தம் முற்போக்குத் திரைகளை தாமே கிழிக்கும் முற்போக்குப் பெண்ணியப் போராளிகள்!!!

பாரிஸில் ஓகஸ்ட் 11 இல் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு உறவுக்கார ஆண் தான் இக்கொலையைப் புரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அமைச்சர் ரிச்சட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய பெண் குழந்தை ஷாலினி ஜூட் குமார் யூலை 3இல் தீக்குழித்து தற்கொலைக்கு முயற்சித்து யூலை 15இல் தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்தார். கனடாவில் சுனில் சுமித்திரா வீட்டில் கணவனின் தொல்லை தாங்க முடியாமல் ஏப்ரல் பிற்பகுதியில் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பில் மே 1, சுமித்திராவின் சினேகிதி தனோ பரதன் விரிவான பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். மார்ச் 03 வட்டக்கட்சியில் தாய் ஒருத்தி மூன்று குழந்தைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றினுள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். தனது கணவர் குடித்துவிட்டு செய்கின்ற கொடுமைகள் தாங்க முடியாமையினாலேயே அவர் இந்த விபரீத முடிவுக்கு வந்தார். இச்சம்பவத்தில் மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர். இவை கடந்த சில மாதங்களில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள். அவர்களைத் தற்கொலைக்குத் தள்ளிய சம்பவங்கள். ஆறு ஆண்டுகளுக்கு முன் 2015 ஓகஸ்ட் 09 இல் சஜிந்திகாவைக் காதலித்து அவரைத் திருமணம் செய்வதாகவும் கூறி ஏமாற்றி அவரைத் தாயுமாக்கி சஜிந்திகாவையும் ஆறு மாதக் குழந்தையையும் அடித்துக்கொலை செய்து எரித்த சம்பவம் இவ்வாண்டு ஓகஸ்ட் 07 இல் அம்பலமாகியது. குற்றவாளியான மனோராஜ் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டார். இவை நாளாந்தம் உலகெங்கும் வாழும் தமிழ் பெண்களுக்கு நிகழும் அநீதிகளில் ஒரு சில மட்டுமே. ஆனால் இந்த அநீதிகளுக்கு எதிராக தமிழ் புலம்பெயர் சூழலில் வாழும் பெண்ணிய முற்போக்கு போராளிகள் குரல்கொடுத்தது என் காதுகளுக்கு எட்டவில்லை. மேற்படி செய்திகள் தேசம்நெற் மற்றும் எனது முகநூலிகளில் பதிவாகி உள்ளது. லண்டனில் கடந்த 30 ஆண்டுகளாக வாழும் நான் குடும்பவன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘சவுத்தோல் சிஸ்ரர்ஸ்’, ‘புரோக்கின் அரோ’ போன்ற அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பான இருப்பிடங்கள் கிடைப்பதற்கு வழிசெய்துள்ளேன். தொடர்ச்சியாக குடும்ப வன்முறை பற்றிய செய்திகளுக்கு எனது ஊடகங்களில் முன்னுரிமை அளித்து … Continue reading தம் முற்போக்குத் திரைகளை தாமே கிழிக்கும் முற்போக்குப் பெண்ணியப் போராளிகள்!!!