லைக்கா சாமியார் ஐந்து மில்லியன் பவுண்கள் பிணையில் விடுதலை! “நானோ லைக்காவோ சாமியாரை பிணை எடுக்கவில்லை” லைக்கா துணைத் தலைவர் பிரேம்! : காணொலி

பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிய காரணங்களுக்காக குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த ஓம் சரவணபவ என்ற ஆசாமி புலிக்கள் முரளிகிருஸ்ணன் செப்ரம்பர் பிற்பகுதியில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஐந்து மில்லியன் பவுண்கள் பெறுமதியான வீட்டை பிணை வைத்தே இந்தப் போலி ஆசாமியை லைக்கா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேமநாதன் சிவசாமி என்றழைக்கப்படும் பிரேம் பிணைமீட்டுள்ளார். இது தொடர்பாக ஒக்ரோபர் 21 லைக்கா துணைத் தலைவரோடு தொடர்பை ஏற்படுத்த முயன்ற போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் இச்செய்தி இவ்வழக்கு சம்பந்தப்பட்ட சட்டக்குழுவினூடாக தேசம்நெற்க்கு கிடைக்கப்பெற்றது. மேலும் லைக்கா நிறுவனர் சுபாஸ்கரனின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களும் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் இது பற்றிய தேசம்திரை காணொலி வெளியான சில மணி நேரங்களில் தேசம்நெற்றை தொடர்புகொண்ட லைக்கா மோபைல் துணைத் தலைவர் பிரேம் “நானோ லைக்காவோ சாமியைப் பிணை மீட்கவில்லை என்று அறுதியிட்டுத் தெரிவித்திருந்தார். அப்படியானால் உங்களின் பினாமிகளுடாக பிணை எடுத்தீர்களா என்று கேட்டபோது அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனப் பிரேம் சினந்தார். தங்களுக்கு வேறு நெருக்கடிகள் விடயமாக அவசரமாக இயங்கிக் கொண்டிருக்கின்ற போது எங்கள் ஊடகம் தங்களை தொடர்ந்தும் தொந்தரவு பண்ணுவதாக குற்றம் சாட்டினார். தங்கள் சட்டத்தரணிகள் குழுவினுடாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் தமிழர்கள் என்பதால் தான் நேரடியாகத் தொடர்பு கொண்டதாக பிரேம் இந்த உரையாடலில் தெரிவித்தார். ஈழத் தமிழ் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்வதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு நீங்கள் எதற்காக ஆதரவு வழங்குகின்றீர்கள் அவர் சம்பந்தப்பட்ட சட்ட விடயங்களுக்கு ஏன் ஆதரவளிக்கின்றீர்கள் என்று கேட்ட போது, தங்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை என்றும் அதனுடன் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்றும் லைக்கா மோபைல் துணைத் தலைவர் பிரேம் தெரிவித்தார். லைக்கா மோபைல் துணைத் தலைவர் பிரேம் உரையாடலை நிறுத்திய சில நிமிடங்களிலேயே இச்செய்தி வெளியான யூரியூப் சனல் இடைநிறுத்தப்பட்டது. இச்செயலைக் கண்டிக்கும் வகையில் வெவ்வேறு சமூக வலைத்தளங்களில் இந்த … Continue reading லைக்கா சாமியார் ஐந்து மில்லியன் பவுண்கள் பிணையில் விடுதலை! “நானோ லைக்காவோ சாமியாரை பிணை எடுக்கவில்லை” லைக்கா துணைத் தலைவர் பிரேம்! : காணொலி