June

Sunday, September 19, 2021

June

மேலதிக விசாரணைக்காக கொழும்பில் பிரபாகரனின் பெற்றோர்

வவுனியாவிலுள்ள முகாமொன்றிலிருந்து கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் கடந்த வாரம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ஊடகங்களில் நேற்று திங்கட்கிழமை செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டே பிரபாகரனின் பெற்றோரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை மற்றும் வேலுப்பிள்ளை பார்வதிபிள்ளை ஆகிய இருவரும் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் தற்போது பாதுகாப்பான இடமொன்றில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் மேற்குறித்த இராணுவ அதிகாரி தெரிவித்திருக்கிறார். புதுமாத்தளன் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்த மக்களுடன் சேர்ந்து இடம்பெயர்ந்து வந்திருந்த இவர்கள் இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பிரபாகரனின் பெற்றோர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் வினவியபோது அது பற்றி உத்தியோக பூர்வமாக தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லையெனக் கூறினார்.

பாரிய நீர்மூழ்கி வெடி குண்டுகள் புதுக்குடியிருப்பில் கண்டுபிடிப்பு

topetro1111.pngகப்பலை மூழ்கடிக்கும் பாரிய நீர்மூழ்கி வெடி குண்டுகள் இரண்டையும் அதனை ஏவும் கருவியொன்றையும்  இராணுவத்தின் 8 ஆவது அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று தேடுதல் நடத்திய படையினர் நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்த பாரிய குண்டுகளையும் ஏவியையும் மீட்டுள்ளனர்.

குண்டுகளை ஏவும் கருவி 28 அடி நீளமும் 5 அடி 10 அங்குல் சுற்றளவும் கொண்டது. நீர்மூழ்கி வெடி குண்டுகள் 26 அடி நீளமும் 5 அடி 07 அங்குல சுற்றளவும் கொண்டவை எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

முப்படைகளுக்கும் புதிதாக 50 ஆயிரம் பேர் சேர்த்துக்கொள்ளப்படுவர்

keheliya-111.jpgயுத்தம் முடிவடைந்துள்ளபோதும் பலமான பாதுகாப்புப் படைகள் நாட்டுக்கு அவசியம் என்பதால் மேலும் 50 ஆயிரம் பேர் முப்படைகளுக்கும் பொலிஸ் சேவைக்கும் புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் என தேசிய பாதுகாப்பு பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முடிந்து விட்டதால் படையனரின் எண்ணிக்கை குறைக்கப்படுமா என்றொரு கேள்வி எழுகின்றது. எனினும் அவ்வாறு நடைபெறாது. இனி இராணுவத்தினருக்கு வேலையில்லை அவர்கள் வீடு செல்லவேண்டியதுதான என சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். இது தவறான கணிப்பீடாகும்.

மூன்று தசாப்தங்களாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்காத 16 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு இப்போது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்த பலம் வாய்ந்த கூடுதலான படையினர் தேவைப்படுகின்றனர். அதற்காவே முப்படைக்கும் பொலிஸ் சேவைக்கும் புதியவர்களைச் சேர்த்துக்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

“13 ஆவது திருத்தம் வெறும் சட்ட ஏற்பாடே’

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிவாரணியாகத் தெரிவிக்கப்படும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமானது “சட்டரீதியான ஏற்பாடு’ என்பதற்கு அப்பால் வேறு ஒன்றும் இல்லை என்று பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்ப தொழில் நிபுணர்களின் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள தமிழர்களின் தற்போதைய நிலைமை தொடர்பான மாநாடொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜேந்திரன் தெரிவித்ததாவது;

இலங்கையிலுள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு 13 ஆவது திருத்தம் தீர்வாக அமையுமென மக்களில் ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால், சிங்களவர், தமிழர் என்ற இரு வேறுபட்ட இனங்கள் அங்கிருப்பதைக் கூட திருத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

பிரேரணைகள் ஒற்றையாட்சியை வலுப்படுத்துவதாகவும் மாகாண சபைகளை உருவாக்குவதாகவுமே உள்ளன. ஆனால், மாகாண சபைகளில் உள்ள அமைச்சர்களுக்கு எந்த அதிகாரங்களும் இல்லை. மாகாண சபையின், ஆளுநரின் அடிவருடிகளாக இருப்பதற்கு அப்பால் அமைச்சர்களால் எதுவும் செய்யமுடியாது. ஆளுநரை ஜனாதிபதியே நியமிக்கிறார்.

பொது நிர்வாகம், நிதி, காணி என்பன உட்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக மாகாண அமைச்சர் சபைக்கு 13 ஆவது திருத்தம் அதிகாரங்களை வழங்கவில்லை. ஆளுநருக்கே முக்கியமான விடயங்கள் தொடர்பான அதிகாரங்கள் உள்ளன. அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் வெறும் நிர்வாக செயற்பாடுகளே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் திணைக்களம் மத்தியிடமே உள்ளது. வருடாந்த வரவுசெலவுத்திட்டம் தொடர்பாக அதிகாரங்களையோ சனத்தொகைப் பரம்பல் மாற்று நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான அதிகாரங்களையோ மாகாண சபைகள் கொண்டிருக்கவில்லை. காணி விவகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்றும் இராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளதாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

இராணுவ வெற்றியை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த தடை

lakshman_hulugalla_.jpgதேர்தல் பிரசாரங்களின்போது, இராணுவ வெற்றிகளைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சுவரொட்டிகள், பதாதைகள் அல்லது ஊடகங்களில் எந்தவொரு வேட்பாளரும் இராணுவத்தினரின் பிரதிமைகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.  தேர்தலில் போட்டியிடுகின்ற முன்னாள் இராணுவ அதிகாரிகள் தேர்தல் பிரசாரங்களில் இத்தகைய படங்களை பயன்படுத்த விரும்பினால் அதற்காக அவர்கள் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து எழுத்துமூலமான அனுமதியைப் பெற்றிருக்கவேண்டுமெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரத்தினபுரியில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

images.jpgஇரத்தின புரியின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக களுகங்கை உட்பட பல ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பாளர் கேணல் பிரியங்கர தெரிவித்தார்.

தற்போது 17 அடி 8 அங்குலத்தில் காணப்படும் களு கங்கை ஆற்றின் நீர் மட்டம் 19 அடிக்கு மேல் உயருமாயின் இரத்தினபுரி பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் அங்கு உதவிகளை வழங்குவதற்கு மாவட்ட செயலகம்,பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ குழு மற்றும் தொண்டு நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது 

பெட்ரிகா உலக சாதனை

petrica.jpgபெண் களுக்கான 400 மீற்றர் பிறீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் இத்தாலியின் பெட்ரிகா பெலிகிரினி புதிய உலக சாதனை பøடத்தார்.  இத்தாலியில் நடைபெற்றுவரும் மெடிடெரனின் போட்டியில் பெட்ரிகா 400 மீற்றர் பிறீ ஸ்டைல் போட்டியை 4 நிமிடம் 0.41 வினாடிகளில் முடித்தே இந்த உலக சாதனையை படைத்தார்.

இதன்போது அவர் பிரித்தானியாவின் ஜொவான் ஜக்ஸன் படைத்திருந்த சாதனையையே முறியடித்தார். ஜக்ஸன் 400 மீற்றர் பிறீ ஸ்டைல் போட்டியை 4 நிமிடம் 0.66 வினாடிகளில் முடித்து உலக சாதனை படைத்திருந்தார்.

முன்னாள் புலி உறுப்பினர்களுடன் நாமல் ராஜபக்ஷ சந்திப்பு

namal_rajapaksa_visit.jpg‘இளைஞர் களுக்கு நாளை’ அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ, வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்து புனர்வாழ்வளிக்கும் பயிற்சி நிலையத்தில் இருக்கும் சரணடைந்துள்ள புலி உறுப்பினர்களை நேரில் சந்திதது உரையாடினார். படையினரிடம் சரணடைந்த 663 புலி உறுப்பினர்கள் பூந்தோட்டம் நிவாரணக் கிராமத்தில் புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

புலிகள் அமைப்பில் தலைமைப் பதவி வகித்தவர்களும் இந்நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு விசேட புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் செயற்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புனர்வாழ்வளிக்கும் பயிற்சி நிலையத்தில் தங்கியிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்களது பொழுதுபோக்கிற்காக ‘இளைஞர்களுக்கு நாளை’ அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளை அன்பளிப்பாக வழங்கினார்.

புலிகள் அமைப்பின் காவல்துறையில் பணியாற்றிய அ. அஜந்தன்,  பயங்கரவாதத்தால் நாட்டுக்கு நல்லது எதுவும் நடைபெறவில்லை. தமிழர்களின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. ஜனாதிபதிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க நாம் தயார். இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் ஆயுதத்தை கையில் எடுக்க மாட்டோம் என்றும் கூறினார்.

…….. தங்கிய ஜனாதிபதி அவர்களே! : துரை நரையன்

President_and_the_Peopleஇலங்கைத் தமிழினத்தை இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக திணறடித்துக் கொண்டிருந்த கொடிய மிருகங்களான புலிகளை முற்றாக அடித்து நொருக்கியதற்காக நானும் ஒரு தமிழன் என்ற அடிப்படையில் தங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த நன்றி தெரிவிப்பானது தாங்கள் தமிழினத்தை காப்பதற்காக தாங்கள் உள்ளத்தளவில் உணர்ந்து செயற்பட்டீர்கள் என்ற உணர்விலே என்னுள் எழவில்லை என்பதுதான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும்.

மாறாக இலங்கைத் தீவிலே வடக்கு – கிழக்கு வாழ் தமிழினத்தை இனச்செறிவின் அடிப்படையிலே அடித்து நொருக்குவதற்காகவே நீங்கள் முதற் கட்டமாக புலிகளை ஒடுக்கியிருக்கிறீர்கள் என்பதுதான் எனதுணர்வின் சிந்தனையும் உண்மையுமாகும்.

நிற்க! ‘புலிகள் வேறு தமிழினம் வேறு. புலிகளின் விருப்பும் தேவையும் வேறு! தமிழினத்தின் விருப்பும் தேவையும் வேறு!’ – இதுதான் புலிகளை அழிப்பதற்கு முன்பு உங்களின் வாதம். இப்போது உங்களுடையவாதம் என்ன என்பது எனக்கு தெரியாது தேவையும் இல்லை!

ராஜபக்ச அவர்களே! இலங்கையில் தமிழினம் நீண்ட காலமாக வெவ்வேறு வழிகளில் போராடியது ஏன்? மனநோயினாலா? அவ்வப்போது வேறுபட்ட வடிவிலான தீர்வுகள் சிங்களத் தலைமைகளுக்கும் தமிழ் தலைமைகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டு இருக்கின்றன ஏன்? இரு சாராருக்கும் இடையிலான மனநோயினாலா? 1987 ல் இலங்கை – இந்தியாவிற்கிடையில் கையொப்பம் இடப்பட்ட ஒப்பந்தம் ஏன் ஏற்பட்டது? வெறும் பொழுது போக்கு விடயமா? ஆனால் பொழுது போக்காகவே முடிந்து விட்ட வரலாற்றைத் தான் தமிழினம் கண்டது.

புலிகள் வேறு தமிழினம் வேறு என கூறிய சிங்களத் தலைமைகள் தமிழினத்திற்கான தீர்வை ஏன் முன்வைக்கிறார்கள் இல்லை? ஏன் முன்வைத்திருக்கவில்லை?  ‘புலிகள் வேறு தமிழினம் வேறு’ என கூறிய நீங்கள் தீர்வை வைப்பதற்கு ஏன் காலதாமதமாக்கினீர்கள்? ‘புலிகள் வேறு தமிழினம் வேறு’ என்றான போது தீர்வுக்கும் புலிகளுக்கும் சம்மந்தம் இல்லைத்தானே? எனவே ஏன் இன்னமும் தமிழர்களுக்கு எந்தத் தீர்வும் இன்னமும் கிடைக்கவில்லை. தமிழினத்திற்கான தீர்வு கிடைக்காதமைக்கு புலிகள் மட்டும் காரணமல்ல. அவர்களையே ஒத்த சிங்களமும் தான் அதாவது நீங்களும் தான் காரணம் என்பதே உண்மையானது.

உண்மையில் புலிகள் என்பவர்கள் கொடியவர்கள்தான் – அவர்களின் முழுதான பாசிச தவறுகள் தான் தமிழினம் விடுதலை அடைந்து விட முடியாததற்கான பிரதான காரணமாகும். ஆனால் புலிகள் ஏன் உருவானார்கள்? – எப்படி உருவாக்கப்பட்டார்கள்? – மேலும் புலிகளை தமிழ் மக்கள் ஓரளவுக்கு அவர்கள் செய்த கொடுமைகளையும் தாண்டி ஆதரித்து வந்தார்கள் என்ற உண்மை உலகறிந்தது. – நீங்களும் அறிவீர்கள். – இது ஏன் நடந்தது? – புரியவில்லையா? சிங்களப் பேரினம் அவ்வப்போது பெரிதாகவும் தொடர்ச்சியாக குறித்த இலக்குடனும் இலங்கையில் தமிழினத்தை அழித்தே தீருவது என்ற நிறுத்தப்படாத வேலைத் திட்டங்களுடன் செயற்படுவதுதான் தமிழினம் புலிகளையே ஆதரிக்க வேண்டியதற்கான பிரதான காரணமாயிருந்தது. சிங்களம் மீதும் சிங்களத் தலைமை மீதும் தமிழினத்திற்கு எவ்வாறான நம்பிக்கை ஏற்படவுமில்லை. சிங்களம் நம்பிக்கையுடன் நடந்து கொள்ளவுமில்லை என்பதே வெளிப்படையான உண்மை. இதற்கான ஆதாரங்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கை வரலாற்றில் கொட்டிக்கிடக்கின்றன.

இதனால் இலங்கைத் தமிழினம் ஒப்பீட்டளவில் புலிகளை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அதாவது புலிகளை காட்டிலும் கொடியவர்களாக சிங்களத்தையும் சிங்களத் தலைமைகளையும் இலங்கைத் தமிழினம் கருதுமளவிற்கு நீங்கள் கொடியவர்களாக மனிதாபிமானம் அற்றவர்களாக இனவெறியர்களாக சூழ்ச்சி புரிபவர்களாக இனஅழிப்பின் மீது தீராத தாகம் கொண்டவர்களாக இருந்தீர்கள் என்பதற்கான வெளிப்படையான சாட்சியமே தமிழ் மக்கள் புலிகளை ஆதரித்தமையாகும். கடைந்தெடுத்த, ரௌடித்தனமான, தெருசண்டியன் போன்ற, பாசிச மிலேச்சதிகார, இன – ஜாதி –  மத வெறியையும்; தன்னுள் தீவிரமாக  கடைப்பிடித்த கேவலமான அமைப்பையே ஒரு மனிதக் கூட்டம் ஆதரித்ததற்கான காரணமாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் எவ்வளவு கேடு கெட்டவர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!! – அவற்றை விவரணம் செய்வதற்கு எனக்கு வார்த்தைகள் போதாது.

இன்று பத்துலட்சத்திற்கும் மேலான தமிழ் மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வாழ்கிறார்கள். இவ்வளவு மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் போதும் தவறினை உணர்ந்து நிலைமையை சீர் செய்ய முடியாத சிங்களத்தையும் சிங்களத் தலைமைகளையும் தமிழினம் எப்படி நம்புவது?!!

இனக்கலவரங்களை தடுக்காத சிங்களம் அதை உருவாக்கும் சிங்களம் அதனால் உருவாகும் அகதிகளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பலேற்றினார்களே!

ஜனாதிபதி அவர்களே!

இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னம் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். – சிங்கள இனத்தின் நெருக்கடியினாலேயே தவிர மன நோயினால் அல்ல. என்ன காரணங்களுக்காக தமிழ் இளைஞர்கள் தமது இனிய இள வயதுகளை இழந்து தமது அரிய உயிர்களையே முதலீடாக வைத்து போராட்டத்தை கையிலெடுத்தார்களோ அதன் காரணங்கள் – இன நெருக்கடிகள் – ஏமாற்றங்கள் அவமதிப்புக்கள் எல்லாம் தெளிவாக எதுவும் குறைவின்றி அப்படியே இருகின்றன. அதாவது தமிழினம் தனது ஆயுதப் போராட்டத்தை கைவிட வேண்டிய சூழிநிலையை ஏற்படுத்துகின்ற  நம்பிக்கையை, அதற்கான சமிக்ஞையை இதுவரைகாலும் சிங்களம் தோற்றப்படுத்தவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். மாறாக ஆயுதப் போராட்டத்தையே தனது தொழிலாக தாதாவிசமாக சுவீகரித்துக் கொண்ட பிரபாகனுடைய உலகின் உச்ச நிலைக்குரிய அடாவடித்தனங்களே, எஞ்சிய தமிழர்களை ஆயுதப் போராட்டத்தையே விட்டு ஓட்டமெடுக்கச் செய்தது – பெரும்பாலோர் புலிகளினாலேயே அழிக்கப்பட்ட பின்பு இன்று புலிகள் இல்லாத நிலையில், அன்று ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் அதனையே செய்வதற்கான சூழ்நிலைகள் மீண்டும் அப்படியே இருக்கின்றன எனும் போது என்ன நிகழப் போகின்றது என்பதை உங்ககளால் புரிந்து கொள்ள முடியாவிடில் யாராவது சாமானிய மக்களிடம் கேட்டால் புரிந்து கொள்ளலாம்.

பிரபாகரன் எவ்வாறான மிலேச்சதிகார பயமுறுத்தலை வைத்து தமிழினத்தையே அடிபணிய வைத்தாரோ அதே வழிமுறைகளையே நீங்களும் கடைப்பிடிப்பது போன்ற உணர்வே அதிகமாக தெரிகிறது. இந்த அதிகார வெறித் தோற்றப்பாடு நீண்ட காலத் தாக்குப் பிடித்தலுக்கு ஒரு போதும்; உதவப்  போவதில்லை. தமிழினத்திடம் இருந்து மட்டுமல்ல சிங்கள மக்களிடம் இருந்தே உங்கள் வெறியதிகாரத்திற்கெதிரான எழுச்சி எழுவதற்கான வாய்ப்புக்களும் மறுப்பதற்கில்லை. அதிகார வெறி உச்சத்தில் இருந்த போது பிரபாகரன் எப்படி கும்மாழமடித்தாரோ அவ்வாறே நீங்களும் கும்மாழமடிப்பது போல் தெரிகிறது – பிரபாகரனுக்கு நடந்தது உங்களுக்கு நடக்காது என ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா என்ன?

ஜனத்தின் அதிபதி அவர்களே!

புலிகள் மீதான இறுதித் தாக்குதலின் போது அகதிகளாக்கப்பட்ட சில லட்சம மக்களை  நீங்கள் நிர்வகிக்க முடியாமல் திண்டாடியதும், நிர்வாகக் கேடுகள் நிலைத்திருப்பதும் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

இந்த மக்களை ஏன் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும மட்டும்; குடியேற்ற வேண்டும்? ஏன் சிங்கள பகுதிகளில் வைத்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் எண்ணம் ஏற்படவில்லை? முடியாது. ஜனாதிபதி அவர்களே!! இதுதான் இலங்கையின் நிலவரம்!! இலங்கை தமிழ் அகதி மக்கள் இலங்கைச் சிங்களப் பகுதிகளில் பாதுகாப்பு பெற முடியும் என்பது சாத்தியமற்ற நிலையிலேயே இலங்கை நிலவரம் இருக்கிறது. சிங்களச் சிறைச் சாலைகளில் குட்டிமணி தங்கத்துரை எப்படி கொல்லப்பட்டார்களோ 58, 83 கலவர அகதிகள் எப்படி யாழ்ப்பாணம் அனுப்பபட்டார்களோ அதே நிலவரம் தான் நீறு பூத்த நெருப்பாக இன்றும் உள்ளது. இவ்வாறான இன வேறுபாடுகளே இலங்கையில் அன்றும் இன்றும் இருந்தது. இனி என்றும் இருக்கும். இந்த உதாரணமே உங்களுக்கு புரியவைத்து விடும் இரண்டு இனங்களும் ஒன்றாக வாழ்தல் கடினம் என்பது. இந்த அடிப்படைதான் தமிழினம் தனது பாதுகாப்பை தானே நிலை நிறுத்த வேண்டும் என்பதும் தன்னைக் சூழ பாதுகாப்பு வேலி (எல்லை) இடவேண்டும் என்பதுமாகும். இவை நிதர்சனமானவை. கண் கூடானவை. காலத்தால் அழிக்கப்பட முடியாத காரணிகள். இவைதான் ஒவ்வொரு தமிழனின் உள்ளக்கிடக்கைகளிலும் ஓங்கி அடித்துக் கொண்டிருக்கின்றன – தமது தாயகம் தாயகமாகவே காப்பாற்றப்பட வேண்டுமென்பது.

ஆனால் ஜனாதிபதி அவர்களே!

உங்கள் எண்ணமோ தமிழர் தாயகத்தை சிதைத்து தமிழன் செறிவை தகர்த்து, தமிழினத்தையே நாதியற்ற இனமாக்கி இல்லாதொழிக்கச் செய்யும் முயற்சியே உங்கள் செயற்பாடுகளால் உணரப்பட முடிகிறது. இதனை எந்த தமிழனும் மட்டுமல்ல எந்த நியாயமுள்ள மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். மூன்று தசாப்தங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் தேவைகளின் காரணமாகவே எழுந்தது. சிங்களக் கொடுமை ஏற்படுத்திய சூழ்நிலையின் இயல்பு வளர்ச்சியே அது. அதிதீவிர அதிகார உச்ச வெறியின் காரணமாக பிரபாகரனால் தமிழின ஆயுத விடுதலைப் போராட்டம் சீரழிக்கப்பட்டதே தவிர – மேலும் சில சந்தர்ப்பங்களில் வெற்றி நிலையை அடைந்து விட்ட சூழ்நிலைகள் கூட பிரபாகரனால் உடைக்கப்பட்டு தமிழினம் தொடர்ந்து சீரழிய வேண்டிய நிலை ஏற்பட்டதே தவிர மாறாக சிங்கள இனத்தினதோ அன்றி சிங்களத் தலைமைகளோ எந்த நல்ல காரியங்களையும் செய்து விட்டதனால் அல்ல. இந்த நீண்ட நெடிய போராட்ட காலத்தில் பிரச்சனைக்கான காரணிகளை அப்புறப்படுத்தாத சிங்கள நிர்வாகங்களே புலிகளிலும் கொடியவர்கள் என்பது தான் உண்மை. இந்த சிங்களக் கொடுமை தான் புலி போன்ற பாசிச கும்பலும் ஆதரிக்கப்படக் கூடிய (தமிழ் மக்களாலேயே) அளவுக்கு காரணியாக இருந்தனர் என்பதிலிருந்து நிலைமையை புரிந்து கொள்ளுங்கள்.

எனவே சிங்களமே! நீங்கள் தான் பிரதான தவறாக இருந்தீர்கள் – இன்றும் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதனையே ராஜபக்ச அவர்களும் வீறாக செய்வதற்கு முயற்சிக்கிறீர்கள். இந்த நிலை தொடர்ந்தால் ஒரு அடக்கப்பட்ட இனம் – அடக்கப்படுகிற இனம் என்ன செய்ததோ என்ன செய்ய வேண்டுமோ அதனையே செய்யும் என்பது இயல்பானது. நிதர்சனமானது. அதனை எந்த நிர்ப்பந்தங்களாலும் தடுத்து விட முடியாது. புலி முடிந்தவுடன் எல்லாம் முடிந்து விட்டதென்ற இறுமாப்பு உங்களிடம் இருந்தால் அது உங்கள் அறிவீனமாகவே இருக்க முடியும். அதாவது வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்ற அடிப்படையில் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றால் இலங்கையில் தமிழினம் மட்டுமல்ல சிங்கள இனமும் நிம்மதியாய் இருந்து விட முடியாது என்பதை சிங்களம் மட்டுமல்ல பின்னால் திரியும் தமிழர்களும் மறந்து விட வேண்டாம்.

மேலும் ஜனாதிபதி அவர்களே!

வெற்றிடமாக்கப்பட்ட தமிழர் பிரதேசமாகிய முல்லைத் தீவில் பொலிஸ் பயிற்சி நிலையம் தொடங்குவதாக அறிய முடிகின்றது – கிளிநொச்சியில் சுதந்திர வர்த்தக வலயம் அமைய இருப்பதாக அறிய முடிகின்றது. வன்னியின் சில பகுதிகள் விவசாய ஆராச்சிகளின் பரிசோதனைக் கூடமாக மாற இருப்பதாக தெரிய வருகிறது.

தமிழர் பிரதேசங்களில் உண்மையிலேயே உங்களுக்கு அன்பு இருந்தால் நன்றி! ஆனால் அவை ஒன்றும் இப்போது எமக்கு தேவையில்லை. தமிழர்களுக்கு தீர்வும் அதனூடான தமிழர் பிரதேசங்களில் தமிழர் நிர்வாகமும் தான் முதலில் தேவை.

தமிழர் பிரதேசங்களில் என்னத்தை தொடங்குவதென்பது அந்த தமிழர் நிர்வாகத்தினரின் அனுமதியுடன் தான் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற புரிந்துணர்வு உங்களுக்கு இல்லை என்றால் இலங்கையில் தமிழரும் சிங்களவரும் புரிந்துணர்வுடன் வாழலாம் என்பது வெறும் கற்பனையாகவே இருக்க முடியும். மாறாக தமிழினம் பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழியின்றி போய் விடும் என்பது தவிர்க்க முடியாததாகி விடும்.

ஜனாதிபதி அவர்களே!

நீங்கள் புலிகளுடனான யுத்தத்தில் வெற்றியடைந்திருக்கிறீர்கள்.  நல்லது! புலிகள் அடித்து அழிக்கப்பட்டதில் முழு உடன்பாடு உள்ளவன் நான். புலிகள் தமிழர்களின் வெற்றிகளையே தோல்விகளாக்கியவர்கள். அடித்து அழிக்கப்படத் தான் வேண்டும். இனி இருந்தாலும் தமிழினத்தை முன்னேற விடப் போவதில்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த காரணத்தினால் தமிழினத்தையே அனாதைகள் ஆக்கியவர்கள். அடித்து அழிக்கப்படத்தான் வேண்டும்.

ஆனால்…

அவர்களை அடிப்பதற்கு நீங்கள் யார்? அவர்கள் உருவாவதற்கே நீங்கள் தான் காரண கர்த்தாக்கள். அவர்கள் தமிழர்களாலேயே ஆதரிக்கப்படுவதற்கும் உங்கள் கொடுமைகள் தான் காரணம். புலிகள் தமிழர் போராட்டத்தின் ஒரு பகுதியினர்தான். மறு பகுதியினர் புலிகளாலேயே விரட்டப்பட்டுத் தான் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டார்களே தவிர சிங்களவர்களின் சீர்திருத்தங்களினால் அல்ல. புலிகள் சிங்கள நிர்வாகத்தினரால் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்றால் புலிகளின் நெருக்கடிகளாலேயே ஆயுதங்களை கைவிட்டவர்களும் அடிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நீங்களோ அவர்களை மட்டும் நண்பர்களாக வைத்திருக்கிறீர்கள். ஆயுதப் போராட்டம் எழுந்ததற்கான காரணிகள் அப்படியே இருக்கின்றன. அதனடிப்படையில் நியாயமான ஆயுதப் போராட்டத்தை அந்தக் காரணிகளை அகற்ற முயற்சிக்காமல் அடித்து அழிப்பது எப்படி நியாயமாகும்.

மேலும் புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறப்புச் சிறைகளில் மறைத்து வைத்திருக்கிறீர்கள். தமிழன் போராட வேண்டிய சூழ்நிலைகளை வைத்துக் கொண்டு அதனைத் தீர்க்காமல் அதற்கெதிராக போராடியவர்களை தொடர்ந்து தண்டனை கொடுப்பது எப்படி நியாயமானது. மேலும் புலிகளின் நெருக்கடிகளால் மட்டும் போராட்டத்தைக் கைவிட்டவர்கள் சகஜமாய் வாழ முடிகிறது – ஏன் மந்திரியாகவும் இருக்க முடிகி;றது – மேலும் புலிகளிலேயே  சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தவர்கள் மந்திரிகளாகவும் கட்சியின் உப தலைமையாகவும் இருக்க முடியுமென்றால் சில வருடங்கள் மேலும் போராடியவர்கள் ஏன் சிறைகளில் வாட வேண்டும்.

எனவே சிங்களமே! மற்றும் அதன் ஜனாதிபதி அவர்களே! முதலில் பிரச்சனைக்கான தீர்வை இலங்கை – இந்திய ஒப்பந்தம் அல்லது அதற்கும் மேல் போய் தீர்வை செயற்படுத்துங்கள். அனைத்து போராட்டக் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்.

இல்லையென்றால் இன்னொரு போராட்டம் தவிர்க்க முடியாததாகி விடும். அதை உருவாக்கியவர்களாக நீங்களே மறுபடி இருப்பீர்கள். நிம்மதியாய் இருந்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.

இலங்கைத் தமிழர்கள் தமது எதிர்கால வாழ்க்கை மீது நம்பிக்கை ஏற்படுத்தப்பபடாத சூழ்நிலை தொடருமாயின் பல சிவகுமாரன்கள்; தோன்றுவது இயற்கையானதும் தவிர்க்க முடியாததுமாகும்! ஒடுக்கு முறைக்கெதிராக கிளர்ந்தெழுவது என்பது எந்த விதமான அடக்கு முறையாலும் அடக்கப்பட்டு விட முடியாது.

அடக்கப்படும்; இனம் அமைதி காப்பதில்லை.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம்!!

பிற்சேர்க்கை – மேலும் இக்கருத்துக்களை எழுதும் நான் தமிழர்களுக்காக அடிமைத்தனமின்றி, அடங்கிப் போகும் குணமின்றி, நேர்மையாக தமிழருக்காகவே அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளையும் ஏற்றுக் கொள்கிறேன். தமிழின விடுதலை என்பது பலவழிகளினூடு வந்து சேர்கின்ற இலக்குத் தான். எனவே அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். என்னிடம் தலைமை நோக்கமும் கட்சியும் இல்லாத காரணத்தால் இதை இலகுவாக என்னால் சொல்ல முடிகிறது.

மாறாக சமாதானம் – சுபீட்சம் – சகவாழ்வு என சொல்லிக் கொண்டும் தமது சொந்த சுபீட்சத்திற்காக கிளம்பியுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களல்லர்.

தமிழ் தலைவர்கள் ஒரே தலைமையில் வருவதற்கு அவர்களது வர்க்க நலன் இடந்தராது என்பது ஒழுங்காக புரிந்து கொள்ளப்படும் காரணத்தினால் தமிழருக்கு சாதகமாக செயற்படுகிற அடிப்படையிலான அனைத்து தலைமைகளையும் ஏற்றுக் கொள்கிறேன்.

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காது தடுக்க வன்னியில் மீளக்குடியமர்வின் பின்னரும் மக்களுடன் படையினர் தங்கியிருப்பர்.

udaya_nanayakkara_brigediars.jpgவன்னியில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது பகுதிகளில் குடியேற்றப்பட்ட பின்னரும் அவர்களுடன் படையினர் தங்கியிருப்பர் என்று இராணுவப் பேச்சாளர்  பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இரண்டு இராணுவத் தலைமையகங்கள் ஏற்படுத் தப்படுகின்றன. படையினரின் எண்ணிக்கையை 50 வீதத்தினால் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் பி.பி.ஸியிடம் இதுகுறித்து பி.பி.ஸி. வெளியிட்ட செய்தி வருமாறு:

மற்றுமொரு தீவிரவாத எழுச்சியை ஒடுக்குவதற்கும் அபிவிருத்தித் திட்டங்களில் உதவுவதற்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை 50 வீதத்தினால் அதிகரிக்க அரசுஎண்ணியுள்ளது எனப் பாதுகாப்பு அமைச்சுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்தவர்கள் இவ்வருட இறுதிக்குள் மீளக் குடியேற்றப்படுவார்கள் எனத் தெரிவிக்கும் அரசு, அதற்குப் பிறகும்  குறிப்பிட்ட காலம் வரை இராணுவம் அவர்களுடன் தங்கியிருக்கும் எனவும் கூறுகின்றது. வடக்கில் இரண்டு இராணுவத் தளங்கள் அமைக்கத் தாங்கள் எண்ணியுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார  தெரிவித்தார்.

“தற்போது முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் இரு இராணுவத் தலைமையகங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தத் தலைமையகங்களின் கீழ் முகாம்கள் அமைக்கப்படும். இதன் அர்த்தம் மக்கள் அங்கு மீளக் குடியேற முடியாது என்பது அல்ல. மக்கள் மீளக் குடியேறலாம்.  எனினும், அந்தப் பகுதியில் நடைபெறும் நடவடிக்கைகளை நாங்கள் கண்காணிக்க வேண்டும். எதிர்காலத்தில் அந்தப் பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்”என்றார்.