April

April

நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினம் -புன்னியாமீன்

day-for-monuments.jpgநினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினம் (International Day for Monuments and Sites) ஆண்டு தோறும் ஏப்ரல் 18ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1982ம் ஆண்டில் டுயுனீசியாவில் நடைபெற்ற நினைவுச் சின்னங்களுக்கும் அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக மாநாட்டின் தீர்மானப்படி 1983ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச் சபையின் 22வது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18ம் தேதியை நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவமிக்க உலகப் பண்பாட்டு மரபின் பல்வகைமைத் தன்மை தொடர்பில் மக்கள் மத்தியில் அறிவினை ஏற்படுத்துவதும் அவற்றைக் கண்ணியப்படுத்தி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும். உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளிலும் வரலாற்று முக்கியத்துவமிக்க மரபுரிமைச் சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த மரபுரிமைச் சின்னங்கள் நாட்டின் வரலாற்றுச் சான்றுகளை பதிவுகளாக்குகின்றன.

எனவே இந்த மரபுரிமைச் சின்னங்கள் பற்றியும் அவற்றின் இருப்புகள் வரலாற்று பின்னணிகள் பற்றிய அறிவும் விளக்கங்களும் மக்களுக்கு தேவைப்படுகிறது. இத்தினத்தில் மக்களுக்கு இது பற்றிய தெளிவை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இச்செயற்திட்டத்தை நினைவுச் சின்னங்களுக்கும் அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக சபை (International Council on Monuments and Sites) மிகச்சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக சபை (International Council on Monuments and Sites) என்பது உலக அளவில் உயர்தொழில் அறிஞர்களை அதாவது கட்டிடக்கலைஞர்கள், வரலாற்றாளர்கள், தொல்லியலாளர்கள், கலை வரலாற்றாளர்கள், புவியியலாளர்கள், மானிடவியலாளர்கள், பொறியியலாளர்கள், நகரத் திட்டமிடலாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய ஒர் அமைப்பு ஆகும். ஆங்கிலத்தில் ICOMOS என்னும் சுருக்கப் பெயரால் இந்தச் சபை அழைக்கப்படுகிறது. பண்பாட்டு மரபு சார்ந்த இடங்களை கட்டிடக்கலை மற்றும் தொல்லியல் சார்ந்த மரபுச் சின்னங்களை பராமரிப்புச் செய்வதில், ஈடுபட்டுள்ள, சர்வதேச மட்டத்திலான ஒரே அரசுசாரா நிறுவனமும் இதுவேயாகும்.

1964ம் ஆண்டில் வெனிஸ் நகரில் கூடிய மாநாட்டினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நினைவுச் சின்னங்களையும், அமைவுத் தளங்களையும் பரிபாலனம் செய்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பிலான பட்டயத்தின் அடிப்படையிலேயே இதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பட்டயம் வெனிஸ் பட்டயம் எனப் பரவலாக அறியப்படுகிறது.

உலக மரபுத் தளங்கள் தொடர்பில் இவ்வமைப்பு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்துக்கு (யுனெஸ்கோ) ஆலோசனைகளை வழங்கி வருகிறது. உலகளாவிய ரீதியில் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களை இனங்கண்டு அவற்றை பாதுகாப்பதில் இந்த அமைப்பு மிகத்திறம்பட செயற்பட்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக உலகின் பண்பாட்டு மரபுகளின் பல்வகைமை தொடர்பிலும், அவற்றைப் பாதுகாப்பதிலும், பரிபாலனம் செய்வதிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 18ம் தேதியை நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக நாள் என அறிவித்துக் கொண்டாடி வருகிறது

இன்று கட்டிடக்கலை, தொல்பொருட்கள் (artifacts), தொல்லுயிர் எச்சம், மற்றும் நிலத் தோற்றங்கள் என்பன உள்ளிட்ட எஞ்சிய பொருட்களைக் வெளிக்கொணர்ந்து, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதன் மூலம் செய்யப்படும் மனிதப் பண்பாடு பற்றிய அறிவினை தொல்பொருளியல் (Archaeology) ஊடாக பெற முடிகிறது.

தொல் பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றுக் கால மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.

தொல்லியலாளர்கள், தங்கள் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன், கடந்தகாலம் பற்றிய அவர்களது கேள்விகளில் தொக்கி நிற்கும் கோட்பாட்டு மற்றும் தத்துவம் சார்ந்த அடிப்படைகள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. புதிய தொல்லியற் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்தல், பகுப்பாய்தல் பேணிக்காத்தல் என்பனவெல்லாம், தொல்லியல் சார்ந்த வழிமுறைகளின் பல்வேறு முக்கியமான கட்டங்கள் ஆகும். இவை ஒருபுறம் இருக்கத் தொல்லியலில் பெருமளவு பல்துறைசார் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இதற்காக இது, வரலாறு, கலை வரலாறு, செந்நெறி இலக்கியம், புவியியல், நிலவியல், இயற்பியல், தகவல் அறிவியல், வேதியியல், புள்ளியியல், தொல்பழங்காலச் சூழலியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற துறைகளில் தங்கியுள்ளது.

கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும். ஒரு விரிவான வரைவிலக்கணம், பெருமட்டத்தில், நகரத் திட்டமிடல், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் நிலத்தோற்றம் முதலியவற்றையும், நுண்மட்டத்தில், தளபாடங்கள், உற்பத்திப்பொருள் முதலியவற்றை உள்ளடக்கிய, முழு உருவாக்கச் சூழலின் வடிவமைப்பைக் கட்டிடக்கலைக்குள் அடக்கும். ஆக இத்துறைகள் ஊடாக நினைவுச்சின்னங்களுக்கும், வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களுக்கும் உலகளாவிய ரீதியில் விழிப்புணர்வை வழங்கி அவற்றைப் பேணி பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும்.

ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.4.8 கோடி பரிசு

images-ipl.jpg2 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கியது. மே 24 ந்தேதி வரை இந்தப்போட்டி அங்குள்ள 8 நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 2 வது இடம் பிடித்த சென்னை சூப்பர் சிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
 
இந்தப்போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.4.8 கோடி பரிசாக வழங்கப்படும். 2 வது இடத்துக்கு ரூ.2.4 கோடி கிடைக்கும்.  இதில் விளையாடும் 120 வீரர்கள் ரூ.1430 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளனர். இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
 
இதில் டோனி அதிகபட்சமாக 52 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக தெண்டுல்கர், கங்குலி, யுவராஜ்சிங் உள்ளனர். வெளி நாட்டு வீரர்களில் அதிகமான தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டவர் ஜெயசூர்யா ஆவார்.  ஐ.பி.எல். போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். ரூ.10 லட்சம் முதல் ரூ.1.8 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

மக்கள் பிரச்சினைளைக் கண்டறிய ஆனந்தசங்கரி யாழ். விஜயம்

jaffna_a9.jpgகிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து மன்னார், வவுனியா பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரிநிலையங்களில் ஏக்கத்துடன் வாழும் எமது உறவுகளின் உண்மையான நிலைமைகளையும்,  மன்னார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெறுபவர்களையும்,  போரினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் நேரடியாக பார்வையிட்டு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் நேற்று (17) தொடக்கம் 23.04.2009 வரை ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள எமது கட்சியின் பணிமனையில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் உறவினர்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும்,  அத்துடன் யாழ் மாவட்ட பொதுமக்கள் மற்றும் யாழ்நகர வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடவுள்ளார்

பிரபாகரனை பாதுகாக்கும் நோக்கிலேயே நம்பியார் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் : விமல் வீரவன்ச

vimal.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாக்கும் நோக்கிலேயே ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.பிரபாகரன் படையினரிடம் சரணடைவதனைத் தடுத்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் சரணடைவதனை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழத்தை உருவாக்கும் இந்தியாவின் எண்ணம் இலங்கை வாழ் தமிழர்களிடம் இல்லை – அமைச்சர் கெஹெலிய

krambukkela.bmp

ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ்வதே அனைத்து இன மக்களினதும் எதிர்பார்ப்பாகும். இந்நிலையில் நாட்டை இரண்டாக கூறுபோட்டு தனித் தமிழீழத்தை உருவாக்குவதான இந்தியாவின் எண்ணம் இலங்கை வாழ் தமிழர்களிடம் இல்லை என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்காக பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வல தெரிவித்தார்.

இலங்கையில் பெரும்பான்மை இனத்தவர்களிற்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் போன்று சமமான முறையில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும். இந்த முயற்சி தோல்வி அடைந்தால், தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ ஏதுவாக அவர்களுக்கென தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தப்படும் என்று அ.தி.மு.க.வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறித்து கருத்து கேட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது நாட்டை இரண்டாகக் கூறுபோட்டு மற்றுமொரு அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் செயற்பட நம்நாட்டுத் தமிழ் மக்கள் ஒருபோதும் விரும்பவிலலை. அவர்களுக்குத் தேவை ஐக்கிய இலங்கைக்குள் சுதந்திரமான வாழ்வு மட்டுமேயாகும். இதனை எமது அரசாங்கம் இன்னும் ஓரிரு நாட்களில் நனவாக்கிவிடும். அந்த நம்பிக்கை மக்களுக்கும் உண்டு.

இந்நிலையில் அ.தி.மு.க.வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தமிழ்ப் பகுதிகளை புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காகவும் மானியமாக வழங்கப்படவுள்ள 10ஆயிரம் கோடி ரூபாவை இப்பொழுதே அரசாங்கத்திடம் வழங்க அக்கட்சி நடவடிக்கை எடுக்க முடியும்.

காரணம் எமது அரசாங்கம் சிங்களம் தமிழ் என்ற பேதமின்றியே தமது நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றது. அந்தவகையில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி நடடிக்கைகளுக்கு அந்தப் பணம் உதவியாக இருக்கும்.

இதேவேளை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி உருவாக்கப்பட்ட 13ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தற்போது நடைமுறையில் உள்ளது. அதில் குறைபாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்துகொண்டு அதற்கேற்றவாறு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். 

பாபர் மசூதி இடிப்பில் காங்கிரசுக்கும் பங்கு உண்டு: லாலு

laluprasat.jpgபீகார் மாநிலத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ், அயோத்தியில் பழம் பெருமை வாய்ந்த பாபர் மசூதியை 1992ம் ஆண்டு பா.ஜ.க. இடித்தது. அத்வானி பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
 
பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு உண்டு. அந்த பழியில் இருந்து காங்கிரஸ் தப்ப முடியாது. காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால் பாபர் மசூதி இடிப்பை தடுத்திருக்க முடியும். பாபர் மசூதி இடிக்கப்படுவதை தடுக்க காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது சம்பந்தமாக நான் விவாதிக்க தயார். காங்கிரஸ் கட்சியினர் இது தொடர்பாக முட்டாள்தனமாக எதுவும் உளறிக்கொண்டிருக்ககூடாது.
 
காங்கிரஸ் கட்சியினர் இது தொடர்பாக ஏதாவது பேசினால் மேலும் பல ரகசியங்களை நான் வெளியிட வேண்டியது வரும். பாபர் மசூதி பற்றி காங்கிரசின் இரட்டை வேடத்தை நான் அம்பலப்படுத்த நேரிடும் என்றார். பாபர் மசூதி இடிப்புக்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. லல்லுவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

‘இனி தமிழன் என்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா’-சத்யராஜ்

sathyaraj.jpgஉலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்கள் ஈழ உறவுகளுக்காக ஒன்றுபட்டு குரல் கொடுக்கிறார்கள். ஆனால் தாயகத் தமிழர்களான நாம் அதை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் ஒரு பெரும் போராட்டத்தில் நாம் இறங்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் கூறினார்.

கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக அறிமுகமாகும் ஞாபகங்கள் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஏவி.எம். ஏசி ப்ளோரில் நடந்தது. விழாவில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பேசியதாவது:

ஐயா…நான் இறையாண்மைக்கு எதிரா எதுவும் பேசலீங்க… உண்மையைப் பேசுறேன்… சரித்திரத்தை, இந்திய- இலங்கை அரசாங்கங்கள் ஏற்றுக் கொண்ட சரித்திரத்தைத்தான் சொல்கிறேன். இந்த ஞாபகங்கள் விழாவில் நெஞ்சைவிட்டு அகலாத ஞாபகமாக ஈழ மண்ணில் நம் சொந்தங்கள் அழிந்துகொண்டிருப்பது சுற்றிச் சுழல்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா அமைப்புகளும், எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஈழ தமிழர்களுக்காக மீண்டும் குரல் கொடுக்க வேண்டும்.

லண்டனில் இரண்டு லட்சம் தமிழர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். பிரான்சு, ஜெர்மனி, நார்வே, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகம் முழுக்க தமிழர் கொடியுடன் தமது உறவுகளின் உயிர்காக்க கண்ணீரும் கம்பலையுமாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.நாம் அவற்றைப் பற்றிய செய்திகளைப் படித்துக் கொண்டு பொழுதைக் கழிப்பதை விட்டுவிட்டு, மீண்டும் நமது உணர்வுகளை வலிமையாக இந்த அரசுக்குப் புரியும் விதமாகக் காட்ட வேண்டும்.

உலகம் முழுக்க 8 கோடி தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இலங்கையில் உள்ள 3 லட்சம் தமிழர்களை நாம் காப்பாற்றவில்லை என்றால், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இனி தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்றுதான் சொல்ல வேண்டியது வரும் என்றார் சத்யராஜ்.

“வாக்குரிமையிருந்தும் வாக்களிக்காத தமிழர் எதிர்காலத்தில் வாக்குரிமையை இழக்கநேரிடும்’

வாக்குரிமையிருந்தும் வாக்களிக்காத தமிழர்கள் எதிர்காலத்திலே தமது வாக்குரிமையை இழக்கவேண்டிய ஒரு நிலைமை உருவாகும். கொழும்பிலே நிரந்தரமாக வாழ விரும்பும் தமிழர்கள் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு வாக்குரிமை மிகவும் அவசியமாகும். வாக்குரிமையில் அக்கறை கொண்டு ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக எமது பெயர்களை வாக்காளர் பதிவேட்டிலே இடம்பெறச்செய்யவேண்டும். அதேபோல் தமது வாக்குகளை ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் வாக்காளர்கள் பயன்படுத்தவேண்டும். இந்த அடிப்படை ஜனநாயக உரிமையை பயன்படுத்தாதவர்களை வரலாறு மன்னிக்காது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. கொழும்பு கொச்சிக்கடை செல்லையா தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

தேர்தலை முன்னிட்டு மேல் மாகாணத்தில் பணியாற்றும் பொலிஸாரின் விடுமுறைகள் ரத்து

sri-lanka-police.jpgமேல் மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு மேல் மாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸாரது விடுமுறைகள் யாவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி மேல்மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை முதல் தீவிரப்படுத்தப்படவுள்ளன.

இதற்காக இன்று 18 ஆம் திகதி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையான பத்து நாட்கள் மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் அனைத்துப் பொலிஸாரதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்படுவதாகப் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் இவர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்தக் கடமைக்காக வெளி மாவட்டங்களிலிருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் மேல் மாகாணத்துக்கு வரவழைக்கப்படவுள்ளனர்.  தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றது. தேர்தல் தினத்தன்று தேவைப்பட்டால் படையினரின் உதவியைப் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காங்கிரஸ் எம்.பி. அன்வர் உசேன் மீது பாதணி வீச்சு

anwar-hussan.jpg அஸ்ஸாம் மாநிலம் தும்ரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. அன்வர் உசேன் மீது வாக்காளர்கள் காலணிகளை வீசியும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. துப்ரி தொகுதியின் தற்போதைய எம்.பி. அன்வர் உசேன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் ஜெயித்த பின்னர் தொகுதிப் பக்கம் செல்லமையினால் கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றவில்லை.

துப்ரி தொகுதியில் போட்டியிடும் அன்வர் உசேன். அத்தொகுதிக்குட்பட்ட கான்பாரி என்ற இடத்தில் காங்கிரஸ் சார்பில், தேர்தல் பிரசார நடைபெற்ற போது இதில் அன்வர் ஹூசேன் கலந்து கொண்டார். அப்போது அன்வர் மீது ஆத்திரத்தில் இருந்த வாக்காளர்கள், திடீரென பாதணிகளை, கழற்றி அவர் மீது எறிந்தனர். மேலும் கற்களையும் வீசினர்.பொலிஸார் அன்வர் உசேனை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர்.இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது