February

February

ரணிலுக்கு எதிராக கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்

ranil.jpgஐ.தே.க.  தலைவர் ரணில் விக்ரம சிங்கவுக்கு எதிராக ஐ.தே.க. ஆதரவாளர்கள் கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட முன்னாள் ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், மூதூர்த் தொகுதி ஐ.தே.கட்சி அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.ஏ.எம்.மஹ்ரூப்பிற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இதனைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஐ.தே.கட்சி தலைவருக்கெதிரான கோஷமிட்டு பட்டாசு கொழுத்தி ஆரவாரம் செய்தனர். இதன் போது எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கென பயன்படுத்தப்படவிருந்த சுவரொட்டிகள், பெரிய கட்டவுட்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. பிரதான வீதியூடாகச் சென்ற இப் பேரணியினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டக் காரியாலயத்திற்குள் புகுந்து சேதப்படுத்தினர்.

இந்நிலையில் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பனர் எம்.ஏ.எம்.மஹ்ரூப் கருத்து தெரிவிக்கையில், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஐ.தே. கட்சி தலைமைப் பீடம் தனக்கு அநீதி இழைத்துள்ளதாகவும் ஐ.தே.க. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் பயனளிக்க வில்லை. இதேவேளை, குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இங்கு ஆதரவாளர்களால் நேற்று காலை ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஹுப் ஹக்கீமுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து கொடும்பாவி கட்டி செருப்பு மாலை போட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன

வேட்பு மனுக்களை ஏற்கும் பணி இன்று நண்பகலுடன் நிறைவு.

election_cast_ballots.jpgபொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் பணிகள் இன்று (26) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றன.

இன்றைய தினம் 200 இற்கும் அதிகமான சுயேச்சைக் குழுக்களும், அரசியல் கட்சிகளும் தமது வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்து முடிக்கின்றன. இதனால் ஏற்படும் பரபரப்பை சமாளிக்கும் வகையில், மாவட்டச் செயலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமானதிலிருந்து நேற்று வரை அரசியல் கட்சிகள் ஒரு சில மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களையே தாக்கல் செய்துள்ளன. அதேநேரம் நேற்று நண்பகல் வரை சுமார் 250 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் சுமார் 50 சுயேச்சைக் குழுக்கள் மாத்திரமே வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளன.

இந்நிலையில் போட்டியிடவுள்ள அனைத்துக் கட்சிகளும், கட்டுப்பணம் செலுத்தியுள்ள சுயேச்சைக் குழுக்களும் இன்றைய தினத்திலேயே நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்கின்றன. இதன் பிரகாரம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் இருந்து பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் யாவும் இன்று முடிவடைந்துள்ளன.

சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பான ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான நண்பகல் 12.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை ஒன்றரை மணி நேர கால அவகாசம் வழங்கப்படவுள்ளது என தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. இதனைத் தொடர்ந்து வேட்பு மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களினால் வெளியிடப்படவுள்ளது-

அநுராதபுரம் மாவட்டத்தில் நேற்று பிரதான கட்சிகள் வேட்புமனு தாக்கல்

imagescap42oig.jpgபொதுத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஜனநாயக தேசிய கூட்டமைப்புக் கட்சிகளின் வேட்புமனுக்கள் நேற்று வியாழக்கிழமை அநுராதபுர மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி எச்.எம்.கே.ஹேரத்திடம் கையளிக்கப்பட்டன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு;

திஸ்ஸ கரல்லியத்த (தலைமை வேட்பாளர்), எஸ்.எம்.சந்திரசேன, துமிந்த திசாநாயக்க, டபிள்யூ.பீ.ஏக்கநாயக்க, வீரகுமார திசாநாயக்க, கமகே வீரசேன, அஸங்க செஹான் சேமசிங்க, எஸ்.சி.முத்துக்குமாரண, பேமசிறி ஹெட்டியாராச்சி, எம்.ஏ.சன்னசுதத் ஜயசுமன, ஜயலத் பண்டார செனவிரத்ன, ஏ.என்.எம்.சஹீட்.

வேட்பு மனுத்தாக்கலின் போது வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திசாநாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெருமளவான ஆதரவாளர்கள் பங்குபற்றினர்.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனுவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தலைமையில் வந்த குழுவினரால் கையளிக்கப்பட்டது.

இக்கட்சி சார்பான வேட்பாளர் பட்டியல் வருமாறு;

கே.டி.லால்காந்த (முதன்மை வேட்பாளர்), ரணவீர பத்திரண, எச்.எம்.வசந்த சமரசிங்க, அநுர திசாநாயக்க, மஹிந்த ஜயசிங்க, அருண திசாநாயக்க, சமந்த ரூபசிங்க, எஸ்.திலகசிறி, ஏ.டபிள்யூ. அப்துல் சலாம், லயனல் அத்துக்கோரள, எம்.ஜயரத்ன, சுசந்த குமார ஜயரத்ன.

எச்.கே.பந்துல பத்மசிறி தலைமையிலான சுயேச்சைக்குழுவொன்றும் புதன்கிழமை வேட்புமனுத்தாக்கல் செய்தது.

35 அமைச்சர்களைக் கொண்ட புதிய அரசை அமைப்பதே இலக்கு

mahindaஅடுத்த அரசாங்கத்தில் 35 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை நியமிப்பதே தனது இலக்குகளில் ஒன்று என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.ஏப்ரலில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறிய அமைச்சரவையே ஏற்படுத்தப்படும் என்றும் தற்போதைய அமைச்சரவையில் செயற்பாட்டுத் திறனுடன் கருமமாற்றாதவர்கள் புதிய அமைச்சரவையில் இடம்பெற மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

செயற்பாட்டுத் திறனை அடிப்படையாகக் கொண்டு பல அமைச்சர்களை அகற்றுவேன். புதிய அரசாங்கத்தில் சில பெரிய பெயர்கள் இடம்பெறுவதும் சாத்தியமில்லை என ஜனாதிபதி கூறியதாக கொழும்பு பேஜ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.உலகிலேயே பாரிய அமைச்சரவைகளில் ஒன்றாக இலங்கையின் அமைச்சரவை உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய சுமையாகும். இலங்கையில் அமைச்சர் ஒருவரின் பணியாட்கள், பாதுகாப்பு வாகனங்கள் என்பனவற்றுக்கான செலவினம் அதிகமென விமர்சிக்கப்படுகிறது.

தற்போதைய அரசில் 51 அமைச்சர்களும் 39 அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களும் 19 பிரதி அமைச்சர்களும் உள்ளனர்.தனது அடுத்த இலக்கு ஊழல் விரயத்தை இல்லாதொழிப்பதுவும் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதுவுமே என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.தமது சிறப்புரிமைகளை அமைச்சர்கள் துஷ்பிரயோகம் செய்வது தொடர்பாகவும் அதிகளவுக்கு செலவிடுவதாகவும் பல முறைப்பாடுகள் ஜனாதிபதிக்கு கிடைத்திருப்பதாக ஜனாதிபதியுடன் நெருங்கிய வட்டாரமொன்று தெரிவித்ததாக கொழும்பு பேஜ் குறிப்பிட்டுள்ளது

த. வி. கூ., ஈ. என். டி. எல். எப். வன்னியில் போட்டி

voteதமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈழ தேசிய ஜனநாயக முன்னணி (ஈ. என். டி. எல். எப்.) என்பன வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை நேற்று வவுனியா தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தன.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரியுடன் கூட்டணியின் வேட்பாளர்களும் நேற்று வவுனியா தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். கூட்டணியின் முதன்மை வேட்பாளராக செல்வரட்ணம் சுதாகரன் களத்தில் இறங்கியுள்ளார்.

இதேவேளை ஈ. என். டி. எல். எப். என்ற ஈழ தேசிய ஜனநாயக முன்னணியும் இருளன் ஜெயந்தியை முதன்மை வேட்பாளராகக் கொண்டு வன்னி மாவட்டத்தில் களமிறங்கியுள்ளது.

த. வி. கூட்டணி மற்றும் ஈ. என். டி. எல் எப். வேட்பாளர் பட்டியல் வருமாறு:

ஈழ தேசிய ஜனநாயக முன்னணி (ஈ. என். டி. எல். எப்.)

வன்னி மாவட்டம்: 1. இருளன் ஜெயந்தி (முதன்மை வேட்பாளர்) 2. கே. விநாயகமூர்த்தி 3. ஆர். கருப்பையா 4. ஏ. ராமசாமி 5. கே. குணரட்னம் 6. வீ. கனகராஜா 7. ஆர். கணேசன் 8. கே. முருகையா 9. என். சோமசுந்தரம்

தமிழர் விடுதலைக் கூட்டணி

வன்னி மாவட்டம் 1. செல்வரட்ணம் சுதாகரன் (முதன்மை வேட்பாளர்) 2. மாணிக்கவாசகம் ரதிகுமார் 3. ஆறுமுகன் உதயசேகர் 4. கேசவன் சிவகுமாரன் 5. சபாரட்ணம் மைக்கல் கொலின் 6. பிள்ளை அம்பலம் ஜெகதீஸ்வரன் 7. மார்க்கண்டு மங்களராயன் 8. மோகனதாஸ் மகாதேவன் 9. ராசையா ஜெகமோகன்.

ஹிஸ்புல்லாஹ் இராஜினாமா

கிழக்கு மாகாண சுகாதார அமை ச்சர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தனது மாகாண சவை பொறுப்புக்களில் இருந்து இராஜினாமாச் செய்துள்ளார். தனது இராஜினாமாக் கடிதத்தினை கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் கூறினார்.

இந்தியா – பாகிஸ்தான் இன்று பேச்சுவார்த்தை – நன்மை பயக்குமா? நட்பு மலருமா ?

india-pakistan.jpgபயங்கர வாதம் ஒழிப்பு மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கை உள்ளிட்டவை மையமாக வைத்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான முதல்கட்ட பேச்சுவார்த்தை  இன்று  நடைபெறுகிறது.

இரு நாட்டு வெளியுறவு செயலர்கள் நிருபமாராவ் ( இந்தியா ), சல்மான் பஷீர் ( பாகிஸ்தான் ) இருவரும் சந்தித்து பேசுகின்றனர். மும்பை தாக்குதல் நடந்து 14 மாதங்களுக்கு பின்னர் இந்த பேச்சு நடக்கிறது, 

பாகிஸ்தான் பயங்கரவாத ஒழிப்பில் ஒத்துழைப்பது மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை ஒப்படைப்பது எல்லையில் ஊடுருவல் உள்ளிட்ட விஷயங்களில் பாகிஸ்தான் அரசு தரும் உத்திரவாதம் எந்த அளவிற்கு இருக்கும் என இந்தியா எதிர்பாக்கிறது.

பயங்கரவாத பிரச்சினைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும் என்று இந்தியா கூறி வரும் நேரத்தில் காஷ்மீர் பிரச்னை குறித்தும்  பேசப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.

டில்லி ஹைதராபாத் மாளிகையில் நடக்கிற இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள பாக், செயலர் சல்மான் பஷீர் கூறுகையில் ; இந்தியாவுக்கு பேச்சு நடத்த வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வேறுபாடுகள் களைந்து நல்ல முடிவுகள் பிறக்கும் என நம்புவதாக கூறினார்.

இதேவேளை இந்த பேச்சுவார்த்தை தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதனை வரவேற்பதாகவும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்

மிலிபாண்ட் கருத்துக்கு இலங்கை கண்டனம்

rohitha.jpgஇலங்கையின் தேசிய பிரச்சினை தீர்வு தெடர்பில் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ள கருத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கடும் கண்டனம் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் தமது அமைச்சில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தமது அதிருப்தியை வெளியிட்டார். இப்பிரச்சினை தொடர்பில் பிரித்தானிய பதில் தூதுவரைச் சந்தித்து தான் விளக்கம் அளித்ததாகவும் அமைச்சர் கூறினார்.

அதேவேளை, லண்டனில் நடைபெறும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இயங்கும் உலக தமிழர் மாநாட்டில்ää டேவிட் மிலிபாண்ட் கலந்து கொண்டமை குறித்தும் அமைச்சர் அதிருப்பதி தெரிவித்தார். உலகத் தமிழர் மாநாடு,  தமிழீழ கோட்பாட்டை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதன் காரணமாக  காரணமாக அது இலங்கையின் இறைமையையும் தேசிய ஒருமைமப்பாட்டையும் மீறும் நடவடிக்கையாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

சரத் பொன்சேகா வேட்பு மனுவில் கைச்சாத்து!

sarath_fonseka.jpgஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுதவற்காக சரத் பொன்சேகா நேற்றுவேட்பு மனுவில் கைச்சாத்திட்டாரென மக்கள் விடுதலை முன்னணி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். இராணுவச் சட்டங்களை மீறி நடந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் தமது வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளார்.

சரத் பொன்சேகா தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய முன்னணி எதிர்வரும் பொதுத் தோதலில் வெற்றிக் கிண்ணம் அடையாளத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்க் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 5 மாவட்டங்களில் வேட்புமனுத் தாக்கல் – பல புதுமுகங்கள் களத்தில்

Sambanthan_R_TNAவடக்கு, கிழக்கில் ஐந்து மாவட்டங்களுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று (24) தாக்கல் செய்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கான வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

இந்தத் தேர்தலில் முன்னாள் உறுப்பினர்கள் ஒன்பது பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். போட்டியிட்டுத் தெரிவான பதினொரு பேருக்குப் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வன்னி மாவட்டத்தில் முன்னாள் உறுப்பினரான செல்வம் அடைக்கல நாதன் முதன்மை வேட்பாளராகவும் மற்றும் நடேசு சிவசக்தி(ஆனந்தன்), சு. வினோ நோகராலிங்கம் ஆகியோரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக மாவை சேனாதிராசாவும் மற்றும் சுரேஷ் பிரேமச் சந்திரனும் போட்டியிடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக தோமஸ் விலியம் போட்டியிட சந்திரநேரு சந்திரகாந்தனும் இடம் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டியலில் பா. அரியனேத்திரன் இடம் பெற்றுள்ளார்.

திருகோணமலையில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ரெலோ உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம், அவருக்கு ஆதரவளித்த என். ஸ்ரீகாந்தா ஆகியோர் உட்பட 11 பேருக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.

ஜனாதிபதித் தேர்தலின் போது ஊடகங்களில் சர்ச்சைக்குரிய தகவல்களை வழங்கியதாகக் கூறப்பட்ட தேசியப்பட்டியல் உறுப்பினர் துரைரெட்ணசிங்கத்தின் பெயரும் உள்ளடக்கப்படவில்லை.

அதேபோன்று சிவநாதன் கிஷோர், க. தங்கேஸ்வரி, ச. கனகரட்னம் ஆகியோருக்குக் கூட்டமைப்பு சந்தர்ப்பம் வழங்காததால் அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந் திர முன்னணியில் இணைந்து போட்டி யிடுகின்றனர்.

சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி வருவதுடன் இம்முறை புதிய இடதுசாரி முன்னணியின் சார்பில் போட்டியிடுகின்றனர்.

பத்மினி சிதம்பரநாதன், கஜன் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சொலமன் சிறில், இமாம், எஸ். ஜெயானந்தமூர்த்தி, உள்ளிட்ட 11 பேர் நிரா கரிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் உறுப்பினர் ரி. கனகசபை அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்டம்

இலங்கைத் தமிழரசுக்கட்சி சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே இடம்பெற்றுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, சிறில், கஜேந்திரன் ஆகியோர் போட்டியிட விண்ணப்பித்திருந்தும் அவர்கள் போட்டியிட அனுமதிக் கப்படவில்லை.

புதிய முகங்களாக உதயன், சுடரொளி பத்திரிகைகளின் நிர்வாக இயக்குநர் ஈ. சரவணபவன், பேராசிரியர் இரா. சிவச்சந்திரன், சட்டத்தரணி ரெமீடியஸ், முன்னாள் டிறிபேர்க் கல்லூரி அதிபர் அருந்தவச்செல்வம், மாவை சேனாதி ராஜாவின் செயலாளர் குலநாயகம், ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டியலில் இடம்பெறுகின்றனர்.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய போதும் அதன் தலைவர் அ. விநாயகமூர்த்தியும் முன்னாள் யாழ். மாநகர சபை ஆணையாளர் சி. வி. கே. சிவஞானமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மட்டு. மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியும் மேலும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் நேற்று காலை நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான சுந்தரம் அருமைநாயகத் திடம் இந்த நியமனப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார் பில் பொ. செல்வராசா, பா. அரியநேத் திரன், இ. நித்தியானந்தம், கு. செளந்தர ராசா, க. ஆறுமுகன், சீ. யோகேஸ்வரன், த. சிவநாதன், சு. சத்தியநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  இவர்களில் பொ. செல்வராசா, பா. அரியநேத்திரன், கு. செளந்தரராசா ஆகிய மூவரும் முன்னாள் எம்.பிக்களாவர்.

வன்னி மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பட்டியலில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் முதன்மை வேட்பாளராகவும் ஏனைய வேட்பாளர்களாக நடேசு சிவசக்தி, சு. நோகராதலிங்கம், எஸ். சூசைதாசன், பெ. பழனியாண்டி, து. ஜெயகுலராசா, சி. செல்வராசா, எஸ். பீ. எஸ். பீ. சிராய்வா, கு. லோக செளந்தரலிங்கம் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

அம்பாறை மாவட்டம்

தோமஸ் விலியம் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட கே. மனோகரன், சந்திரநேரு சந்திரகாந்தன், செ. இராசையா, எச். வி. விஜேசேன, ரோமியோ குமாரி சிவலிங்கம், வே. தங்கதுரை, எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே. வடிவேல், எஸ். பகீரதன் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.