September

Sunday, September 19, 2021

September

ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 19வது இடம்

26-corruption.jpgஊழல் கரை படிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கும் இடம் கிடைத்துள்ளது. வாழ்க்கையின் ஒருங்கிணைந்த ஒரு விஷயமாக இன்று ஊழலும், லஞ்சமும் சேர்ந்து போய் விட்டது. எத்தனை டன் சோப்புப் போட்டாலும் இந்த கரை போகாது என்ற அவல நிலை.

இந்த நிலையில் எந்தெந்த நாடுகளில் ஊழில் மலிந்துள்ளது என்பது குறித்த பட்டியல் ஒன்றை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 19வது இடம் கிடைத்துள்ளது. 10 புள்ளிகளில் இந்தியா 6.8 புள்ளிகளுடன் 19வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகங்களில்தான் பெருமளவில் லஞ்சம் கை மாறுகிறதாம்.  ரஷ்யா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுடன் வர்த்தகம்  மேற்கொள்ளும் போதுதான் பெருமளவில் லஞ்சம் வாங்குகிறார்களாம். மேலும் வேலையை வேகமாக முடிப்பதற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டியுள்ளதாக 30 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் மிக மிகக் குறைவாக புழங்கும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பவை பெல்ஜியம், கனடா நாடுகள் தான். இந்த நாடுகளில் மிகக் குறைந்த அளவில் லஞ்சம் வாங்குகிறார்களாம். இந்த இரு நாடுகளும் லஞ்சம் குறித்த இன்டெக்ஸில் 8.8 புள்ளிகளுடன் உள்ளனர். இந்த இரு நாடுகளையும் சேர்ந்த நிறுவனங்கள் பொதுவாக லஞ்சம் தருவதில்லையாம்.

இந்த இரு நாடுகளுக்கும் அடுத்து நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் வருகின்றன. இவை 8.7 புள்ளிகளுடன் உள்ளன. இவற்றுக்கு அடுத்த இடங்களில் உள்ள நாடுகள் – ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து , ஆஸ்திரேலியா , அமெரிக்கா , பிரான்ஸ், சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகியவை.உள்ளன

இராணுவத்தினரின் சம்பளத்தில் 1800 ரூபா வெட்டப்படுவது ஏன்? : ஜே.வி.பி. கேள்வி

26parliament.jpgஇலங்கை இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்காக இராணுவத்தினர் ஒவ்வொருவரினதும் மாதாந்த சம்பளத்திலிருந்து 1800 ரூபா வெட்டப்படுவது ஏன் என ஜே.வி.பி. எம்.பி. அனுரகுமார திஸாநாயக்க சபையில்  கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். முன்னதாக எழுந்த அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. இராணுவத்திற்கான விழாவை கொண்டாடுவதற்கு இராணுவத்தினரின் சம்பளத்திலிருந்தே பணம் அறவிடுவது ஏன்? அரசாங்கம் எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும்.

இலங்கை போக்குவரத்து சபை, ‘அபிவெனுவென் அபி’ போன்றவற்றின் மூலமாக நிதி திரட்டப்பட்டது. எனினும் இந்த நிதியின் மூலமாக படையினருக்கு எவ்விதமான சேவைகளும் செய்யப்படவில்லை. இவ்வாறானதொரு நிலையிலேயே இராணுவத்தினரிடமிருந்து தலா 1800 ரூபா சம்பளத்தில் கழிக்கப்படுகின்றது.  தேர்தல் காலங்களில் படையினர் தொடர்பில் பிரசார மேடைகளில் கூறுவதனை தவிர அரசாங்கம் வேறொன்றும் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டினார்

இந்தியாவில் பிறந்த பிள்ளைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமை பத்திரம் – வவுனியா, மன்னாரில் 28ம், 29ம் திகதிகளில் நடமாடும் சேவை

இந்தியாவில் பிறந்த பிள்ளைகளுக்கான பிரஜா உரிமைப்பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரஜா உரிமைக் கிளையின் உதவியுடன் இடம்பெறவுள்ளது. வவுனியா, மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் 28ம், 29ம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின் கீழ் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. அபிவிருத்தித் திட்டம் அறிவித்துள்ளது.

28ம் திகதி வவுனியா மாவட்டத்திலும் 29ம் திகதி மன்னார் மாவட்டத்திலும் இடம்பெற உள்ள இந்நடமாடும் சேவையில் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் பல வருடங்களாக வசித்து மீண்டும் இலங்கை திரும்பியவர்களின் இந்தியாவில் பிறந்த பிள்ளைகள் இருப்பின் அவர்களுக்கான இலங்கைப் பிரஜா உரிமைப் பத்திரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.

உரிய தினங்களில் நடமாடும் சேவையில் கலந்து பயன் பெறுமாறு நீதிநியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின் வடபிராந்திய இணைப்பாளர், சட்டத்தரணி எம். எச். எம். ஸியாத் கேட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்ட காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட நீர் விநியோகத்திற்கு ஜப்பான் நிதி உதவி

260909japanflag.jpgயுத்த நடவடிக்கைகளால் அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு ஜப்பான் அரசாங்கம் 8.6 மில்லியன் ரூபாவை உதவியாக வழங்கியுள்ளது.

குறிப்பிட்ட பிரதேசத்துக்கான குடிநீர் விநியோகத்திட்டத்தின் நிர்மானப்பணிகள் 2002 ஆம் ஆண்டு முதல் தடைப்பட்டுள்ளன.
ஜப்பான் நிதியுதவி மூலம் தடைப்பட்டுள்ள நிர்மானப்பணிகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்தின் தமன பிரதேச செயலகப்பிரிவைச் சார்ந்த 600 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வவுனியா முகாமிலிருப்பவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல்

இலங்கையின் வடக்கே வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் இன்று அங்குள்ளவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்கள் இடம் பெற்றுள்ளன.

அங்குள்ள இராமநாதன் முகாமிலிருந்து சிலர் அடுத்துள்ள ஆனந்தகுமாரசாமி முகாமுக்கு செல்ல முற்பட்ட போது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்ல முயன்றவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்த போது, முகாமிலிருந்தவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை எறிந்ததாகவும், அதையடுத்து தற்பாதுகாப்புக்காக படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.

இந்த மாதம் 17 ஆம் தேதி முதல் இலங்கை அரசு அங்குள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதை நிறுத்திவிட்டததால், உலக உணவுத் திட்டத்தால் வழங்கபடும் உலர் உணவுகளை சமைக்க தேவைப்படும் விறகுகளை எடுத்து வருவதற்காகவே மக்கள் ஒரு முகாமிலிருந்து மற்ற முகாம்களுக்கு செல்ல வேண்டிய தேவை எழுந்துள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவிக்கிறார்.

இந்த மோதலின் காரணமாக இரு முகாம்வாசிகளுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.

கிழக்கு மாகாணத்தில் வீடமைப்புத் திட்டம் – வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தகவல்

260909house_new.jpgகிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு வீடமைப்புத் திட்டமொன்று அமைக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஏ.ஐ. விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்  திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக மூன்று கோடியே 80 இலட்சம் ரூபா செலவு செய்யப்படவுள்ளன. நாடு பூராகவும் ஐயாயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் குடியிருப்பு வசதிகள் இல்லாதுள்ளனர். இவர்களுக்கு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மாவிலாறு முதல் புதுமாத்தளன்வரை: கொழும்பில் மாபெரும் கண்காட்சி – நினைவு முத்திரை ரூ. 1000 நாணய குற்றி வெளியிட ஏற்பாடு

பாதுகாப்புப் படையினர் மாவிலாறு முதல் புதுமாத் தளன் வரை நடவடிக்கை மேற்கொண்ட விதத்தையும், பிரபாகரனின் உடலைக் கண்டெடுத்ததையும் பொதுமக்கள் மீண்டும் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் மூன்றாம் திகதி சனிக்கிழமை முதல் ஏழாந் திகதி புதன்கிழமை வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் கண்காட்சியிலேயே இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

இராணுவத்தின் 60 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவிலாற்றில் இருந்து புதுமாத்தளன் வரை படை யினர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்து விளக்கும் காட்சிக் கூடங்கள் அமைக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினருக்கு ஆசிவேண்டி அநுராதபுரம் மகாபோதியில் நடைபெறும் பூஜையைத் தொடர்ந்து இந்த நிகழ்வு நடைபெறும்.

புலிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது படையினர் கைப்பற்றிய ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதுடன் படையினர் பயன் படுத்திய ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இதேவேளை, படையினரை கெளரவிக்கு முகமாக நினைவு முத்திரையொன்றும் ஆயிரம் ரூபா நாணயக் குற்றியொன்றும் வெளியிட்டு வைக்கப்படுகின்றன.

யாழ். தமிழ் இலக்கிய விழா ஒத்திவைப்பு

260909srilanka.jpgவட மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த தமிழ் இலக்கிய விழா மூன்றாவது முறையாகவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வட மாகாண கல்வி, கலை, கலாசார, பண்பாட்டு, விளையாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் 2,3,4 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த தமிழ் இலக்கிய விழா, எதிர்வரும் 8,9,10ஆம் திகதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. வட மாகாண தமிழ் இலக்கிய விழா சென்ற (2008) ஆண்டு மன்னாரில் இரு தினங்கள் நடைபெற முதலில் ஏற்பாடு செய்யப்பட்டு, பின் ரத்தானது. இதனால் மன்னார் மாவட்ட கலைஞர்களும், பேராளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காகவே விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது தடவையாக எதிர்வரும் 2,3,4ஆம் திகதிகளில் மேற்படி விழா இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போது 3ஆவது தடவையாக 8,9,10 ஆம் திகதிகளுக்கு விழா மாற்றப்பட்டுள்ளது.

சம்பியன் கிண்ணம் 6 ஆவது போட்டி : Pakistan won by 54 runs

sep-14-2009-india.jpgசம்பியன் கிண்ணத்துக்கான 6 வது போட்டி இன்று இந்தியா – பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையில் பகல் இரவு நேர ஆட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அப்போட்டியின் ஸ்கோர் விபரங்களையும் தொகுத்துத் தர தேசம்நெட் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

6th Match, Group A: India v Pakistan at Centurion – Sep 26, 2009

Pakistan won the toss and elected to bat

Pakistan innings (50 overs maximum)
 Imran Nazir  c Harbhajan Singh b Nehra  20
 Kamran Akmal†  b Nehra  19 
 Younis Khan*  c †Dhoni b Singh  20 
 Shoaib Malik  c Pathan b Harbhajan Singh  128 
 Mohammad Yousuf  b Nehra  87 
 Shahid Afridi  c †Dhoni b Pathan  4 
 Umar Akmal  c †Dhoni b Nehra  0 
 Naved-ul-Hasan  not out  11  
 Umar Gul  c Raina b Sharma  0 
 Mohammad Aamer  c Kohli b Sharma  0
 Saeed Ajmal  not out  0
 Extras (lb 1, w 12) 13     
      
 Total (9 wickets; 50 overs) 302 (6.04 runs per over)
Fall of wickets1-29 (Imran Nazir, 4.2 ov), 2-53 (Kamran Akmal, 8.5 ov), 3-65 (Younis Khan, 14.4 ov), 4-271 (Mohammad Yousuf, 45.6 ov), 5-278 (Shahid Afridi, 46.6 ov), 6-289 (Umar Akmal, 47.5 ov), 7-300 (Shoaib Malik, 48.6 ov), 8-301 (Umar Gul, 49.3 ov), 9-302 (Mohammad Aamer, 49.5 ov) 
        
 Bowling
 A Nehra 10 0 55 4
 RP Singh 9 1 59 1
 I Sharma 8 2 39 2
 V Kohli 3 0 21 0
 YK Pathan 10 0 56 1
Harbhajan Singh 10 0 71 1   

India innings (target: 303 runs from 50 overs)
 
 G Gambhir  run out (Younis Khan)  57 
 SR Tendulkar  c †Kamran Akmal b Mohammad Aamer  8 
 R Dravid  run out (Umar Gul/†Kamran Akmal)  76 
 V Kohli  c Umar Gul b Shahid Afridi  16 
 MS Dhoni*†  lbw b Shahid Afridi  3
 SK Raina  lbw b Saeed Ajmal 
 YK Pathan  c sub (Misbah-ul-Haq) b Mohammad Aamer  5 
 Harbhajan Singh  b Saeed Ajmal  13 
 RP Singh  c Mohammad Yousuf b Naved-ul-Hasan  2
 I Sharma  b Naved-ul-Hasan  0 
 A Nehra  not out  0 
Extras (lb 4, w 11, nb 7) 22     
      
Total (all out; 44.5 overs) 248 (5.53 runs per over)
Fall of wickets1-23 (Tendulkar, 4.1 ov), 2-90 (Gambhir, 13.5 ov), 3-126 (Kohli, 21.3 ov), 4-133 (Dhoni, 23.5 ov), 5-205 (Raina, 34.6 ov), 6-218 (Pathan, 38.2 ov), 7-238 (Dravid, 41.6 ov), 8-243 (Singh, 43.4 ov), 9-244 (Sharma, 43.6 ov), 10-248 (Harbhajan Singh, 44.5 ov) 
        
 Bowling O M R W Econ  
 Mohammad Aamer 8 0 46 2 
 Naved-ul-Hasan 9 0 48 2
 Umar Gul 6 0 55 0 
  Saeed Ajmal 8.5 0 31 2
Shahid Afridi 10 0 39 2
 Shoaib Malik 3 0 25 0  

 Player of the match Shoaib Malik (Pakistan)
 Pakistan won by 54 runs

ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம் – 2 விமானங்கள் ரத்து

26-air-india.jpgஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் வேலை நிறுத்தம் சமீபத்தில் ஓய்ந்த நிலையில் தற்போது ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக இன்று இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

உற்பத்தியுடன் கூடிய போனஸில் 50 சதவீதத்தைக் குறைக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.  இதற்கு விமானிகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து விமானிகளில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக இன்று டெல்லியிலிருந்து மும்பை மற்றும் காபூல் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதில் பயணம் செய்யவிருந்த பயணிகள் வேறு விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காபூல் செல்ல வேண்டிய பயணிகள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே விமானிகள்  சங்க பிரதிநிதி கேப்டன் பல்லா கூறுகையில், ஊதியக் குறைப்பு காரணமாக எந்த பைலட்டுமே வேலை பார்க்கும் மன நிலையில் இல்லை. எனவே யாரும் வேலை செய்ய மாட்டோம் என்று கூறியிருந்தார்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் 300 எக்சிகியூட்டிவ் விமானிகள் உள்ளனர்