வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவானது – முடிவை உறுதி செய்தது இஸ்ரேலிய அமைச்சரவை !

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. சண்டையை நிறுத்த உலக நாடுகள் முயற்சித்து வரும் சூழ்நிலையில் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுடன் பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது என ஹமாஸ் அமைப்பின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காசாவின் போர்நிறுத்த ஒப்பந்த முடிவை இஸ்ரேலிய அமைச்சரவையும் உறுதி செய்துள்ளது.  ஆனால், நேரம் பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஊரடங்கால் வெறிச்சோடிப்போன சாலைகளில் படுத்து ஓய்வெடுக்கும் சிங்கங்கள் !

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள கூரூஜர் தேசிய பூங்காவும் கடந்த மார்ச் மாதம் 25-ம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பூங்காவுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், பூங்காவுக்கு செல்லும் சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.  இந்நிலையில், சாலைகள் வாகனங்கள் வெறிச்சோடி காணப்படுவதால் கூரூஜர் தேசிய பூங்காவில் உள்ள வன விலங்குகள் எந்த வித பதற்றமும் இன்றி சாலைகளில் அங்கும் இங்கும் செல்கின்றன.
அந்த வகையில்,நேற்று முன்தினம் 10-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் பூங்காவில் உள்ள சாலையில் படுத்து ஓய்வெடுத்தன. இதை, அப்பூங்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் தங்கள் செல்போன்களில் புகைப்படங்களாக எடுத்துள்ளனர்.
ஊரடங்கால் பூங்கா சாலைகள் எந்த வித வாகனமும் செல்லாமல் சிங்கங்கள் எந்த வித இடையூறும் இன்றி நிம்மதியாக ஓய்வெடுப்பது போன்று வெளியான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன

“அடுத்த 6 வாரங்களில் உலக நாடுகளுக்கு 8 கோடி தடுப்பூசிகளை வழங்க உள்ளோம்.” – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ட்வீட் !

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.37 கோடியைக் கடந்துள்ளது.அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.72 கோடியைத் தாண்டியுள்ளது. எனவே அங்கு தடுப்பூசி போடும் பணிகளுக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து முழுவீச்சில் போட்டு வருகிறது. இதற்கிடையே, அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்தது.

சி.டி.சி.யின் இந்தப் பரிந்துரையை அரசும் செயல்படுத்தி உள்ளது. அதன்படி ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் சமீபத்தில் மாஸ்க் இல்லாமலேயே செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதனால் அமெரிக்காவில் விரைவில் இயல்பு நிலை திரும்ப உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பல்வேறு நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று அடுத்த 6 வாரங்களில் உலக நாடுகளுக்கு 8 கோடி தடுப்பூசிகளை வழங்க உள்ளோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ரம்ழான் பண்டிகையில் காபூலில் உள்ள ஒரு மசூதியில் குண்டுவெடிப்பு – 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழப்பு !

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனிடையே ரம்ழான் பண்டிகையையொட்டி அங்கு 3 நாட்களுக்கு தலீபான்கள் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.சண்டை நிறுத்தம் அமுலுக்கு வந்த முதல் நாளான வியாழக்கிழமை அன்று குண்டூஸ் மற்றும் காந்தஹார் மாகாணங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் அப்பாவி மக்கள் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மசூதியில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர்.

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு || Tamil News  Afghanistan: At least 12 dead, 20 injured in Kabul mosque

காபூலின் ஷகர்தரா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் அந்த மசூதியின் இமாம் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேசமயம் தலீபான் பயங்கரவாதிகள் தாங்கள் இந்த தாக்குதலை நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த வாரம் காபூலில் உள்ள மகளிர் பள்ளிக்கூடம் அருகே நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஏராளமான மாணவிகள் உள்பட 90 பேர் கொல்லப்பட்டதும், 160-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

“அமைதியை கடைப்பிடியுங்கள்.” – இஸ்ரேல் – பலஸ்தீன தலைவர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி அமைதிக்கான பேச்சுவார்த்தை !

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. பாலஸ்தீனத்தின் மற்றொரு பகுதியாக மேற்கு கரை உள்ளது. இப்பகுதியின் அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. 07வது நாளாகவும் தொடரும் போர் அப்பகுதியில் அமைதயின்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காசா பகுதியில் நடைபெற்று வரும் மோதல் மேற்கு கரை பகுதிக்கும் பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பதற்றத்தைத் தணிக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜோ பைடன் இருதரப்பும் அமைதியை கடைபிடிக்கும் படி கூறினார்.

காசா முனை பகுதியில் அசோசியேட் பிரஸ், அல் ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் அமைந்திருந்த கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

அமைதியை ஏற்படுத்த இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உடன் ஜோ பைடன் பேசுவது இதுவே முதல்முறையாகும்.

“காசா முனை மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்” – அமெரிக்காவிலுள்ள இஸ்ரேல் தூதரகங்களின் முன்னால் மக்கள் போராட்டம் !

காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களில் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளன. அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்துகின்றனர். 7-வது நாளாக இன்றும் தாக்குதல் நீடிக்கிறது.
இதுஒருபுறமிருக்க இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.
இந்த விவகாரம் அமெரிக்க நகரங்களிலும் எதிரொலித்தது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், போஸ்டன், பிலடெல்பியா உள்ளிட்ட சில நகரங்களில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேல் தூதரக அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், காசா முனை மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். சுதந்திர பாலஸ்தீன் முழக்கத்தையும் எழுப்பினர்.

விஸ்வரூபம் எடுக்கும் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன பிரச்சினை – 12 மாடி கோபுர கட்டிடடத்தை கண் இமைக்கும் நேரத்தில் தரை மட்டமாக்கிய இஸ்ரேல் ஏவுகணைகள் !

காசாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஊடக நிறுவனங்கள் செயல்பட்ட 12 மாடி கோபுர கட்டிடம் கண் இமைக்கும் நேரத்தில் தரை மட்டமாகியுள்ளது. கிழக்கு ஜெருசலேம் நகரில் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அரேபியர்கள், யூதர்கள் என இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடும் புனித தலத்தில் இருந்து பின் வாங்குமாறு இஸ்ரேலை எச்சரித்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசத்தொடங்கினர்.

அதைத் தொடர்ந்து இஸ்ரேலும், பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை குறிவைத்து வான்தாக்குதல்களை தொடங்கியது.

ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு நடத்தினாலும், அந்த ராக்கெட்டுகளை நடுவானில் மறித்து அழித்து விடும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறார்கள். காசாமுனைப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் நடத்துகிற வான்தாக்குதல் மிகக்கொடூரமானதாக இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினருடன் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களும் பலியாகி இருப்பதும், இந்தப் பலி தொடர்வதும் சர்வதேச சமூகத்தை அதிர வைத்துள்ளது.

காசாவில் ஊடக நிறுவனங்கள் செயல்பட்ட 12 மாடி கோபுர கட்டிடம் இடிந்து தரை  மட்டம் || Tamil News Israeli airstrike destroys Gaza 12-storey building  that houses mediaஇந்தநிலையில் நேற்று காசாநகரில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், அங்கு அமைந்திருந்த 12 மாடிகளைக்கொண்ட கோபுர கட்டிடம் தீப்பிடித்து எரிந்து, இடிந்து தரை மட்டமானது.

இந்த கட்டிடத்தில்தான் அசோசியேட்டட் பிரஸ், அல்ஜசீரா உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் அமைந்திருந்தன.

இந்த கட்டிடம் இடிந்தபோது அந்தப் பகுதியே புழுதி மண்டலமாக மாறியது. இந்த தாக்குதலை அல்ஜசீரா டி.வி. நேரடியாக ஒளிபரப்பியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த 12 மாடி கோபுர கட்டிடத்தை வீழ்த்தியதின் பின்னணி குறித்து இஸ்ரேல் வாய் திறக்கவில்லை. இந்த கட்டிடத்தை குறிவைத்து இராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக அதில் இயங்கிய ஊடக அலுவலகங்களை சேர்ந்தவர்களையும், குடியிருப்புகளில் வசித்து வந்த மக்களையும் வெளியேறுமாறு இராணுவம் உத்தரவிட்ட பின்னர் இந்த தாக்குதலை நடத்தியதால் உயிர்ச்சசேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இருப்பினும் கண்மூடி திறப்பதற்குள் இந்த 12 மாடி கட்டிடம் தரை மட்டமானது நேரில் கண்டவர்களை பதைபதைக்க வைத்தது.

Israel destroys Gaza tower housing AP and Al Jazeera offices | Reutersஇந்த தாக்குதல் குறித்து அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் தலைவர் கேரி புரூட் கூறுகையில், “இது எங்களை மிகுந்த அதிர்ச்சிக்கும், திகிலுக்கும் ஆளாக்கி உள்ளது. இந்த கட்டிடத்தில் எங்கள் நிறுவனம் இயங்கியதையும், அதில் பத்திரிகையாளர்கள் இருந்ததையும் அவர்கள் (இஸ்ரேல்) அறிவார்கள். இந்த கட்டிடம் தாக்கப்படும் என்பது குறித்து எங்களுக்கு எச்சரிக்கை வந்தது” என குறிப்பிட்டார்.

காசாநகரில் மக்கள் அடர்த்தி நிறைந்த அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தி குறைந்தது 10 பாலஸ்தீனியர்களை கொன்றதைத் தொடர்ந்து இந்த தாக்குதலை அரங்கேற்றி உள்ளது. இதனால் காசாமுனைப் பகுதி பதற்றத்தின் பிடியில் சிக்கி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களை தாக்கும் Black Fungus – மகாராஷ்டிர மாநிலத்தில் 52 பேர் பலி !

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களில் 52 பேர் Black Fungus தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்துகளினால் ஏற்படும் Mucor mycosis எனப்படும் Black Fungus தொற்று, கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நோயாளிகளுக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த தொற்றினால், கண், மூக்கு மற்றும் மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது.

Deadly 'black fungus' infection found in COVID-19 patients in India

தொற்று அதிகமாகும்போது நோயாளிகள் கண் பார்வையையே இழக்கும் அபாயம் உள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் Black fungus தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாரஷ்டிர மாநிலத்தில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களில் 52 பேர் Black fungus தொற்றால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக பிளாக் Black fungus தொற்றால் உயிரிழந்தோரின் பட்டியலை மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ளது.

“சவுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை முதல் முறையாக ஒப்புக்கொண்ட ஈரான்

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸி அராம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குரையிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகளின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சி படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களுக்கு சவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும் இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் ஈரான் – சவுதி இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ஈரான் – சவுதி தலைவர்கள் பாக்தாத்தில் இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. மேலும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஈரானுடன் சிறப்பான உறவை கொண்டிருப்பதாக அண்மையில் தெரிவித்தார்.

இந்நிலையில், சவுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை முதல்முறையாக ஈரான் அரசு ஒப்புக்கொண்டது. ஈரான் எப்போதும் பிராந்தியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வரவேற்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சயீத்து தெரிவித்துள்ளார்.

காசா முனையில் தொடரும் பதற்றம் – தாக்குதல் நடத்த தரைப்படையையும் இறக்கிய இஸ்ரேல் – அமெரிக்கா மேற்கொண்டுள்ள புதிய நகர்வு !

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

இதற்கிடையே, ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு ரொக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.

மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காசா முனை மீது தாக்குதல் நடத்த விமானப்படையுடன் சேர்த்து தரைப்படையையும் இஸ்ரேல் களமிறக்கியுள்ளது. இதனால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு தரப்பு மோதலில் இதுவரை மொத்தம் 133 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் காசா முனையில் ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட 126 பேரும், இஸ்ரேலில் 7 பேரும்  உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை அமெரிக்க எடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கிடையில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்க சமாதான துாதுவர் ஒருவர் இஸ்ரேலின் ரெல் அவிவ் பகுதியைச் சென்றடைந்துள்ளார்.

அமெரிக்க துாதுவர் ஹடி ஆம்ர் இருதரப்புடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள நிலையில் ஐக்கிய நாடுகளுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளதுடன் குறித்த பதற்றம் நிலவும் பகுதியில் நிலையான அமைதி ஏற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.