March

Tuesday, October 26, 2021

March

ரணிலை விரட்டும் நோக்கம் ஐ.தே.க.வில் எவருக்கும் இல்லை – லக்ஷ்மன் செனவிரட்ண

ranil-and-unp.jpgபொரு ளாதார ரீதியில் நாட்டை அதலபாதாளத்துக்குள் தள்ளிவிட்டிருக்கும் அரசாங்கம், தனது இயலாமையை மூடி மறைப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியை துண்டாடமுனைந்து இன்று மூக்குடைபட்டுப்போயுள்ளது எனத் தெரிவித்திருக்கும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ண, ராஜபக்ஷ குடும்பமல்ல, எந்தச் சக்தியாலும் ஐக்கிய தேசியக்கட்சியை அழிக்கமுடியாதென வலியுறுத்திக்கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை விரட்டும் நோக்கம் கட்சியில் எவருக்குமே கிடையாதெனவும் ஜனநாயக ரீதியில் செயற்பட்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத்தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன மேற்கண்டவாறு தெவித்தார்.

அவர் செய்தியாளர்கள் மத்தியில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

கட்சிக்குள் உள்வீட்டுப்பிரச்சினை பூதாகரமாகியுள்ளதாக அரசாங்கம் சில ஊடகங்களைப் பயன்படுத்தி பிரசாரங்களை செய்து வருகின்றது. இந்த ஊடகங்கள் அரசிடம் இலாபம் பெற்றுக்கொள்வதற்காக அரசுக்கு வக்காளத்துவாங்கும் விதத்தில் செயற்படுகின்றன. நாம் யாருக்கும் வக்காளத்து வாங்கமாட்டோம்.

எமது உடலில் ஓடுவது கூட பச்சை இரத்தம்தான். ஐக்கிய தேசியக்கட்சியை பிளவுபடுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டது இது முதற்தடவையல்ல. சுதந்திரக்கட்சி ஆட்சிகள் நடந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆட்சிஆட்டம் காணும் போது அதனை மூடி மறைப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக பிரசாரங்களை முன்னெடுத்து வந்துள்ளது.

அதேவழியில்தான் இன்று மகிந்த ராஜபக்ஷவும் சென்று கொண்டிருக்கின்றார். கட்சி பிளவுபடக்கூடியதான எந்த விடயமும் தலைதூக்கவில்லை. கட்சியை பலப்படுத்தி மக்கள் சக்தியை திரட்டியெடுப்பதற்கான அணுகுமுறைகளையும் வியூகங்களையும் கையாள்வதற்கான நடைமுறைகளையே நாம் மேற்கொண்டோம். அதன்போது வாதப்பிரதிவாதம் ஏற்பட்டால் அதனை பிளவு ஏற்பட்டதாக கூறமுடியுமா?

அப்படிப் பார்த்தால் சுதந்திரக் கட்சிக்குள் இன்று மகிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்துக்கு எதிராக உயர்மட்டத்தைச் சேர்ந்தவர்களே குமுறிக்கொண்டிருக்கின்றனர். நாளை பொதுத் தேர்தலொன்று நடக்குமானால் அதிலிருந்து வெளியேறுவதற்கு பெரும் எண்ணிக்கையினர் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கட்சியில் முக்கிய பதவிகளை வகிப்போர் கூட அதிருப்தி கொண்ட நிலையில் காணப்படுகின்றனர் எனவும் லக்ஷ்மன் செனவிரட்ண தெரிவித்தார்.

வவுனியாவில் பாடசாலைமீது மரக்கிளை முறிந்து விழுந்து ஆசிரியையும் மாணவரும் பலி -15 மாணவர்கள் காயம்

fallen-tree-branch.jpgவவுனியா மகா றம்பைக்குளம் சிறிராமபுரம் அரசினர் பாடசாலை மைதனாத்தில் மர நிழலில் மாணவர்களுக்கு வகுப்பு நடைபெற்றபோது அந்த மரத்தின் கிளையொன்று முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியை ஒருவரும் மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளார்கள். இந்தச் சம்பவத்தில் 15 மாணவர்கள் காயமடைந்துள்ளார்கள்.

காயமடைந்த மாணவர்கள் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

இறந்தவர்கள் இருவரது உடல்களும் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஆசிரியை செல்வி கே.ராகினி (29) யாழ்ப்பாணம் பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து. வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அந்தப் பாடசாலைக்குச் சென்று நேரடியாகப் பார்வையிட்டுள்ளார். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது காற்று எதுவும் வீசாத பொதிலும், அந்தப் பெரிய மரத்தின் பெரிய கிளையொன்று திடீரென முறிந்து விழுந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவி்த்துள்ளனர்.

வழமையாக இந்த மரத்தடியில் ஆசிரியர்கள் வகுப்புக்கள் நடத்துவதென்றும் வழமைபோல இன்றும் அவ்வாறு வகுப்பு நடைபெற்ற போது இந்த அனரத்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை!

jaffna_a9.jpgயாழ்ப் பாணத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களையும், ஏனைய பொருட்களையும் சாதாரண விலை மட்டத்திற்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய கொழும்பிலுள்ள தனியார் வர்த்தகத் துறையினர் யாழ்ப்பாணத்திற்குத் தாராளமாகச் சென்று வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான அமைதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி கொழும்பிலுள்ள தனியார் வர்த்தகத் துறையினரை விசேட பேச்சுவார்த்தையொன்றுக்கு வருமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.  இந்தச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை கொழும்பு உலக வர்த்தக மையக் கட்டடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து உற்பத்தி பொருட்களும் தட்டுப்பாடின்றி குடாநாட்டில் கிடைப்பதற்கு வழி செய்யும் வகையில் தனியார் வர்த்தகருடனான இந்தச் சந்திப்பை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தனது அலுவலகத்தில் நடத்தவுள்ளார்.

யாழ். குடாநாட்டு மக்கள் சித்திரைப் புதுவருட கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அடுத்த புதன் கிழமையன்று ஏ-9 பாதையூடாக பொருட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். புத்தாண்டையிட்டு 100 லொறிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்படவுள்ளன. ஏ-9 ஊடாக பொருட்களை எடுத்துச்செல்ல தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 23 ஆம் திகதி முதல் யாழ்தேவி தாண்டிக்குளம் வரையில் சேவையிலீடுபடும்.-அமைச்சர் டளஸ் அழகப்பெரும தகவல்

bati-trnco.jpgயாழ்தேவி ரயில் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி முதல் வவுனியாவுக்கும் அப்பால் தாண்டிக்குளம் வரையில் சேவையிலீடுபடுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். யாழ் தேவி ரயில் பாதை அமைப்புக்கு நிதியுதவி வழங்குவதற்காக கொழும்பு பல்கலைக்கழக மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

யாழ். ரயில் பாதையை அமைக்கும் பணியில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றனர். இத்திட்டத்தை நிறைவேற்ற பொது மக்களின் நிதி உதவியும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.

ஒருபோதும் நிறைவேற்ற முடியாது எனக்கூறப்பட்ட திட்டங்களை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் ஒரு இந்திய வைத்தியக்குழு இலங்கை வர ஏற்பாடு

pullmottaiindiadoctors1.jpgதிருகோணமலை புல்மேட்டைப் பிரதேசத்தில் செயற்படும் நடமாடும் இந்திய ஆஸ்பத்திரிக்கு மேலும் ஒரு வைத்தியக் குழுவை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கையின் வடக்கில் இடம்பெயர்ந்துள்ள பொது மக்களுக்குத் தேவையான சகல மருந்துப் பொருட்களும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும். : சேனன்

Senan._._._._._.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் படுகொலைகளுக்கு எதிராக மார்ச் 21ல் லண்டன் கொன்வே ஹோலில் இடம்பெற்ற சந்திப்பில் சேனன் வழங்கிய உரையின் சாரம்சம் இங்கு தொகுக்கப்பட்டு உள்ளது. பெப்ரவரி நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் இடம்பெற்ற இப்போராட்ட முன்னெடுப்புக் கூட்டத்தில் சர்வதேச அளவில் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க சர்வதேச இணைப்பாளராக சேனன் தெரிவு செய்யப்பட்டு இருந்தார். ஏப்ரல் 8ல் உலகின் பல்வேறு நகரங்களிலும் இலங்கை அரசின் படுகொலைக்கு எதிரான கண்டனப் போராட்டங்களை முன்னெடுக்க இப்போராட்டக் குழு திட்டமிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
._._._._._.

நாம் இங்கு ஒரு மிக முக்கியமான கூட்டத்தில் கூடி இருக்கிறோம். எல்லோருக்கும் தெரியும் இலங்கையில் வட-கிழக்குப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது என்று. இப்பிரதேசங்களில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் சாய்ந்ததின் பின்னர் அமெரிக்காவும் ஆளும் வர்க்கங்களும்  தாம் எந்த வகையான கொலைகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நோக்கிலும், அதே போல இதர அரசுகளும் ஆளும் வர்க்கங்களும் இப்படியான  யுத்தங்களை செய்து கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியே இலங்கையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஈராக்கில் என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த சம்பவம். இதற்குப் பிறகு இந்த ஆளும் வர்க்கம் தான் எதையும் செய்யலாம் என்ற போக்கில் இலங்கையில் இந்த யுத்தத்தை திறம்பட நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு பரீட்சார்த்த களமாகவும், இலங்கை அரசக்கு தமிழ் பேசும் மக்கள் மீது தனது விருப்பத்திற்கேற்ப  எதேட்சாதிகாரப் போககை நடாத்துவதற்கும் இடமளித்துள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கையில் சமூகங்களுக்கிடையிலான உறவுகள், போர்த் தந்திரங்கள், போர் நடைமுறைகள், சர்வதேச உறவுகள், முதலாளித்துவ அரசுகளின் பொருளாதார உறவுகள், ஆளும்வர்க்கம் தனது வர்க்திற்கான உதவிகள் எல்லாமே இந்த யுத்தத்தில் மிகவும் கெட்டித்தனமாக பாவிக்கப்படுவதை பார்க்க்க கூடியதாக உள்ளது.

வடக்கு – கிழக்கு நிலைமைகள் எப்படி கையாளப்படுகிறது, அங்கே நடக்கும் கொலைகள், அங்குள்ள அரசியல்ப் பிரமுகர்கள் தேசிய மயமாக்கல் என்று அரசு உள்வாங்குதல், தெற்கில் பத்திரகையாளர்கள் கொல்லப்படுவது, வெள்ளைவான் கொலைகள், ஜனாதிபதியின் சகோதரர் பத்திரகைச் சுதந்திரத்துக்கு கொடுக்கும் விளக்கம் போன்ற விடயங்கள்; என்ன விடயத்தை எமக்கு எடுத்துக் காட்டுகிறது என்று நாம் சிந்திக்க வேண்டும்? ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்றும் சிந்திக்க வேண்டும்.

உலக வங்கி இலங்கையை  red list  பண்ணிய பிறகும், தெற்கில் மக்கள் அன்றாட தேவைகளுக்கு அரிசி மா. எண்னைக்கு படும்பாடுகள். ஆனால் அரசு இராணுவத் தேவைக்கு செலவிடும் தொகை மிக மிக அதிகம். ஆனால் இதை சர்வதேச சமூகமும் உலக நிதி நிறுவனங்களும் பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? இதில் தமது நலன்கள் பாதிக்கப்படவில்லை என்பதலேயேதான் இவர்கள் இப்படி பார்த்துக் கொண்டீருக்கிறார்கள்.

சர்வதேச நாணய நிதியம் தனது இலங்கைக்கான அலுவலகத்தை மூடியுள்ளது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் பல பில்லியன்களை கடன் கேட்டும் உள்ளது. சர்வதேச நாணய நிதியம் வழமைபோல தனது கட்டுப்பாடுகளை வைத்தே இந்த உதவியை செய்யும். இதனால் கஸ்டப்படப் போவது ஏழை மக்களும் தொழிலாளிகளுமே. இது 70 சதவிகித இராணுவச் செலவீனத்தை கொண்ட நாட்டில் மேலும் ஏழைகளின் தொழிலாளிகளின் வாழ்க்கையில் பதிப்புக்களையே வளர்க்கும.

மிகக் குறுகிய காலத்தில் 3000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இது அண்ணளவான கணிப்பீடு. சர்வதேச அமைப்புக்களோ ஊடகவியலாளர்களோ இல்லாத இந்தப் பிரதேசத்தில் வேறு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் உள்ளது.

ஜனவரி 2ம்திகதி கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பிறகு தமிழ் மக்கள் 250,000 பேரை ஒரு மூலைக்குள் ஒடுக்கி வைத்து உணவு, நீர் வசதிகள் இல்லாது விட்டுவிட்டு மட்டுமல்ல இவர்கள் மீது குண்டும் போடுகிறது இலங்கை அரசு. அந்தப் பகுதிக்கு எந்த ஊடகவியலாளர்களையோ, சர்வதேச உதவி நிறுவனங்களையோ அனுமதிக்காது எல்லாவித தொடர்புகளையும் துண்டித்துவிட்டு இப்படி செய்வது உலகில் என்றுமே நடக்காத ஒருவிடயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை இந்த சர்வதேச சமூகம், என்றும் மனிதாபிமானம் உள்ள சமூகம் என்பவர்களும், இந்தியாவும் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் விசித்திரமாக உள்ளது.

தப்பி வரும் மக்கள் குறுக்கு விசாரணைகள் என்ற பெயரில் மேலும் துன்புறுத்தப்படுகின்றனர். அவர்கள் எப்படியான சூழ்நிலைகளிலிருந்து வருகிறார்கள் என்ற மனித நேயம் அற்று இவர்களிடம் குறுக்கு விசாரணைகள் நடத்தப்படுகிறது. இந்த மக்கள் இராணுவம் மீது பயப் பீதியையே கடந்த 25 வருடங்களாக கொண்டுள்ளனர். இப்படியான மக்கள் மீது குறுக்கு விசாரணைகள் குற்றப் பத்திரங்கள் தாக்கல் செய்வது போன்றவை மனித உரிமைமீறல்களே!

இந்த மோசமான அரசக்கு எதிராக யார் என்ன செய்ய முடியும்? எதுவுமே செய்ய முடியாது என்று உணர்கின்ற தமிழர்கள் தம்மை தாமே எரியூட்டிக் கொள்கிறார்கள். இது எதுவுமே செய்ய முடியாத நிலையிலிருந்தே வருகிறது. இப்படியான செயல்கள் சரியானத அல்ல. ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் இந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மிகக் கொடுமையான அரசு, மிக கொடுமையாக நடாத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள், தினம் தினம் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதும் அங்கவீனர்களாவதும், தனது சொந்த உறவுகளுக்கு இப்படி நடப்பதை அவர்கள் என்ன செய்ய முடியும்? எதுவுமே செய்ய முடியாத நிலையிலும் யாரும் இந்த விடயங்களை தட்டிக் கேட்காத நிலையிலும்தான் இந்தக் தீக் குளிப்புக்கள் நடைபெறுகின்றது என்பதை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனால்த் தான் நாம் இங்கே கூடியுள்ளோம். அத்துடன் நாம் என்ன செய்ய முடியும் எப்படி செய்ய முடியும் என்ற ஆய்வுகளை செய்து செயற்ப்பட வேண்டும். சிலர் சொல்லக் கூடும் – இந்தியா உதவலாம் சர்வதேசம் உதவலாம் என்று. நாம் இது பற்றியும் யோசிக்க வேண்டும் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று.

இந்தியாவின் அண்மைக்கால இலங்கை பற்றிய  நிலைப்பாடுகளைப் பார்ப்போமானால்; 2000 மார்ச்சில் இந்தியா இலங்கையுடன் ஒரு சுதந்திர வர்த்தகத்திற்கான ஒப்பந்தத்தை செய்தது  இதனால் இலங்கையின் இந்தியாவிற்கான வியாபாரத்தில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது, இந்த ஒப்பந்தத்தின் படி இலங்கையில் உற்ப்பத்தி செய்யப்படும் பொருட்களில் 95 சதவிகித பொருட்கள் வரி இல்லாமல் இந்தியாவிற்குள் வருகிறது. இது இந்தியாவின் அடுத்த மாநிலம் போன்றே செயற்ப்படுகிறது. இதே போல பாரிய மாற்றங்களுக்கு இந்திய – இலங்கை வர்த்தக நிலைமைகள் மாற்றமடைந்துள்ளது. 28வது இடத்தில் இருந்த இலங்கை தற்போது 13வது இடத்திற்க்கு தனது திறந்த பொருளாதார மாற்றத்தை திறந்ததின் மூலம் பல்வேறு பல்தேசியக் கம்பனிகளை இலங்கை மக்களின் உழைப்பை சுரண்ட திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேற்க்கத்தய இந்திய கம்பனிகள் தற்போது இலங்கையில் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது இலங்கையில் 50 சதவிகித்திற்கு அதிகமான வங்கிகள் வெளிநாட்டுக் கம்பனிகளாகும் மேலும் பாரிய 4 இந்திய வங்கிகள் தற்போது வந்துள்ளது.

இலங்கையில் உள்ள பாரிய கம்பனிகளான எண்ணைக் கம்பனி, தேயிலைக் கம்பனி, பஸ் கம்பனி ஆகியன தற்போது இந்தியாவின் கைகளிலேயே உள்ளது இதிலிருந்தே இந்திய அரசியற் கொள்கைகள் இலங்கையுடன் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் இது எதை சொல்கிறது என்றால் இந்தியா இலங்கையுடன் இனிமேல் பகைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என்பதேயாகும்.

இலங்கைக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளில் பாக்கிஸ்தான் சீனா இரு நாடுகள். ஆகவே இந்தியா இலங்கையை குழப்பாமல் இருக்க வேண்டிய தேவையும் உள்ளது.

ஐனவரி மாதம் 27ம் திகதி பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு விஜயம் செய்கிறார். அன்று 46 தமிழர்கள் வன்னியில் கொல்லப்படுகினறனர். 178 தமிழர்கள் அங்கவீனர்களாகி உள்ளனர். யுத்தம் பற்றி இந்த மக்கள் பற்றி ஒரு வசனம் பேசாமல் போகிறார் என்றால் இந்தியா இலங்கைக்கு என்ன சொல்லுகிறது? இந்தியா இலங்கைக்கு எதுவரை? போய் உதவி செய்கிறது என்பதை பார்க்க வேண்டும் இதேவேளை இலங்கை இந்தியாவிற்கு எதை காட்டடியுள்ளது என்றால் நாம் “தமிழர்களைக் கொல்லுவோம்” என்று தெட்டத் தெளிவாக கூறியுள்ளது என்பதேயாகும். இதை இலங்கை அரசு இந்திய ஆளும் கட்சியுடன் கைகோர்த்த படியேதான் இதை சொல்லியுள்ளது.

65 மில்லியன் தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் மக்கள் தீக்குளிக்கிறார்கள் ஆளும் வர்க்கத்தை தமிழ் நாட்டிலும் சரி மத்திய அரசிலும் சரி நம்ப முடியாது மக்கள் கோசமிடுகிறார்கள். இந்த கோசமிடும் மக்களை எப்படியாவது அடக்கிவிடுகிறார்கள். எல்லா கட்சிகளுமே தமது தேர்தல் கூட்டணிக்காகவே இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் பற்றிப் பேசுகிறார்கள். சர்வதேச தமிழர் பாதுகாப்பாளர் வை. கோ கூட இதைத்தான் செய்கிறார்.

பிரிட்டன், அமெரிக்கா  எத்தனையோ தரம் யத்தத்தை நிறுத்தும்படி கேட்டும் இலங்கை மறுத்து விட்டது. இவர்கள் ஏற்கனவே ஈராக் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தமது இரத்தம் தோய்ந்த கைகளுடன் இருப்பவர்கள் எப்படி இலங்கைத்தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்த முடியும் இவர்களிடமிருந்து நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது.

பிரிட்டனின் அமைச்சரவையில் புலிகளின் அழிப்பின் பின்னர் தான் நிரந்தர சமாதானம் வரும் என்றெல்லாம் சில மாதங்களுக்கு முன்னர் பேசப்பட்டது. இது எல்லாமே தமது அடுத்த வர்த்தக நோக்கங்களை அடிப்டையாக வைத்தே பேசப்பட்டதே அன்றி தமிழர்களை பாதுகாக்கும் நோக்குடன் அல்ல.

இப்படித்தான் தான் இந்தியாவின், சர்வதேசத்தின் அக்கறையும் உள்ளது என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 250,000 மக்கள் பட்டினியாலும் குண்டுகளாலும் கொல்லப்படும போது எமக்கு அந்த மக்களில் அக்கறையுண்டு என்று சொல்வதில் மட்டுமே அக்கறை. தமிழ் மக்களில் அல்ல என்பது தெட்டத் தெளிவானதேயாகும். இது மட்டுமல்ல Obama for tamils –  Tamil for Obama ம் எப்படியான பேய்க்காட்டல்கள் என்பதும் எப்படியாக ஒப்பேற்றப்பட்டு தமது தேர்தல் மற்றும் ஆளும் வர்க் நலன்கள் பேணப்படுகிறது என்பதும் எமக்கு தெட்டத் தெளிவாகிவிட்ட தொன்றாகும்.

இந்த யுத்தத்தை யாரும் நிறுத்தப் போவதில்லை. யார் எது என்ன சொன்னாலும் தமிழர்கள் தான்  போராட வேண்டும். இங்கு வெளி நாட்டிலுள்ள தமிழர்கள்தான் போராட வேண்டும் அதைத்தான் அந்த தமிழர்கள் செய்கிறார்கள். பிரிட்டன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், இந்தியா போன்ற நாடுகளில்  செய்யப்படும் போராட்டத்திற்குத்தான் அரசுகள் பயப்படுகிறது. ஆகவே போராட்டம் தான் ஒரே வழி அதைத்தான் தொடரந்தும் செய்ய வேண்டும். கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களுக்கு இந்திய அரசம் இலங்கை அரசம் எவ்வாறு பயந்து போயிருந்தன என்பதும் அதன் வெளிப்பாடுகளுமே சாட்சியமாக உள்ளது.

தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்.

நாங்கள் சென்னையில் முன்னணி இடது சாரிகளையும் எழுத்தாளர்களையும் அரசியல் வாதிகளையும் அழைத்து இந்தப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளோம். United Socialist Party சிறீதுங்க ஜெய சூரிய இந்தப் பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளார் ஒரு சிங்கள மகன் தனது நாட்டின் மற்ற சகோதர தமிழ் மக்களுக்காக இந்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். அங்கு ஒரு கமிட்டியும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கமிட்டியே மத்திய கமிட்டியாக செயற்ப்படும் என்றும் அன்று ஏப்ரல் 8ம் திகதியை ஒரு சர்வதேச பிரச்சார தினமாகவும் தெரிவு செய்யப்பட்டு உள்ளது. இங்கே இன்று ஒரு கமிட்டியை தெரிவு செய்ய உள்ளோம் இது ஜரோப்பிய அமெரிக்க நாடுகளின் பிரச்சாரத்தை முன்னின்று நடாத்தும். அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நான் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் – ஜனாதிபதி தெரிவிப்பு

mahinda-rajapaksha.jpgஎவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நான் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர்களை அலரிமாளிகையில் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு, அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களை சீர்குலைப்பதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்வைத்த காலை எக்காரணத்திற்காகவும் பின்வைக்க மாட்டேன்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உலகமே எதிர்ப்புத் தெரிவித்தாலும், நாட்டு மக்கள் எனக்கு பின்னால் நிற்கின்றனர். மக்களின் ஆணையின் பிரகாரம் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.

‘தவறான செய்திகளை பரப்பாதீர்கள்’ -பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

யால சரணாலய பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளி லும் கடுமையான பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்ப ட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

யால பாதுகாப்பற்ற பகுதியாக உள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியை முழுமையாக நிராகரித்த அவர் அப்பகுதி கிராமங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதே வேளை, கடந்த சில தினங்களில் புலி உறுப்பினர்கள் யால சரணாலய பகுதிகளில் தாக்குதல் நடத்தியதை அடுத்து அப்பகுதியின் பாதுகாப்பு முழுமையாக பலப் படுத்தப்பட்டுள்ளதாகவும் புலிகள் தாக்குதல் நடத்துவர் என அஞ்சத் தேவையில்லை எனவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

வடக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளை வெற்றி கரமாக முன்னெடுத்துவரும் அரசாங்கம் நாட்டின் பாது காப்பு தொடர்பில் அதிக கரிசனை காட்டி வருவதாகவும் யால பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல திட்ட ங்களை முன்னெடுத்துள்ளதாகவும் ஊடக நிலையம் கூறியது.

யால பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் காணப்படுவதாக தவறான செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஊடக மத்திய நிலையம் கோரியுள்ளது. யால சரணாலயத்தை அண்மித்த பகுதிகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தொடர்ந்து தேடுதல் நடத்தி வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்தித்துப் பேச்சு

mahi-hasan.jpg உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹசன் விராஜுடா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்குமிடையிலான விசா தவிர்ப்பு முக்கிய ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

நேற்றுக் காலை நடைபெற்ற மேற்படி சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன்னே மற்றும் இந்தோனேசியத் தூதுவர் டிஜார்ஹ¥கன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மேற்படி ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் இந் தோனேஷிய அரசின் சார்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹசன் விராஜுடாவும் கைச்சாத்தி ட்டுள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இவ் உத்தியோகபூர்வ சந்திப் பின் போது இருநாடுகளும் முகங்கொடுக்கும் பொது பிரச்சினைகள் பல கலந்துரையாடலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. அத்துடன் உலக பொருளாதார நெருக்கடி நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய நடவ டிக்கைகள் இலங்கையில் தற்போதைய அபிவிருத்திச் செயற்திட்டங்கள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப் பட்டுள்ளன.

இக்கலந்துரையாடலின் போது இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் விசேட வேலைத் திட்டங்கள் பற்றியும் இந்தோனேசிய அமைச்சருக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகப் பிரயாணம் செய்வதில் மக்கள் சிரமம்

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து நாட்டின் தென்பகுதிகளுக்குச் செல்லும் அரச உயரதிகாரிகள், தமது வாகனங்களில் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக பிரயாணம் செய்ய முடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக பொது போக்குவரத்து வாகனங்கள் எதுவும் பிரயாணம் செய்ய முடியாது என்ற பாதுகாப்பு நடைமுறை அமுலில் இருந்து வருவது தெரிந்ததே. எனினும் அரச கடமையின் நிமித்தம் நாட்டின் தென்பகுதிகளுக்குச் செல்கின்ற திணைக்களத் தலைவர்கள் முக்கிய அதிகாரிகள் தமது வாகனங்களில் இந்த சோதனைச்சாவடி ஊடாகச் சென்று வருவதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி இப்போது மறுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் முக்கிய அலுவல்களுக்காக வாகனங்களில் செல்ல வேண்டிய அரச அதிகாரிகள், ஊழியர்கள் தமது பிரயாணத்தை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது.பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்தப் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படுவதாகப் பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.