செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கஹவத்தை மண்சரிவில் இரு வீடுகள் சேதம்

sri-lanka-upcountry.jpgகஹவத்தை கொட்டதென்னைப் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளது.  இச்சம்பவம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. எனினும் உயிரிழப்புகள் எவையும் இடம்பெற வில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் பனிமூட்டத்துடன் கூடிய சீரற்ற காலநிலை காணப்படுவதால் சில இடங்களில் மண்சரி அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்மாவட்ட செயலாளர் ஜி.பி குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அத்துடன் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலையால் இரவு வேளைகளில் வாகனம் செலுத்தும் போது அவதானமாயிருமாறும் அவர் கேட்டுள்ளார். தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைந்துள்ளதால் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

வடபகுதி தேடுதல்களில் பெருமளவு ஆயுதம் மீட்பு

வடக்கின் வெவ்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது பெருந்தொகையான வெடி பொருட்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. யாழ்ப்பாணம், வன்னி, இரணைமடு, நாணற்குளம், புதுக்குடியிருப்பு கிழக்கு, புதுக்குடியிருப்பு மேற்கு, வெள்ள முல்லிவாய்க்கால், பெரிய மடு ஆகிய  பகுதிகளிலிருந்தே இராணுவத்தின் 5 ஆம், 3 ஆம், 8 ஆம் மற்றும் 58, 57 ஆம் படையணியினர் இவற்றைக் கைப்பற்றியிருப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இதன் போது 5 ஆயிரத்து 850 ரி-56 ரக ரவைகள் 300 எம்.பி.எம்.ஜி. ரவைகள் மீட்கப்பட்டிருப்பதாக இராணுவ அதிகாரியொருவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்திலிருந்து 5 ஆம் படையணியினர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் 03- கிரனேற் குண்டுகள், மூன்று கிலோ கிராம் நிறை கொண்ட 01 கிளோமோர், 01 தொடர்பாடல் தொகுதி, 03 சயனைற் வில்லைகள், 03 வரை படங்கள், 01 கெசட் பிளேயர், 01 சிம் கார்ட் ஆகியவற்றுடன் 11 ஆயிரத்து 500 ரூபா பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை ஜெயபுரம் பகுதியிலிருந்து படையினரால் 68 கண்ணிவெடிகளும் மீட்கப்பட்டிருப்பதாக ஊடக மத்திய நிலையம் குறிப்பிட்டது. வன்னியில் 57 ஆம் படையணியினர் 09 கிரெனேற் கைக்குண்டுகளை மீட்டுள்ளனர். புள்ளியான் பொக்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 01 துப்பாக்கி, 01 – ரி-56 துப்பாக்கி மற்றும் 02 கிரெனேற் கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இரணைமடுவில் 58 ஆம் படையணியினர் 1000 – ரி 56 அம்யுனிசன்களுடன் 03 கிரெனேற் கைக்குண்டுகள், 18 கண்ணிவெடிகள் ஆகியவற்றை மீட்டுள்ளனர். வெல்லமுள்ளி வாய்க்காலில் 8 ஆம் படையணியினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 05 ரி 56 ஆயுதங்கள், 01 தொலைக்காட்டி, 03 எம். பி. எம். ஜி. இணைப்புகள், 300 எம். பி. எம். ஜி. ரவைகள், 05 ஆர். பி. ஜி. குண்டுகள், 08 புகைப்பட அல்பங்கள் என்பவற்றுடன் ஆயிரத்து 654 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டிருப்பதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இதே படை அணியினரால் பட்டிகரை பகுதியிலிருந்து 02 82 மில்லி மீற்றர் குண்டுகள், 07 ஆர். பி. ஜிகள், 07 பூமி பொறிகள், 04 60 மில்லி மீற்றர் குண்டுகள், 01 81 மில்லி மீற்றர் குண்டு, 10 கிரெனேற் கைக்குண்டுகள், 4150 ரி 56 ரவைகள், 02 ரி56 ஆயுதங்கள் என்பன கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த வயோதிபர்கள்: சமூக சேவை அமைச்சினால் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடங்கள்

rg-camp.jpgவவுனியா நலன்புரி நிலையங்களில் நிவாரணக் கிராமங்களிலுள்ள முதியவர்களை அவர்களது உறவினர்களின் பராமரிப்பில் அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டதையடுத்து உறவினர்கள் வந்து அவர்களை பொறுப்பேற்கும் வரையில் சமூக சேவைகள் அமைச்சு முதியோர் இல்லங்களுக்கு அழைத்துவந்து பராமரித்து வருகிறது.

மேற்படி முதியவர்களின் உறவினர்கள் சமூக சேவைகள் அமைச்சுடன் தொடர்புகொண்டு தமது உறவுகளை அழைத்துச் செல்லலாம்.

 சமூக சேவைகள் அமைச்சு தனது பராமரிப்பில் வைத்துள்ள முதியவர்களின் விபரங்கள் வருமாறு :-

மகா சிவராத்திரி மட பரிபாலன சபை திருக்கேதீஸ்வரம், மன்னார்
1. கந்தன் உருதிரா 61, புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு,
2. கணபதி நடராஜா 73, வட்டகச்சி – கிளிநொச்சி,
3. சின்னத்தம்பி அழகரத்தினம், 75, மணியன்குளம் – ஸ்கந்தபுரம்,
4. முத்தையா பரமசாமி 68, கோம்பாவில் – புதுக்குடியிருப்பு,
5. பர்ணாந்து ஆசீர்வாதம் 82, கள்ளபாடு வடக்கு – முல்லைத்தீவு,
6. கதிரவேல் ஜெயரட்ணம் 70, குமுழமுனை, முல்லைத்தீவு,
7 பொன்னம்பலம் முருகையன் 78, வட்டு வடக்கு – யாழ்ப்பாணம்,
8. நாகராசா ராஜேஸ்வரி 59, முல்லைத்தீவு,
9. சின்னதுரை பொன்னம்மா 70, திருவையாறு – கிளிநொச்சி,
10. அழகரட்ணம் ராசம்மா 61, மணியன்குளம் – ஸ்கந்தபுரம்,
11. வைரமுத்து வீரவதி 62, பைலாமடு – விடத்தல்தீவு,
12. பரமசாமி பாக்கியம் 58, கோம்பாபில் – புதுக்குடியிருப்பு,
13. முருகேஸ்பிள்ளை சந்தானம்மா 85, புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு,
14. எலோசியஸ் ஜெயவதி 60, புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு.

அம்மன் வயோதிப மடம் கீரி மன்னார்
தொடர்பு: டாக்டர் கதிர்காமநாதன், தொ. பே. இல – 0778010477

1. நாகராசா குணவதி 64, சன்னதி வீதி, வார்ணன் – அச்சுவேலி,
2. இராசேந்திரம் பூணாம்மா, சுதந்திரபுரம் – முல்லைத்தீவு,
3. சிவசுப்பிரமணியம் தர்மலிங்கம் 60, முழங்காவில்,
4. தர்மலிங்கம் ராசமணி 62, கந்தர்மடம் சந்தி – யாழ்ப்பாணம்,
5. ஐயாதுரை பார்வதி 64, மாணிக்கபுரம் – விஸ்வமடு,
6. முருகன் மாணிக்கம் 68, இடைக்காடு – யாழ்ப்பாணம்,
7. ஜோசப் அந்தோனி 64, குருநகர் – யாழ்ப்பாணம்,
8. ஆறுமுகம் தர்மலிங்கம் 72, கந்தர்மடம் சந்தி – யாழ்ப்பாணம்,
9. நாகநந்தி கணபதிப்பிள்ளை 67, பூநகரி, பள்ளிக்குடா,
10. அந்தோனிப்பிள்ளை யேசுதாஸ் 62, 4 ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம்,
11. கந்தசாமி மகாலிங்கம் 71, ஆனைக்கோட்டை, கொக்காதீவு – யாழ்ப்பாணம்,
12. அருணன் தர்மன் 63, மட்டுவில் வடக்கு – சாவகச்சேரி,
13. கனகசபை கணபதிப்பிள்ளை 69, 68, நாவந்துறை வீதி – யாழ்ப்பாணம்,

பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலையில்
தொடர்பு: திரு. ஸ்ரீனிவாசன், தொடர்பு இல. 0602243427

1. கந்தையா தர்மலிங்கம் – 70, மகிலங்குளம்,
2. கந்தையா கனகரட்ணம் – 80, புதுக்குடியிருப்பு,
3. செங்கண் சந்தானம் – 70, உழவனூர்,
4. கந்தையா நடராசா – 84, இலுப்பைக்கடவை,
5. செல்லத்துரை வேலாயுதபிள்ளை – 77, வன்னேரிக்குளம், வயோதிப மடம்,
6. செல்லையா சண்முகம் – 67, முரசுமோட்டை,
7. கணபதிப்பிள்ளை கண்மணி – 70, கே. கே. எஸ்.
8. சின்னையா கந்தையா – 68, பளை,
9. சுப்பையா சிவஞானம்பிள்ளை – 82, ஒட்டுசுட்டான்,
10. வைத்தியநாதன் – 75, நெடுங்கேணி.
11. சுப்பையா – 67, ஸ்கந்தபுரம்
12. பாலசிங்கம் – 80,
13. முத்துலிங்கம் – 78, ஜெயபுரம்,
14. முத்தையா – 81, அடம்பன்,
15. ஆர். இராசமணி – 60,
16. மூர்க்காயி – 70, யாழ்ப்பாணம்,
17. தனவதி – 60,
18. செல்லம்மா – 89,
19. முத்தம்மா – 85, முழங்காவில்,
20. அழகையா – 95, நெடுங்கேணி,
21. முனியாண்டி தியாகராசா – 61, புதுக்குடியிருப்பு,
22. சின்னத்தம்பி கமலம் – 70, யாழ்ப்பாணம்,
23. பொன்னம்மா – 95,
24. எட்வேர்ட் – 89, புங்குடுதீவு,
25. ராஜலஷ்மி – 73, கிளிநொச்சி,
26. கே. வேலாய் – 81, அடம்பன்,
27. ஆர். சிவராசலிங்கம் – 65, உடையார்கட்டு
28. கதிர்காமநாதன் – 67, கோப்பாய்,
29. வெள்ளையன் செல்லம்மா – 70, தர்மபுரம்,
30. சிவகுரு – 78, வட்டக்கச்சி,
31. எம். கணகரட்னம் – 80, பூநகரி,
32, எம். மீனாட்சி – 75, மல்லாவி,
33. சின்னத்தம்பி பெருமாள் – 75, பொக்கணை
34. எம். சிவமணி – 70, கிளிநொச்சி,
35. எஸ். சாந்திதேவி – 60, புதுக்குடியிருப்பு,
36. வினாயகமூர்த்தி சிவமணி – 68, வள்ளிபுரம் (மண்டைதீவு),
37. ஆர். சின்னப்பிள்ளை – 70, புதுக்குடியிருப்பு,
38. என். பூமணி – 78, திருவையாறு,
39. கே. விநாயகமூர்த்தி – 69, புதுக்குடியிருப்பு,
40. வி. சிங்காரவேல் – 65, சிவபுரம்
41. நாகமுத்து – 65, தேவிபுரம்,
42. நாகம்மா – 80, விஸ்வமடு,
43. நல்லம்மா – 65,
44. ஆர். நாகம்மா – 70,
45. கறுப்பண்ணன் சிவனூ – 68, பண்டிவைத்தகுளம்,
46. மயில்வாகனம் தங்கலிங்கம் – 65, பொக்கணை,
47. நல்லநாதபிள்ளை கமலாவதி – 60, கொக்குத் தொடுவாய்,
48. கறுப்பையா ராக்கி – 82, ஸ்கந்தபுரம்,
49. சுப்பையா ராமாகி – 60, முல்லைத்தீவு,
50. கந்தவனம் பசுபதி – 87, பொக்கணை (நெல்லியடி),
51. செல்லையா கணபதிப்பிள்ளை – 78, வட்டக்கச்சி.

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில்
சிவன் வயோதிப மடம், சமளங்குளம் – வவுனியா
தொடர்பு: ஸ்ரீ. தொலைபேசி இல 0242222651, 0242221685

1. கந்தர் முத்துக்குமார் – 72 நாச்சிக்குடா
2. செல்லப்பு சுப்பிரமணியம் – 68, சுதந்திரபுரம்
3. ஆறுமுகம் சிவநாயகம் – 70, கிளிநொச்சி
4. சுப்பையா துரைராஜா – 65, புதுக்குடியிருப்பு
5. சின்னையா சின்னதம்பி – 78, வன்னி விளாங்குளம்
6. சாந்தன் கப்ரியல் – 83, புதுக்குடியிருப்பு
7. கப்ரியல் தோமஸ் – 84, மாத்தளன்
8. கதிர்காமர் சின்னக்குட்டி – 96, முல்லைத்தீவு
9. சாமிநாதன் சின்னையா – 60, நெடுங்கேணி
10. கார்த்திகேசு மார்க்கண்டு – 86, மாத்தளன்
11. அருணாச்சலம் சுப்ரமணியம் – 81, வவுனிக்குளம்
12. ஆறுமுகம் மாரிமுத்து – 73, கிளிநொச்சி
13. இளையதம்பி மூத்ததம்பி – 64, மாங்குளம்
14. முருகன் மாணிக்கம் – 66, மல்லாவி
15. ஏரம்பன் மாணிக்கம் – 80, புதுக்குடியிருப்பு
16. சின்னத்தம்பி பரமநாதன் – 80, உதயநகர் – கிளிநொச்சி
17. சின்னதம்பி சிவராசா – 79, முள்ளியவளை
18. சின்னத்தம்பி பொன்னையா – 81, மலையாளபுரம், கிளிநொச்சி
19. நடராஜா தர்மராஜா – 60, ரெட்பானா – விஸ்வமடு
20. ராசு ஆறுமுகம் – 62, புதுக்குடியிருப்பு
21. இளையதம்பி கனகரட்ணம் – 70, வவுனிக்குளம்
22. முருகன் வேலான் – 78, உடையார்கட்டு
23. சின்னத்தம்பி அப்புத்துரை – 66, இரணை இலுப்பைக்குளம்
24. மரியாம்பிள்ளை அன்ரனி கிரேசியர் – 84, நாச்சிக்குடா
25. பொன்னையா கந்தசாமி – 77, வெற்றிலைக்கேணி
26. தோமஸ் சொலமன் – 89, மாத்தளன்
27. குருசாமி கந்தன் – 68 –
28. மாரியப்பன் தங்கவேல் – 76, ரெட்பானா – விஸ்வமடு
29. சின்னவர் கந்தன் – 70, கட்டைக்காடு பெரியகுளம்
30. தம்பிமுத்து நவரட்ணம் – 77, முழங்காவில், கிளிநொச்சி
31. கந்தையா மகேசன் – 64, பொலிகண்டி – வல்வெட்டித்துறை
32. பெர்னாண்டோ ஞானப்பிரகாசம் – 75, புதுக்குடியிருப்பு
33. சிகராசா சத்தியநாதன் – 70, திருநகர் – கிளிநொச்சி
34. காசிப்பிள்ளை செல்லத்துறை – 61, தர்மக்கேணி – பளை
35. கனகசபை கந்தையா – 75, இடைக்காடு அச்சுவேலி
36. மரியான் மாட்டின் – 84, குருநகர் – யாப்பாணம்
37. சின்னையா ஆறுமுகம் – 68, வண்ணான் கேணி – பளை
38. கந்தையா பாலசுப்பிரமணியம் – 64, செல்வநகர் – கிளிநொச்சி
39. நாகமுத்து சிவமுத்து – 75, 4 ஆம் வட்டாரம் – முள்ளியவளை
40. நாராயணதாஸ் ராஜா – 65 – 9 ஆவது பிரிவு, தர்மபுரம்
41. ரமேஸ்பிள்ளை சிறிதரன் – 60 – 10 ஆவது பிரிவு, தர்மபுரம்
42. வினாசித்தம்பி குலசேகரன் – 81, தாமரக்கேணி – பளை
43. கணபதி வைரமுத்து – 80 வள்ளிபுரம்
44. செல்லையா அருளப்பு – 82, புதுக்குடியிருப்பு
45. பொன்னையா மகேஸ்வரன் – 65, புலோலி கிழக்கு
46. சின்னத்தம்பி சின்னப்பு – 80, கண்டாவளை
47. எஸ். எஸ். ஆறுமுகம் – 83, வற்றாப்பளை
48. சதாசிவம் சங்கநிதி – 74, ரட்ணபுரம் – கிளிநொச்சி
49. ரங்கசாமி திருப்பதி – 81, முழங்காவில் – கிளிநொச்சி
50. சிவசிதம்பரம் குலசேகரம் பிள்ளை – 78, ஸ்கந்தபுரம் – கிளிநொச்சி
51. சின்னத்துரை தியாகராசா – 62, 2 ஆம் பிரிவு முரசுமோட்டை
52. சவரி பொன்னுத்துரை – 73, ராசாவின் தோட்டம் – யாழ்ப்பாணம்
53. கண்ணர் மயில்வாகனம் – 82, புதுக்குடியிருப்பு
54. சரவணமுத்து நடராஜா – 75, முள்ளியவளை – முல்லைத்தீவு
55. செல்லத்துரை சுந்தரலிங்கம் – 65, தேராவில் – கிளிநொச்சி
56. சுப்பையா தர்மலிங்கம் – 76, தாமரைக்கேணி – பளை
57. பொன்னம்பலம் கனகலிங்கம் – 72, பெரியகுளம் கண்டாவளை
58. சின்னடியார் சுப்ரமணியம் – 77, கிளிநொச்சி
59. சரவணமுத்து தம்பிராசா – 80, சிவநகர் – கிளிநொச்சி
60. பரமசாமி தேவராசா – 75, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
61. சதாசிவம் கணபதிப்பிள்ளை – 85, தண்ணீருற்று – புதுக்குடியிருப்பு
62. மத்தியூஸ் சாமுவேல் – 84, விஸ்வமடு – புதுக்குடியிருப்பு
63. முணியாண்டி கியன் – 77, வன்னேரிக்குளம், கிளிநொச்சி
64. சின்னத்தம்பி பாலசிங்கம் – 68, வற்றாப்பளை – முள்ளியவளை
65. வீரபுத்திரன் பொன்னுச்சாமி – 74, சாவகச்சேரி
66. வைத்தியலிங்கம் மாணிக்கம் – 76, பூநகரி
67. நகுல்ராஜ் அல்பிரட் குமாரசாமி – 83, நல்லூர் – யாழ்ப்பாணம்
68. ராசையா ரத்னகுமார் – 60, முள்ளிவாய்க்கால்
69. நாகப்பர் சங்கரப்பிள்ளை – 60, முள்ளிவாய்க்கால் – முல்லைத்தீவு
70. வைரவர் சின்னையா – 68, நாகபடுவான் – பூநகரி
71. கணபதி ஞானப்பிரகாசம் – 63, உதயநகர் – கிளிநொச்சி
72. சின்னையா தஙகவேல் – 80, மாத்தளன்
73. பெர்னாண்டோ தங்கராசா – 67, நாகபடுவன் – பூநகரி
74. தம்பர் கந்தையா – 91, தம்பலகாமம்
75. தங்கராசா மகாலிங்கம் – 74, ஓட்டுசுட்டான்
76. குழந்தைவேல் ராமசாமி – 65, அடம்பன் – மன்னார்
77. கோகுலநாயர் சுந்தரம் – 88, அக்கராயன் – கிளிநொச்சி
78. சண்முகநாதன் நாகம்மா – 82, உடையார்கட்டு
79. கப்பித்தா ரொசலின் – 75, உடையார்கட்டு – விஸ்வமடு
80 சின்னத்தம்பி பார்வதி – 64, பெரியமடு – நெடுங்கேணி
81. சின்னத்துரை பொன்னம்மா – 74, பொக்கணை – புதுக்குடியிருப்பு
82. சிதம்பரநாதன் மங்கையற்கரசி – 70, வட்டக்கச்சி – கிளிநொச்சி
83. சுப்பர் கனகம்மா – 70, கிளிநொச்சி
84. மணியம் லோகநாயகி – 70, கிளிநொச்சி
85. நாராயணன் வள்ளியம்மா – 88, வள்ளிபுரம் – புதுக்குடியிருப்பு
86. சின்னையா செல்லம்மா – 81, கிளிநொச்சி
87. இராயப்பு பூமணி – 80, யாழ்ப்பாணம்
88. ரட்னம் ராசம்மா – 87, வட்டக்கச்சி – கிளிநொச்சி
89. சுப்ரமணியம் நாகம்மா – 70, பூநகரி
90. வெற்றியம்மா – 72, கிளிநொச்சி
91. சுப்ரமணியம் அன்னமுத்து – 76, கிளிநொச்சி
92. சின்னாச்சி – 60 –
93. பாலகிருஷ்ணன் கமலாம்பிகை – 69, இருபாலை – யாழ்ப்பாணம்
94. விநாயகமூர்த்தி சின்னாச்சி – 73, தேவிபுரம், புதுக்குடியிருப்பு
95. பசுபதி செல்லம்மா – 85, யாழ்ப்பாணம்
96. முருகேசு செல்லாட்சி – 85, வன்னேரிக்குளம் – கிளிநொச்சி
97. மாணிக்கம் இராஜேஸ்வரி – 60, உருத்திரபுரம்
98. குழந்தை செபஸ்ரியம்மா – 80, மாத்தளன்
99. ரட்ணம் ரட்னேஸ்வரி – 82, ஜெயபுரம் – கிளிநொச்சி
100. எமிலியன் கிர்ஸ்ணால் – 75, செம்பியன்பற்று
101. முத்துச்சாமி வேணுகோணேஸ்வரி – 60, யோகபுரம் – மல்லாவி
102. ஐயன்பிள்ளை செல்லம்மா – 84, பூநகரி
103. சின்னத்துரை வள்ளிப்பிள்ளை – 60, கிளிநொச்சி
104. ராசு சிட்டு – 74, கிளிநொச்சி
105. கார்த்திகேசு புனிதவதி – 48, பொக்கணை – புதுக்குடியிருப்பு
106. குகசேகரம் சின்னம்மா – 75, தாமரைக்கேணி – பளை
107. மகாலிங்கம் பூரணம் – 60, புதுக்குடியிருப்பு
108. கந்தையா ராசமணி – 62, வற்றாப்பளை
109. ராசையா சிவபாக்கியம் – 68, முரசுமோட்டை
110. துரையப்பா பாக்கியம் – 67, கிளிநொச்சி
111. பார்வதி – 60 –
112. வேலுப்பிள்ளை பார்வதி – 74, அக்கரயான் – கிளிநொச்சி
113. செல்லப்பா சரஸ்வதி – 60 – சுதந்திரபுரம்
114. தையல்பாக்கியம் அன்னலட்சுமி – 60, அளம்பில்
115. இராமநாதன் செல்லம்மா – 75, சுதந்திரபுரம்
116. இராஜா சுமதி – 60, தர்மபுரம்
117. நவரட்ணம் பூமணி – 78, கிளிநொச்சி
118. பேரம்பலம் செங்கபலம் – 80, தேவிபுரம் – புதுக்குடியிருப்பு
119. சிவபாலசுந்தரம் சுபத்திரா தேவி – 62, தேரிபுரம் – புதுக்குடியிருப்பு
120. முத்துசாமி நாகம்மா – 72, கிளிநொச்சி
121. வேதனம் நாமுத்து – 80, முள்ளிவாய்க்கால்
122. குணம்மேரி – 60, மல்லாவி
123. காசிநாதன் அகிலாண்டேஸ்வரி – 60, முத்தையன்கட்டு
124. சுப்பிரமணியம் மகேஸ்வரி – 79, உடுத்துறை
125. கனகலிங்கம் திலகவதி – 67, கண்டாவளை
126. பாலசிங்கம் ரஞ்சிதமலர் – 60, கருணாட்டுக்கேணி – முல்லைத்தீவு
127. நாகலிங்கம் வியாலாட்சி – 77, பரந்தன் – கிளிநொச்சி
128. அருமைநாயகம் ராசமனி – 66, வள்ளிபுரனம் – புதுக்குடியிருப்பு
129. கந்தர் ராசமணி – 62, வற்றாப்பளை
130. கந்தசாமி அன்னலக்சுமி – 70, கிளிநொச்சி
131. தங்கராசா சகுந்தலா – 60, முள்ளியவளை
132. பிலிப்பு பசுபதி – 78, முல்லைத்தீவு
133. சண்முகதாசன் ஆனந்தபூரணி – 60, புதுக்குடியிருப்பு
134. இராசநாயகம் லலிதா – 60, பருத்தித்துறை
135. சண்முகம் வனிதா – 60, கிளிநொச்சி
136. பொன்னம்பலம் சோதிலிங்கம் – 70, காரைநகர்
137. கனகரட்ணம் முருகையா – 60, ஆனந்த நகர் – கிளிநொச்சி
138. கந்தன் முருகையா – 60, பிட்டியல்லை – காரைநகர்
139. அன்ரனி ஜோசப்வாஸ் – 60, வாகரை – மட்டக்களப்பு
140. முத்துக்குமார் லோகநாதன் – 60, 210/8, காரைநகர் வீதி, கொட்டடி – யாழ்ப்பாணம்
141. செபஸ்ரியம்பிள்ளை பற்றிக் – 62, 1/2 புதிய வீதி, கொய்யாத் தோட்டம், யாழ்ப்பாணம்
142. மருதனார் குமாரசாமி – 75, 156 ஆவது கட்டை, ஆனந்தபுரம், கிளிநொச்சி
143. கார்த்திகேசு விஜயரட்ணம் – 63, அரியாலை மேற்கு அரியாலை
144. செல்லத்தம்பி ஸ்ரீஜெயச்சந்திரன் – 62, மந்துவில் – கிழக்கு கொடிகாமம் – யாழ்ப்பாணம்
145. ஸ்ரீ ஜெயச்சந்திரன் ராசம்மா – 62, மந்துவில் கிழக்கு – கொடிகாமம் யாழ்ப்பாணம்
146. ஆறுமுகம் தட்சணாமூர்த்தி – 63, அன்புவழிபுரம், திருகோணமலை
147. ராசு ராசதுரை – 62, செம்பியன்பற்று தெற்கு – தாழையடி
148. கார்மல் லூர்த்தம்மா – 60, செம்பியன்பற்று தெற்கு – தாழையடி
149. மகாலிங்கம் தியாகராசா – 60, பூம்புகார், அரியாலை – யாழ்ப்பாணம்
150. தியாகராசா புவனேஸ்வரி – 60, பூம்புகார், அரியாலை, யாழ்ப்பாணம்

(அன்பகம் முதியோர் இல்லம் பம்பைமடு விபரம் தொடரும்)

பார்சல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்படவிருந்த துப்பாக்கியால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

இலங்கைக்குத் தபால் மூலமாக அனுப்பப்படவிருந்த துப்பாக்கியால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

வெள்ளி காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் இந்தப் பார்சல் அனுப்பப்படவிருந்தது. அதன்போது பார்சலை ஸ்கேன் செய்தபோது அலாரம் ஒலித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் பார்சலைப் பிரித்துப் பார்த்துள்ளனர். அதில் துப்பாக்கியொன்று இருந்ததையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இத்துப்பாக்கியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அப்பார்சலை விமான நிலையத்தில் கையளித்த தபால் துறை ஊழியர் சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தினர். அதன்போது அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் பார்சலை டெலிவரி கொடுப்பது மட்டும் தான் தனது பணி என்றும் கூறினார். தொடர் விசாரணையில் அது பறவைகளைச் சுடும் “ஏர் கன்’ வகையைச் சேர்ந்த ஆபத்தற்ற துப்பாக்கி எனவும் அதை வைத்துக்கொள்ள லைசன்ஸ் பெற வேண்டியதில்லை என்றும் தெரியவந்தது.

இத்துப்பாக்கியை சென்னை அண்ணாசாலையைச் சேர்ந்த விஜய் என்பவர் கொழும்பிலுள்ள தனது நண்பர் சபரீசனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை “கியூ’ பிரிவுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

7 வது ஆசிய பெண்கள் வலைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை அணி சம்பியன்

netball.jpgஏழாவது ஆசிய பெண்கள் வலைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை அணி சம்பியனாக தெரிவாகியுள்ளது. இலங்கை பெண்கள் வலைப்பந்தாட்ட அணிக்கும் நடப்புச் சம்பியனான சிங்கப்பூர் அணிக்குமிடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற மேற்படி போட்டியில் இலங்கை அணி 77-48 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் அணியை தோற்கடித்தது.

ஆசிய வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 9 நாடுகள் பங்கேற்றன. இலங்கை அணி தான் பங்கேற்ற 6 போட்டிகளிலும் வெற்றியீட்டி 4 ஆவது தடவையாகவும் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

இலங்கை அணி முதல் சுற்றை 19-11 என்ற செட் கணக்கிலும் இரண்டாம் சுற்றை 20-14 என்ற செட் கணக்கிலும் முன்றாம் நான்காம் செட்களை 18-9, 20-14 என்ற செட் கணக்கிலும் வென்றது.

பெற்றோரை இழந்த சிறார்கள் சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பு

இலங்கையில் இடம்பெயர்ந்து வந்துள்ள பெற்றோரை இழந்த சிறுவர்களில் ஒரு தொகுதியினர் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அறங்காவலர் அவையினரால் நடத்தப்பட்டு வருகி்ன்ற அருளகம் சிறுவர் இல்லத்தில் நீதிமன்றத்தின் மூலம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்.

பெற்றோர் மற்றும் உற்றோர் ஆதரவற்ற 129 சிறுமியர் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இங்கு ஏற்கனவே சிறுவர் இல்லம் ஒன்றும் முதியோர் இல்லம் ஒன்றும் செயற்பட்டு வருகின்றன.

இரு தினங்களுக்கு முன்னர் ஒப்படைக்கப்பட்ட இந்தச் சிறுமியரின் உடனடி அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தொண்டு நிறுவனங்கள் உதவிகளை வழங்கியிருக்கின்றன.

இந்தச் சிறுமியர்களின் நலன்கள், வவனியா மாவட்ட நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வன்னிப்பிரதேசத்தில் இயங்கிவந்த பல்வேறு சிறுவர் இல்லங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களைப் படிப்படியாக அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்ட சிறுவர் இல்லங்களில் ஒப்படைத்து பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவி்த்திருக்கின்றனர்.

கியூபாவில் பயன்படுத்தும் பக்டீரியா நுண்ணங்கியை பாவிக்க அரசு தீர்மானம்

aedes_aegypti.jpgடெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவென கியூபா நாட்டில் பயன்படுத்தப்படும் பக்டீரியா நுண்ணங்கியை இலங்கையிலும் பாவிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இம்முடிவுக்கு அமைய கியூப நாட்டிலிருந்து பி.ரி.ஐ. (Bacillus Thuringenesis Subspecies Isreelenesis) என்ற இந்த பக்டீரியாவை இவ்வாரம் இந்நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சல் நாட்டிலுள்ள பத்து மாவட்டங்களில் இருக்கும் 68 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் பெரிதும் பரவியுள்ளது. அதேநேரம் இக்காய்ச்சல் காரணமாக இற்றைவரையும் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர். இக்காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.நுளம்புகளால் பரப்பப்படுகின்ற இக்காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சு அதிகாரிகள் பங்குபற்றிய கலந்துரையாடலொன்று கடந்த வாரம் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவென கியூபா நாட்டில் பாவிக்கப்படும் வழிமுறையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கினார். இந்த அறிவுறுத்தலுக்கு அமைய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கொழும்பிலுள்ள கியூப நாட்டு உயர் ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை நடத்தி டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பக்aரியாவை துரிதமாகக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனடிப்படையில் இப்பக்டீரியா தொடர்பான இரு மருத்துவ நிபுணர்களின் சேவையை இலங்கைக்கு பெற்றுத் தருவதற்கும் கியூப உயர் ஸ்தானிகர் அமைச்சரிடம் உறுதியளித்திருக்கிறார். நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இந்த பக்டீரியா 1982ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இப்பக்டீரியா நுளம்புகளின் குடம்பியை அழிக்கும் தன்மை கொண்டவை. இதனூடாக டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்பக்டீரியாவைப் பயன்படுத்தி நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைப் பல நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இலங்கையில் குருநாகல் மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவென இந்த பக்aரியா ஏற்கனவே பரீட்சிக்கப்பட்டது தெரிந்ததே.

“கப்டன் அலி’ தொடர்பாக ஐ.நா. எதுவும் செய்யாது – ஜோன் ஹோம்ஸ்

ships000.jpgஐ.நா. இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கென ஐரோப்பாவில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் வந்த “எம்.வி.கப்டன் அலி’ கப்பல் தற்போது சென்னைத் துறைமுகத்துக்கு அப்பால் 5 கடல்மைல் தொலைவில் நங்கூரமிட்டிருக்கும் நிலையில் அக்கப்பல் விவகாரம் தொடர்பாக ஐ.நா. வோ அல்லது ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரத்திற்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகமான தானோ எதுவும் செய்வதற்கு இல்லை என்று ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. வின் தலைமையகத்தில் பாதுகாப்புச்சபைக் கூட்டம் முடிவடைந்த பின் வெளியே வந்த ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸிடம் இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸின் நிருபர் மத்தியூ ரஸல்லீ தனது செய்தி ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார்.

சுயேச்சையான ஒரு பிரேதப் பரிசோதனையை நடத்த ஜாக்சனின் குடும்பத்தினர் விருப்பம்.

25michael_jackson.jpgபாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதை தெளிவாக அறிய அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனர். இதனால் சுயேச்சையான ஒரு பிரேதப் பரிசோதனையை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று ஜாக்சன் குடும்பத்தினருக்கு நெருக்கமானவரான ஜெஸி ஜாக்சன் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜெஸி கூறுகையில், ஜாக்சனின் மறைவு குறித்து பல பதில்களே இல்லாத கேள்விகள் நம்மிடையே உலவுகின்றன. ஜாக்சனின் தனிப்பட்ட டாக்டர் குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

எனவே இதுதொடர்பாக இன்னொரு அட்டாப்சியை நடத்த அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனர். இருப்பினும் இதை தனிப்பட்ட முறையில் நடத்த அவர்கள் விரும்புகின்றனர். முடிவு மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கான ஏற்பாடுகள் இதுவரை செய்யப்படவில்லை என்றார் அவர்.

உடல்களைத் தேடும் பணியை முடித்துக் கொள்வதாக பிரேசில் ராணுவம் தெரிவித்துள்ளது.

airfrancetail.jpgஅட்லான்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணித்தவர்களின் உடல்களைத் தேடும் பணியை முடித்துக் கொள்வதாக பிரேசில் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜூன் 1ம் தேதி விமான விபத்து நடந்துத. அதன் பின்னர் கடந்த ஒரு மாத காலமாக உடல்களைத் தேடும் பணி முழு வீச்சில் நடந்து வந்தது. மொத்தம் 228 பேர் விபத்தில் இறந்தனர். இருப்பினும் 51 உடல்கள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது. அவற்றிலும் 11 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரேசில் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஹென்றி முனோஸ் கூறுகையில், இனியும் உடல்கள் கிடைக்கும் என்பது சந்தேகம்தான். எனவே இதைத் தொடருவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

இருப்பினும் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஜூலை 1ம் தேதி வரைதான் கருப்புப் பெட்டியிலிருந்து சமிக்ஞைகள் வெளி வரும். அதற்குள் கருப்பு்ப பெட்டியை மீட்க பிரான்ஸ் குழுவினர் முயன்று வருகின்றனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏராளமான கப்பல்கள், அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை கருப்புப் பெட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.