ஜெயபாலன் த

ஜெயபாலன் த

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

P Rayaharanநாம் தகவல் யுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். 20ம் நூற்றாண்டில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்த துறை தகவல் தொழில்நுட்பம். இந்த 21ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியின் பலாபலன்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டு உள்ளோம். மித மிஞ்சிய தகவல்களால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பற்றி உலகம் இன்று விவாதிக்கின்றது. ஆனால் தமிழ் சமூகம் இந்தத் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியின் அடிப்படைகளைக் கூட அனுபவிக்க முடியாத யுத்த சூழல் இலங்கையில் இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் வரை தமிழீழ விடுதலைப் புலிகளும் இன்றும் இலங்கை அரசும் தகவல்கள் மீதான தங்கள் அதீத கட்டுப்பாடுகளை கொண்டிருந்தனர். கொண்டிருக்கின்றனர்.

ஆனால் மேற்கு நாடுகளில் இருந்த தமிழ் ஊடகங்களைப் பொறுத்தவரை தகவல்கள் மீதான குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. அவர்களுக்கு தகவல்கள் பலவழிகளிலும் கிடைத்தது. தகவல்களைப் பெறுவதற்கான பலவழிகளும் இருந்தது. ஆனால் மேற்கு நாடுகளில் இருந்த தமிழ் ஊடகங்கள் உண்மைகளைத் தவறவிட்டன. தம் விருப்பு வெறுப்புகளுக்கும் தங்கள் அரசியல் தேவைகளுக்கும் ஏற்ப தகவல்களை வடிகட்டிக் கொடுத்தனர். மக்களை மாயைக்குள் வைத்திருந்தனர்.

நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலவினமான நிலையில் இருந்தனர், பலவந்தமாக இளைஞர் யுவதிகளை படையணியில் சேர்த்தனர், மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்தனர், தமது சொந்த மக்களையே சுட்டுக் கொன்றனர் என்ற விடயங்கள் சர்வதேச ஊடகங்களிலும் வன்னியில் இருந்தும் வந்திருந்த போதும் புல்ம்பெயர்ந்த தேசங்களில் இருந்த புலிசார்பு ஊடகங்கள் இந்த உண்மைகளைக் கண்டுகொள்ள மறுத்தனர். மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது விம்பங்களைக் கட்டமைத்தனர். அதனாலேயே மே 18 2009 காலையில் மக்கள் நித்திரையால் எழும்பியபோது ‘சிதம்பர சக்கரத்தை பேய் பார்தது’ போன்ற நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அவர்களில் பலர் இன்னமும் அதன் தாக்கத்தில் இருந்து மீளவில்லை.

இலங்கை அரச படைகளுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் மிகப்பெரும் மனித அவலம் ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்த போதும் 20 000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையில் மக்கள் கொல்லப்பட்ட போதும் தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவதற்குப் பதில் தமது அரசியல் விருப்பு வெறுப்பிற்கு உட்பட்டே தகவல்களைச் சமைத்துக் கொண்டனர். இதன் மூலம் தாயகத்தில் இருந்து 6000 மைல்களுக்கும் அப்பால் ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான ஒரு மாயையைச் சூழலை புலத்தில் உருவாக்கியது. இன்றும் பலர் அச்சூழலிலேயே வாழ்கின்றனர்.

தகவல்கள், தகவல்களின் நம்பகத்தன்மை, அதனை உறுதிப்படுத்திக் கொள்ளல் என்பன பொதுத் தளங்களில் தகவல்களைப் பரிமாறுபவர்களுக்கு இருக்க வேண்டிய கட்டாயமான பொறுப்பு. விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தகவல்களைக் கட்டமைப்பதும் உண்மைகளைத் திரிபுபடுத்துவதும் அதனால் ஏற்படும் விளைவுகளும் பாரதூரமானவை.

இன்றும் சிலர் இதனை உணர மறுக்கின்றனர். அந்த வரிசையில் தமிழரங்கம் பி இரயாகரனும் குறிப்பிடத்தக்க ஒருவர். அண்மையில் அவர் எழுதிய கட்டுரையில் இருந்து:
“வட்டுக்கோட்டை தீர்மானம்”, “நாடு கடந்த தமிழீழம்”, “மே 18 இயக்கம்” .. என்று புலிகள், தங்கள் கடந்தகால எதிர்ப்புரட்சி வரலாற்றை மூடிமறைத்து எப்படி நிகழ்கால அரசியலை செய்ய முனைகின்றனரோ, அதைத்தான் மாற்று கருத்து தளத்திலும் செய்ய முனைகின்றனர். மொத்தத்தில் கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்காத ஒவ்வொருவரும், கடந்தகாலத்தை மூடிமறைத்து தங்கள் நிகழ்காலத்தை “புரட்சிகரமானதாக” காட்டமுனைகின்றனர்.”

பி.இரயாகரன் Tuesday, 15 December 2009 11:22

வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், மே 18 இயக்கம் என்ற மூன்றையும் இரயாகரன் புலிகள் அமைப்பின் தொடர்ச்சியாகக் குறிப்பிடுகின்றார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்னெடுத்த கி பி அரவிந்தனும் நாடுகடந்த தமிழீழத்தை முன்னெடுக்கும் விஸ்வானந்தன் உருத்திரகுமாரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலை புலம்பெயர் நாடுகளில் முன்னெடுப்பவர்கள். இவை இரண்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலின் தொடர்ச்சி என்பது பொதுவாக நிறுவப்பட்ட உண்மை.

மே 18 இயக்கம் தீப்பொறி அமைப்பின் தொடர்ச்சி என்பதும் வியூகம் இதழ் உயிர்ப்பின் தொடர்ச்சி எனபதும் சுயவிமர்சனங்களுக்கு ஊடாகவே தாங்கள் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ளப் போவதாகவும் வியூகம் சஞ்சிகையின் ஆசிரியர் தலைப்பு தெரிவித்து இருக்கின்றது. இது தொடர்பான கட்டுரை டிசம்பர் 9ல் மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன் என்ற தலைப்பில் தேசம்நெற்ல் வெளியாகி இருந்தது. ரொறன்ரோவில் டிசம்பர் 13ல் இடம்பெற்ற வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ‘விவாதக் களத்திற்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது’ என்றும் ‘அதன் ஆரம்பமே வியூகம்’ என்றும் ரகுமான் யான் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான கடுமையான விமர்சனத்தை வியூகம் ஆசிரியர் தலைப்புக் கொண்டுள்ளது. இவற்றுக்கு மேலாக வியூகம் சஞ்சிகையின் இலத்திரனியல் வடிவம் இரயாகரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் மட்டுமல்ல ‘விடுதலைப் போராட்டமும் புலிகளும்’ என்ற பிரதான கட்டுரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளது. வியூகம் சஞ்சிகையின் இலத்திரனியல் வடிவம் இரயாகரனுக்கு டிசம்பர் 14 மாலை 8:48க்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

— On Mon, 14/12/09, Tamil Circle <tamil_circle@yahoo.no> wrote:

> From: Tamil Circle <tamil_circle@yahoo.no>
> Subject:
> To: tamil_circle@yahoo.no
> Date: Monday, 14 December, 2009, 8:48 PM
> கடுமையாக
> விமர்சிக்கப்பட வேண்டிய நிலையில் – பார்வைக்கு      
>      
> தமிழரங்கம்
> இணையத்தளம்  கருத்து
> மக்களைப் பற்றிக்
> கொண்டால் அது மாபெரும்
> சக்தியாக
> உருவெடுக்கும்
>                                                              
>           www.tamilcircle.net 
>
> வர்க்கம், அரசியல்,
> சாதியம், பெண்ணியம்,
> தேசியம், நிறம், மதம்,
> பண்பாடு, கலாச்சாரம்,
> இசை, சுற்றுச்சூழல் …
> என அனைத்து
> விடையங்களையும்
> இத்தளத்தில் நீங்கள்
>
> காணமுடியும்.                 
>        
> மின்னஞ்சல்  tamilcircle@tamilcircle.net     
> tamil_circle@yahoo.no

அதாவது மே 18 இயக்கம் புலி சார்பானது என இரயாகரன் எழுதுவதற்கு முதல்நாளே வியூகம் சஞ்சிகையின் இலத்திரனியல் வடிவம் இரயாகரனிடம் இருந்துள்ளது. tamil_circle@yahoo.no என்ற மின் அஞ்சல் முகவரியில் இருந்து இது அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

அப்படி இருக்கையில் வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், அமைப்புகளுடன் மே 18 இயக்கத்தையும் இணைத்து மே 18 இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பினாமி அமைப்பு என்று இரயாகரன் முத்திரை குத்துவது எதற்கு? இதற்கு இரு காரணங்கள் இருக்க முடியும்.
1. தவறான தகவல் : வழமை போல் இரயாகரன் எவ்வித உறுதிப்படுத்தலும் நம்பகத்தன்மையும் இல்லாத தகவலைக் கொண்டு மே 18 இயக்கம் – வியூகம் பற்றிய தவறான முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
2. தகவலை மறைப்பது : இரயாகரன் உண்மையை அறிந்திருந்த போதும் தகவல்களை வடிகட்டி தனது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப அதனைத் திரிபுபடுத்தி வெளியிட்டு இருக்க வேண்டும்.

இரயாகரன் தவறான தகவல்களின் அடிப்படையில் கட்டுரைகளை எழுதுவது ஒன்றும் புதிய விடயமல்ல. இது இரயாகரனுக்கு மட்டுமுள்ள குறைபாடும் அல்ல. இது கீ போட் மாஸ்க்ஸிஸ்டுக்களுக்குள்ள பொதுவான குறைபாடு. இவர்கள் தகவல்களைச் சேகரிப்பது உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை. தங்கள் உழைப்பைச் செலுத்துவதும் இல்லை. ஏனெனில் இவர்கள் சொகுசு மார்க்ஸிட்டுக்கள். இவர்கள் பிரதான நீரோட்டத்தில் இருந்து அந்நியப்பட்டு இருப்பதனால் இவர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மூலங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெற முடிகின்றது. தங்கள் அரசியலுக்கு வலுச் சேர்க்கும் தகவல்கள் எதனையும் எவ்வித விசாரணையும் இல்லாமல் இவர்கள் பயன்படுத்துவார்கள்.

இரயாகரன் – அவரது புனைவுகளும் அவர் கட்டமைக்கும் விம்பமும் :த ஜெயபாலன் என்ற கட்டுரையில் இரயாகரன் அறுதியிட்டு சரியென வெளியிட்ட செய்திகள் எப்படி முற்றிலும் தவறான செய்திகளாக அமைந்தது என்பது உதாரணங்களுடன் மிக விரிவாக எழுதப்பட்டு உள்ளது. அதனால் தவறான தகவல்கள் அடிப்படையில் இராயாகரன் கட்டுரையை எழுதி இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால் மே 18 இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பானது என இரயாகரன் எழுதியது தவறான செய்திகளின் அடிப்படையில் அல்ல. ஏனெனில் இரயாகரன் மே 18 இயக்கம் அதன் பின்னணி பற்றிய தகவல்களை அறிந்த ஒருவர். யூலை இறுதிப் பகுதியில் அரசியல் நட்பு சக்திகளுடன் உரையாடலை ஆரம்பிக்கு முகமாக ஐரோப்பா வந்த ரகுமான் யான் ஓகஸ்ட் 1ல் பாரிஸில் இரயாகரனைச் சந்தித்து உரையாடினார். இந்த உரையாடல் நடந்து இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் தமிழரங்கத்தில் கட்டுரை எழுதிய இரயாகரன் பின்வரும் அழைப்பை நட்புசக்திகளுக்கு விடுத்தார். ”மக்களின் விடுதலையை வழிகாட்டும் பாட்டாளி வர்க்க அரசியலை முன்வைத்து, அதற்காக எந்த ஒரு பாசிச சூழலையும் எதிர்கொண்டு எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதை கடந்த எம் வரலாற்றில் யார் தான் செய்தார்கள்!? இதை முன்வைத்தவர்களுடன் இணைந்து செல்வதுதான், இன்றைய புரட்சிகர நடைமுறை.”  இரயாகரன் தீப்பொறி அல்லது ரகுமான் யான் புலிகள் சார்ந்த அரசியலை முன்னெடுத்தவர்கள் என்றால் ஏன் இந்த விமர்சனத்தை அன்று வைக்கவில்லை.

மேலும் அன்று இரயாகரன் எழுதியது ”எம்முடன் சேர்ந்து பயணிக்க முடியாதவர்கள், இயல்பாக தம்முள் பாட்டாளி வர்க்கத்தை மறுக்கும் எதிர்ப்புரட்சி அரசியல் கூறுடன்தான், தம்மை முன்னிறுத்த முனைகின்றனர்.’‘ இந்த வரிகளின் மூலம் இரயாகரன் தனது நோக்கத்தை அம்மணமாகத் தெரிவிக்கிறார். “Over time it’s going to be important for nations to know they will be held accountable for inactivity,You’re either with us or against us in the fight against terror.” நவம்பர் 6 2009ல் இதனைத் தெரிவித்தது வேறு யாருமல்ல அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ச் புஸ். இதே கருத்துப்படவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் நடந்து கொண்டார். தனது வழியே சரியானது என்றும் அந்தவழியில் பயணிக்காதவர்கள் தமிழ் தேசியத்தின் துரோகிகள் என்றும் சுட்டுக்கொன்றார். இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தனது வழியில் பயணிக்காதவர்களை நாட்டுக்கு துரோகம் இழைப்பவர்கள் என்று வைகின்றார்.

தங்கள் அரசியலை ஏற்றுக்கொள்ளாதவர்களை ஜோர்ஜ் புஸ், வே பிரபாகரன், மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல இரயாகரனும் மிரட்டுகின்றார். டிசம்பர் 6ல் ரமிள்சேர்க்கிளில் இருந்து யோகன் கண்ணமுத்துவுக்கு (அசோக்) அனுப்பப்பட்ட மின் அஞ்சல்:
From: tamilcircle@tamilcircle.net
To: ashokyogan@hotmail.com
Subject: tamilcircle
Date: Sun, 6 Dec 2009 18:31:17 +0000

”அசோக் நீ இப்போது கூட்டு வைத்திருக்கும் ஜான் மாஸ்டர் தான் கட்டன் நாசனல் வங்கிப்பணத்தை திருடிக்கொண்டு கனடாவிற்கு ஓடியவன். இதையும் நாம் அம்பலப்படுத்துவோம்.”

2007 டிசம்பர் பிற்பகுதியிலும் 2008 ஜனவரியிலும் என்எல்எப்ரி யின் ஹற்றன் நஸனல் வங்கிக்கொள்ளை தொடர்பாக தேசம்நெற் வாசகர்கள் பலரும் இரயாகரனிடம் கேள்வி எழுப்பினர். தன்னிடம் அவ்வாறான ஒரு கேள்வி எழுப்பப்பட்டதற்கே பொங்கியெழுந்து பல கட்டுரைகளை எழுதிய இரயாகரன் குறிப்பிட்ட வங்கிக் கொள்ளை தொடர்பாக எந்தப் பதிலையும் கூறவில்லை. ஆனால் ஓராண்டு கழித்து ”அசோக், நீ இப்போது கூட்டு வைத்திருக்கும் ஜான் மாஸ்டர் தான் கட்டன் நாசனல் வங்கிப் பணத்தை திருடிக்கொண்டு கனடாவிற்கு ஓடியவன். இதையும் நாம் அம்பலப்படுத்துவோம்.” என்று இரயாகரன் மிரட்டுகின்றார். இரயாகரனின் இந்த அரசியல் நேர்மையை என்னவென்பது.

இரயாகரனும் இந்த கீ போர்ட் மார்க்ஸிஸ்ட்டுக்களும் மார்க்ஸிஸத்தில் புலிகள் அல்ல. இவர்கள் புலி மார்க்ஸிஸ்ட்டுக்கள்.

மே 18 இயக்கம் மீதும் ரகுமான் யான் மீதும் புலி முத்திரை குத்துவதற்கான காரணங்களில் மிக முக்கியமானது இரயாகரனுடைய முன்னைய கட்டுரை மூலம் மிகத் தெளிவாகிவிட்டது. ரகுமான் யான் தன்னுடன் பாரிஸ்க்கு கதைக்க வந்ததை ”எமது வழிதான் சரியானது என்பது, தெளிவாக அரசியல் ரீதியாக உணரப்படுகின்றது.” என்று புல்லரித்துக் கொண்ட இரயாகரன் ரகுமான் யான் மே 18 இயக்கத்தை ஆரம்பிக்கிறார் என்ற செய்தி உறுதியானதும் பல்டி அடித்துக் கொண்டார். ”கடந்தகாலத்தில் மக்களுடன் நிற்காத ஒவ்வொருவரும், கடந்தகாலத்தை மூடிமறைத்து தங்கள் நிகழ்காலத்தை “புரட்சிகரமானதாக” காட்டமுனைகின்றனர்.” என்று ஒரு குற்றச்சாட்டை போட்டு வைக்கின்றார். மற்றவர்களை மக்களுடன் நிற்காதவர்கள் என்று எழுதும் இரயாகரன் ”எதுக்கு வாக்கு போடுகின்றோம்!?, ஏன் போடுகின்றோம்!? என்று எதைத் தெரிந்து கொண்டும் மந்தைகள் வாக்குப் போடுவது கிடையாது.” என்று மக்களை மந்தைகள் என்று திட்டித் தீர்க்கின்றார். ”ஆறாவது அறிவை இழந்த மந்தைகள்” என்று மேலதிக விளக்கமும் கொடுக்கின்றார். ‘தமிழ் சமூகத்தில் ஆறறிவுள்ள ஒரே அரசியல் விலங்கு ‘அண்ணன் இரயா’ மட்டும் தான் என்பதனை இந்த தமிழ் சமூகம் அறிந்திருந்தால் பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஒரு பட்டாசு வெடியுடனேயே முடித்திருக்கலாம்.’ என்ற கணக்கில் தான் இரயாகரன் தன்னைப் பற்றிய விம்பத்தைக் கட்டமைக்கின்றார். 

இராயாகரன் தன்னைப்பற்றிக் கொடுக்கும் மற்றுமொரு பில்ட்அப் ”இன்று இலங்கையில் நான் மட்டும்தான் பெருமளவில் சமூகம் சார்ந்த உணர்வுடன் சமூக விடயங்கள் மீது எழுதுகின்றேன். அதற்காக தனித்து குரல் கொடுக்கின்றேன்;….. எனது சொந்த உழைப்பில் தான் எனது நூல்களை அச்சில் கொண்டு வந்துள்ளேன். கொண்டு வருகின்றேன். இருந்தும் இந்தப் புத்தகங்களை காசு கொடுத்து வாங்குவோர் கிடையாது. …. இது எனது சுயபுராணமோ விளம்பரமோ அல்ல. இன்றைய சமூக எதார்த்தம் சார்ந்த சூழலில் நான் தனித்து போராடுகின்ற ஒரு நிலையில் தனிமைப்பட்டுள்ளேன்…. இந்த நிலையிலும் கூட நான் எனக்காக அல்ல சமூகத்துக்காகவே என்னை வருத்தியே உழைக்கின்றேன்.”

இவற்றிலிருந்து மே 18 இயக்கம் புலிகள் சார்பான அமைப்பு என்ற இரயாகரனின் குறிப்பு இரயாகரன் மிகத் திட்டமிட்டு தனது அரசியல் விம்பத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் சேறடிப்பே என்ற முடிவுக்கே வர முடிகின்றது. சேறடிப்புடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாத இரயாகரன் தங்கள் கீ போட் மார்க்ஸிட்டுக்கள் இடையேயான பனிப் போரில் அதனுடன் சம்பந்தப்படாத ரகுமான் யான் இராணுவச் சீருடையில் நிற்கின்ற படத்தைப் போட்டுள்ளார். கட்டுரையுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அப்புகைப்படம் அதில் பிரசுரிக்கப்பட்டது யாருக்கு ரகுமான் யானை காட்டிக்கொடுக்கும் முயற்சி? இது ஒரு அப்பட்டமான காட்டிக்கொடுத்தலே. ஒரு போராளி அவனுடைய சமூகத்தின் உடமை. அவனைக் காட்டிக்கொடுக்கின்ற உரிமையை இரயாகரன் எங்கிருந்து பெற்றார். இந்தக் காட்டிக் கொடுப்பு இரயாகரன் மக்கள் நலன்சார்ந்து செயற்படவில்லை என்பதை மட்டும் உறுதியாக்குகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த லண்டன் வந்திருந்த போது அவருடன் ஒரு நேர்காணல் ஒன்றைச் செய்திருந்தேன். அப்போது தனது தாடி பற்றி நகைச்சுவையாகத் தெரிவித்த அமைச்சர் தேவானந்த தனக்கு பிடல் கஸ்ரோ மீது மிகுந்த அபிமானம் என்றும் அவரளவுக்கு வர முடியாவிட்டாலும் அவர் போன்று தாடியை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இப்படி வாழ்க்கையில் சின்னச் சின்ன ஆசைகள் இருக்கும். அப்படித்தான் இரயாகரனுக்கும் புரட்சி செய்ய முடியாவிட்டாலும் புரட்சிக்காரன் போல் இராணுவச் சீருடையும் தொப்பியும் அணிந்து செல்ல விருப்பம் மட்டுமல்ல டென்மார்க்கில் இரயா குழுவின் கூட்டமொன்றுக்கு இரயாகரன் இராணுவச் சீருடையும் சிவப்புத் தொப்பியும் அணிந்து பங்குபற்றினாராம். ஸ்ரண்ட் காட்டுவதற்குப் படம் தேவைப்பட்டால் உங்களுடைய இந்தப் படத்தையே போட்டிருக்கலாமே. எதற்காக சம்பந்தப்படாத ரகுமான் யானின் படத்தை அவ்விடத்தில் போட வேண்டும். கீ போட் புரட்சியாளர்களுக்கு தலைமறைவு வாழ்வின் யதார்த்தத்தை அவ்வளவு இலகுவில் புரிய வைத்திட முடியாது.

எது எப்படியானாலும் இரயாகரனும் அவர் ஊறிய அதே குட்டையில் ஊறிய கீ போட் மார்க்ஸிஸ்ட்டுக்களும் தங்கள் வெற்றுக் கோசங்களால் மக்களை மட்டுமல்ல அவர்களுடைய மக்களையும் வென்றெடுக்க முடியாது. இவர்கள் தங்களை மாஓயிஸ்ட்டுக்கள் என்பதால் மாஓவின் மொழியில் காகிதப் புரட்சியாளர்கள் என்பதே வெகுபொருத்தமானது. இவர்கள் ”நான் தனித்து போராடுகின்ற ஒரு நிலையில் தனிமைப்பட்டுள்ளேன்…. ” என்று கட்டுரை எழுதுவதற்கே லாயக்கு. இந்த கீ போர்ட் மார்க்ஸிஸ்ட்டுக்கள் மீது விமர்சனம் வைப்பது ஒரு வகையில் பாலவர்ணம் சிவக்குமார் மீது கல் எறிந்ததற்குச் சமனாகும். இவர்களை அனுதாபத்துடன் அணுகுவதே முறை. குழந்தைகளின் மனநிலையை அறிய அவர்களிடம் வெள்ளைத் தாளையும் பேனையையும் கொடுத்து கீறச் சொல்வார்கள். வளர்ந்தவர்களுக்கு கீ போட்டைக் கொடுத்து எழுதச் சொல்கிறார்கள். இவர்களின் எழுத்துக்களை மொழி உளவியல் நிபுணரிடம் கொடுத்தால் அவர்கள் தகுந்த ஆலோசனை வழங்குவார்கள். இதனை ‘கீபோர்ட்-மார்க்ஸ்-சின்ட்ரம்’ என வகைப்படுத்தலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

குறிப்பு: நண்பர் இரயாகரன் எப்படியும் நீங்கள் இக்கட்டுரைக்கு சில கட்டுரைத் தொடர்கள் எழுதுவீர்கள் என நம்புகிறேன். அப்படி எழுதுவது தான் உங்கள் உளநலத்திற்கும் நல்லது. ஒரு சிறு வேண்டுகோள் வழமையாக நீங்கள் எழுதும் கட்டுரைகளை தொகுப்பாக வெளியிடுவது உங்கள் வழக்கம். அதனால் ஏற்கனவே நீங்கள் தேசம்நெற் பற்றி எழுதிய கட்டுரைகளையும் இனிமேல் எழுதப் போகின்ற கட்டுரைகளயும் தொகுத்து ஒரு புத்தகமாக்க முடியுமா என்று பாருங்கள். இப்பொழுது எனக்கு வாசிக்க நேரமில்லை. புத்தகமாக இருந்தால் வயதான காலத்தில் பேரப் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டு உந்தப் புத்தகங்களைப் படிக்கலாம். ஒத்துழைப்பிற்கு நன்றி.

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

Rahuman Janமே 18 இயக்கத்தின் கோட்பாட்டு இதழான ‘வியூகம்’ சஞ்சிகையின் வெளியீடு ரொறன்ரோவில் நேற்று (நவம்பர் 12ல்) இடம்பெற்றது. (மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்) பல்வேறு அரசியல் தளங்களில் இருந்தும் வந்திருந்த 100 பேர் வரை கலந்துகொண்ட இந்நிகழ்வில் விவாதக் களத்திற்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது’ என்றும் ‘அதன் ஆரம்பமே வியூகம்’ என்றும் ரகுமான் யான் தெரிவித்தார். (தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்) இந்நிகழ்வில் தேவானந்தன், கௌசலா ஆகியோர் வியூகம் பற்றிய மதிப்பீட்டை மேற்கொண்டனர். நிவேதா பெண்ணியம் தொடர்பாகவும், சேனா தேசியம் தொடர்பாகவும் வியூகம் இதழை மதிப்பீடு செய்தனர். வந்திருந்தவர்கள் வியூகத்தின் வருகையை எதிர்பார்ப்புகளுடன் எதிர்கொண்டனர்.

தீப்பொறி இயக்கத்தின் கோட்பாட்டு இதழாக வெளிவந்த ‘உயிர்ப்பு’ சஞ்சிகைக்குப் பின் ஏற்பட்டு இருந்த அரசியல் செயற்பாடுகளுக்கான வெற்றிடத்தை தங்களது சுயவிமர்சனத்துடன் மே 18 இயக்கமும் அதன் கோட்பாட்டு இதழான வியூகமும் நிரப்ப முற்பட்டுள்ளது. மே 18 இயக்கத்தின் தோற்றமும் வியூகம் சஞ்சிகையின் வெளியீடும் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் அரசியல் ஆர்வலர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.

இளம் தலைமுறையைச் சேர்ந்த நிவேதா இளம்தலைமுறையினருடைய கருத்துக்களை உள்வாங்க வேண்டியதன் அவசியத்தை அங்கு வலியுறுத்தினார். வியூகம் இதழின் வரவை வரவேற்றுப் பேசிய நிவேதா, இந்த நிகழ்வில் கூட தன்னை பேசுவதற்கு அழைத்தவர்கள் தனது கணவரினூடாகவே அதனை அணுகியதாகச் சுட்டிக்காட்டினார். தமிழீழ விடுதலை இயக்கங்களில் பெண்களின் நிலை பற்றியும் குறிப்பிட்ட நிவேதா விடுதலை இயக்கங்களின் மத்திய குழுவில் ஒரு சில பெண்கள் இருப்பதால் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க முடியாது என்றும் தெரிவித்தார். தமிழ் தேசியம் பற்றிப் பேசிய சேனா தேசியம் சம்பந்தமான கேள்விகளை எழுப்புவதற்கான தருணமாக இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் பேசுகையில் போராட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

சபையில் இருந்தவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். ‘மே 18 ற்குப் பின்னர் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கான தளம் ஒன்று உருவாகி இருக்கின்றது’ என்ற அடிப்படையில் ஈஸ்வரகுமார் கருத்து வெளியிட்டார். ‘தேசிய விடுதலை இயக்கங்களின் வரலாறுகளில் தவறுகள் நிகழ்ந்துள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் அது நிகழ்ந்துள்ளது. ஆனால் இவற்றுக்குள்ளேயே நின்றுவிடாமல் அதனைக் கடந்து செல்ல வேண்டும்’ என்ற கருத்துப்பட நடராஜா முரளீதரன் கருத்துத் தெரிவித்தார். 

ரொறன்ரோவில் இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து லண்டனின் புறநகர்ப் பகுதியில் நவம்பர் 20ல் வியூகம் சஞ்சிகையின் வெளியீடும் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. லண்டனைத் தொடர்ந்து பாரிஸ் மற்றும் சூரிச் நகர்களிலும் இதன் வெளியீட்டை மேற்கொள்ள ஏற்பாடுகள் நடைபெறுகின்றது.

Related Articles:

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்

நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

(குறிப்பு: கனடா நிகழ்வு பற்றிய குறிப்பு அந்நிகழவில் கலந்து கொண்ட ஒருவரின் தகவலில் இருந்து பெறப்பட்டது. மேலதிக விபரங்களை நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தயவு செய்து பதிவு செய்யவும்.)

லண்டனில் வியூகம் வெளியீடு:

December 20, 2009 Sunday

4:00pm to 9:00pm

Shiraz Mirza Hall
76a Coombe Road
Norbiton
KT2 7AZ

லண்டனில் வியூகம் வெளியீடும் கலந்துரையாடலும் அரசியல் ஆர்லர்களிடையேயான கருத்துப் பரிமாற்றத்திற்கான நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதால். பல்வேறு அரசியல் பின்னணிகளில் இருந்தும் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் தற்போதைய அரசியல் சூழல் அதுதொடர்பான விவாதங்களும் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவின் தெரிவையே இந்தியா விரும்புகின்றது : த ஜெயபாலன்

rajapaksa_and_soniaஜனவரி 26ல் நடைபெறவுள்ள இலங்கை அரசத் தலைவருக்கான தேர்தல் தீவின் கடல் எல்லைக்கு அப்பாலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. நடந்து முடிந்த உள்நாட்டுப் போரை கால அட்டவணைக்கு உட்பட்டு முடித்துள்ள இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அதன் பலனை இத்தேர்தலில் அனுபவித்துவிடத் துடிக்கின்றார். ஆனால் நடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசுத் தலைவரின் நடவடிக்கைகள் மேற்கு நாடுகளின் அரசியல் ராஜதந்திரங்களுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்தது. இன்னும் சொல்லப் போனால் ஐ நா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றக் கங்கணம் கட்டி நின்ற மேற்கு நாடுகளின் முயற்சிக்கு இலங்கை அரசு தனது இராஜதந்திரத்தைப் பயன்படுத்தி நெத்தியடி வழங்கியது.

இலங்கை அரசுத் தலைமைக்கு வாழ்த்துத் தெரிவித்து ஐநா மனிதவுரிமைகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்: Angola, Azerbaijan, Bahrain, Bangladesh, Bolivia (Plurinational State of), Brazil, Burkina Faso, Cameroon, China, Cuba, Djibouti, Egypt, Ghana, India, Indonesia, Jordan, Madagascar, Malaysia, Nicaragua, Nigeria, Pakistan, Philippines, Qatar, Russian Federation, Saudi Arabia, Senegal, South Africa, Uruguay, Zambia.

அத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகள்: Bosnia and Herzegovina, Canada, Chile, France, Germany, Italy, Mexico, Netherlands, Slovakia, Slovenia, Switzerland, United Kingdom of Great Britain and Northern Ireland;

வாக்களிப்பில் இருந்து விலத்தி இருந்த நாடுகள்: Argentina, Gabon, Japan, Mauritius, Republic of Korea, Ukraine.

பிரித்தானியா உட்பட தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ‘மேற்கு நாட்டு அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதை விடுத்து இந்தியா, சீனா, ரஸ்யாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்துங்கள். அவர்கள் தான் இலங்கை அரசின் மனித உரிமை நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுகிறார்கள்’ எனச் சில பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களே தங்களை அணுகும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தெரிவித்து இருக்கின்றார்கள். இவ்வாறு மேற்கு நாடுகள் இலங்கை அரசு மீதான தங்கள் கட்டுப்பாட்டை பெரும்பாலும் இழந்த நிலையே தென்பட்டது. அதனால் இலங்கையை வழிக்குக் கொண்டுவருவதற்காக மனித உரிமை மீறல்கள் யுத்தக் குற்றங்கள், ஜிஎஸ்பி பிளஸ் என்ற வடிவங்களில் சில அழுத்தங்களைப் பிரயோகித்த போதும் இலங்கை அரசு மீதான தங்கள் கட்டுப்பாட்டை நிலைப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

குறிப்பாக மனித உரிமைகள், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அமெரிக்க, பிரித்தானிய மேற்கு நாட்டு அரசுகளும் மிக மோசமான மனித உரிமை மீறல்களையும் யுத்தக் குற்றங்களையும் புரிந்துள்ளதால் அவர்களால் ஒரு எல்லைக்கு அப்பால் இலங்கை அரசு மீதும் அழுத்தங்களைக் கொண்டுவர முடியவில்லை. மேலும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ என்ற மேற்கு நாடுகள் மேற்கொண்ட அதே பரப்புரையிலேயே இலங்கை அரசும் தனது நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருந்தது.

Sri Lanka: Recharting US Strategy after the War.(pdf)
http://docs.google.com/fileview?id=0B8kHEIyKsdALYWRhYjc3MDAtNjY0Yi00NmVjLWE5YjUtMzYxM2E1Njg1MTA4&hl=en என்ற அமெரிக்க செனட்டின் வெளியுறவுக்குழு டிசம்பர் 7ல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் அந்த நாட்டை மேற்கு நாடுகளில் இருந்து முற்றிலும் தனிமைப்படுத்திவிடும் என்று அவ்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் பிராந்தியத்தில் ஐக்கிய அமெரிக்காவின் நலன்களில் மாற்றம் ஏற்படும் என்பதை வருமாறு சுட்டிக்காட்டுகின்றது: ”யுத்தம் முடிவடைந்த நிலையில் ஐக்கிய அமெரிக்கா இலங்கையுடனான உறவுகளை அதன் புதிய அரசியல் பொருளாதார யதார்த்தத்தை வெளிப்படுத்தும் வகையில் மீள்மதிப்பீடு செய்ய வேண்டும். மனிதத்துவம் தொடர்பான விடயங்கள் முக்கியமானவையாக இருந்தாலும் ஐக்கிய அமெரிக்காவின் இலங்கை தொடர்பான வெளியுறவுக்கொள்கை ஒரு விடயத்தினால் தீர்மானிக்கப்படக் கூடாது. இது உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு உதவப் போவதில்லை. இது அப்பிராந்தியத்தில் ஐக்கிய அமெரிக்காவின் புவியியல் நலன்களில் குறுகிய மாற்றங்களை ஏற்படுத்தும்.’

இவற்றின் பின்னணியில் இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்பட்டு அதனைத் தனிமைப்படுத்தி அதனை மேற்குக்கு எதிரான அணியியை நோக்கித் தள்ளுவதிலும் பார்க்க இலங்கையில் தங்களுக்குச் சாதகமான ஒரு அரசினை ஏற்படுத்த வாய்ப்பிருந்தால் அதனை முயற்சி செய்வது மேற்குநாடுகளுக்கு அதீத பலனைக் கொடுக்கும். அந்த வகையில் வருகின்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் மூலம் ஒரு ‘ரெஜீம் சேன்ஜ்’க்கு மேற்குலகம் முயற்சிக்கின்றது. அதற்கான ஒரு முயற்சியாகவே ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு சந்தித்திருக்கலாம் என்ற சந்தேகத்தை தேசம்நெற்றில் வெளியான முன்னைய கட்டுரைகளில் சுட்டிக்காட்டி இருந்தோம். இச்சந்திப்பு போர்க்குற்றம் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைக்கு அல்ல என்றும் சுட்டிக்காட்டி இருந்தோம்.

இந்த ‘ரெஜீம் சேன்ஜ்’ இன் பின்னணியிலேயே சூரிச் மாநாடும் இடம்பெற்றிருந்தது. இம்மாநாட்டை ஏற்பாடு செய்த அமைப்புகளும் அதன் பின்னணியில் உள்ள நாடுகளுமே அதற்குச் சான்று. தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன் தமிழர் தகவல் நடுவத்துடன் International Working Group (IWG) என்ற அமைப்பும், Essex பல்கலைக் கழகத்தின் மனித உரிமைகள் மையத்தின் Initiative on Conflict Prevention through Quiet இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததாக தமிழர் தகவல் நடுவத்தின் நிறைவேற்றுச் செயலரான வி வரதகுமார் தெரிவித்துள்ளார்.

International Working Group on Sri Lanka என்ற இவ்வமைப்புப் பற்றி டிசம்பர் 11 1998ல் அமெரிக்க கொங்கிரஸ்ற்கு அதன் தலைவர் Richard Reoch பின்வருமாறு கூறுகிறார்‘The International Working Group on Sri Lanka is an independent, non-partisan network of organisations and individuals concerned with the promotion of human rights, development and peace in Sri Lanka. It has a management board in London and an international network that currently comprises humanitarian and advocacy groups in Asia, Australasia, Canada, Europe and the USA as well as Sri Lankan organisations working in the fields of development, peace and human rights.” இவ்வமைப்பின் சார்பில் Richard Reoch யை பிரித்தானிய அரசின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் Department for International Development of the UK Government) இரு வார வேலைத் திட்டத்தில் இலங்கைக்கு அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பொதுச் செயலாளராக Peter Bowling என்பவர் இருந்துள்ளார்.

Initative on Conflict Prevention through Quiet Diplomacy அமைப்பு கனடாவைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற Human Rights Internet அமைப்பின் ஒரு பிரிவாகும். 2007ல் இவ்வமைப்பு ஒரு மில்லியன் டொலர் நிதித் திட்டத்தைக் கொண்டிருந்தது. இவ்வமைப்பிற்கு கனடிய சர்வதேச அபிவிருத்தி முகவரகம் நோர்வே வெளிநாட்டு அமைச்சு உட்பட பல நிறுவனங்கள் நிதி வழங்குகின்றன. Human Rights Internet அமைப்பின் வேலைத்திட்டங்களில் ஒன்றான Initative on Conflict Prevention through Quiet Diplomacy அமைப்பு செயற்படுகின்றது. இதன் ஆலோசணைக் குழுவில் பல்வேறு நர்டுகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளனர். பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் பெர்னாட் கோச்னர், முன்னால் இலங்கை ஜனாதிபதி சத்திரிகா குமாரதுங்க ஆகியோர் அவர்களில் சிலர். சூரிச் மாநாட்டில் தேர்தல் விடயம் உட்பட பல தலைப்புகளில் சிறப்பு ஆய்வு அறிஞராக அழைக்கப்பட்ட ஜோன் பக்கர் Initative on Conflict Prevention through Quiet Diplomacy அமைப்பின் ஒட்டாவா கிளையில் நிபுணத்துவ ஆரோசகராக பணியாற்றுகிறார். இவர் பிரித்தானியாவில் உள்ள Essex பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிகின்றார்.

மேற்குறிப்பிட்ட அமைப்புகள் நாடுகளைத் தவிர சுவிஸ்லாந்து நாட்டின் வெளிநாட்டு அமைச்சும் சூரிச் மாநாட்டிற்கு நிதியுதவி வழங்கி உதவியுள்ளது. ‘இந்த நாடுகள் எல்லாம் இலங்கையின் விடயங்களில் தலையிடுகின்றது என்றால் அதற்கு ஒரு நோக்கம் இல்லாமல் இருக்காது’ என ஈபிஆர்எல்எப் தலைவர் சுகு இந்த மாநாட்டின் இறுதிநாள் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘ரெஜீம் சேன்ஜ் ஒன்றை மேற்கு நாடுகள் விரும்புகின்றது’ என்றும் தெரிவித்தார். மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ‘ரெஜிம் சேன்ஜ் ஒன்றுக்காக தமிழ்க் கட்சிகள் ஓரணியில் செயற்பட வேண்டும்’ எனச் சூரிச் மாநாட்டில் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

இலங்கை அரசின் பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி அடிப்படையில் திறந்த பொருளாதாரத்தை ஆதரிக்காத கட்சி. ஒப்பீட்டளவில் அதன் உறவுகள் கீழைத்தேய நாடுகளுடனேயே நெருக்கமாக இருந்தது. மேலும் இலங்கை அரசுக்கு முண்டுகொடுக்கின்ற ஜேவிபி, ஜேஎச்யு ஆகிய தேசியவாதக் கட்சிகளும் மேற்கு நாடுகளுக்கு எதிரான தீவிர சிங்கள தேசியவாதத்தை தம்முள்ளே கொண்டுள்ளன. 2009ல் மட்டுமல்ல 1971ல் இடம்பெற்ற ஜேவிபி கிளர்ச்சியை அடக்கவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது இந்தியாவும் சீனாவுமே.

2009ல் இலங்கை அரசின் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் மேற்கு நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிரான இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான், கியூபா, வெனிசுவெலா, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளே இலங்கை அரசுக்கு தங்கள் ஆதரவை வழங்கி இருந்தன. இவற்றில் கியூபா, வெனிசுவெலா, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகள் இலங்கையுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருக்காத போதும் மேற்கு நாடுகளின் – காலனித்துவ நாடுகளின் செயற்பாடுகளுக்கு எதிரானது என்ற அடிப்படையிலேயே இலங்கைக்கான அந்த நாடுகளின் ஆதரவு அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த யுத்தத்தில் இலங்கை அரசின் வெற்றிக்கு முக்கிய காரணம் இந்தியா. ஏனைய அனைத்து நாடுகளும் இலங்கை அரசுக்கு ஆதரவாக இருந்து இந்தியா தனித்து நின்று இலங்கைக்கு விரோதமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு இருந்தால் இலங்கை அரசால் இந்த யுத்தத்தை வென்றிருக்க முடியாது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக காலனித்தவ நாடுகளையும் அவர்களது ராஜதந்திரங்களையுமே இறுதிவரை நம்பி இருந்தனர். அதற்கான மிக உயர்ந்த விலையையும் செலுத்தினர்.

இவற்றின் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அரசியல் எதிர்காலத்தை அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தீர்மானிக்கப் போகின்றது. யார் ஆட்சிக்கு வந்தால் இலங்கையின் அரசியல் எதிர்காலம் தங்களுக்குச் சாதகமாக அமையும் என்பதில் மேற்கு உலகிற்கும் கீழைத்தேய உலகிற்கும் பாரிய முரண்பாடு உண்டு. இந்த முரண்பாட்டின் இரு துருவங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டும் உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டு மேற்கு நோக்கியும்- சீனா, இந்தியா உட்பட்ட கீழைத்தேய நாடுகள் ஸ்ரீறிலங்கா சுதந்திரக்கட்சி நோக்கிச் சாய்வதும் இயல்பானதே.

ஆனால் இந்தத் தேர்தலில் குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாடு கவனத்திற்குரியது. ஆனால் இந்தியா தனது நிலைப்பாடு பற்றி எவ்வித சமிக்ஞையையும் வெளிப்படையாக வழங்குவதாக இல்லை. தேர்தலில் நிற்கின்ற இரு பிரதான போட்டியாளர்களும் இந்தியாவுடன் தங்கள் நல்லுறவை உறுதிப்படுத்திக் கொள்ளவே விரும்புகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தன்னை மீறிச் செயற்பட முடியாது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது. அதனால் நேரடியான எவ்வித சாய்வையும் இந்தியா மேற்கொள்வதற்கான தேவை அங்கில்லை.

ஆனால் மேற்கு உலகிற்கு எதிரான அணியில் உள்ள இன்றைய அரசின் பக்கம் ஒரு மென்போக்கு இந்தியாவுக்கு உள்ளது. சீனா, பாகிஸ்தான் போன்ற பிராந்திய போட்டியாளர்களை இலங்கையில் கையாள்வதிலும் பார்க்க மேற்குலகை கையாள்வது இந்தியாவுக்கு சற்று கடினமானதாகவே அமையும். அதனால் இன்றைய ஜனாதிபதி மீண்டும் தெரிவு செய்யப்படுவதில் இந்தியாவுக்கு எவ்வித சங்கடமும் இல்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவில் நிற்கும் சரத் பொன்சேகா அரசியலுக்கு அறிமுகமாகாதவர். அவர் எவ்வித அரசியல் முடிவுகளை மேற்கொள்வார் என்பது பற்றி எதிர்வுகூறக் கூடிய நிலையிலும் இந்தியா இல்லை. அதனால் தெரியாதா ஒருவரிலும் பார்க்க நல்லதோ கெட்டதோ அரசியலில் அறிமுகமான ஒருவர் ஆட்சிக்கு வருவதை இந்தியா சாதகமாகவே கணிக்கும்.

இந்திய அரசியல் மற்றும் ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து வெளிவரும் சமிக்ஞைகளும் இன்றைய ஜனாதிபதி ராஜபக்ச பற்றிய ஒரு மென்போக்கையே வெளிப்படுத்துகின்றன. அண்மையில் தமிழ்கட்சிகள் தங்கள் அடையாளங்களைக் களைந்து தேசியக் கட்சிகளுடன் ஒன்றிணைய வேண்டும் என்ற அழுத்தம் மகிந்த ராஜகபக்ச அரசால் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக தனிப்பட்ட முறையில் கருத்து வெளியிட்ட இந்திய ராஜதந்திரிகள் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்ததன் பின்னர் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டதாகத் தெரியவருகின்றது. இந்திய ராஜதந்திரிகள் தேசியக் கட்சிகளுடன் சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து செயற்படுவதே சரியானது என்ற வகையில் அழுத்தங்களை வழங்கி உள்ளனர்.

தமிழக அரசியல்வாதிகளைக் கோமாளிகள் என்று பொதுப்படையாக இராணுவத் தளபதியாக இருக்கும் போது சரத் பொன்சேகா சரியாகவே விமர்சித்திருந்தாலும் அது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு எவ்வகையிலும் உதவப் போவதில்லை. குறிப்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றக் கூடிய ஆளுமை தமிழக அரசுக்கு உள்ளது. இன்று தமிழக அரசுக்கும் மகிந்த அரசுக்கும் மிக நெருக்கமான உறவுகள் ஏற்பட்டுள்ளது. தமிழக ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயமும் அதனையொட்டி வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்களின் விடுவிப்பும் மிகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அரசியல் நகர்வு. இது தற்போதைய இலங்கை தமிழக ஆளும் குழுமங்களிடையேயான உறவுகளை மிகவும் வலுப்படுத்தி உள்ளது.

இந்திய இராஜதந்திர மற்றும் புலனாய்வுத்துறையினரின் பின்புலத்தில் இயங்கும் SAAG இணையத்தளத்தில் கேர்ணல் ஆர் ஹரிகரன் (Col. R Hariharan, a retired Military Intelligence specialist on South Asia, served as the head of intelligence of the Indian Peace Keeping Force in Sri Lanka 1987-90.He is associated with the South Asia Analysis Group and the Chennai Centre for China Studies.), பி ராமன் (B Raman is Additional Secretary (retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and, presently, Director, Institute for Topical Studies, Chennai.) ஆகியோர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் இந்திய ராஜதந்திரத்தின் நாடித்துடிப்பை வெளிப்படுத்தக் கூடியவை.

நவம்பர் 14ல் கேர்ணல் ஹரிகரன் ‘Comments on Gen Fonseka’s Resignation’, என எழுதிய கட்டுரையில் ‘President Rajapaksa has built close relations with Indian leadership. Probably he made no major move that would impact India’s strategic relations with his country without consulting India. – ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியத் தலைமையுடன் நெருக்கமான உறவை கட்டமைத்துள்ளார். அனேகமாக அவர் இந்தியாவின் நடவடிக்கைத் – திட்டமிடல் – உறவைப் பாதிக்கின்ற ஒரு நகர்வை இந்தியாவுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கமாட்டார்” என எழுதியுள்ளார். இலங்கை ஜனாதிபதிக்கான போட்டியில் இந்தியாவின் தெரிவு யாராக அமையும் என்பது பற்றி கேர்ணல் ஹரிகரனின் பதில் வருமாறு: ‘I think Rajapaksa has a better equation with Indian leadership. He is a seasoned politician who has cultivated the Indian leaders over the years. On Tamil autonomy issue he has no great differences with India, although he has pushed it down in his list of priorities for political reasons. – நான் நினைக்கின்றேன் ராஜபக்ச இந்திய தலைமையுடன் மேலான சமன்பாட்டைக் கொண்டுள்ளார். அவர் ஒரு பருவகால அரசியல்வாதி. அவர் கடந்த பல ஆண்டுகளாக இந்தியத் தலைவர்களை பயிரிட்டுள்ளார். தமிழர்களுடைய சுயாதீனம் தொடர்பில் அவருக்கும் இந்தியாவிற்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை. ஆனாலும் அரசியல் காரணங்களுக்காக அவ்விடயத்தை முக்கியப்படுத்தலின் வரிசையில் பின்தள்ளியுள்ளார்.’

கேர்ணல் ஹரிகரன் சரத்பொன்சேகா பற்றி எழுதுகையில் ‘General Fonseka has his networking more with Indian military leadership than with political leaders. His strong views smacking of Sinhala nationalism rather than Sri Lanka nationalism makes Government of India uncomfortable. -தளபதி பொன்சேகாவினுடைய வலைப்பின்னல் இந்திய அரசியல் தலைவர்களுடன் இருந்ததிலும் பார்க்க இந்திய இராணுவத் தலைமைகளுடனேயே கூடுதலாக இருந்தது. இலங்கைத் தேசியவாதத்திலும் பார்க்க சிங்களத் தேசியவாதத்தில் அவர் கொண்டுள்ள சுவை இந்திய அரசுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.’ எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழக அரசு பற்றிக் குறிப்பிட்ட விடயத்தையும் சுட்டிக்காட்டிய கேர்ணல் ஹரிகரன் இறுதியாக இவ்வாறு தனது கட்டுரையை முடிக்கின்றார். ;. ‘So overall, India would probably prefer Rajapaksa to continue as president. ஆகவே முழுமையாக் எடுத்துக் கொண்டால் அனேகமாக இந்தியா ராஜபக்ச ஜனாதிபதியாகத் தொடர்வதையே விரும்பும்.’

பி ராமனும் கேர்ணல் ஆர் ஹரிகரனுடைய தொனியிலேயே தனது கட்டுரையை வரைந்துள்ளார். அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கு தளபதி பொசேகாவின் இராணுவத் தலைமையிலும் பார்க்க மகிந்த ராஜபக்சவின் அரசியல் தலைமையே பிரதான காரணம் என்கிறார். அதனால் ‘Gen. Fonseka Devalues Himself – தளபதி பொன்சேகா தன்மதிப்பைக் குறைக்கின்றார்’ என்ற தலைப்பில் பி ராமன் நவம்பர் 17ல் கட்டுரையை வரைந்துள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட்டிருக்கக் கூடாது என்ற வகையில் பி ராமனின் கட்டுரை அமைந்துள்ளது. கட்டுரையை அவர் வருமாறு முடிக்கின்றார். ‘Fonseka has only devalued himself. The political forces in Sri Lanka which are exploiting his pique as a stick to beat Rajapaksa with are playing an unwise game. They may end up by diluting the professionalism of the SL Army. – இதன் மூலம் பொன்சேகா தன்மதிப்பை மட்டுமே குறைத்துள்ளார். அவருடைய கடுப்பை இலங்கையில் உள்ள அரசியல் சக்திகள் ராஜபக்சவை அடிப்பதற்கான தடியாக பயன்படுத்திக் கொள்கின்றன. இது ஒரு புத்திசாதுரியமான செயல் அல்ல. இவர்கள் சிலவேளை இலங்கை இராணுவத்தின் தொழில்நேர்த்தியை பலவீனப்படுத்துவதில் முடிப்பார்கள்.’ இவை இந்திய ஆளும் குழுமத்தின் போக்கை நாடி பிடித்துப் பார்க்க உதவுகின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை 2016 வரை கொண்டு செல்ல வேண்டும் என்ற உள்விருப்புடனேயே இந்தியா சில அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால் இருப்பதாகத் தெரிகின்றது. பிரதான போட்டியாளர்களான மகிந்த ராஜபக்சவும் சரத்பொன்சேகாவும் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த வீரர்கள் என்ற இறுமாப்புடனேயே தேர்தல் களத்தில் குதிக்கின்றனர். இத்தேர்தலில் இந்த இரு தலைவர்களின் தேர்தல் கொள்கை விளக்கங்களில் சிறுபான்மையினருக்கு எவ்வித உறுதி மொழியும் வழங்கப் பட்டிருக்கவில்லை. இரு தரப்பிலும் தொங்கிக் கொள்ளும் சிறுபான்மையினக் கட்சிகள் வழமைபோல் வெறும் நம்பிக்கைகளுடன் மட்டுமே தங்கள் ஆதரவை வழங்கி உள்ளன. ஜனாதிபதித் தேர்தல் வரை, நடந்து முடிந்த அத்தனை தேர்தல்களிலும் ஆளும் மகிந்த அரசின் கூட்டே பெரும்பாலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் மகிந்த அரசைத் தோற்கடிப்பதற்கு எதிர்த்தரப்பு முற்றிலுமாக இணைந்து செயற்படுத்துவதன் மூலமே அதனைச் சாத்தியமாக்க முடியும்.

ஆனால் எதிர்த் தரப்பின் நிலை அவ்வாறு இல்லை. ஏற்கனவே பிளவுகள் வெடிக்க அரம்பித்து உள்ளது. சிறுபான்மைக் கட்சிகள் கூட எதிர்த் தரப்புடன் முழுமையாக இல்லை. இரு வேட்பாளர்களுக்குமாக சிறுபான்மைக் கட்சிகள் பிளவுபட்டு உள்ளது. ஒரு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைக் கொண்ட தமிழ்ச் சமூகம் இத்தேர்தலில் ஆர்வம் காட்டுவதாக இல்லை. 2005 தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களை வாக்களிக்க அனுமதிக்காமல் செய்ததன் மூலம் மகிந்த ராஜபக்சவை தேர்தலில் வெற்றியீட்டச் செய்தது தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களின் பினாமிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்புமே. இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாமற் போய்விட்டார்கள். அவர்களுடைய பினாமிகள் மட்டுமே உள்ளனர். அவர்களால் இத்தேர்தல் தொடர்பாக ஒருமித்த முடிவை எடுக்க முடியாது என்பது பெரும்பாலும் உறுதியாகி விட்டது. இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவிற்காவோ அல்லது சரத் பொன்சேக்காவுக்காகவோ தமிழ் மக்களிடம் சென்று வாக்கு கேட்க முடியாது. அப்படிக் கேட்க முற்படுவது தமிழ் அரசியலில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரும் அரசியல் பல்டியாகவே அமையும். ஆயினும் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது மகிந்தவின் அரசியல் தலைமையே என்றளவில் சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு வழங்க சில தமிழ் தலைமைகள் முன்வருகின்றன. பொதுவாகவே தமிழ் தலைமைகளிடம் யுஎன்பி சார்புப் போக்கு என்றும் உள்ளது. அதனால் தமிழ் மக்களின் வாக்கு மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமையும் என்ற முன் கணிப்பு ஒன்றுள்ளது.

இவற்றின் பின்னணியில் இரு வேட்பாளர்களுமே தமிழ் மக்களுடைய நலன்களுக்கு எதிரானவர்கள் என்பதால் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் ஆங்காங்கு ஒலித்தன. ‘சரத் பொன்சேகாவையோ அல்லது ராஜபக்சவையோ தமிழ் மக்கள் ஆதரிக்க முடியாது. இருவருமே தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர்கள். அதனால் தமிழ் மக்கள் இத்தேர்தலில் தங்களுக்கு என்று ஒரு வேட்பாளரை நிறுத்துவதையும் நாங்கள் பரிசீலிக்கின்றோம்’ என சூரிச் மாநாட்டில் கலந்துகொண்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் ‘தேசம்நெற்’க்குத் தெரிவித்தார். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் இந்தியா சென்று திரும்பியபின் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றியும் ஆர் சம்பந்தனே தமிழ் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற ஊகங்களும் தெரிவிக்கப்பட்டது. ‘ஆர் சம்பந்தன் தோல்வி அடையும் தேர்தலில் போட்டியிடவும் மாட்டார். வெற்றி பெறும் தேர்தலை விட்டுவிடவும் மாட்டார்.’ என்ற அடைமொழிக்கமைய தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு உடன்பட மறுத்துள்ளார். பெரும்பாலும் ஆர் சம்பந்தன் உட்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்காமல் மௌனம் காப்பார்கள் என்றும் ஊகிக்கப்படுகின்றது.

ஆனால் அண்மையில் இந்தியா சென்றிருந்த சிவாஜிலிங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தத் தவறினால் தான் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்திருந்தார். தற்போது இந்தியாவுக்கு நெருக்கமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கமான ரெலோ இயக்கம் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று கோரி வருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கான ஒரு அஸ்திரமாகவும் இந்த தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான கோரிக்கை அமையலாம்.

தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் மகிந்த ராஜபக்சவே கூடுதலான நன்மையடைவார். கடந்த தேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்குகள் இல்லாததால் வெற்றியீட்டிய அவர் இத்தேர்தலிலும் தமிழ் மக்களுடைய வாக்குகள் இல்லாமலேயே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது. ஆனால் அந்த வாக்குகள் சரத் பொன்சேகாவிற்குச் செல்வது மகிந்த ராஜபக்சவின் வெற்றியைப் பாதிக்கும். அதனால் தமிழ் தேசியவாதி ஒருவரை தேர்தலில் நிறுத்துவதன் மூலம் சரத் பொன்சேகாவிற்கு தமிழ் வாக்குகள் செல்வதைத் தடுக்க முடியும். தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா சென்று திரும்பியதில் இருந்தே அழுத்தமாக வருவதால் இந்த நகர்விற்குப் பின்னணியில் இந்திய இருக்கலாம் என்ற முடிவுக்கே வரமுடியும். மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ இயக்கம் ஒப்பீட்டளவில் அரசு சார்பு நிலைப்பாடுகளையே எடுத்துவருகின்றது. அந்த வகையில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற முடிவுக்குப் பின்னால் இந்திய – இலங்கை அரசுகள் இருந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை. மேலும் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் தாங்கள் தமிழ் தேசியத்திற்காக நிற்பதாகக் காட்டிக் கொள்ளவும் முடியும். அதே சமயம் மகிந்த ராஜபக்சவைத் திருப்திப்படுத்தியதாகவும் அமையும். ரெலோ ஒரே கல்லில் இரு மாங்காய்களை விழ்த்த நினைக்கின்றது.

இந்த அரசியல் நகர்வுகளின் மையம் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா மகிந்த ராஜபக்சவை 2016 வரைக்கும் பதவியில் அமர்த்துவதை நோக்கி நகர்கிறது என்ற முடிவுக்கே வரவைக்கின்றது.

கிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலக் யாழில் ஹொட்டல் கட்ட ஒப்பந்தம்

Tilko_Property_Servicesகிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலக் என்று அறியப்பட்ட திலகராஜா தவராஜா யாழ் நகரின் மையப்பகுதியில் 340 பேர்ச் நிலத்தில் ஹொட்டல் அமைப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ளார். Board of Investment – BOI of Sri lanka  திலகராஜா தவராஜா முகாமைத்துவ இயக்குனராக உள்ள Tilko Jaffna City Hotels (Private) Limitedக்கு அந்த அனுமதியை வழங்கி உள்ளது.BOI யின் சார்பில் அதன் தலைவர் தமிக்க பெரேரா கையொப்பமிட்டு அதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கி உள்ளார். திலகராஜா தவராஜா கிழக்கு லண்டனில் உள்ள ரில்கோ புரப்பட்டி சேர்வீஸ், பிரியா உணவகம் ஆகியவற்றின் உரைமையாளர். 

திலகராஜா தவராஜா கிழக்கு லண்டனில் எஸ்டேட் ஏஜென்ட்களை நிறுவி தனது வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகள் வட மாகாணத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வேளையிலேயே முதலீடுகளை ஆரம்பித்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு குறிப்பிடத்தக்க நிதிப் பங்களிப்பை வழங்குபவர்கள் அவர்களுடைய நிதிப் பங்களிப்பிற்கு ஏற்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைச் சந்தித்து அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வகையில் திலகராஜா தவராஜா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து புகைப்படமும் எடுத்துக் கொண்டவர். ‘அப்படத்தை தனது பொக்கற்றினுள் வைத்து சுற்றத்தவர்களுக்குக் காட்டுவதில் பெருமைப்பட்டுக் கொண்டவர்’ என அப்படத்தை பார்த்த அவருடைய நண்பர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

யாழ் நகரத்தின் மையத்தில் அமையவிருக்கும் இந்த உல்லாசவிடுதி 33 அறைகளையும் இரு கொட்டேஜ்களையும் கொண்டிருக்கும் என்றும் உல்லாசப் பயணிகளுக்கு சொகுசான தங்குமிடத்தை வழங்கும் என்றும் திலகராஜா தவராஜா தெரிவித்துள்ளார். இந்த உல்லாச விடுதியில் உணவகம், உடற்பயிற்சிக்கான இடம், மாநாடுகளை மேற்கொள்வதற்கான இடம் என்பனவும் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சொகுசான தங்குமிடங்களுக்கு பற்றாக்குறையுள்ள நிலையில் இந்த உல்லாச விடுதி பெரும்பாலும் வர்த்தக சமூகத்தையும் உல்லாசப் பயணிகளையும் புலம்பெயர்ந்த தமிழர்களையும் கருத்தில் வைத்து அமைக்கப்படுவதாக திலகராஜா தவராஜா தெரிவித்துள்ளார்.

Tilko_Property_Servicesதமிழீழ விடுதலைப் புலிகளுடனான முதலீட்டில் ஆணிவேர் படத்திற்கான முதலிட்டையும் திலகராஜா தவராஜா செய்திருந்ததாகவும் ஆனால் அதில் அவரது நிறுவனப் பெயரைப் போட தமிழீழ விடுதலைப் புவிகள் விரும்பியிருக்கவில்லை என்றும் தெரியவருகிறது. அதேசமயம் மற்றுமொரு படத்தில் தயாரிப்பாளராக இவரது நிறுவனத்தை போடுவதற்கு சம்மதித்ததாகவும் அப்படம் பூர்த்தியாக முன்னரேயே தமிழீழ விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலைச் சந்தித்ததாகவும் தெரியவருகின்றது.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த உல்லாச விடுதியின் நிர்மாண வேலைகள் 2010 பெப்ரவரியில் திறந்த வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு கிழக்கில் முதலீடுகளுக்கான தேவை மிக அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள திலகராஜா தவராஜா முதலீட்டாளர்களின் நம்பிக்கை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் தமிழ் சிங்கள சமூகங்களின் உதவியுடன் சிறிலங்கா இஸ்லாமிக் போறம் மேற்கொள்ளும் கண் சிகிச்சை முகாமுக்கான நிதி திரட்டும் வைபவம்

Naja Mohamadஇலங்கையின் வடபகுதி மக்களுக்கு சிறிலங்கா இஸ்லாமிக் போறம் (யுகே) ஏற்பாடு செய்துள்ள கண் சிகிச்சை முகாமுக்கான நிதிசேகரிப்பு வைபவம் லண்டன் மொஸ்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டிசம்பர் 12ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில்  நியூஹாம் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஸ்ரீபன் ரிம்ஸ் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

சிறீலங்கா இஸ்லாமிய ஒன்றியம் (இலண்டன்) ஆரம்பித்துள்ள முதல் முயற்சி இலங்கையின் வடபகுதியில் உள்ள கண் நோயாளர்களின் தேவை கருதி முதற் தொகுதியாக 500 நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சை ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக 20 சிகிச்சை முகாம்கள் வட பகுதியின் 5 மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டு சிகிச்சைக்கான நோயாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டாவது கட்டமாக தேர்வு செய்யப்பட்ட நோயாளிகளில் 500 நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இச் சிகிச்சைக்கு நோயாளி ஒருவருக்கு தலா £50 ஸ்ரேர்லிங் பவுண்கள் செலவாகுமென மதிப்படப்பட்டுள்ளது.

வன்னி முகாம்களில் இருந்த மக்களுக்கான தேசம்நெற் நூல் திட்டத்திற்கு முக்கிய பங்களித்த அகிலன் பவுண்டேசன் வடபகுதியில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற கண் சிகிச்சை முகாமிலும் தங்கள் பங்களிப்பை மேற்கொள்ள முன் வந்துள்ளனர். அகிலன் பவுண்டேசன் 25 பேருக்ககான கண் சிகிச்சைக்கான செலவை வழங்க முன் வந்துள்ளது. மேலும் லண்டனில் உள்ள முக்கிய சைவ ஆலயம் ஒன்றும் இக் கண் சிகிச்சை முகாமுக்கு தங்கள் பங்களிப்பை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இவ்வைபவத்தில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லீம் தமிழ் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு இவ்வேலைத் திட்டத்திற்குப் பங்களிக்க முன்வந்துள்ளதாக சிறிலங்கா இஸ்லாமிக் போறத்தின் தலைவர் நஜா மொகமட் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்நிகழ்வில் பெரும்பாலும் 500 பேருக்கு சிகிச்சை அளிப்பதற்கான நிதியைத் திரட்ட முடியும் எனத் தான் நம்புவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இவ் வேலைத் திட்டம் இலங்கையிலுள்ள Serendib Foundation எனப்படும் மன்றத்தினால் அபிவிருத்தி மற்றும் உதவித் திட்டத்தின் கீழ் இடம்பெறுகிறது. இதற்கான சிகிச்சை வசதிகளை இலங்கையிலுள்ள குவைத் வைத்திய மன்றம் (Kuwait Hospital Foundation) மேற்கொள்கிறது. இம் மன்றம் ஏற்கெனவே சுமார் 4000 இற்கு மேற்பட்ட கண் நோயாளர்களுக்கான சிகிச்சைகளை கடந்த 3 வருடங்களில் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்கண் சிகிச்சை மூகாம் கண் பார்வையை தெளிவாக்குவதற்கான முகாம் மட்டுமல்ல சமூகங்களிடையே பரந்த பார்வையை ஏற்படுத்துவதற்கும் உதவும் என நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் தெரிவித்தார். தமிழ் முஸ்லீம் சிங்கள சமூகங்கள் இணைந்து இவ்வாறான வேலைத்திட்டங்களில் ஈடுபடுவது இரட்டிப்பு நன்மையை ஏற்படுத்தம் எனவும் அவர் தெரிவித்தார். ஒவ்வொருவரும் பல வழிகளிலும் தாயக மக்களுக்கு தங்கள் உதவிக்கரங்களை வழங்கி வருகின்றனர் எனத் தெரிவித்த கவுன்சிலர் போல் இக்கண்சிகிச்சை முகாமை மேற்கொள்ளவும் தங்கள் உதவிகளை புலம்பெயர்ந்தவர்கள் வழங்குவது அவசியமானது எனத் தெரிவித்தார்.

CATARACT SURGERY CAMPS IN NORTHERN SRI LANKA INTIATED BY
SRI LANKA ISLAMIC FORUM UK TRUST

FUND RAISING EVENT

On Saturday 12th December 2009
From 3.00 p.m. to 7.00 p.m

at the
London Muslim Centre
Main Conference Hall
46-92  Whitechapel Road, London E1 1JX 

CHIEF GUEST:
Rt. Hon. Stephen Timms, M.P.

GUEST OF HONOUR:
H.E. Mr. Nihal Jayasinghe,
High Commissioner for Sri Lanka in the UK

SPECIAL GUESTS
Religious Dignitaries of all Faiths
Local Councillors
Representatives of Community Organizations

Sri Lanka Islamic Forum UK Trust has initiated a project to conduct cataract operations for 500 people in the North of Sri Lanka which will be done in two stages. The first stage will be to conduct 20 screening camps in the five districts of the Northern Province to identify patients needing surgery. 500 patients will be selected in the second stage for treatment.

The project is the brain-child of Serendib Foundation for Relief & Development, Sri Lanka. It will be implemented by Kuwait Hospital Foundation, Sri Lanka, which has a special unit dedicated for cataract surgeries. Kuwait Hospital Foundation, Sri Lanka, has already treated free of charge more than 4000 cataract patients in other parts of Sri Lanka within the last three years.

The cost for treatment and post surgery care is estimated to be around £50 per patient.

SLIF UK Trust has organized a fund raising event on Saturday, 12th December 2009, from 3.00 to 7.00 pm at the London Muslim Centre, Whitechapel, and London, to collect the fund needed for the project.

Representatives of the three communities, Sinhalese; Tamils & Muslims,  local Councilors, Professionals, Community Leaders, Religious Dignitaries of all faiths, officials from UK Department of International Development, UK Foreign & Commonwealth Office,  Sri Lanka High Commission, and representatives of INGOs and Media personnel are expected to participate in the event.

Organizations and individuals willing to support this humanitarian effort and also for invitations to participate in the Fund Raising event may contact:

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரியும் தொலைபேசி இலக்கமும்:

SLIF UK Trust by E-mail: slif.uk@gmail.com
Najah Mohamed (0044 79 833 41181 0r 0044 79 833 41181)
Marzook (0044 79 405 76701 or 0044 79 405 76701)

Sri Lanka Islamic Forum UK Trust

3rd Floor LMC Business Wing,
38-48, Whitechapel Road
London E1 1JX
United Kingdom

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

Viyoogamமே 18 இயக்கத்தின் கோட்பாட்டு அரசியல் இதழான வியூகம் சஞ்சிகையின் வெளியீடு ரொறன்ரோ, லண்டன், பாரிஸ், சூரிச் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. புலம்பெயர் சூழலில் மிக நீண்ட இடைவெளியின் பின் வெளிவரவுள்ள அரசியல் சஞ்சிகையான வியூகம் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் தங்களை இணைத்துக்கொண்ட முற்போக்கு சக்திகளின் வெளிப்பாடாக வெளிவருகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம் திசைமாறிச் சென்றபொழுதும் அதற்கு எதிராக எதிர்நீச்சல் போட்டு தங்களது அரசியல் கொள்கையுடன் உறுதியுடன் நின்றவர்கள் தற்பொழுது வியூகம் அமைக்க முன்வந்துள்ளனர்.

”மே 18 இயக்கம், ஒரு அரசியல் முன்னணி அமைப்பு’ எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கின்றது. ”முன்னேறிய பிரிவினர் மத்தியில் காணப்படும் கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனை முகம் கொடுப்பதை இலக்காக கொண்டு இந்த அமைப்பானது தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும்” என மே 18 இயக்கம் தெரிவிக்கின்றது. ”வியூகம் இதழானது இந்த அமைப்பின் உத்தியோகபூர்வமான கோட்பாட்டு, அரசியல் இதழாக செயற்படும்” எனத் தெரிவிக்கும் வியூகம் அமைப்பினர், ”அந்த வகையில் எமது தேசத்தினதும், ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரதும் விடுதலையை மையமாக கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த முக்கியமான பணியில் இணைந்து கொள்ளுமாறு எமது தேசத்தினதும், ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரதும் விடுதலையில் அக்கறையுள்ள அத்தனை முன்னேறிய பிரிவினரையும் வியூகம் திறந்த மனதோடு வரவேற்கிறது” என அழைப்பு விடுத்துள்ளனர்.

அரசியல் கோட்பாட்டு இதழ் என்ற வகையில் வியூகம் சஞ்சிகைக்கு முன் வெளியான உயிர்ப்பு சஞ்சிகை குறிப்பிடத்தக்கது. அதுபற்றி வியூகம் ஆசிரியர் தலைப்பு, ”1997 இல் தீப்பொறி அமைப்பும், அதன் கோட்பாட்டு சஞ்சிகையான உயிர்ப்பு-உம் முன்னேறிய பிரிவினர் மத்தியில் செல்வாக்கு மிக்கவையாக திகழ்ந்தன. பத்து வருடத்திற்கும் மேலாக தலைமறைவாக செயற்பட்டு, பல தோழர்களது உயிர்கள் உட்பட பல இழப்புக்களின் ஊடாகத்தான் இந்த குழுவானது இந்த நிலையை அடைந்தது. கணிசமான காலம், உழைப்பு மற்றும் ஏனைய வளங்கள் என்பவற்றை செலவிட்டே தனது கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை சார்ந்த படிப்பிணைகளைப் பெற்றுக் கொண்டது. புலிகளது நேரடித் தாக்குதல் உட்பட தலைமறைவின் பலவேறு கஷ்டங்களையும் தாங்கி முன்னேறிய ஒரு அமைப்பானது, பகிரங்கமாக செயற்படத் தொடங்கியதும் உள் முரண்பாடுகளினால் சிதைந்து போவது என்பது மிகவும் துரதிஷ்டவசமானது” எனத் தெரிவிக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வேறுபட்ட அமைப்புகளில் செயற்பட்டவர்கள் போராட்டத்தின் போக்கு வழி தவறியபோது அவற்றிலிருந்து விடுபட்டு போராட்டத்தை மீண்டும் சரியான திசைவழி செலுத்த முயன்றனர். அதில் சில உயிரிழப்புகளும் இடம்பெற்றது. அந்தக் கடுமையான சூழ்நிலை மாற்றத்தை எதிர்பார்த்து இருந்தவர்கள் தற்போது வியூகம் அமைப்பதற்கான சரியான தருனமாக இதைக் கருதுகின்றனர்.

அதற்கு முன்னதாக தங்களது சுயவிமர்சனத்திற்கான நேரமாகவும் இதனைக் கருதுகின்றனர். வியூகம் ஆசிரியர் தலையங்கத்தில் அவர்களது கடந்த காலம் பற்றிய சுயவிமர்சனம் வருமாறு ஆரம்பிக்கின்றது. ”இப்போது எமது சுயவிமர்சனத்திற்கான நேரம் வருகிறது. நாம் முன்னேறிய பிரிவினரின் ஒரு பகுதியினர் என்ற வகையில் கடந்த காலத்தில், போராட்டத்தில் நேர்ந்த தவறுகளில் எமது பாத்திரம் என்ன என்ற கேள்விக்கு பதில் கண்டாக வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் பல்வேறு குழுக்களிலும், தனிநபர்களாகவும் செயற்பட்ட பல்வேறு நபர்களும் எம்முடன் இணைந்து கொண்டிருந்தாலும், அரசியல் அமைப்பு என்ற வகையில் தொடர்ச்சியாக இயங்கி வந்தவர்கள் என்ற வகையில் தமிழீழ மக்கள் கட்சி இலிருந்து வந்தவர்கள் முக்கிய கூறாக அமைகிறார்கள். மாற்று அமைப்பைக் கட்ட முனைந்தவர்கள் என்ற வகையில் எமது அனுபவங்கள், படிப்பினைகள் இப்போது முக்கியத்துவம் பெறுகிறது. அத்தோடு எமது சுயவிமர்சனமும் ஏனைய முன்னேறிய பிரிவினர் மத்தியில் கட்டாயமாக வேண்டப்படும் ஒன்றாக இருக்கிறது. தீப்பொறி குழுவாக எமது தனியான அரசியலை முன்னெடுத்த நாம், பல வருட தலைமறைவு வாழ்க்கையின் பின்னால் 1998 எமது கொங்கிரசை கூட்டி தமிழீழ மக்கள் கட்சி எனும் பெயரில் பகிரங்க அமைப்பாக செயற்பட முனைந்தோம். கொங்கிரசை கூட்டி தீர்மானங்களை எடுத்து அவற்றை செயற்படுத்த தொடங்கும் போது அமைப்பினுள் நடைபெற்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அமைப்பானது 2000 ம் ஆண்டில் கலைந்து போனது. இப்படியாக நேர்ந்ததில் பல்வேறு தனிப்பட்ட, மற்றும் புறநிலை சார்ந்த அம்சங்கள் தாக்கம் நிகழ்த்தியது உண்மையே என்றபோதிலும், அமைப்பின் அரசியல் மற்றும் அமைப்புத்துறை சார்ந்த விடயங்களில் நடைபெற்ற தவறுகள் தீர்க்கமானவையாக அமைந்தன” என்று வியூகம் தனது சுயவிமர்சனத்தை ஆரம்பித்தது.

பல்வேறு அரசியல் பின்னணிகளில் இருந்தவர்களையும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கில் முன்னைய தொடர்ச்சியாக இல்லாமல் புத்வேகத்துடன் ஆரம்பிப்பதற்காக மே 18 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மே 18 2009 ஒரு மிக முக்கியமான திருப்புமுனை. அதிலிருந்து முகிழ்த்துள்ளது மே 18 இயக்கம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து அனைவரையும் அழித்தொழித்து தங்களையே ஏகபிரதிநிதிகளாக அறிவித்த தமிழீழ விடுதலைப் புலிகள் மே 18 2009 உடன் பெரும்பாலும் அழித்தொழிக்கப்பட்டனர். அழித்தொழிக்கப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களது தவறான அரசியலுமே அன்றி தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளோ அல்லது அவர்களது உரிமைப் போராட்டமோ அல்ல என்பதை அறிவிக்கின்ற வகையில் வியூகம் தனது முதலாவது அரசியல் கோட்பாட்டு இதழை வடிவமைத்துள்ளது.

அதேசமயம் வெறுமனே புலி எதிர்ப்பு அரசியலை வியூகம் மேற்கொள்ளவில்லை. அதன் ஆசிரியர் தலையங்கம் தாங்கள் உட்பட போராட்டத்தின் பல்வேறுபட்ட சக்திகளையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றது. வியூகத்தின் ஆசிரியர் தலையங்கத்தின் ஒரு பகுதி ”….. ஆகவே பிரச்சனை இங்கு புலிகளது நடவடிக்கைகளில் மாத்திரமல்ல. மாறாக புலிகளுக்கு மாற்றாக அமைப்புக்களை கட்ட முனைந்தவர்களது பேரிலும் இருக்கிறது. எமது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய சித்தாந்தங்களான வர்க்கவாதம், சாதியம், ஆணாதிக்கம், பிரதேசவாதம், முஸ்லிம் – சிங்கள மக்கள் மீதான தப்பெண்ணங்கள் போன்ற எவற்றுக்குமே சவால் விடும் வேலைகள் எமது தரப்பில் தீவிரமாக முன்னெடுக்கப்படாதபோது, இந்த ஆதிக்க சித்தாந்தங்கள் எமது போராட்டத்தில் அதிகம் செல்வாக்கு செலுத்தியது. அதன் விளைவுகள் தான் இந்தத் தோல்விகளில் வெளிப்பட்டதாகும்.”

200 வரையான பக்கங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இவ்விதழில்
தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள்….. : தேசபக்தன்
சூறையாடப்படும் தமிழீழ வளங்கள் : அருந்ததி
எட்டினமோ இலக்குகளை : தாமிரா
விடுதலைப் போராட்டமும் புலிகளும் : ஏகலைவன்
ஆகிய அரசியல் ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தள்ளது.

இச்சஞ்சிகையின் முதலாவது வெளியீட்டு நிகழ்வு கனடாவில் டிசம்பர் 13 மாலை 3:30 மணிக்கு நடைபெற ஏற்பாடாகி உள்ளது. நூல் மதிப்பீடும் கலந்துரையாடலும் இங்கு நடைபெறும்.
Sunday – Dec 13 2009, 3:30pm
Mid Scarborough Community Center
2467 Eglinton Ave East
(Nearest Subway: Kennedy Subway)

லண்டன், பரிஸ், சூரிச் நிகழ்வுகளின் விபரம் விரைவில் அறியத்தரப்படும்.

‘மக்கள் விடுதலை இராணுவம்’ ஒரு புஸ்வாணம்? இது ஈரோஸ் சங்கர்ராஜி அணியா? : த ஜெயபாலன்

Nesan Shankar Rajeeமக்கள் விடுதலை இராணுவம் என்ற பெயரில் புதிய மார்க்ஸிய இயக்கம் தோற்றம் பெற்றுள்ளதாக பிரித்தானிய ரைம்ஸ் பத்திரிகையில் அன்ரனி லொய்ட்ஸினால் எழுதப்பட்ட கட்டுரைக்குப் பின்னணியில் ஈரோஸ் அமைப்பின் சங்கர்ராஜி நேசன் அணியே பின்னணியில் இருப்பதாக தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதனை ஈரோஸ் அமைப்பின் நேசன் அணியினர் மறுக்கின்றனர். மக்கள்  விடுதலை இராணுவம் அல்லது மக்கள் விடுதலைப் படைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதே தங்களது உத்தியோகபூர்வமான அறிவிப்பு எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்த நேசன் சங்கர்ராஜி தளநிலைமைகள் எப்படி என்று தன்னால் தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

ரைம்ஸ் பத்திரிகையாளர் அன்ரணி லொய்ட் தனது நண்பர் என்று தெரிவித்த நேசன் சங்கர்ராஜி இன்னும் சில தினங்களில் இவ்வமைப்புப் பற்றிய மேலதிக செய்திகள் ரைம்ஸ் பத்திரிகையில் வர இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்த இருப்பதாக இன்று (Dec 7)  அன்ரணி லொய்ட் தனக்குத் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று (Dec 7) ரைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளிவருவதற்கு முன்னதாகவே நேசன் சங்கர்ராஜி, சக்தி ஆகியோர் இலங்கை அரசு அரசியல் தீர்வு காணாதபட்சத்தில் அழுத்தம் டகொடுக்கும் நடவடிக்கைகளை வழங்க வேண்டும் என்ற வகையில் உரையாடி உள்ளனர். அந்த உரையாடலில் சிறிய அளவிலான தாக்குதல்கள் பற்றியும் உரையாடி இருந்தனர்.

சில மாதங்களுக்கு முன் வரை பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த சங்கர் ராஜி நேசன் திடீரென இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது பற்றியும் பேசியது முரண்நகையாகவே இருந்தது.

இன்று ரைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பாக மக்கள் விடுதலை இராணுவத்தின் ‘தளபதி’ கோணேஸ் என்பவருடன் தொடர்பு கொள்ளமுற்பட்ட போது இலங்கையில் உள்ள ஒரு கைத்தொலைபேசி இலக்கம் தேசம்நெற்க்கு வழங்கப்பட்டது. அவ்விலக்கத்துடன் தொடர்புகொண்டால் கோணேசுடன் பேச முடியும் எனவும் சொல்லப்பட்டது. அவ்விலக்கத்துடன் தொடர்பு கொண்டு கோணேஸா பேசுகிறீர்கள் என்று கேட்ட போது ஆம் என்று பதில் வந்தது.

தேசம்நெற்றை அறிமுகப்படுத்திக் கொண்டு மக்கள் விடுதலை இராணுவம் பற்றிக் கேட்ட போது அவர் ஈரோஸின் வரலாற்றை அளக்க ஆரம்பித்தார். அந்த அறிமுகமான குரலைக் கொண்டு ‘சக்தி’ பேசுகிறீர்கள் என்ற போது அவர் ‘ஓம்’ என்றார். இவரை சில வாரங்களுக்கு முன் தமிழர் தகவல் நடுவம் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு ஒன்றில் லூசியம் சிவன் கோவிலில் சந்தித்து இருந்தேன். அந்த அறிமுகம் இருந்தது.

நீங்கள் தான் மக்கள் விடுதலை இராணுவம் என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளீர்கள் என்று கேட்ட போது அவர்களுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார் சக்தி. ‘உங்களுக்கு ஆயுதப் போராட்டத்தை மீள ஆரம்பிக்கும் நோக்கம் உள்ளதா எனக் கேட்டபோது ‘நிச்சயமாக. இலங்கை அரசு அரசியல் தீர்வை முன் வைக்காவிட்டால் ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்படும்’ என்றும் சக்தி தெரிவித்தார்.’ யார் அந்த மக்கள் விடுதலை இராணுவம்?’ எனக் கேட்டபோது ஒரு மணி நேரத்தில் மீண்டும் அழையுங்கள் முழுத்தகவல்களையும் பெற்று வைக்கின்றோம் என்றனர்.

அவ்வாறே சில மணி நேரங்களுக்குப் பின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது ‘சில விசயங்களை எப்படி உங்களுக்குச் சொல்வது’ என்று கதைத்துக் கொண்டிருக்கும் போதே தொலைபேசி அழைப்பு துணடிக்கப்பட்டது. மீண்டும் பலமுறை முயற்சித்த போதும் தொடர்புகொள்ள முடியவில்லை.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குகணேஸ் என்ற முன்னால் போராளி ஒருவர் ஈரோஸ் நேசன் அணியில் உள்ளார் என்றும் தெரிய வருகின்றது. நேசன் அணிக்கும் பிரபா அணிக்கும் ஏற்பட்ட பிளவுக்குப் பின்னரேயே மக்கள் விடுதலை இராணுவம் ஆரம்பிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட முடியாத செய்திகள் தெரிவிக்கின்றன.

‘மக்கள் பாதுகாப்புப் படை’ இலங்கை அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் எனத் தெரிவித்த நேசன் சங்கர்ராஜி இவர்கள் புலிகளைப் போன்று பாஸிஸ அமைப்பாகச் செயற்பட மாட்டார்கள் என்பது அவர்களுடைய மார்க்ஸிய கருத்துக்களில் இருந்து வெளிப்படுவதாகத் தெரிவித்தார். 

ரைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி உள்ள கோணேஸ் என்ற தளபதிக்கு மக்கள் பாதுகாப்புப் படை வழங்கிய பெயர் குகணேஸ் என்றும் அது தவறுதலாக கோணேஸ் என பிரசுரிக்கப்பட்டதாக பத்திரிகையாளர் அன்ரனி லொயட் தெரிவித்ததாக நேசன் சங்கர்ராஜி தெரிவித்தார்.

அன்ரனி லொய்ட் என்ன சொன்னார் என்பதை நேசன் சங்கர்ராஜி சொல்கிறாரா அல்லது நேசன் சங்கர்ராஜி விரும்புவதை அன்ரனி லொய்ட் ஊடாகத் தெரிவிக்கிறாரா என்ற குழப்பம் தவிர்க்க முடியாதது. அன்ரனி லொய்ட்க்குப் பின் நேசன் சங்கர்ராஜியும் அவருக்குப் பின் மக்கள் பாதுகாப்புப் படையும் அதற்குப் பின் இலங்கை அரசும் றிற்கின்றதா என்ற சந்தேகத்திற்கு நியாயங்கள் நிறையவே உண்டு.

ரைம்சில் வெளியான செய்தி தொடர்பாக இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சுப் பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வல ‘மக்கள் விடுதலை இராணுவம்’ என்ற அமைப்பின் பெயரை அரசாங்கம் அறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இவர்களை அரசியல் நிர்வாகரீதியாகக் கையாள்வதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழலில் இவ்வாறான அமைப்புகள் தோண்றுவது உலகில் சகஜம் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

இயக்க வரலாறுகளின் ஆரம்ப காலங்களில் ஈரோஸ் அமைப்பு இந்திய இராணுவத்திடமும் பாலஸ்தீனத்திலும் பயிற்சி எடுத்திருந்தது. ஆனால் தற்போது ஈரோஸ் பலவாகச் சிதறியுள்ளது. அதில் நேசன் அணி தனது தந்தை சங்கர்ராஜியின் நிழலில் இயங்குகிறது. இலங்கை அரசுடன் மிக நெருக்கமாக இருந்த இவ்வமைப்பு தற்போது இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் து}க்கவும் தயார் எனத் தெரிவிக்கின்றனர். இவர்களது கதையை கேட்க எத்தனை பேர் தயார் என்பதும் இவர்கள் தான் மக்கள் விடுதலை இராணுவமா என்பதையும் அறிய நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி ஏற்படாது.

இந்த மக்கள் விடுதலை இராணுவத்திற்குப் பின் மக்களல்ல இலங்கை அரசு செயற்படுகின்றது என்ற சந்தேகம் வலுவடைந்து வருகின்றது. இவை பற்றிய உண்கைள் விரைவில் துலங்கும் என நம்பலாம்.

இன்னும் ஓரிரு வாரங்களில் ஈரோஸ் அமைப்பின் சங்கர்ராஜி அணி ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நேசன் சங்கர்ராஜி தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

._._._._._.

 New Tamil group People’s Liberation Army vows to start a fresh war
December 7, 2009, Anthony Loyd in Colombo

A Marxist group of Tamil militants with connections to the Palestinian Liberation Organisation and Cuba is preparing to mount a new insurgency in Sri Lanka six months after the Government declared an end to the 26-year-old war there.

The People’s Liberation Army (PLA) was founded in eastern Sri Lanka four months ago and has vowed to launch attacks against government and military targets unless its demands for a separate Tamil homeland are met.

“This war isn’t over yet,” Commander Kones, head of the PLA’s Eastern District military command, told The Times during a night meeting in a safe house in the east of the country last week.

“There has been no solution for Tamils since the destruction of the LTTE [Tamil Tigers] in May. So we have built and organised the PLA and are ready to act soon. Our aim is a democratic socialist liberation of the northeast for a Tamil Eelam [the desired Tamil state].”

Kones, a nom de guerre, claimed that the PLA had 300 active members and expected to recruit 5,000 volunteers from the 280,000 Tamil civilians recently freed from detention camps.

He said that the PLA, commanded by a ten-man committee, was an entirely separate organisation from the LTTE, but said that former LTTE cadres would be able to join the organisation provided that they swore their allegiance to the PLA’s political aims.

“There are former LTTE members in the PLA now,” he said. “But the LTTE was an extremist organisation that fought only for itself rather than the people’s needs.

“It is totally destroyed now and I don’t worry about it. We are socialist ideologues and we are trying to draw different Tamil groups together for a people’s struggle, a people’s war.”

Although the PLA’s capabilities remain unclear, it includes in its ranks several experienced insurgents who fought against the government forces in Sri Lanka in the 1980s before falling foul of the LTTE and either leaving the country or becoming dormant.

Commander Kones, now in his forties, had himself been given guerrilla training at a camp in Uttar Pradesh, India, in 1983, where his trainers included fighters from the Palestinian Liberation Organisation (PLO).

“We still have a relationship with the PLO, as well as Cuba and Indian Maoist groups,” he said.

“They fight for their rights just as we do.”

During later action against government forces in eastern Sri Lanka he was imprisoned and tortured, before escaping from the country to live in Europe.

The threat of an aspiring new Tamil insurgent group comes at a complicated time for the Sri Lankan authorities.The unified image that accompanied their decisive victory over the Tamil Tigers in May has been eroded. The architect of that victory, General Sarath Fonseka, has become embroiled in a political scrap with the incumbent President Mahinda Rajapaksa as both men vie for a presidential election victory next month.

Their rivalry could split the vote of the Sinhalese majority, offering the swing vote to the country’s Tamil minority, who have yet to declare their political allegiance.

A new round of violence during this period could have a dramatic reversal on efforts to stabilise the country.

“We are much more politically skilled than the LTTE ever were and know how to avoid the ‘terrorist’ label that they acquired,” Kones said.

“Our enemy is simply the Government here, and we fight just for Tamil rights. We are not against the international community,” he said. “Indeed, we want them to support us in pressurising the Sri Lankan Government.”

Kones said that he had no intention of trying to emulate the Tigers’ style of warfare, but suggested a more asymmetric strategy involving attacks by widely dispersed PLA cells. However, he added that his targets would include economic and administrative centres, as well as military forces.

Other PLA insiders said that one of their likely first fights would be with groups of former LTTE cadres led by the infamous Colonel Karuna. Karuna split from the LTTE ranks in 2004 and later joined the Government, but still holds influence in eastern Sri Lanka.

“We are getting stronger by the day, much stronger than any other group,” Kones said. “The day of action is close.”

A few nights after meeting Commander Kones, deep in a rural area, The Times encountered three young PLA recruits waiting for a guide to take them to one of the organisation’s jungle training camps.

Two were 15 years old, one was 16. “The PLA sound very interesting to us,” they said. “They are the only ones now doing something for the Tamil people.”

Theirs was not, however, a pervading sentiment. Shattered by their experiences in the war zones this year, depressed by their subsequent incarceration in detention camps, few Tamils expressed any great enthusiasm for a return to war.

“I’m not interested in Eelam,” Raja Muragaswaran, 31, who was released from a camp last month, said.

“I lost everything that I had ever worked for in the name of Eelam. How many died for Eelam, and all for what? We just want peace.”

www.timesonline.co.uk/tol/news/world/asia/article6946605.ece

உலக சமாதான ஆதரவுக் குழுவிற்குள் சமாதானம் செய்ய ஆளில்லை. – இலங்கை சென்ற குழுவின் தலைவர் உலக சமாதான ஆதரவுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்!!! : த ஜெயபாலன்

Kunasingam_K_GPSGஉலக சமாதான ஆதரவுக் குழுவினுள் சமாதானம் காண முடியாமல் அதன் உறுப்பினர் வெளியேற்றப்பட்டு உள்ளார். புலம்பெயர் புலி ஆதரவுக் குழுவுக்கு தலைமை தாங்கி இலங்கைக்குச் சென்ற சட்டத்தரணி கே பத்மநாதன் அவர் அங்கம் வகித்த உலக சமாதான ஆதரவுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக உலக சமாதான ஆதரவுக் குழுவின் தலைவர் கே குணபாலசிங்கம், கே பத்மநாதனுக்கு எழுதிய கடிதத்தில் ‘உங்களை உலக சமாதான ஆதரவுக் குழுவில் இருந்து உடனடியாக நீக்க முடிவெடுத்து உள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். சட்டத்தரணி கே பத்மநாதன் (லண்டன்), ஆர் சோமஸ்கந்தன் (ஜேர்மனி), ரி தர்மகுலசிங்கம் (டென்மார்க்), ஆர் இலங்கைத்தேசியமன்னன் (லண்டன்) ஆகியோரே இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நவம்பரில் நாடு திரும்பி இருந்தனர். Center for Peace and Social Development என்ற டென்மார்க்கில் இயங்கும் அமைப்பே இவ்விஜயத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமைப்பும் அடையாளம் காணப்படக் கூடிய அமைப்பாக இல்லையென்றும் கே குணபாலசிங்கம் தனது குற்றச்சாட்டில் தெரிவித்து இருந்தார். இவர்கள் நவம்பர் இறுதிப் பகுதியில் மற்றுமொரு விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்து இருந்தனர். அதற்கிடையே கே பத்மநாதனின் உறுப்புரிமையை உடனடியாக நீக்குவதாக உலக சமாதான ஆதரவுக் குழுத் தலைவர் கே குணபாலசிங்கம் நவம்பர் 12ல் எழுதிய கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் உலக சமாதான ஆதரவுக் குழு – Global Peace Support Group – UK (LTD), பெரும்பாலும் ஒரு கடதாசிப் பதிவுகளில் வாழும் அமைப்பு. ஆனால் இவர்கள் பிரித்தானியாவில் இயங்கும் ஏனைய புலியாதரவு அமைப்புகளுடன் இணைந்து 2008 மார்ச் 22 23ம் திகதிகளில் லண்டனில் ஒரு சர்வதேச மாநாட்டை கூட்டி இருந்தது. ( தமிழர் பிரச்சினையை சர்வதேசத்தில் எழுப்ப முயற்சி – Global Peace Support Group ஏற்பாடு செய்த கருத்தரங்கில் தென்ஆபிரிக்க பிரதிநிதி Sisa James Nijikelana : த ஜெயபாலன்) இதுவே அவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்பாடு செய்த பொது நிகழ்வு. இச்சமாதான மாநாட்டில் கலந்து கொள்ள முற்பட்ட ஈரோஸ் சங்கர்ராஜி நேசன், தமிழ் டெமொகிரட்டிக் கொங்கிரஸ் தலைவர் ஆர் ஜெயதேவன் ஆகியோருடன் சமாதானத்திற்கு வரமறுத்த உலக சமாதான ஆதரவுக் குழு அன்று அவர்களை நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்காமல் வெளியேற்றியது. (கருத்தரங்கில் இருந்து ஜெயதேவனும் சகாக்களும் வெளியேற்றப்பட்னர் : த ஜெயபாலன்)  இது தொடர்பாக அமைச்சர் ஸ்ரீபன் ரிம்ஸ் தலையிட்ட போதும் சங்கர்ராஜி நேசன் ஆர் ஜெயதேவன் இருவரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் இம்மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையைக் கண்டித்த பேச்சாளர்கள் அத்தடை நீக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருந்தனர்.

Kunasingam_K_and_South African Delegatesஆனால் இரண்டு ஆண்டுக்குள்ளாக உலக சமாதான ஆதரவுக் குழுவின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. சவுத் ஆபிரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஏன்சி உறுப்பினர்கள் மாநாட்டில் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்த போதும் அண்மையில் ஐநாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் உலக சமாதான ஆதரவுக் குழுவின் விருப்பிற்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் அவர்கள் வாக்களித்தனர். அன்று உலக சமாதான ஆதரவுக் குழுவின் உறுப்பினராக இருந்த கே பத்மநாதன் தற்போது அவ்வமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். ஆனால் அன்று உலக சமாதான ஆதரவுக் குழுவின் மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆர் ஜெயதேவன் மற்றும் தமிழர் தகவல் நடுவத்தால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் ஒரே குழுவில் இருந்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார் கே குணபாலசிங்கம்.

இலங்கை சென்று திரும்பிய குழு தங்கள் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தியதாக அவ்வமைப்பின் தலைவர் கே குணபாலசிங்கம் கொதிப்படைந்துள்ளார். உலக சமாதான ஆதரவுக் குழுவின் பெயரை தனது சுயநலத்துக்காக கே பத்மநாதன் பயன்படுத்துவதாகவும் அதனைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது எனவும் கே குணபாலசிங்கம் தனது குற்றச்சாட்டில் தெரிவித்திருந்தார். கே பத்மநாதனுடைய நடவடிக்கை தங்களுடைய அமைப்பின் வேரையே பாதித்துள்ளதாகவும் கே குணபாலசிங்கம் குற்றம்சாட்டி இருந்தார். கே பத்மநாதனாலும் அவருடன் கூடச் சென்றவர்களாலும் பரப்பப்பட்ட வைரஸ்யை தடுக்க முடியாது என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த கே குணபாலசிங்கம் ஆனால் இந்த வைரஸ் மேலும் ஊடுருவாமல் தடுக்க முடியும் எனத் தெரிவித்து இருக்கின்றார். கூடச் சென்றவர்கள் பற்றி ஒரு மென்போக்கை வெளிப்படுத்திய கே குணபாலசிங்கம் அவர்களுக்கு கே பத்மநாதனுடைய உள்நோக்கம் தெரியாது இருந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சென்று திரும்பிய குழுவின் பயணக் களைப்பு ஆற முதலேயே தனது கண்டணத்தைச் சுடச்சுட வெளியிட்ட உலக சமாதானத்திற்கான ஆதரவு அமைப்பு மே 18 வரையான மிகமோசமான யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் கண்மூடித்தனமாக மக்களைக் கொன்று குவித்தது பற்றி எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதுமுனையில் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்து பற்றி சமாதான ஆதரவுக் குழு கண்டுகொள்ளவேயில்லை.

Kunasingam_K_GPSGகே பத்மநாதனுடன் இலங்கைக்கு விஜயம் செய்த ரி தர்மகுலசிங்கம் ஆர் இலங்கைத்தேசியமன்னன், சோமஸ்கந்தன் ஆகியோரையும் கண்டித்துள்ள கே குணபாலசிங்கம் இவர்களின் விஜயம் சுயநல நோக்கம் கொண்டது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இக்குழு தங்கள் விஜயத்தின் போது அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்த, விநாயகமூர்த்தி முரளீதரன் உட்பட பல அமைச்சர்களையும் எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து உரையாடி இருந்தனர். இதைச் சுட்டிக்காட்டியுள்ள கே குணபாலசிங்கம் இலங்கைக்குச் சென்றவர்கள் மிக மோசமான  கிரிமினல்களைச் சந்தித்ததாகவும் எழுதியுள்ளார். கே பத்மநாதன் தனது தொடர்புகளை பொதுத் தளத்தில் விட்டதைக் குற்றம்சாட்டியுள்ள கே குணபாலசிங்கம், அவர் இலங்கை அரசின் ஏஜென்றாக செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.

1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டமே தற்போதுள்ள அரசியல் சூழலில் சாத்தியமான தீர்வு என இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட கே பத்மநாதன் தலைமையிலான குழு பிரச்சாரப்படுத்தி வருகின்றது. அதற்குப் பதிலளித்த கே குணபாலசிங்கம் உலக சமாதான ஆதரவுக் குழு இலங்கையில் தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க உருவாக்கப்படவில்லை என்றும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அதன் வரையறைகளுக்குள் நின்று உதவுவதே அதனுடைய நோக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார். சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான வழி என்பதன் அடிப்படையில் இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வையே உலக சமாதான ஆதரவுக் குழு தனது தளம்பலற்ற கொள்கையாகக் கொண்டிருப்பதாக கே குணபாலசிங்கம் சுட்டிக்காட்டி இருந்தார்.

இதுவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் ஊடகங்களே அவர்களது கருத்துக்கு மாறாகச் செயற்படுபவர்களுக்கு அரச முகவர்கள், கைக்கூலிகள் என்ற பட்டங்களை வழங்கி வந்தன. தற்போது முதற்தடவையாக சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தன்னுடன் உடன்படாதவர்கள் மீது அரச முகவர்கள் கைக் கூலிகள் போன்ற குற்றச்சாட்டுக்களை எழுத்தில் வைத்துள்ளது.

உலக சமாதான ஆதரவுக் குழுவின் கண்டணம் சட்டத்தரணி கே பத்மநாதனை குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதல்ல. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உள்ளும் அதன் ஆதரவு அமைப்புகளுக்குள்ளும் தற்போது ஆரம்பித்துள்ள விரிசல்களையே இக்கண்டனம் வெளிப்படுத்தி நிற்கின்றது. ஏற்கனவே பிரித்தானிய தமிழ் போறம் போன்ற அமைப்புகளுக்குள்ளும் அணி சேர்க்கைகள் தீவிரமடைந்து வருகின்றது. இவற்றின் வெளிப்பாடுகளையே அண்மையில் வெளிவரும் அறிக்கைகள் கண்டணங்கள் வெளிப்படுத்தகின்றன.

gpsg_logoஉலக சமாதான ஆதரவுக் குழு தலைவர் கே குணபாலசிங்கம் கே பத்மநாதனுக்கு அனுப்பிய கடிதம்:

Dear Mr Nathan

Since you have requested for comments, from readers whom you have sent this informations related to your fact finding mission to Vanni and elsewhere.
I would like to give my observations below:

The purpose clearly indicates that this is a result of self motivated attempt by one or two individuals just to satisfy their own aspirations since there was no agenda and or mandate based on this has taken place. Also, this seems to be an unusual situation fact finding mission without a properly identifiable organisation involved. Therefore, let me go on this basis.

With regard to the list of names of the persons whom you seem to have met is another controversy. The lists containing 18 names among who includes are some notorious criminals. Obviously, as you states you would have received good response, as your voluntary representation adds to the list of traitors? Especially from overseas and on whom the government heavily depending on publicity/propaganda.
By doing so you have given some assurance to the government that some members among Diaspora are still prepared to betray their own suffering Thamil populations.

Good, that you have pointed out number of things includes such as a good judiciary system and even a political solution to the Tamils? I have my very doubt as to whether you are aware of, over the understanding and the circumstances under which  all these activities are going on for so long time. So, the circumstances made one or two individuals of your nature to approach the so called authorities to suggest for a political solution? Don’t you think that you have done a crime?
I do not know what to say it to you Nathan? I am ashamed that you were a member of this organisation.

You do not need to say that you and your delegation were careful in avoiding the government’s trap for the propaganda purpose. People are very much aware of your manures’ and most of them are known about the whole picture that created by you.
There is evidence coming every day apart from some media which has picked up some thing and put some more addition before release. What was the additional commitments that you made while waiting for another delegate? People try to pretend that they are after on some good faith but in your case, you have gone far from that and done the damages.

Nathan, you have phoned me number of occasions at least six times and made appoint to meet me but never kept a single date. Further, if I can recollect, you have phoned up and told me that you have been working tirelessly on a  project based on Section 13 amendment and requested me to assist by giving some information of which I have promptly passed on you.

Is this the out come of that project? You being a member of the Diaspora community in the UK, you could not find some or at least one member to come behind your concept? Yes the public are very well aware of your approaches and of your calibre.
Finally, your self centred innovation resulted in losing your rest of the identity if you feel have any.

By declaring your name with all communication details you have challenged all those of legitimate activist and inviting the public or known people to approach you. This act of yours obviously indicates that, that you have taken the task of agent for the Sri Lankan government though there is already some having infiltrated and so with the GPSG.

I am sure you would have used the  name of GPSG for your added self promotion and I wonder as to whether you could go any longer in this way. This is a very serious violation against the very root of this organisation.  Although we may be able to stop this virus for further infiltration, we may not be able to STOP  the same virus that has already being  spread by you and  your two colleaques. Some of them may not be aware of your motive  behind. Mr Nathan.   I should tell you that this organisation was formed, not to solve but to assist where possible to solve the TAMIL NATIONAL PROBLEMS by being within the boundary and limitations.

It is the  unsakable policy of the   Global Peace Support Group – UK to work for the attainment of  SELF DETERMINATION OF THE TAMIL SPEAKING  PEOPLE IN Sri Lanka, based on the facts that the self determination is the way forward to PEACE.

Please note that you have acted not only  at this time but number of occasion previously too and hence our decision to remove you from the membership of the GPSG  forthwith.

Please note if you intend to communicate to me or to the organisation, you may do so directly to me though I would not anticipate any such things more.

Yours Sincerely
K.Kunabalasingam
12/11/09

இலங்கைக்கு விஜயம் செய்த குழுவின் சார்பில் கே பத்மநாதன் வெளியிட்ட அறிக்கை:

Dear Friends and colleagues,

Re:  Visit to Sri lanka IDP camps.
The Center for peace and social development based in Denmark arranged our visit to Sri lanka.
The purpose of the visit was  a fact finding mission made with three good reasons.

1.To understand the real situation  of the Tamil civilians affected by the war and the manner in which the expatriate tamils and other international organisation could get together to attend to the humanitarian needs of the civilians and the tamil caders including the so called child soldiers.

2.The Political peace process and the implementation of the already enacted legislations which are favourable to the tamil nation .

3.Expatriate Tamils rights to go back to their home land to claim  their lands and properties, enter into any investment programmes in any part of Srilanka  .
Even people with European citizens(domicile of choice)their eligibility to revert back to origin of domicile without any payment of fees(administrative fees only)

The members of the team headed by Mr.K.Pathmanathan solicitor visited Sri lanka on 10th october 2009 On a fact finding mission..
The Following members joined the team;
Mr.R.Somaskanthan(Germany),
Mr Tharuman Tharmakulasingam(Denmark)chairman of the center for peace and social development),
MrT.T.Mannan.

THE  FACT -FINDING OF THE MISSION:

The team met the following ministers and members of the Sri lankan Parliament.

a.Hon’ble Dew Gunasekera Minister,
b.Hon’ble Rajitha Seneratna Minister,
c. Hon’ble Dr.Tissa Vitharana    Minister,
d.Hon’ble Milinda Morogoda Minister,
e.Hon’ble.Neomal Perera  Deputy Minister,
f.Hon’ble .Anura Priyadarsana Yapa Minister,
g.Hon’ble Basil Rajapakse Minister
h.Hon’ble.Rathakrishnan Deputy Minister,
I.Hon’ble Douglas Devananda Minister,
j.Hon’ble Vinayagamoorthy Muralitharan Minister,
k.Hon’bleIshard Badiudeen Minister,
l.Mr.Mano Ganeshan  MP,
m.Mr.Rauff.Hakeem     MP
n. Mr.Noordeen Master
o,MrM.T Hasen Ali MP
p.Mr Somawanasa Amarasingha leader of JVP
q.Mr Chandrsekaran MP
l.Mr Karu Jayasooria MP

We received good response from all the ministers and members of parliament .We discussed the following matters in order to create a consensus.

Firstly we discussed the political mishandling of the rights of the tamils  by the successive governments and political leaders of the past, from the time of Independence.

We requested all the politicians and all agreed that the Tamil speaking peoples inherent, inalienable rights and their fundamentals rights under the UN charter to be respected fully and shall not be the subject matter of the political agenda. .All hate speeches ,racial discriminatory actions should be criminalised by appropriate legislation.

The Emergency laws and  unlawful arrest ,kidnapping of the tamil speaking people should be stopped forthwith,

All the impediments and obstructions, like high security zone, check post and other security measures so far existed should be removed. At one point The ministers said that’State could not compromise the security for which the delegates clearly stated that Tamil speaking peoples  security and freedom cannot be compromised and if compromised the state is depriving the freedom and sovereignty of the Tamil  people. The Tamil speaking people should be able to enjoy their life peacefully. Their privacy should not be tampered. The Tamils  freedom of movement within Sri lanka should not be restricted and the fear of ethnic cleansing and genocide should be eradicated immediately by appropriate legislation and independent Judicial  process. There should not be any economical or social  disparity between the two major communities concerning the future developments.

Regarding the political solution we discussed with important ministers.The implementation of 13 th amendment and power sharing was discussed in length.

Regarding the implementation of the Tamil language the ministers agreed that the Tamil language would be implemented fully in the North and East. In the East and other 24 districts where Tamil speaking community are identified to be in considerable numbers, the use of Tamil language shall be implemented in all GA division by appointing sufficient public officers with the knowledge of Tamil Language. All Tamil speaking people will receive reply in Tamil for all communications in Tamil Language.

The ministers agreed that the The North and East police departments should have 90% tamil speaking police officers employed.

The delegates pointed out the police high handed action in the past which led to the growth of several armed resistance.

 The police and army atrocities have gone unabated with the blessing of the politicians and the fear enshrined in the minds shall not be dispelled unless strict measures are taken immediately.

The delegates maintained that the   Judiciary is not independent and pointed several  decisions where the Tamils lost confidence in the system.

We also requested that Diaspora  Tamils should be consulted regarding the appointment of the panel of members for the implementation of the 13th amendment and power sharing proposals. WE suggested to appoint a commission  Including the delegates from theDiaspora Tamils to monitor the implementation of 13th amendment.

Regarding the investment proposals.

The ministers are interested in encouraging investment in Sri lanka by the Diaspora Tamils.The delegates maintained that unless the peace process are in place and the Tamils repose confidence in the governmental system the Tamils will not be encouraged immediately to invest; considering the past experience.

Visit to Mannar, Manthai, Cheddikulam manik farm,Vavuniya, Mankulam, Thunukai and Mullaitivu district.

The Delegates visited Mannar,Manthai and  observed the following matters:

The giant tank is being renovated and new roads being constructed. The plans were shown to us by engineers involved.

 In Manthai demining is taking place.

We went to Thunukai and visited few re-settled families. They explained their difficulties. They have to start their life from the scratch. They have to travel many miles to collect their food and other house hold items. Children has to travel many miles to their schools. They have no transport facilities. They don’t have even bicycles to travel..The basics things are not available for the resettled people.

The IDP’s are mostly settled in their own lands. Some have moved to original places after so many years. The government ministers promised that all the IDPs’ shall be settled in their own lands.

The expatriates Tamils should send their representatives to identify their respective lands and claim as soon as possible and government is expecting the Diaspora  Tamils to visit their land and arrangement shall be made to assist them.

The government authorities promised that No land grabbing nor encroachment on others lands will be permitted.

The delegates visited the Manik IDP camp on the 2nd day visit. The government officials maintained that they are doing every thing to provide the necessities to the people in the camp. The UNHCR has provided a better shelter for the IDP’s compared to the other camps.

We could not visit all the camps. The government propaganda media was very keen to record our opinion about the camps and the IDPs. The People wanted to leave the camps as early as possible.

The advisor to the government, Mr Chandra Fernando,Retired IGP, said that the IDP’s will be settled before January 2010, except those areas where  the last phase of the war took place.

There are 12000 LTTE caders and 2000 child soldiers  in the Poonthoddam camp.

We had the opportunity of meeting the local organisation which visited the camp. They organised a musical group to  poonthodam camp. The caders joined the Bajans with great reluctance.

We the delegates feel like visiting the camp as soon as we receive permission from Mr.Morogoda, the minister for Judiciary and Defence secretary Mr.Gothabaya Rajapakse.

CONCLUSION:

Our delegation was careful in avoiding the trap set by the government propaganda machinary. We were focussing on the areas where our tamil people needed help and assistance to restart their life.There are thousands of orphanage tamil children in hospials in the Sinhala areas. There are children in Kandy hospitals as well.

We met the National Child protection authorities  and they are willing to hand over 300 children immediately for the diaspora tamils to take over and maintain them .The government is ready to give 15 acres of land in Thunukai to set up a proper center to look after and maintain them. This a massive project available for the diaspora tamils to start working immediately.

There 46000 widows in the Eastern province and similar number of widows in the Northern province. The widows and their children  need assistance.It seems that the government has no plan in place to assist them immediately.

 Further visit to be made by the end of this month and any body interested to join please donot hessitate to contact Mr K.Pathmanathan (0208 ……)
kpnathan@hotmail.co.uk

போராளிகளைத் துரோகிகளாக்கி சுயஇருப்புக்கான பணச்சடங்காக்கிய தினம் : த ஜெயபாலன்

London_Maaveerarnaalதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்றுள்ள தளபதி ராமின் மாவீரர் தின உரை (தளபதி ராமின் மாவீரர் நாள் (2009 கார்த்திகை 27) உரை)புலம்பெயர் புலி ஆதரவாளர்களாலும் அவர்கள் சார்ந்த ஊடகங்களாலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. தளபதி ராமின் மாவீரர் தின உரை என்று கூறி சில ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்ட உரை தளபதி ராமினது உரையல்ல. அவ்வுரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவால் அவர்கள் சார்ந்த ஊடகங்களால் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருந்தது. அவ்வுரை தவறுதலாக தேசம்நெற் இலும் சில நிமிடங்கள் பிரசுரமாகி இருந்தது. அத்தவறிற்காக வருந்துகிறோம். தற்போது தளபதி ராமின் முழுமையான உரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.

வே பிரபாகரனது மாவீரர் தின உரையும் தளபதி ராமினால் வழங்கப்பட்ட மாவீரர் தின உரையும் ஒரே நபரினால் தயாரிக்கப்பட்டு உள்ளதைப் போன்ற தோற்றத்தையே வழங்குகின்றது. அல்லாவிட்டால் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளை ஆராய்ந்து அதே பாணியிலேயே இந்த மாவீரர் தின உரையும் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வே பிரபாகரனது மாவீரர் தின உரைக்கு மாறாக இந்த மாவீரர் தின உரை யதார்தத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

தளபதி ராமின் மாவீரர் தின உரையின் முக்கியமான அம்சங்கள்:

1. கடந்தமுப்பது ஆண்டுகளாக எமது மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தி வந்த எமது அன்பிற்கும், மதிப்பிற்கும்,கௌரவத்திற்குமுரிய மேதகு தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும் இந்த விடுதலைக்காக மடிந்த மாவீரர்களின் வரிசையில் இணைத்து நினைவுகூரும் ஒரு தேசிய எழிச்சி நாளாகவும் இன்நாளை நான் பிரகடனப்படுத்துகின்றேன்.

2. எமது தலைவர் எமது மக்களினுடைய இலட்சியத்தை எந்த சந்தர்ப்பத்திலும், எந்தச் சூழ்நிலையிலும். விட்டுக்கொடுக்காமல் தன்நம்பிக்கையோடு களத்தில் நின்றார். இதன் விளைவு ஒரு பாரதூரமான பின்னடைவை ஏற்ப்படுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இந்த விளைவின் தாக்கங்கள் முற்கம்பி வேலிகளுக்குள்… பல ஆயிரக்கனக்கான மக்கள் உயிர்களை இழந்து…. பல நூற்றுக்கணக்கானோர் தங்களின் உடல் உறுப்புக்களை இழந்து…… இதனை விட தாயை இழந்த குழந்தையும், குழந்தையை இழந்த தாயும்.. கனவனை இழந்த மனைவியுமாக….

3. இந்த சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை பெற்றுத்தருவதர்க்கு சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும். இதறக்காக நாம் எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்வதற்கு தயாராக உள்ளோம். அத்துடன் ஆயுத வன்முறைகளையும் முற்றாக கைவிட தயாராக உள்ளோம்.

4. எமது விடுதலை இயக்கமும், மக்களும் புதுமாத்தளன், வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் இராணுவ முற்றுகைக்குள் உள்ளாக்கப்பட்ட வேளையில் முப்பது வருடகால போராட்டத்தை இந்த மாபெரும் முற்றுகைக்குள் இருந்து மீள்வதற்காக தேசியத் தலைவர் அவர்கள் தீர்க்கமான முடிவை எடுத்திருந்தார். அந்த முடிவானது மூன்றாம் தரப்பினூடாக ஆயுதங்களை ஓப்படைத்துவிட்டு உலகமயமாக்கல் புதிய கொள்கைக்கு அமைவாக  ஜனநாயக வழியில் எமது விடுதலைப் பயணத்தை தொடர முடிவெடுத்ததுடன் இச்செய்தியை சர்வதேசத்திற்கும் தெரிவித்து இருந்தார். சர்வதேசம் இச்செய்தியை பரிசீலித்து முடிவுக்கு வருவதற்கு முன்னரே களநிலமைகள் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டது.

5. வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதியில் 400 சதுர மீற்றர் பகுதிக்குள் எமது தலைமை முடக்கப்பட்டது. இந்த முற்றுகைக்குள் இருந்து தேசியத் தலைவர் அவர்கள் 17-05-2009 அன்று பிற்பகல் இறுதியாக எனக்கு ஒரு செய்தியை கூறினார். இச்சூழலில் இருந்து நாம் மீளமுடியாத நிலையில் உள்ளதனால் இறுதிக்கணம் வரை போராடி எம்மை அழித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளேன். எனவே இந்த முப்பது வருடகால போராட்டத்தின் தொடர்ச்சியையும், எமது மாவீரர் விட்டுச்சென்ற பணியையும் தொடர்ந்து முன்எடுத்துச் செல்லுமாறு எனக்குப் பணித்தார். இத்தொடர்ச்சியை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்தையும் என்னிடம் கூறியிருந்தார். அதற்கு அமைவாகவே நான் தற்போது எனது பணியை தாயகத்தில் இருந்து தொடர்கின்றேன்.

இவ்விடயங்களே தளபதி ராமின் உரையில் இருந்த முக்கிய அம்சங்கள். இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய பல்வேறு விமர்சனங்களுக்கும் அதில் பதில் இல்லாவிட்டாலும் தற்போதைய நிலையில் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசரமான அவசியமான செய்திகளை தளபதி ராமின் மாவீரர் தின உரை கொண்டிருந்தது.

London_Maaveerarnaalஆனால் தளபதி ராமின் உரையில் இருந்த முக்கிய விடயங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடம் இருந்து பொருளாதார நன்மைகளைப் பெற்று வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமைக்கு பெரும் எரிச்சலாக அமையும் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. குறிப்பாக ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் வீரமரணம் அடைந்துவிட்டார்’, ‘தலைவர் லட்சியத்தில் உறுதியாக நின்றது பாரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டது’, ‘ஆயுத வன்முறையை முற்றாகக் கைவிடத் தயாராக உள்ளோம்’, ‘முற்றுகைக்குள் இருந்து மீள தேசியத் தலைவர் ஆயுதங்களை மூன்றாம் தரப்பினூடாக ஒப்படைக்க முடிவெடுத்தார்’, ‘எமது மாவீரர் விட்டுச்சென்ற பணியையும் தொடர்ந்து முன்எடுத்துச் செல்லுமாறு எனக்குப் பணித்தார்’ போன்ற விடயங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமையின் நிதி வசூலுக்கு எவ்விதத்திலும் உதவப் போவதில்லை. இதுவரை தாயகத்தில் உள்ள போராளிகளை வீரசாகசங்களுக்கு உள்ளாக்கி வசூல் ராஜக்கள் ஆன இத்தலைமைகள் தற்போது அங்குள்ள போராளிகளது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுப்பதுடன் அவர்களுக்கு துரோகிப்பட்டமும் சூட்டி உள்ளன.

தளபதி ராமின் தலைமையை ஏற்காத புலம்பெயர்ந்து வாழும் கஸ்ரோ அணியைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமை ராம் இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றுவதாக செய்திகைளக் கசிய விட்டனர்.

தளபதி ராமுடன் இணைந்து பணியாற்ற விரும்பிய கேணல் கிட்டுவின் நெருங்கிய சகாவான ‘ஜக்’ என்பவரை துரோகி எனக் குற்றம்சாட்டி எக்சல் மண்டபத்திலிருந்து வெளியேற்றி உள்ளனர். ‘கமல்’ ‘தனம்’ என்றழைக்கப்படும் நபர்கள் மண்டப காவலாளிகள் பலரை வரவழைத்து ‘ஜக்’ என்ற முன்னால் போராளியை வெளியேற்றினர். இச்சம்பவம் மாவீர்ர தினத்திற்கு முதல்நாள் நவம்பர் 26ல் ஏற்பாட்டு ஒழுங்குகளின் போது இடம்பெற்றது.

இவ்வாண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தலைவர் வே பிரபாகரன் சரணடைந்த நிலையில் கொல்லப்பட்டார் என்ற செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதும் அதனை ஏற்றுக்கொள்ளாத நிலையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் புலன்பெயர்ந்த ஆதரவுத்தளமும் உள்ளது. நம்பர் 27ல் தலைவர் உரையாற்றுவார் பொட்டம்மான் உரையாற்றுவார் போன்ற கதைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவு திட்மிட்டுப் பரப்பி வந்தது. அதனால் இவ்வாண்டு மாவீரர் தினத்தில் பங்கேற்க தலைவரின் அல்லது பொட்டம்மானின் உரையைக் கேட்க பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் எக்சல் மண்டபத்தில் கூடி ஏமாற்றத்தைச் சந்தித்தனர்.

இதற்கிடையே மண்டபத்தில் இலங்கையில் இருந்து தனது மாவீரர் தின உரையை வழங்கிய தளபதி ராமின் உரையை ஒலிபரப்பும்படி சில கோரிக்கைகள் ஏற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டது. ஆனால் இலங்கையில் உள்ள தளபதிகளின் உரையை ஒலிபரப்புவது பயங்கரவாதமாகக் கருதப்படும் என்பதால் அவ்வுரையை ஒலிபரப்ப முடியாது என ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ‘தனம்’ கோரிக்கை விட்டவர்களுக்குத் தெரிவித்ததாக எக்சல் மண்டபத்தில் இருந்து தேசம்நெற்க்கு தொலைபேசியில் தெரிவித்தனர்.

தாயகத்தில் பல்லாயிரக் கணக்கான போராளிகளும் போராளிக் குடும்பங்களும் தங்கள் அன்புக்குரியவர்களையும் அங்கங்களையும் இழந்து தங்கள் அடிப்படைப் பொருளாதார வருவாய்களையும் இழந்து அல்லல் உறுகையில் அவர்களுக்கு உதவ தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமையும் அதன் ஆதரவு சக்திகளும் முன்வரவில்லை. அவர்களின் பொறுப்பில் இருந்த 300 மில்லியன் ஆண்டு வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் ஒன்று தொடக்கம் ஐந்து பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்களுக்கும் என்ன நடந்தது என்பதும் மர்மமாகவே உள்ளது. ஆனால் உயிருடன் உள்ள போராளிகளை, போராளிக் குடும்பங்களை விதியின் கையில் விளையாட விட்டுவிட்டு உயிர்நீத்த போராளிகளுக்கு விழா எடுத்து தங்கள் பாவத்தை கழுவ நாடகமாடுகிறது தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமையும் அதன் ஆதரவு சக்திகளும்.

‘அண்ணை இருக்கும் மட்டும் விழுந்து விழுந்த செய்தாங்கள். இப்ப ஏன் நாயே என்றும் கேக்கிறான்கள் இல்லை. அப்பாவை இழந்த குடும்பத்தைப் போல் ஆகிவிட்டது எங்களுடைய நிலைமை’ என மனவருத்தத்துடன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார் தாயகத்தில் உள்ள போராளி ஒருவர். இவ்வாறான சோகமான பல சொந்தக் கதைகள் பல முன்னாள் போராளிகளிடம் உள்ளது. புலம்பெயர்ந்த முன்னாள் போராளிகள் அப்போராளிகளுக்கும் பாதிக்கப்பட்ட போராளிக்கு குடும்பங்களுக்கும் உதவ முன்வருவார்களா?

இன்று நவம்பர் 27ல் லண்டன் எக்சல் மண்டபத்தில் மிகப்பெரும் செலவில் மாவீரர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணித்தியாலத்திற்கு 4300 பவுண்கள் கட்டணம் செலுத்த வேண்டிய மண்டபத்தை 36 மணி நேரங்களுக்கு வாடகைக்குப் பெற்று இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். மண்டபத்தை விட ஒலி, ஒளி, பாதுகாப்பாளர்கள் என அதற்கெனத் தனியான கட்டணங்கள். இவை மட்டுமே 200 000 பவுண்களைத் தொட்டுவிடும். இதற்கு அப்பால் இன்னும் எத்தினை செலவுகள். எத்தனை நாடுகளில் இவ்வளவு நிதிச் செலவில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டு இருக்கும். இவர்கள் ஒருநாள் மாவீரர் தினத்திற்கு செலவிடும் இத்தொகை இறுதியாக நடத்த யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் (போராளிகள் பொது மக்கள் உட்பட 20 000 பேர்) வழங்கப்பட்டு இருந்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50 000 ரூபா முதல் ஒரு இலட்சம் ரூபாவரை வழங்கியிருக்க முடியும். இது உயிரிழந்த அன்புக்குரியவர்கைள அவர்களுக்கு மீட்டுக் கொடுக்காவிட்டாலும் அவர்களது எதிர்காலத்திற்கு ஒரு காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கும். அதனையே உயிரிழந்த ஒவ்வொரு போராளியும் விரும்பி இருப்பான்.

மாவீரர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். நினைவு கூரப்பட வேண்டியவர்கள். அதற்கு இவ்வளவு நிதிச் செலவில் விழா எடுக்க வேண்டியது தேவையல்ல. மாவீரர்களை நினைவு கூரும் ஒவ்வொருவரும் ஒரு மாவீரர்களது படத்தைத் தாங்கி மெழுகு வர்த்தியுடன் அமைதியாக அவரவர் வாழும் தலைநகர் வீதிகளுக்கு வந்து சில மணிநேரம் தங்கள் மெழுகுதிரிக்கு ஒளியேற்றி இருந்தால் அச்செய்தி சர்வதேசத்திற்கே சென்றிருக்கும்.

ஆனால் மூடிய மண்டபத்திற்குள் பணத்தை வாரி இறைத்துச் செய்யும் சம்பிரதாயச் சடங்குகள் மூலம் பணம் மட்டுமே பண்ண முடியும். அதனையே தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமைகள் செய்கின்றன. அவர்களது நோக்கத்திற்குத் தடையாக இருக்கும் எதனையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவர்கள் தாயக மக்களது பெயரில் தங்களை வளர்த்துக்கொள்ளத் தயங்கப் போவதுமில்லை.

._._._._._.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயகத்தில் இருந்து இயங்கும் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள மாவீரர் தின உரை: தளபதி ராமின் மாவீரர் நாள் (2009 கார்த்திகை 27) உரை

‘தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதி ராம் கைது செய்யப்படவில்லை’ – தவிபு சிரேஸ்ட தளபதி நகுலன்

Nakulan_LTTEதமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட்ட தளபதி ராம் கைது செய்யப்படவில்லை என மற்றுமொரு முக்கிய தளபதியான நகுலன் ஊடகங்களுக்கு (24 Nov 09) அனுப்பி வைத்துள்ள ஒலிப்பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் நவம்பர் 21ல் வெளியிட்ட அறிக்கையிலும் அதனை மறுத்திருந்தனர். ராம் மற்றும் நகுலன் போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற பொய்ப் பிரச்சாரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

Nakulan_LTTEநவம்பர் 19 முதல் 22 வரை சுவிஸ்ர்லாந்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு வந்திருந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவு இலங்கையில் உள்ள போராளிகள் பற்றி மிக மோசமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். தான் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிவருவதாகத் தெரிவித்த அவர் அப்போராளிகள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தங்கள் நடமாட்டத்தை மேற்கொள்வதாகவும் புலத்தில் நடாத்தப்படுகின்ற பிரச்சாரங்கள் அவர்களது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளதாகவும் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

இவ்வாண்டு மாவீரர் தின உரையை எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும் தாங்கள் வெளியிட உள்ளதாகவும் நகுலன் தனது ஒலிப்பதிவில் தெரிவித்துள்ளார்.