லண்டன் ஹரோவில் இன்னுமொரு தமிழ் பெண்குழத்தைகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கின் தீர்ப்பு!!!

லண்டன் ஹரோவில் இன்னுமொரு தமிழ் பெண்குழத்தைகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கின் தீர்ப்பு! தாயகத்தில் வீடுகட்டி பாலியல் குற்றத்தை மறைக்க கோயில் ஆசாமிகள் எத்தனிப்பு!!! வட்பேர்ட், லண்டனில் வாழும் அறுபது வயதான சபாரட்ணம் அருள்சிகாமணி என்பவர் பெண் குழந்தையை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு ஏழரையாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ஹாட்போர்ட்செயர் பொலிஸ் பிரிவு மார்ச் 21, வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கின்றது. அண்மைக்காலத்தில் நிகழாத பாலியல் துஸ்பிரயோகங்களை விசாரணை செய்யும் பிரிவினரே இவ்வழக்கை விசாரித்து குற்றவாளிக்குத் தண்டணை பெற்றுக்கொடுத்துள்ளனர். தற்போது பருவ வயதில் உள்ள இப்பெண் 2011ம் ஆண்டு தனக்கு நிகழ்ந்த அநியாயங்களை அண்மையில் பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்தே இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு மகளீர் தினமான மார்ச் மாதம் 8ம் திகதி ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. இச்சம்பவம் பற்றி வட்பேர்டில் வதியும் சபாரட்ணம் அருள்சிகாமணியின் நண்பரொருவர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் தனக்கு அருள்சிகாமணியை ஒரு குடும்பபொறுப்பானவராகவே தெரியும் என்றும் ஊரிலிருந்த தன்னுடைய உறவுகளுக்கு உதவிவந்ததாகவும் அவர்களை வெளிநாட்டுக்கும் அழைத்து அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் அந்நண்பர் தெரிவித்தார். அந்நண்பர் மேலும் தெரிவிக்கையில் அருள்சிகாமணி இவ்வாறான ஒரு செயலைச் செய்தமை தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். வட்டூர் தமிழர் ஒன்றியம் யூகே இன் செயலாளராக இருந்த அருள்சிகாமணி 2018இல் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக, அருள்சிகாமணியின் நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அருள்சிகாமணி வட்டுக்கோட்டை வட்டூரைப் பூர்வீகமாகக் கொண்ட போதும் அவர் பெரும்பாலும் வாழ்ந்தது வட்டக்கச்சி, கிளிநொச்சியில் என்கிறார் அருள்சிகாமணியின் ஊரவர். அவர் மேலும் குறிப்பிடுகையில் திருமணமாகி ஒரு பெண் குழந்தையின் தந்மையுமான அருள்சிகாமணி க்கு வேறொரு பெண்ணோடு உறவு இருந்ததாகவும் தெரிவித்தார். அருள்சிகாமணியின் மகள் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்கின்றார். தந்தையரின் இத்தகாத செயல்கள் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்கிறார் அந்நண்பர். இதேபோன்று பாலியல் துஸ்பிரயோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரேமகுமார் ஆனந்தராஜாவின் பிள்ளைகளும் மிகுந்த அவமானத்தைச் … Continue reading லண்டன் ஹரோவில் இன்னுமொரு தமிழ் பெண்குழத்தைகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கின் தீர்ப்பு!!!