளிநொச்சி, (வயது63),
252. வி.பார்வதிப்பிள்ளை, யாழ்ப்பாணம், (வயது 70),
253. இ.திலகவதி, நடுகண்ணி, (வயது 65),
254. எஸ்.சிவஞானம், நடுகண்ணி, (வயது 60),
255.கே.கண்மணி, அடம்பன், (வயது 49),
256.அவிஜின் பெரெரா, அடம்பன், (வயது 74),
257. இந்திரேஸ்வரி, வவுனியா, (வயது 60),
258. கிரிதரன், நெடுங்கேணி, வவுனியா, (வயது 49),
259.சிவகங்கை, முகமாலை, (வயது 70),
260. எஸ். சாரதாதேவி, வட்டக்கச்சி, (வயது 56),
261. ஆர். வித்திலிங்கம், குஞ்சுப்பரந்தன், (வயது 87),
262. ரி.குணசீலன், திருவையாறு, (வயது 70),
263. பெயர் தரப்படவில்லை,
264. எஸ். திருஞானக்கரசு, பளை, (வயது 60),
265. எஸ். வீரசிங்கம், மீசாலை, (வயது 82),
266. எம்.ராசம்மா, வட்டக்கச்சி, (வயது 62),
267. பி.கோணேஸ்வரி, தர்மபுரம், (வயது 35),
268. பி.சஜீவன், தர்மபுரம், (வயது 4),
269. பி.கலையரசி, தர்மபுரம், (வயது 8),
270. பி.கயல்விழி, தர்மபுரம், (வயது 8),
271. ஏ. கந்தசாமி, மாங்குளம், (வயது 73),
272. எம்.அரசம்மா, தர்மபுரம், (வயது 63),
273. ரி.நாகராணி, மன்னார், (வயது 50),
274. எஸ். வைத்தியலிங்கம், வவுனியா, (வயது 56),
275. கே.முருகையா, கிளிநொச்சி, (வயது 63),
276. ஏ.தவராசா, மன்னார், (வயது 52),
277. வை.ஷர்மிலன், மன்னார், (வயது 11),
278. ஏ.உவனீஸ், புன்னைராவி, (வயது 62),
279. எஸ்.தர்மராசா, புதுக்குடியிருப்பு, (வயது 56),
280. ரி.துரைராசா, கிளிநொச்சி, (வயது 56),
281. ரி.கந்தவனம், யாழ்ப்பாணம், (வயது 80).
 

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி கண்டனம்

obama.jpgஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளின் முக்கிய நிலையமாக பாகிஸ்தான் திகழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டிப்பதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.