March

March

எமது உரிமைகளை முழுமையாக பெறுவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

minister.jpgஇலங்கை இந்திய ஒப்பந்த பிரகாரம் ஜனநாயக வழிக்கு வந்த நான் தமிழ் மக்களுடைய உரிமைகளை பெறுவதற்காகத் தொடர்ந்தும் உழைப்பேன். அதற்கு மக்களுடைய ஆதரவு தேவையாகும் என சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியா நெளுக்குளம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பேசும்போது கூறினார்.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அரசியல் ரீதியாகத் தீர்ப்பதற்கு புலிகளுக்கு ஐந்து தடவைகள் நிறையச் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டது. அவர்கள் அனைத்து சந்தர்ப்பங்களையும் தவறவிட்டார்கள். நானும் கூட ஒரு காலத்தில் ஆயுதமேந்தி போராடியவன். பின்னர் அதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது என அறிந்து கொண்டு ஜனநாயக வழிக்குத் திரும்பியவன் எனவும் குறிப்பிட்ட அமைச்சர் தேவானந்தா மேலும் தெரிவித்ததாவது;

ஜனாதிபதியின் பிரதிநிதியாகவும் உங்களின் ஒருவனாக இருப்பதினால் தான் இங்கு வந்துள்ளேன். யுத்தம் எவ்வளவு கஷ்டமானது என்பதனையும் இடம்பெயர்வு என்பது அதனைவிட கஷ்டமானது என்பதையும் உணர்ந்தவன். இடம்பெயர்ந்த மக்களுடைய தேவைகள் என்ன என்பதை ஏற்கனவே அறிந்து கொண்டபோதிலும் இங்குள்ள மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தவே நான் வந்துள்ளேன்.

மக்களுடைய உயிர் வாழ்வதற்குரிய உத்தரவாதம் முக்கிய பிரச்சினை. இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்துள்ள உங்களுக்கு அந்த உத்தரவாதம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயக வழிக்கு வந்த பின்னர் மக்களுடைய நலன்சார்ந்த விடயங்களை ஆக்கபூர்வமாக தான் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். புலி தலைமையானது தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய அனைத்துச் சந்தர்ப்பங்களையும் புறந்தள்ளிவிட்டு அழிவை ஏற்படுத்தும் யுத்தத்தினை நடத்திவருகின்றார்கள். அவர்களுடைய பிடியிலிருந்து விடுபட்டு வரும் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் இறுதிப் பதவியும் பறிபோனது

chandrika.jpgஇலங் கையின் முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமர்களின் புதல்வியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த இறுதிப் பதவியும் பறிபோயுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பண்டாரநாயக்க குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்பட்ட அத்தனகல்ல ருவான்புர தொகுதி அமைப்பாளர் பதவியையும் சந்திரிகா இழந்துள்ளார் என இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் முன்னோடியாக சந்திரிகாவின் தந்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ருவன்புர தொகுதி அமைப்பாளர் பதவியினை சந்திரிகா கடந்த 18 வருட காலமாக வகித்து வந்தார்.

சுமூகமான ஓர் சூழ்நிலையின் கீழே பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் ‐ த.தே.கூ:

சுமூகமான ஓர் சூழ்நிலையிலேயே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைகளுக்கு உந்த சூழலொன்றை உருவாக்கும் தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கே.சிறகாந்தா தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் பேரவலத்தை எதிர்நோக்கியுள்ள தருணத்தில் உயர் மட்ட அரசியல் பேச்சுவார்த்தைகளில் நன்மை கிட்டும் என்பதில் நம்பிக்கையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் நாளைய தினமே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரச்சினை குறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

200000 அப்பாவி சிவிலியன்கள் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும் மக்கள் பாதுகாப்பை கருத்திற் கொண்டு யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்ஷா படுகொலை சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக்கூடாது திருமலை மக்கள் கோரிக்கை,

Regie_Varsa
திருகோணமலையில் 6 வயது சிறுமி ஜூட் ரெஜி வர்ஷா படுகொலை தொடர்பான சந்தேக நபர்கள் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகக் கூடாது எனக் கோரி திருகோணமலை நகரப் பிரதேசத்தில் ஓரிரு இடங்களில் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.

சிறுமி வர்ஷாவின் கொலையை தமிழ் சிங்கள முஸ்லிம் பறங்கியர் ஆகிய சகல இனமக்களும் கண்டிப்பதாக அப்பதாதைகளில் குறிப்பிட்டு கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சார்பில் சடத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாது என்று வலியுறுத்தி கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக பரீட்சைகள் 26 ஆம் திகதி

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீட 2007/2008 ஆம் கல்வியாண்டின் 1ஆம், 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் வருடங்களுக்கான அரையாண்டுப் பரீட்சைகள் யாவும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் நாளை 26 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நடைபெறுமென கலை, கலாசார பீடாதிபதி செல்வி சி.பொன்னையா தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு மாணவர்கள் பீடாதிபதியுடனோ (தொலைபேசி இலக்கம் 0652240165/0652240971) அல்லது சிரேஷ்ட உதவிப் பதிவாளர்/பரீட்சைகள் பிரிவுடனோ (தொலைபேசி இலக்கம் 0652240584) உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

திருமலை மாவட்டத்தில் கந்தளாயில் ஐந்து விவசாயிகள் சுட்டுக்கொலை: இருவர் காயம்

pisto.jpgதிருமலை மாவட்டத்தில் கந்தளாய்,சேருநுவர மெஹிவத்தை பமுனுவல பிரதேசத்தில் ஐந்து விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 9.00,மணிக்கும் 11.00,மணிக்குமிடையே துப்பாக்கிகள், ஆயுதங்களுடன் இந்தப் பிரதேசத்துககுள் நுழைந்தவர்களே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது

உலகத்தமிழர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்!

Vanni_Missionபுலம் பெயர் தமிழ் உறவுகளால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான முயற்சியில் கடந்த சில நாட்களாக நடைபெறும் பொருட் சேகரிப்பில் தாம் எதிர்பார்த்ததைவிட அதிகமான உணவுப் பொருட்கள் சேர்ந்துள்ளதாக “வணங்கா மண்” ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் குண்டு மழையினால் அல்லலுறும் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான சத்திரசிகிச்சை மருந்துகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்ய பெருமளவு நிதி தேவைப்படுகிறது.

அத்தோடு கப்பல் செலவும் குறிப்பிடும்படியாக உள்ளது. “ஆகவே இந்த முயற்சியில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது.” எனக் குறிப்பிடும் ஏற்ப்பாட்டாளர்கள் நிதியுதவி செய்யப் பின்வரும் இலக்கங்களினூடாக அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

“வணங்கா மண்” ஏற்பாட்டுக் குழு
இலண்டன்

Call Centre open from 9AM to 9PM ( GMT) London Time

00 44 (0)20 3393 6650
00 44 (0)84 5527 7155

நாட்டில் சர்வதேச தலையீட்டை ஏற்படுத்த புலிகள் தீவிர முயற்சி – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா குற்றச்சாட்டு

axman-yappa.jpg
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாதத்துக்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளவேளையில்  அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் அதனைத் திசைத் திருப்புவதற்கு புலிகள் சர்வதேசத்தின் தலையீட்டை நாட்டில் ஏற்படுத்த முற்படுவதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குற்றஞ்சாட்டினார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

சில உலக நாடுகளும் சில சர்வதேச அமைப்புக்குளும் புலிகள் சார்பாகவே குரல் கொடுக்கின்றன. அவை 90 வீதமான குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்தும் அதேவேளை பத்து வீதமளவில் மட்டுமே புலிகள் மீது சுமத்துகின்ற. இவ்வாறான தலையீடுகளில் சிக்காமல் இருப்பதற்காக மிகவும் கவனமாக அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது.

அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச அழுத்தம் தேவையில்லை. அதனடிப்படையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சர்வ கட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டிலும் கலந்துகொள்ள அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

அமெரிக்க அலாஸ்கா மாநில எரிமலை குமுற ஆரம்பிப்பு

ea.jpgஅமெரிக்க அலாஸ்கா மாநிலத்திலுள்ள றிடவுட் எரிமலையானது குமுறி சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திற்கு புகையை வெளித்தள்ள ஆரம்பித்துள்ளது. முதல் தடவையாக ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு குமுறிய இந்த எரிமலை மறுநாள் திங்கட்கிழமை 4 தடவைகள் குமுறியுள்ளது.

இந்நிலையில் எரிமலையிலிருந்து விசிறப்பட்ட சாம்பலானது அலாஸ்கா மாநிலத்தில் மிகப் பெரிய நகரான அன்சொரேஜ் பகுதியில் விழுந்துள்ளது. இந்த சாம்பலால் விமானங்களின் இயந்திரங்கள் பாதிப்படையலாம் என்பதால் அலாஸ்காவுக்கான 19 விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம் அன்சொரேஜ் நகரிலுள்ள எலமென்டோர்ப் விமானப் படைத் தளத்திலிருந்து டசின் கணக்கான விமானங்களை இந்த விசிறப்படும் சாம்பலிலிருந்து பாதுகாக்க முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு முன் இந்த எரிமலையானது 1989 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையான 4 மாத காலப் பகுதியில் குமுறியது.

பிரித்தானிய எம்.பி.யின் பிரேரனை இலங்கையைப் பாதிக்காது -அமைச்சர் நிமல் சிறிபால தெரிவிப்பு

nimal-sri-pala.jpgபொது நலவாய நாடுகள் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் ரைட் கொண்டுவந்துள்ள பிரேரனை வெறும் புஷ்வானமே. இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். மேல் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஐ.ம.சு.முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மகாவலி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரின் யோசனையால் பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கிவிட முடியாது. இது குறித்து பயப்பட எதுவுமில்லை. சர்வதேச மட்டங்களிலிருந்து வந்த பாரிய எதிர்ப்புக்களுக்கெல்லாம் வெற்றிகரமாக முகம்கொடுத்த அரசுக்கு இதற்கு முகம்கொடுப்பது பெரிய விடயமல்ல. இப்பிரச்சினைக்கு முகம்கொடுக்க வெளிவிவகார அமைச்சரும் எமது வெளிநாட்டுத் தூதுவர்களும் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.