இச்செய்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போது, நல்ல சேதி வருகுது.. நல்ல சேதி வருகுது.. என்று அறிவித்தபடி தமிழக புலித்தேசியவாதத் தலைவர்கள் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தை நோக்கி விரைந்து கொண்டுள்ளனர் என தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பழ நெடுமாறன், குளத்தூர் மணி, வைக்கோ, கோவை ராமேஸ் என புலித்தேசிய ஆதரவாளர்கள் பலரும் இந்த ஊடகச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்னம் சில மணி நேரங்களில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பில் பழ நெடுமாறன் “புலிகளின் தலைவர் பிரபாகரன் ஐரோப்பா சென்றுவிட்டார்!” என்றும் “போராட்டம் மீண்டும் ஆரம்பிக்க உள்ளது” என்றும் தஞ்சாவூர் முள்ளிவாய்கால் முற்றத்தில் அறிவிக்க உள்ளார். இக்கூட்டத்தில் கலந்துகொள்ள காசி ஆனந்தன் நேற்று காலையே பயணமாகி விட்டதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகிறது. இந்த மாநாட்டின் பின்னணியில் 2009 இற்குப் பின் புலிகள் பலவாகச் சிதறுண்டதில் ஒரு பிரிவினரான ஐரோப்பாவில் செயற்படும் ரிசிசி அமைப்பிலிருந்த சிலரே இதனைத் தூண்டிவருவதாகத் தெரியவருகிறது. இது தொடர்பாக கேப்பிரிட்ஜில் உள்ள வரலாற்று மையத்தைச் சேர்ந்த வி ஜெயாத்தன் விடுத்துள்ள அறிக்கையில் இதுவொரு புனைவு மோசடி என்றும் இதற்கு யாரும் ஒத்துழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இது பற்றி ரிசிசி உறுப்பினர் தகவல் தருகையில் தம்மோடு இருந்த சிலரே இச்செயலில் ஈடுபட்டு இருப்பதாகவும் இந்நபர்கள் 1990 களுக்கு முன் இந்திய இராணுவத்துடனான தமது இயக்கத்திற்கு ஏற்பட்ட மோதலின் பின்னர் வந்தவர்கள் என்றும் சுவிஸ்நாட்டில் தற்போது வதியும் அப்துல்லா என்ற இயக்கப் பெயரைக் கொண்ட ஒருவருமாக நால்வர் இவ்விடயத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். இன்னும் சில மணிநேரங்களில் நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கு புலிகளின் ஆலோசகராக இருந்து இறுதியுத்தத்தில் தமிழகம் வந்து சேர்ந்த பிரபாகரனின் அரசியல் ஆலோசகர் மு திருநாவுக்கரசு கலந்துகொள்ளமாட்டார் என்று அவருடைடய அணியில் நிற்கும் தியாகராஜா திபாகரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். மு திருநாவுக்கரசுவின் கருத்தியலுடன் அதாவது, இந்திய உளவுத்துறையாடு இணைந்து செயற்பட்டு; இந்தியாவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதன் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமான ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் … Continue reading “புலிகளின் தலைவர் பிரபாகரன் ஐரோப்பா சென்றுவிட்டார்!” அறிவிக்க தஞ்சாவூர் முள்ளிவாய்கால் முற்றத்தில் கூட்டம்!! இந்தியாவின் இரட்டை வேடம் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மையம் தமிழகத்தில் புலிக்கு மீண்டும் ஆயுதப் பயிற்சி? !!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed