செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கனடா தமிழர் செந்தாமரை ஆசிரியர் காலமானார்

கனடாவின் ரொறண்டோ நகரில் இருந்து வெளியாகும் “தமிழர் செந்தாமரை” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கனக அரசரத்தினம் (வயது 58) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலமானார்.

யாழ்ப்பாணம் காங்கேசந்துறையை பிறப்பிடமாகக் கொண்ட அரசரத்தினம் 1980 களில் ஆரம்பத்தில் வீரகேசரியில் ஒரு செய்தியாளராக இணைந்து தனது பத்திரிகைத்துறை வாழ்வை ஆரம்பித்தார். பாதுகாப்புத்துறை தொடர்பான செய்திகளை விறுவிறுப்புடன் தருவதில் பெயரெடுத்த அரசரத்தினம் இருபது வருடங்களுக்கு முன்னர் கனடாவிற்கு குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்தார்.

கனடாவில் அவர் வேறு தொழில் துறைகளில் ஈடுபடக் கூடிய வாய்ப்புகள் இருந்த போதிலும் கூட ஊடகத்துறையில் இருந்த அதீத ஈடுபாடு காரணமாக அங்கும் பத்திரிகை ஒன்றை ஆரம்பிப்பதிலேயே அக்கறை காட்டினார். தமிழர் செந்தாமரை என்ற வாரப்பத்திரிகையை சுமார் 15 வருடங்களாக ரொறண்டோவில் இருந்து வெளியிட்டுவரும் அரசரத்தினம் ஆண்டு விழாக்களில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து ஊடகவியலாளர்களையும் முக்கியஸ்தர்களையும் அழைத்து கௌரவிக்கத் தவறுவதில்லை. இவ்வருட விழாவுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே அவரது மரணம் சம்பவித்துள்ளது.

வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழ்ந்ததினால் தலையில் ஏற்பட்ட காயமே அரசரத்தினத்தின் மரணத்திற்கு காரணமாகியது. அவரது இறுதிக்கிரியைகள் ரொறண்டோவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தம் மீதான விசாரணை குறித்து இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்குக் கடிதம்

sampanthan.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தன் மீது இரகசிய பொலிசார் மேற்கொண்ட விசாரணைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“இவ்விசாரணையானது, ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையிலும் ஜனநாயக கட்சியொன்றின் தலைவர் என்ற அடிப்படையிலும் எனது சுதந்திரமான சிந்தனைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் தலையீடாக அமைவதாகவே நான் கருதுகினறேன்.

தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இடம் பெயர்ந்துள்ள மக்களைப் போர் நடக்கும் பகுதிகளிலோ அல்லது அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளிலோ சென்று பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். அரச ஊடகங்களில் குறிப்பிட்ட பத்திரிகையாளர் மாநாடு விமர்சிக்கப்பட்டமை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் என்னை விசாரித்தமை, உண்மைகளை அடக்குகின்ற ஒரு நோக்கத்துடன், எனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விரோதமான ஒரு முயற்சியாகவே நான் கருத வேண்டியுள்ளது.

எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. இந்நிலையில் இதனைத் தங்களுக்கு அறிவிப்பது எனது கடமை என்று நான் நினைக்கின்றேன். தங்கள் அரசாங்கத்தில் உள்ள சிலரால் மேற்கொள்ளப்படும் சீரற்ற நடைமுறைகள் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும்.”
 

தீக்குளிப்புகள் வேண்டாம்- உலுக்குகின்றன: வைகோ

26-vaiko.jpgதீக்குளிப்பு சம்பவங்கள் எனது இதயத்தை உலுக்கி எடுக்கின்றன. இனியும் இதுபோன்ற தீக்குளிப்புகளில் யாரும் ஈடுபடக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய வம்சாவளித் தமிழரான கோகுல ரத்தினம் இலங்கைக்கு மூன்று தலைமுறைக்கு முன்னால் சென்ற குடும்பத்தில் பிறந்தவர். 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் வந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனையூர் ஊராட்சி காந்தி நகரில் சிலோன் காலனியில் வசித்து வந்தார். ஈழத் தமிழர்கள் படும் துன்பத்தை எண்ணி பல நாட்களாக வேதனையில் தவித்து வந்துள்ளார். தியாகி முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபோது மனம் வெதும்பி வருந்தி உள்ளார். அவர் வசிக்கின்ற அத்தெருவில் முத்துக்குமார் வீரவணக்க சுவரொட்டிகள் காணப்படுகின்றன. அவர் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு முன்னால் தீக்குளித்து உடல்கருகி அந்த இடத்திலேயே மாண்டு விட்டார். அவர் எழுதிய கடிதமும், ரேசன் அட்டையும் பக்கத்தில் கிடந்தது.

அக்கடிதத்தில் இலங்கைத் தமிழருக்காகத் தீக்குளிக்கிறேன் என்று ஒன்றுக்கு மூன்று முறை குறிப்பிட்டு எழுதி உள்ளார். நான் ஒரு திமுக தொண்டன் உடன் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். உடன் காப்பாற்று. தமிழா எழுந்திரு, தமிழா உயிரைக்கொடு என் தமிழ்மக்களைக் காப்பாற்ற எனது உயிரை அர்ப்பணிக் கிறேன். இதுதான் எனது கடைசி ஆசை உடனடியாக என் தமிழர்களைக் காப்பாற்று என்று வேண்டி விரும்புகிறேன்.

டாக்டர் கலைஞர் உடல் நலம் முன்னேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என் உயிரை தமிழ் மக்களுக்காகவும், தமிழினத் தலைவர்களுக்காகவும் அர்ப்பணிக்கிறேன். இலங்கையில் வாழும் தமிழர்களுக்காகவும், இந்தியாவில் வாழும் தமிழக மக்களுக்காகவும் நான் தீக்குளித்து எனது உயிரை தமிழ் உணர்வுக்காக என் உயிரை தமிழ் மண்ணுக்காக விட ஆசைப்படுகிறேன்.

தமிழினத் தலைவர் உடல்நிலை நல்லபடியாக குணமடைய என்னுடைய உயிரை விடுகிறேன். திருமாவளவனைக் கைது செய்யாதே- வைகோவை கைது செய்யாதே- ராமதாசை கைது செய்யாதே- பழ. நெடுமாறனைக் கைது செய்யாதே. நான் ஒரு தமிழன் என்று எழுதி கோகுலரத்தினம் என்று கையெழுத்து இட்டுள்ளார்.

இவருக்கு ஒரு மகனும், இரண்டு புதல்வியரும் உள்ளனர். மூத்த பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவரது மகன் கிருஷ்ண ஆனந்தராஜ் கும்பகோணம் கள்ளப்புலியூர் கல்லூரியில் பி.ஏ. படிக்கிறார்.

ஈழத் தமிழர்களுக்காக ஏற்கனவே தீக்குளித்து உயிர்துறந்த முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், சென்னை சிவப்பிரகாசம் வரிசையில் ஏழாவது தியாகியாக கோகுலரத்தினம் தீக்குளித்து ஈழத்தமிழருக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

அவரது உன்னதமான தியாகத்தைப் போற்றி அவரது உடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினேன். ஈழத் தமிழர்களைக் காக்க நெருப்பில் தங்களை கருக்கிக் கொள்ளும் துணிவும், தியாகமும் நம் நெஞ்சை உலுக்குகிறது எனினும், அந்தக் குடும்பங்களின் வேதனையும், துயரமும் அதைவிட கடுமையானதாகும்.

எனவே, இனியாரும் தீக்குளிக்க வேண்டாம். உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடி வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

இஸ்லாமாபாத் மரியாட் ஹோட்டலில் தீவிபத்து

பாகிஸ் தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தீவிரவாதிகளால் கடந்த ஆண்டு தாக்கப்பட்ட மரியாட் ஹோட்டலில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி மரியாட் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஹோட்டலின் பெரும் பகுதி கருகிப் போனது. இதையடுத்து சீரமைக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் முதல் ஹோட்டல் செயல்படத் தொடங்கியது.

இந்த நிலையில் இன்று காலை மரியாட் ஹோட்டலில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பலர் படுகாயமடைந்தனர்.தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. காயமடைந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஹோட்டலின் சமையலறையிலிருந்துதான் தீ பரவியுள்ளது. இந்தத் தீ 2வது மாடியின் பெரும் பகுதியில் பரவியது.

சர்வகட்சிக் குழுவின் இறுதி அறிக்கை தயார்: அமைச்சர் திஸ்ஸ வித்தாரண

Minister Tissa Vitharanaஇலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராயப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கை தயாராகவிருப்பதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். நிறைவேற்று அதிகார முறையை ஒழித்தல் மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் முறையை மீண்டும் அமுல்படுத்தல் போன்ற பிரதான விடயங்கள் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக அவர் கூறினார்

பா.உ இரா.சம்பந்தனிடம் 4 மணி நேரம் சி.ஐ.டி விசாரணை.குடியுரிமை பறிபோகும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவிப்பு.

sampanthan.jpgகுற்றப் புலனாய்வுத்துறை பொலிஸாரினால் 4 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. நேற்று முன்தினம் (26.02.2009) காலை 9 மணி முதல் பிற்பகல் 01.30 மணிவரையில் குற்றப்புலனாய்வுப் பிரிவி;ன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சேனக குமாரசிங்க தலைமையில் விசாரணை இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் இறையாண்மைக்கு எதிராகவும் நாட்டில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான புலிகள் அமைப்பிற்கு ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருவது தொடர்பில் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது. சம்பந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் பதிலறிக்கையின் பின்னர் நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிக்கப்படும் எனத் தெரியவருகின்றது.

இதேவேளை சம்பந்தன் தெரிவித்துவரும் கருத்துக்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்போது அவரின் குடியுரிமை பறிக்கப்படுவதுடன், சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

632 பேர் நலன்புரி முகாங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

red-cr.jpgசர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து 5 கட்டங்களாக திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட 1996 பேரில் 632 பேர் சிகிச்சைகளின் பின்னர் நலன்புரி முகாங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுமாத்தளன் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட நோயாளர்களில் இதுவரையில் 788 பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் 1234 பேர் அருகிலுள்ள ஏனைய பிரதேச வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏற்கனவே மாற்றப்பட்டோரில் 150 பேர் மன்னார் வைத்தியசாலைக்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் 6 குழந்தைகளை பிரவசித்துள்ளனர். அனுமதிக்கப்பட்டோரில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் புதுமாத்தளன் பகுதியில் தங்கியுள்ள நோயாளர்களை அழைத்து வருவதற்கு ஐ.சி.ஆர்.சி நடவடிக்கையினை எடுத்து வருகின்றது.

மேல் மாகாண சபைத் தோ;தல் ஏப்ரல் 25ஆம் திகதி- தேர்தல்கள் செயலகம் இன்று அறிவிப்பு

election_ballot_.jpgமேல் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் இன்று அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் முடிவடைந்தன. இதனையடுத்தே தேர்தல் நடைபெறும் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண சபையில் 102 ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக இம்முறை 19 அரசியல் கட்சிகளையும் 26 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 2581 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேல் மாகாண சபை கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புலித் தலைவர்களின் சுகபோக நீச்சல் தடாகம் கண்டுபிடிப்பு!

ltte_swimming_pool.jpgபுலிகளின் முக்கிய தலைவர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் சுகபோக நீச்சல் தடாகம் ஒன்றை புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலிருந்து படையினர் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. புதுக்குடியிருப்பில் முன்னேறிக் கொண்டிருக்கும் இராணுவத்தின் 58 ஆவது படையணியினர்
புலிகளுடன் நடத்திய கடும் மோதலின் பின்னர் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

50 அடி நீளமும் 30 அடி அகலமும் 7 அடிக்கு மேல் ஆழமும் கொண்ட இந்த நீச்சல் தடாகத்தில் மேலே ஏறிக்குதிக்கும் பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஆகாயத்திலிருந்து அவதானிக்க முடியாதவாறு மேல்விதானம் அமைக்கப்பட்டுள்ளது. நீச்சல் தடாகத்தை சுற்றிவர சிறு சிறு குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து இது புலிகளின் முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடும் இடம் எனக் கருதப்படுகின்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிந்திக் கிடைத்த தகவல்களின்படி புலிகள் 58 சதுர கிலோ மீற்றர் எல்லைக்குள் சுற்றிவளைக்கப் பட்டுள்ளனர் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ltte_swimming_pool-01.jpg

முல்லைத்தீவிலிருந்து செவ்வாய் இரவு திருமலைக்கு அழைத்துவரப்பட்டோர் விபரம்

red-cr.jpgமுல்லைத் தீவிலிருந்து கப்பலில் கூட்டிவரப்பட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட ஐந்தாவது தொகுதியில் இடம்பெற்ற 386 நோயாளிகளின் பெயர்களும் வருமாறு:

1.என். தவமணி, பொக்கணை, (வயது 47),

2.எஸ். குலசிங்கம் (வயது 20),

3.கே. ஜெகதீஸ், பள்ளித்துறை, யாழ்ப்பாணம்,

4. கே. இளந்திரையன், முள்ளியடி, பளை (வயது 46),

5. பெயர்தரப்படவில்லை (எக்ஸ்ரே பிரிவில்),

6. துஷ்யந்தன், முல்லைத்தீவு (வயது 9),

7. சிவமலர், முள்ளியவளை (வயது 63),

8.நாகேஸ்வரன், முல்லைத்தீவு (வயது 47),

9.கே. மணிமாலா, முறிகண்டி (வயது 43),

10. ரி. சரஸ்வதி, பருத்தித்துறை (வயது 63),

11. அமிர்தராஜா, முள்ளியவளை (வயது 61),

12. கனகசபாபதி (வயது 67),

13. ரி. இம்மானுவல் (வயது 60),

14.ஐ. திலகவதனம், விஸ்வமடு (வயது 50),

15. கே. காந்தரூபி, ஜயபுரம் (வயது 35),

16. தனுஷன், பூநகர், கிளிநொச்சி (வயது 7),

17. தனுஷன், பூநகர், கிளிநொச்சி (வயது 9),

18. கௌசிகன், பூநகர், கிளிநொச்சி (வயது 04),

19.ஜெயகுமரன், கிளிநொச்சி (வயது 30),

20. ரி. சாந்தன், முல்லைத்தீவு (வயது 62),

21. எஸ். மரியா, முல்லைத்தீவு (வயது59),

22. எஸ். தர்மலிங்கம், தாமரைக்கேணி (வயது 77),

23. காந்தரூபன், இராமநாதபுரம், கிளிநொச்சி (வயது 19),

24. எஸ். கந்தசாமி, இராமநாதபுரம், கிளிநொச்சி (வயது 59),

25. ஜி. திரேஸா, கிளிநொச்சி (வயது 49),

26. எஸ். சந்திரதேவி, முல்லைத்தீவு (வயது 60),

27. பி. இந்திரா தேவி, முல்லைத்தீவு (வயது 58),

28. ரி. மகேஸ்வரி, வட்டக்கச்சி, கிளிநொச்சி (வயது 68),

29. ஆர். துஷ்றி (வயது 13),

30. என். ஸ்ரீதரன், கிளிநொச்சி (வயது 53),

31. பி. ரோஜிதா, விஸ்வமடு, கிளிநொச்சி (வயது 8),

32. ஜயகதா, விஸ்வமடு, கிளிநொச்சி (வயது 35),

33.எஸ். சின்னம்மா, 154, செல்வபுரம் (வயது 68),

34. கே. நாராயணசாமி, முள்ளியவளை, பூத்தம்வலி (வயது 45),

35. என். பகிரதன், குகன்வலி, முள்ளியவளை (வயது 18),

36. ரி. துரைரதன், தெல்லிப்பழை, யாழ்ப்பாணம் (வயது 71),

37. ரி. சீதா, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம் (வயது 66),

38. என். ஸ்ரீதர்சன், கிளிநொச்சி (வயது 53),

39. பி. கமலாம்பிகை, தெல்லிப்பழை (வயது 21),

40. கே. இந்துமதி, கடையிருப்பு (வயது 44),

41. பி. கணேசமூர்த்தி, வவுனியா (வயது 46),

42. ரி. யசுகரன், முறிப்பு, கிளிநொச்சி (வயது 17),

43. எம். கருப்பையா, கொக்காவில், கிளிநொச்சி (வயது 58),

44. வி. நல்லையா, சிவநகர், கிளிநொச்சி (வயது 85),

45. எஸ். ஜசிந்தவா, முறிப்பு, கிளிநொச்சி (வயது 7),

46. வி. கதிரவேல், செல்வநகர், கிளிநொச்சி (வயது 70)

47.எஸ். சிறிவிக்னேஸ்வரன், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு (வயது 46),

48. கே. மோகன், முல்லைத்தீவு (வயது 42),

49. என்.சிவகுமார், கனகபுரம், கிளிநொச்சி (வயது 34),

50. எம். சசிகுமார், கிளிநொச்சி, கனகராயன்குளம் (வயது 15),

51.என். சந்திரா, கனகபுரம் புளியங்குளம் (வயது 33),

52. என். சயந்தனை, கனகபுரம், புளியங்குளம் (வயது 5),

53.ஜயந்தனை, கனகபுரம், புளியங்குளம் (வயது 8),

54. பி. வேலாயுதம், காரைநகர், யாழ்ப்பாணம் (வயது 61),

55. எஸ். மரியன் சுவாமி, யாழ்ப்பாணம் (வயது 80),

56.கே. யோகேஸ்வரி, கிளிநொச்சி (வயது 34),

57. கோகிலவதனி, கிளிநொச்சி (வயது 04),

58. கே. நவரத்னராஜா, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (வயது 55),

59. பி.ஏ.கௌசல்யா, பொக்கணை, முல்லைதீவு (வயது 47),

60. ரி. சரஸ்வதி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (வயது 63),

61. ஜி. சரோஜாதேவி, கிளிநொச்சி (வயது 36),

62. ஜி. ஹர்ஷன், கிளிநொச்சி (வயது 4),

63. என். கமலேஸ்வரன், முள்ளியவளை (வயது 41),

64. என். ஜெயகுமார், கனகபுரம், கிளிநொச்சி (வயது 33),

65. எஸ். இந்துமதி, விநாயகபுரம், கிளிநொச்சி (வயது 35),

66. நிலாரேஷன், விநாயகபுரம், கிளிநொச்சி (வயது 08),

67. எஸ். துஸ்மின், விநாயகபுரம், கிளிநொச்சி (வயது 07),

68. மோஹனதாஸன், கனகபுரம், கிளிநொச்சி (வயது 17),

69. வி. சிவராசா, 2 ஆவது ஒழுங்கை, முல்லைத்தீவு (வயது 52),

70. பி. சார்லிங், நிலாபுரம், வவுனியா (வயது 39),

71. சார்ள்ஸ் மத்தியூ, வவுனிக்குளம், முல்லைத்தீவு (வயது 63),

72. நாகரத்னம் (வயது 55),

73. கே. விவேகானந்தராசா, யாழ்ப்பாணம் (வயது 66),

74. பி. கேதீஸ்வரன், யூனிட் 7, முல்லைத்தீவு (வயது 43),

75. பி. யோகபாக்கியம், புளியங்குளம், திருகோணமலை (வயது 56),

76. மங்களாதேவி, கிளிநொச்சி (வயது 60),

77. எம். மகேஸ்வரி, புங்குடுதீவு முல்லைதீவு (வயது 61),

78. புஸ்கி, வன்னேரியன், கிளிநொச்சி (வயது 06),

79. ஏ. ரஜினி, வன்னேரியன், கிளிநொச்சி (வயது 36),

80. அகஸ்தின், வன்னேரியன், கிளிநொச்சி (வயது 04),

81. பி. சரஸ்வதி, மாத்தளன், முல்லைத்தீவு (வயது 53),

82. ரி. ராஜ்குமார், அடம்பன் கிளிநொச்சி (வயது 09),

83. எஸ். மைக்கல், கிளிநொச்சி (வயது 72),

84. வி. புண்ணியமூர்த்தி, புளியங்குளம் (வயது 60),

85. எஸ். சீதானம், பரியாமுல், கிளிநொச்சி (வயது 54),

86. எஸ். யோகரத்னம், நல்லூர், யாழ்ப்பாணம் (வயது 55),

87. கமலாவதி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (வயது 42),

88. கன்ஸன், பூநகர், கிளிநொச்சி (வயது 65),

89. பி. தேவசகாயம், அடம்பன், மன்னார் (வயது 67),

90. டி. றீற்றம்மா, அடம்பன், மன்னார் (வயது 63),

91. காளியம்மா, கனகராயன் குளம், வவுனியா (வயது 80),

92. எஸ். சுப்பிரமணியம், கனகராயன்குளம், வவுனியா (வயது 63),

93. எஸ். கமலாதேவி, முல்லைத்தீவு (வயது 71),

94. கே. பாலசுப்பிரமணியம், கனகபுரம், கிளிநொச்சி, (வயது 63),

95. ஜி. புனிதவள்ளி, கிளிநொச்சி (வயது 59),

96.பேபி தருண், முல்லைத்தீவு (3 மாதம்),

97. ஜே. பத்மினி, முல்லைத்தீவு (வயது 39),

98. தனுஷ்யா, முல்லைத்தீவு (வயது 15),

99. சபாரத்னம், முல்லைத்தீவு (வயது 62),

100. டி. பரமேஸ்வரி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (வயது 60),

101. ஜி. துஷ்யந்தி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (வயது 19),

102. எஸ். நவமணி, கிளிநொச்சி (வயது 47),

103. எஸ். திலங்கராஜா, மன்னார் (வயது 72),

104. ரவீந்திரன், அடம்பன், மன்னார் (வயது 48),

105. பி. பாக்கியலட்சுமி, கிளிநொச்சி (வயது 75),

106. வி. உஷாநந்தனி, கிளிநொச்சி (வயது 35),

107.பி. வர்தராணி, தர்மபுரம், கிளிநொச்சி (வயது 50),

108. பி. கணபதிப்பிள்ளை, விஸ்வமடு, கிளிநொச்சி (வயது 65),

109. ஹெலன்ஜோஷி, அடம்பன், மன்னார் (வயது 49),

110. பி. ஞானப்பிரகாசம், ஜயந்திபுரம், கிளிநொச்சி (வயது 69),

111. கணபதிப்பிள்ளை, உடையார்கட்டு, முல்லைத்தீவு (வயது 64),

112. எஸ். மஞ்சுனன் (வயது 14),

113. கே. சிவலிங்கம், முள்ளியவளை (வயது 70),

114.எஸ். பொய்க்கேணி, கிளிநொச்சி (வயது 80),

115. எம். சிவக்குடும்பு, பொக்கணை, முல்லைத்தீவு (வயது 77),

116. யு. மகாமந்தன், வட்டக்கச்சி (வயது 43),

117. புவனேஸ்வரி, யாழ்ப்பாணம் (வயது 72),

118. எஸ். ராஜேஸ்வரி, கார்ல்கிதவை (வயது 72),

119. டி. மாலனி, யாழ்ப்பாணம் (வயது 26),

120. ரி. சாந்தினி, முறுத்தக்காணி, வடோத (வயது 40),

121. கே. பொன்னம்பலம், கிளிநொச்சி (வயது 55),

122. ஏ. நடராசா, கிளிநொச்சி (வயது 50),

123.என். யோகேஸ்வரன், தர்மபுரம், கிளிநொச்சி, (வயது 35),

124. கே. நாகலிங்கம், தர்மபுரம், கிளிநொச்சி (வயது 84),

125. பி. பிரான்ஸிஸ், கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு (வயது 69),

126. பி. மதனராசா, கிளிநொச்சி (வயது 31),

127. கே. வீலாவதி, கிளிநொச்சி (வயது 51),

128. ஆர்.பி. ரங்கன், அளவெட்டி, யாழ்ப்பாணம் (வயது 47),

129.கேணிகா, முல்லைத்தீவு, (8 மாதங்கள்),

130. மேனுகா, முல்லைத்தீவு (வயது 7),

131. ரி. கமலா, முல்லைத்தீவு (வயது 32).

132.வி.தலுக்ஷி, கிளிநொச்சி, (வயது 03),

133.வி.சுசிதன், கிளிநொச்சி, (வயது 02),

134.வி.செல்வமலர், கிளிநொச்சி, (வயது 40),

135.ரி.ராதிகா, யாழ்ப்பாணம் (வயது 30).

136.ரி.கஜனன், யாழ்ப்பாணம், (வயது 02),

137.ஆர்.கண்மணி, கிளிநொச்சி, (வயது 50),

138.ரி.மகேஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது 57),

139.கே.பரமேஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது 50),

140.எஸ்.தனபாலசிங்கம், கிளிநொச்சி, (வயது 59),

141.என்.சுபாஜினி, கிளிநொச்சி, (வயது 29),

142.என்.மாலினி, கிளிநொச்சி, (வயது 58),

143.மரியாளி, முல்லைத்தீவு, (வயது 75),

144.கமலாம்பிகை, முல்லைத்தீவு, (வயது 80),

145.தேவராசா, முல்லைத்தீவு, (வயது 44),

146.என்.ரூபா, முல்லைத்தீவு, (வயது 33),

147.ஏ.கர்ஷனி, முல்லைத்தீவு, (பத்து மாதம்),

148.மேகலா, கிளிநொச்சி, (வயது 8),

149.ஜெகப்பிரியா, கிளிநொச்சி, (வயது 10),

150.எஸ்.சுமித்ராதேவி, கிளிநொச்சி, (வயது 42),

151.கே.கணேஷ், முல்லைத்தீவு, (வயது 69),

152.ஜி.குணமணி, கிளிநொச்சி, (வயது 65),

153.இ.செபஸ்தியன், முல்லைத்தீவு, (வயது 52),

154.எஸ்.எம்.செபஸ்தியன், முல்லைத்தீவு, (வயது 53),

155.சரஸ்வதி, யாழ்ப்பாணம், (வயது 41),

156.ஜே.சதாலட்சுமணன், முல்லைத்தீவு, (வயது 39),

157.ஜி.சந்திரகுமார், முல்லைத்தீவு, (வயது 9),

158.வி.ரகுநாதன், வவுனியா, (வயது 65),

159.ஆர்.சித்திரமணி, கிளிநொச்சி, (வயது 59),

160.கே.சின்னத்தம்பி, யாழ்ப்பாணம், (வயது 74),

161.டி.சார்லெட், பாலமடு, (வயது 44),

162.கலைச்செல்வி, கிளிநொச்சி, (வயது 32),

163.எஸ்.லக்ஷிகன், (வயது 4),

164.திவ்யா, கிளிநொச்சி, (வயது 4),

165.திருமதி.எம்.ஜெயநாதன், கிளிநொச்சி, (வயது 38),

166.எம்.சண்முகநாதன், மல்லாவி, (வயது 44),

167.ஆர்.நடராசா, முள்ளியவளை, (வயது 64),

168.எம்.எஸ்.ஆர்.சசிநந்தினி, முல்லைத்தீவு, (வயது 72),

169.மூக்காயி, (வயது 67),

170.ஈ.பாக்கியம், வட்டக்கச்சி, (வயது 67),

171.ஞானப்பிரகாசம், புதுக்குடியிருப்பு, (வயது 75),

172.எஸ்.செல்லம்மா, கிளிநொச்சி, (வயது 80),

173.எஸ்.மாணிக்கம், கிளிநொச்சி, (வயது 60),

174.கே.புஸ்பராணி, முல்லைத்தீவு, (வயது 29),

175.எம்.பஞ்சலிங்கம், மன்னார், (வயது 57),

176.பிதாராணி, மன்னார், (வயது 12),

177.ஜி.கிருஷ்ணா, கிளிநொச்சி, (வயது 75),

178.எஸ்.யசோதா, கிளிநொச்சி, (வயது 42),

179.ஆர்.கௌசல்யன், ஒட்டுசுட்டான், (வயது 35),

180.எஸ்.ரதிமலர், கிளிநொச்சி, (வயது 67),

181.ஈஸ்வரி, கிளிநொச்சி, (வயது 70),

182.கே.கமலாம்பிகை, கிளிநொச்சி, (வயது 63),

183.பி.ஜீவன், முல்லைத்தீவு, (வயது 12),

184.சரஸ்வதிதேவி, முல்லைத்தீவு, (வயது 47),

185.கே.லெட்சுமி, கிளிநொச்சி, (வயது 68),

186.தனவதி, முல்லைத்தீவு, (வயது 60),

187.வி.தர்மலிங்கம், முல்லைத்தீவு, (வயது 17),

188.எம்.துஷான், யாழ்ப்பாணம், (வயது 14),

189.வி.தர்மலிங்கம், கிளிநொச்சி, (வயது 62),

190.எஸ்.புஷ்பகலா, பூநகரி, (வயது 29),

234.தமிழரசன், பூநகரி, (வயது 1),

191.எஸ்.சிவராசசிங்கம், கிளிநொச்சி, (வயது 65),

192.எம்.நேசநாதன், யாழ்ப்பாணம், (வயது 39),

193.துஷாரா, யாழ்ப்பாணம், (வயது 14),

194.பி.பத்மநாதன், கிளிநொச்சி, (வயது 62),

195.புகழரசன், யாழ்ப்பாணம், (வயது 1),

196.டி.குமாரதாசன், கிளிநொச்சி, (வயது 45),

197.ஜி.வாசுகி, யாழ்ப்பாணம், (வயது 44),

198.எஸ்.குணராசன், யாழ்ப்பாணம், (வயது 42),

199.சந்திரவதி, கிளிநொச்சி, (வயது 38),

200.கீதப்ரியா, கிளிநொச்சி, (வயது 4),

201.எஸ்.சிவகாந்தன், கிளிநொச்சி, (வயது 16),

202.எஸ்.பார்வதி, கிளிநொச்சி, (வயது 60),

203.கே.செல்லம்மா, யாழ்ப்பாணம், (வயது 85),

204.இ.அன்னமலர், கிளிநொச்சி, (வயது 64),

205.ஏ.வெள்ளை, மன்னார், (வயது 80)

206.என்.நளினி, முல்லைத்தீவு, (வயது 30),

207.என்.சந்திரா, முல்லைத்தீவு, (வயது 60),

208. ஆர். ராஜேஸ்வரி, புதுக்குடியிருப்பு, (வயது 50),

209.ஜெதுஷா, முல்லைத்தீவு, (வயது 1),

210.யதுஷா, யாழ்ப்பாணம், (வயது 3),

211.வை.லோகேஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது 31),

212.எஸ்.நவரத்னம், வவுனியா, (வயது 52),

213.எம்.சுதன், வவுனியா, (வயது 27),

214.மங்களேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 40),

215.எஸ்.நகுலேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 31),

216.இரோஷனா, முல்லைத்தீவு, (வயது 2).

217.எஸ்.நிரோஷன், முல்லைத்தீவு, (வயது 6),

218.எம்.விமலாதேவி, வவுனியா, (வயது 57),

219சின்னத்தம்பி, முல்லைத்தீவு, (வயது 84),

220.ஏ.புஷ்பவதி, யாழ்ப்பாணம், (வயது 74),

221.கே.சோமசுந்தரம், முல்லைத்தீவு, (வயது 65),

222.நிம்ரோத், புதுக்குடியிருப்பு, (வயது 8),

223.திஹாரா, புதுக்குடியிருப்பு, (வயது 6),

224.சந்திரகிரி, புதுக்குடியிருப்பு, (வயது 28),

225.என்.யோகமலர், முல்லைத்தீவு, (வயது 60),

226.வி.பிள்ளை, மருதங்கேணி, (வயது 62),

227.எம்.ஸ்ரீதரன், மருதங்கேணி, (வயது 41),

228.எஸ்.செனகன், மருதங்கேணி, (வயது 1),

229.அறுகுணசீலன், முல்லைத்தீவு, (வயது 35),

230.சுசிதரன், முல்லைத்தீவு, (வயது 13),

231.ராஜேந்திரலிங்கம், கிளிநொச்சி, (வயது 52).

232.ஆர்.ராஜேஸ்வரி புதுக்குடியிருப்பு, (வயது 50).